disalbe Right click

Wednesday, October 26, 2016

விதவை மறுமண நிதி உதவி


விதவை மறுமண நிதி உதவி - என்ன செய்ய வேண்டும்?

திருமணத்திற்காக அரசு தரப்பில் பெண்களுக்காக பல்வேறு நிதிஉதவி திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கனவனை இழந்த பெண்களுக்கு அரசு வழங்கும் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண   நிதி உதவியைப் பெறுவதற்கு தேவையான அடிப்படையான தகவல்களைத் தெரிந்து இங்கு கொள்ளலாம்.

1. விண்ணப்பம்:

 உங்கள் பகுதியில் இருக்கும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கிடைக்கும் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம் என்ற படிவத்தைப் பூர்த்திசெய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்திலோ கொடுக்க வேண்டும்.

2. நிதி விபரம்: 

 பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்பு முடித்திருக்கும் விதவைப் பெண் என்றால் ரூபாய் 30,000-க்கான காசோலையும், ரூபாய் 20,000-க்கு தேசிய சேமிப்பு பத்திரமும், தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படும். படிக்காத விதவைப் பெண் என்றால் ரூபாய் 15,000-க்கான காசோலையும், ரூபாய் 10,000-க்கு தேசிய சேமிப்பு பத்திரமும், தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படும்.

3. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

கணவனை இழந்த விதவைப் பெண்கள் விண்ணப்பிக்க முடியும். திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணிற்கு 20 வயதிற்கு மேலும், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளப் போகும் ஆணுக்கு 40 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

4.எப்போது விண்ணப்பிக்க வேண்டும்

விதவை என்பதற்கான சான்று, மறுமண பத்திரிக்கை, மணமக்களின் வயதுச்சான்று, கல்விச் சான்றிதழ்.

5. தகுதி

இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற வேண்டுமானால் குறிக்கப்பட்ட திருமணம் நடந்து முடிந்த ஆறுமாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

6. இணைக்க வேண்டியவை

படித்த விதவைப் பெண்ணுக்கான நிதி உதவியைப் பெற வேண்டும் என்றால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பட்டப் படிப்போ, பட்டயப் படிப்போ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

7. குறிப்பு

நீங்கள் விண்ணப்பித்த தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.

 இது தொடர்பான மேலும் அதிக தகவல்களுக்கு உங்கள் பகுதியில் இருக்கும் மாவட்ட சமூக நலத்துறையை அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகவும்.

--------------------------------------------------------------------------------------------- சு.சூர்யா கோமதி

நன்றி : விகடன் செய்திகள் - 26.10.2016

No comments:

Post a Comment