disalbe Right click

Saturday, September 16, 2017

ஸ்டிரைக்கா பண்றீங்க ஸ்டிரைக்கு!

ஸ்டிரைக்கா பண்றீங்க ஸ்டிரைக்கு!
அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள் வீடுகளில், 'டியூஷன்' எடுக்க தடை
அரசு சம்பளம் பெறும் பள்ளி ஆசிரியர்கள், 'டியூஷன்' எடுக்க, தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பெரும்பாலான ஆசிரியர்கள், அரசு சம்பளம் மற்றும் சலுகையை பெற்ற போதிலும், தங்கள் வீடுகளில், 'டியூஷன்' என்ற, தனிப் பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றனர். இதற்காக, மாணவர்களிடம் மாத கட்டணம் வசூலிக்கின்றனர்.
மாத சம்பளம்
சில ஆசிரியர்கள், தனியார் நடத்தும், 'டியூஷன் சென்டர்'களில், காலை மற்றும் மாலை நேரங்களில், மாதசம்பளம் பெற்று பாடம் நடத்துகின்றனர். அதனால், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு எடுக்கும் முதுநிலை ஆசிரியர்களும், 10ம் வகுப்பு எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்களும், தங்கள் வகுப்புகளில்அரசு நிர்ணயித்தபடி, பாடங்கள் நடத்துவதில்லை என்ற, புகார் எழுந்துள்ளது.
தங்கள் வகுப்பு மாணவர்களை, டியூஷனுக்கு வரவழைத்து, அங்கு கற்றுத் தருவதாக கூறப்படுகிறது. எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற, தங்கள் ஆசிரியர்களின் டியூஷன் வகுப்புக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
எச்சரிக்கை
இதற்காக, மாதந்தோறும், 1,000 - 2,000 ரூபாய் வரை கட்டணம் தேவைப்படுவதால், பண வசதியின்றி அவதிப்படுகின்றனர். இது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு, சில பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, 'அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள்,டியூஷன் எடுக்கக் கூடாது' என, தடை விதிக்கப்பட்டு உள்ளது. 'கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, டியூஷன் எடுக்க தடை உள்ளதால், ஆசிரியர்கள் விதிகளை பின்பற்ற வேண்டும்' என, மாவட்டக் கல்விஅதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 17.09.2017 

No comments:

Post a Comment