disalbe Right click

Saturday, March 18, 2017

ஜி.மெயிலின் புதிய வசதியை தெரிந்து கொள்ளுங்கள்


ஜி.மெயிலின் புதிய வசதியை தெரிந்து கொள்ளுங்கள்

ஜி.மெயில் மூலம் அனுப்பும் வீடியோக்களை இனிமேல் டவுன்லோடு செய்யாமல் அப்படியே பார்க்கும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் இளைஞர்கள் மத்தியில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தாலும் ஜி.மெயிலும் முக்கியமான ஒரு பயன்பாட்டு இணையமாகவே இருந்து வருகிறது. 

இளைஞர்களுக்கு அலுவலகம், படிப்பு, வேலை முதலான இடங்களில் வீட்டு முகவரி, போன் நம்பரை அடுத்து இணைய முகவரியும் கட்டாயமான ஒன்றாக உள்ளது. இணையமுகவரியில் ஜி.மெயில் முகவரிதான் பெரும்பாலானவர்கள் தேர்வாகவும் உள்ளது. 

ஜி.மெயில் மூலம் டாக்குமென்ஸ் எனப்படும் எழுத்து சார்ந்த ஆவணங்கள் அதிகமாக அனுப்பப்பட்டாலும், ஜி.மெயில் மூலமாக போட்டோவும், வீடியோவும் அனுப்பும் தேவையும் உள்ளது. 

இதுவரையில் ஜி.மெயில் மூலம் அனுப்பப்படும் வீடியோக்களை டவுன்லோடு செய்தால் மட்டுமே அதனைப் பார்க்க முடியும்.

தற்போது, டவுன்லோடு செய்யாமலே பார்க்க முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கணினியின் ஹார்ட் டிஸ்கில் உள்ள மெமரி பாதுகாக்கப்படும் வாய்ப்பு உள்ளது. 

மேலும், எளிதாகவும் வீடியோவைப் பார்க்க முடியும். டவுன்லோடு ஆகும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. 

ஆனால் 25 MP-க்கு குறைவான மெமரி கொண்டிருக்கும் வீடியோக்களை மட்டுமே இப்படி பார்க்க முடியும். 

இந்த சேவை 15 நாள்களுக்குள் அறிமுகமாகிவிடும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி : விகடன் செய்திகள் - 18.03.2017

No comments:

Post a Comment