disalbe Right click

Tuesday, April 28, 2015

வெளிநாட்டில் வேலை பார்க்க, பகுதி-6


வெளிநாட்டில் வேலை பார்க்க என்ன செய்ய வேண்டும்? பகுதி-6
******************************************************************************
சில நண்பர்கள் குடும்பத்தோடு வெளிநாடு சென்று தங்க நேரிடும்.

அப்போது அவர்கள் குழந்தைகளின் படிப்பு பாதிக்காமல் இருக்க வேண்டுமல்லவா?

அவ்வாறு பாதிக்கப்படாமல் இருக்க, நமது இந்திய அரசாங்கம், அந்தந்த நாடுகளின் முக்கிய நகரங்களில் இந்திய தூதரக கல்விக் கூடங்களை (INDIAN EMBASSY SCHOOL) நிறுவி திறம்பட நடத்தி வருகிறது.

எல் கே ஜி-யில் இருந்து, செகண்டரி பள்ளிவரை ஆசிரியர்களை பல்வேறு பாடங்களுக்கு நியமித்து, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பயனளிக்கிறது.

மேற்படிப்புக்கு தொலை தூரக் கல்வி மூலம் பயன்பெற, ஆங்காங்கே பயிற்சி மையங்களை நிறுவி உதவி வருகிறது.

சில பல்கலைக்கழகங்களும், பயிற்சி மையங்களை நாடுகளின் முக்கிய நகரங்களில் நிறுவி, பயிற்சி பெற வைக்கின்றன.

தேர்வு மையங்களும் அமைத்து, தேர்வு எழுத வைத்து, பட்டங்கள் (DEGREES) பெற ஆவன செய்கிறார்கள்.

அவ்வாறு பெறும் பட்டங்கள், இந்திய அரசு அங்கீகாரம் அளித்து, அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பெறலாம்.

அயல் நாடு செல்லும் தமிழர்கள் குறிப்பாக அந்தந்த நாட்டிலுள்ள நமது தமிழ்ச் சங்கங்களை அவசியம் தொடர்பு கொள்ளவேண்டும்.

அங்கு நடக்கும் விழாக்களிலும், நிகழ்ச்சிகளிலும் தமிழ்ச்சங்க உறுப்பினராகி பங்கு கொள்ள வேண்டும்.

இதன் மூலம் பல தமிழ் அன்பர்களின் நட்பு ஏற்படும். இந்தியாவில் கொண்டாட முடியாத பண்டிகைகளை அங்குள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கொண்டாடலாம்.

நமக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் அங்கு தெளிவுபடுத்தி தீர்த்துக் கொள்ளலாம்.

அந்தந்த நாடுகளின் தமிழ்ச்சங்க முகவரிகளை இணையதளங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

புதியதாக வெளிநாடு செல்லும் அன்பர்கள் முதலிலேயே தமிழ்ச்சங்க நிர்வாகிகளை தொடர்பு  கொண்டு நமக்கு வேண்டிய உதவிகளைப் பெறலாம்.

இந்தியாவில் நாம் யாருக்காவது உதவி செய்ய விரும்பினாலும், பலர் சேர்ந்து கூட்டாக பொருள் உதவி தமிழ்ச்சங்கங்கள் மூலம் செய்யலாம். பல நிதி உதவி பெறும் நிறுவனங்கள் பலன் பெறும்.

அயல் நாடு வாழ் இந்தியர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகத்தில் தெரிவித்து, தீர்த்துக் கொள்ளலாம்.

அதுமட்டும் இல்லாமல், இந்தியாவின் தலைநகரமான புதுதில்லியில் உள்ள அயல்நாடு வாழ் இந்தியருக்கான நல வாரியத்தில் தொடர்பு கொண்டும் சிக்கல்களை தீர்த்துக் கொள்ளலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி;

MINISTRY OF OVERSEAS INDIAN AFFAIRS,
9th FLOOR, AKBAR BHAWAN,
CHANAKYA PURI,
NEW DELHI - 110 021.

தொலைபேசி : +91 11 24197900
தொலைபேசி : +91 11 24674140


நல வாரிய சில முக்கிய அதிகாரிகளை தொடர்பு கொள்ள:

1. Mr Nirmal Singh
Secretary
Ministry of Overseas Indian Affairs
Tel: 24674143 / 24674144
email: secretary@moia.nic.in
email: jsds@moia.nic.in

2. Mr. Malay Mishra
Joint Secretary (Diaspora Services)
Ministry of Overseas Indian Affairs
Tel: 26874240
email: jsds@moia.nic.in

3. Mr. G Gurucharan
Joint Secretary (Financial Services)
Ministry of Overseas Indian Affairs
Tel: 24676210
email: jsfs@moia.nic.in

4. Mr.Jagadananda Panda
Protectpr General of Emigrants,
Ministry of Overseas Indian Affairs.
Tel: 26874250
e-mail: pge@moia.nic.in


வெளிநாடு வாழ் இந்தியருக்காக நமது அரசாங்கம், கடந்த மே மாதம்  2004ஆம் ஆண்டு  MINISTRY OF OVERSEAS INDIAN AFFAIRS-ஐ நிறுவியது.

மேலும் இத்துடன் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புக்கான இமிக்ரேசன் துறையையும் இணைத்தது.
                                                                                                                                  -இன்னும் இருக்கிறது-
 நன்றி :திரு முத்துரத்தினம் அவர்களுக்கு

1 comment:

  1. பதிவை பார்க்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
    தயவுசெய்து உங்களது எண்ணங்களை இங்கு எங்களுக்குத் தெரிவியுங்கள். அப்படிச் செய்தீர்கள் என்றால், எங்களது சேவையை இன்னும் சிறப்பாக தங்களுக்கு வழங்க இயலும்! என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete