disalbe Right click

Tuesday, March 14, 2017

என்ஆர்ஐ-கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..!


என்ஆர்ஐ-கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..!


என்ஆர்ஐ-கள் மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்யும் முன் தெரிந்துகொள்ள வேண்டியவை..!
ஒரு இந்திய குடிமகன் அல்லது இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஒரு நபர் இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் பொழுது அவர் இந்திய குடியுரிமை பெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர் (Non-resident Indian -NRI) என்று அழைக்கப்படுகின்றார்.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (Foreign Exchange Management Act - FEMA) ன் கீழ் பரிந்துரைக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வெளிநாடுகளுக்குத் திரும்ப எடுத்துச் செல்லக்கூடிய அல்லது இயலாத வகைகளில், இந்தியாவில் உள்ள பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது. 

 விண்ணப்பப் படிவம் 
என்.ஆர்.ஐக்களால் பூர்த்திச் செய்யப்பட்ட ஒப்பந்த விண்ணப்பப் படிவம் உத்தியோகபூர்வ புள்ளிகளில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதோடு அந்தத் திட்டத்திற்கு ஆதரவாக எடுக்கப்பட்ட வரையோலை அல்லது வேறு ஏதேனும் உத்யோகப்பூர்வ வடிவத்தில் பணம் செலுத்தப்பட வேண்டும். 

விண்ணப்பதாரர் முதலீடு செய்யும் பொழுது அவர் அந்தத் திட்டத்தின் முதிர்வு தொகையை வெளிநாட்டிற்குத் திரும்ப எடுத்துச் செல்லப் போகின்றாரா அல்லது இந்தியாவிலேயே வைத்திருக்கப்போகின்றாரா என்பதைக் குறிப்பிட வேண்டும். 

KYC  (Know your customer) சார்ந்த ஆவணங்கள் மற்றும் பான் கார்ட் நகல் கொடுக்கப்பட வேண்டும்.   

என்ஆர்ஐ-களுக்குப் பதிலாக வேறு யாராவது முதலீடுகளை நிர்வகிக்க முடியுமா? 

என்ஆர்ஐ-களுக்குப் பதில் அவருடைய பவர் ஆப் அட்டர்னி பெற்ற மற்றொருவர், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். எனினும், பவர் ஆப் அட்டர்னி வைத்திருப்பவர், பரஸ்பர நிதியில் தன்னுடைய விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும். 

என்ன ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்?
பவர் ஆப் அட்டர்னி வைத்திருப்பவர் அதனுடைய மூலப் பிரதி அல்லது நோட்டரி பப்ளிக்கினால் கையொப்பம் இட்ட நகலை சமர்ப்பிக்க வேண்டும். பவர் ஆப் அட்டர்னியில், வெளிநாடு வாழ் இந்தியர் மற்றும் அவருடைய இந்தியப் பிரதிநிதி ஆகிய இருவரும் கையொப்பம் இட வேண்டும். அதன் பின்னர் அது முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.  

பணத்தை எப்படித்திரும்பப் பெறுவது? 
ஒரு வேளை வெளிநாடு வாழ் இந்தியர், முதலீட்டைத் திரும்ப வெளிநாட்டிற்கே எடுத்துச் செல்லும் முறையில் முதலீடு செய்திருந்தால், முதலீட்டிற்கான பணம், அவருடைய என்.ஆர்.இ. அல்லது எஃப்.சி.என்.ஆர். கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். 

அவ்வாறு இல்லாத பட்சத்தில், முதலீட்டாளர், முதலீட்டிற்கான பணத்தைத் தனது NRE / FCNR / NRO கணக்கில் இருந்து செலுத்தலாம்.   

முதிர்வு தொகை எப்படி வழங்கப்படும்? 
முதிர்வு தொகை (வரிப் பிடித்தம் போக) இந்திய ரூபாயாக, முதலீட்டாளர் குறிப்பிட்டுள்ள வங்கிக் கணக்கு எண்ணிற்குக் காசோலையாக வழங்கப்படும். சில வங்கிகள் NRE / NRO கணக்கிற்கு நேரிடையாகப் பணத்தைச் செலுத்துகின்றன. 

ஒரு வேளை முதலீட்டாளர், வெளிநாட்டிற்குத் திரும்ப எடுத்துச் செல்ல இயலாத அடிப்படையில் முதலீடு செய்திருந்தால், முதிர்வு தொகை அவருடைய NRO கணக்கில் செலுத்தப்படும்.

வரிப் பிடித்தம் உண்டா? 
வெளிநாடுவாழ் இந்தியர்களின் முதலீடுகளுக்கு மூலதன ஆதாயங்கள் மீது வரி பிடிக்கப்படும். ஒருவேளை அவர் பங்கு நிதிகளில் ஒரு ஆண்டிற்கு மேல் முதலீடு செய்திருந்தால் அவருக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். டிஜிட்டல் கையெழுத்துடன் கூடிய டிடிஎஸ் சான்றிதழ் முதிர்வு தொகையுடன் இணைத்து அனுப்பப்படும்.   

கட்டுப்பாடுகள் 
முதலீட்டாளர் ஒரு என்ஆர்ஐ அக இருக்கும் வரை மட்டுமே அவருடைய மூலதனம், மற்றும் மூலதன மதிப்பு உயர்வு ஆகியவை திரும்ப வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். 
இதற்கான விண்ணப்பப் படிவத்தில் வெளிநாட்டு முகவரி ஒரு கட்டாயமான புலமாகும். 

எனவே ஒரு என்.ஆர்.ஐ பரஸ்பர நிதியில் முதலீடு செய்யும் பொழுது தன்னுடைய வெளிநாடு முகவரியைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

Written by: Mr. Batri krishnan 

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » செய்திகள் - 14.03.2017


No comments:

Post a Comment