disalbe Right click

Friday, December 1, 2017

பள்ளி, கல்லூரிகளில் பொருட்காட்சி நடத்த தடை

சென்னை: பள்ளி, கல்லுாரிகளில் அரசின் சாதனை விளக்க கண்காட்சி மற்றும் பொருட்காட்சி நடத்த, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், அங்கேரிபாளையத்தை சேர்ந்த கதிர்வேல், எம்.காம்., மாணவர், உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார். அதில், ’திருப்பூரில் உள்ள, சிக்கன்னா அரசு கலை கல்லுாரியில், டிச., 3 முதல், 45 நாட்களுக்குபொருட்காட்சி நடைபெற உள்ளது. இது, வகுப்புகளுக்கு இடையூறாக இருக்கும்.
எனவே, கல்லுாரி வளாகத்தில், பொருட்காட்சி நடத்த தடை விதிக்க வேண்டும்; வேறு இடத்தில் நடத்த உத்தரவிட வேண்டும்என, கோரி இருந்தார்.
வழக்கை நீதிபதி, கிருபாகரன் விசாரித்தார். அப்போது அரசு தலைமை வழக்கறிஞர், விஜய் நாராயண்பொருட்காட்சி நடத்துவதற்கு, 90 சதவீத ஏற்பாடுகள் முடிந்து விட்டது. அதனால், பொருட்காட்சியை வேறு இடத்திற்கு மாற்ற முடியாது,” என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு
கடைசி நேரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, திருப்பூர், கலை கல்லுாரியில் பொருட்காட்சி நடத்த தடை விதிக்க முடியாது. வரும் காலங்களில், அரசு பள்ளி, கல்லுாரிகளில் பொருட்காட்சி நடத்த, தடை விதிக்கப்படுகிறது. இதுகுறித்து, அரசு விதிமுறைகளை வகுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 02.12.2017 

No comments:

Post a Comment