disalbe Right click

Friday, June 3, 2016


அமெரிக்கா சென்று படிக்க என்ன செய்ய வேண்டும்?

அமெரிக்காவில் படிக்க செல்லும் மாணவர்கள் எளிதில் விசா பெறுவது குறித்து சென்னையில் உள்ள அமெரிக்கா தூதரக தலைமை விசா அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தலைமை விசா அதிகாரி சார்லஸ் லூவோமா ஓவர்ஸ்டீரிட் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமெரிக்காவில் கல்வித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மொத்தம் 4 ஆயிரத்து 700 உள்ளன. அவற்றில் இந்திய மாணவ- மாணவிகள் ஒரு லட்சத்துக்கு 30 ஆயிரம் பேர் படிக்கிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் இருந்து 72 ஆயிரம் மாணவ- மாணவிகள் அமெரிக்காவிற்கு படிக்க சென்றுள்ளனர்.

இந்திய மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பாடங்களில்தான் 78 சதவீதம் பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த அளவு இந்திய மாணவர்கள்தான் அமெரிக்காவில்  படித்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 4 மடங்காக உயர்ந்துள்ளது. 

தமிழ்நாடு உள்பட இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் படிக்க விரும்பும் மாணவர்கள் அங்குதான் படிக்க வேண்டும் என்பதை உறுதி செய்த பின்னர் 
ustraveldocs.com 
என்ற இணையதளத்திற்கு சென்று அமெரிக்காவில் உள்ள சிறந்த பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளை தேர்ந்தெடுங்கள். உங்கள் வசதிக்கு ஏற்ப தகுதியான கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுங்கள். 

 அமெரிக்காவில் கல்விக்கான வகுப்புகள் தொடங்குவதற்கு முன் 120 நாட்களுக்கு முன்பாக விசாவுக்கு அழைக்க மாட்டோம் . விசாவுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு விசாவுக்கான நேர்முகத் தேர்வுக்கான நேரம் குறிப்பிட்டு தெரிவிக்கப்படும். விசா நேர்முகத் தேர்வுக்கு உங்களுக்கு ஒதுக்கிய நாளில் குறிப்பிட்ட நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக வாருங்கள். உண்மையான சான்றிதழை காண்பியுங்கள். போலி சான்றிதழ்களை காண்பிக்காதீர்கள். பொய் சொல்லாதீர்கள். உங்களால் கல்வி கட்டணம் செலுத்த முடியுமா? சிலர் தொழிலதிபராக இருப்பார்கள். கல்வி கட்டணம் செலுத்துவதற்கு அவர்களுக்கு எளிதாக இருக்கலாம். சிலர் வங்கிகளில் கடன் பெறலாம். சிலர் குடும்ப நண்பர்கள் அல்லது உறவினவர்கள் மூலம் பணம் செலுத்தலாம். எதுவாக இருந்தாலும் உண்மையை சொல்லுங்கள். இவைகள்தான் முக்கிய அம்சங்கள். இவ்வாறு செய்தால் விசா பெறுவது எளிது" என்று தெரிவித்தார்.
நன்றி :  விகடன் செய்திகள் - 22.04.2016


No comments:

Post a Comment