disalbe Right click

Thursday, January 4, 2018

அழிக்கப்பட்ட பைல்கள்

அய்யய்யோ என்னோட மெமரி கார்டுல வெச்சிருந்த ஃபோட்டோக்கள் எல்லாம் போயிருச்சே’, ‘என்ன ஆச்சுன்னு தெரியல, திடீர்னு கம்ப்யூட்டர்ல இருந்த ஃபைல்ஸ் எல்லாம் டெலிட் ஆயிடுச்சி’ - இப்படி அடிக்கடி பதற வேண்டியதில்லை. அழிந்த கோப்புகளை மீட்டெடுக்க உங்களுக்கு ஓர்  எளிமையான வழி!
உங்களடைய மெமரி கார்டு, ஹார்டு டிஸ்க் மற்றும் ஐபேடு போன்ற சேமிப்பகங்களில் உள்ள ஆவணங்கள், கோப்புகள், தரவுகள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஏதோ தவறுதலாக டெலிட் ஆகிவிட்டால், அல்லது ஏதோ ஒரு காரணத்தினால்   தானாகவே   அழிந்துவிட்டால்  அதனை ‘Recuva’ எனும் ஒரு  மென்பொருள் மூலமாக மிக சுலபமாக நீங்கள் மீட்க முடியும்!
இந்த மென்பொருள் உங்கள் சேமிப்புக் கருவிகளிலுள்ள அழிந்த ஃபைல்களை, அது எத்தகைய கோப்பாக இருந்தாலும் சரி... அதாவது ஆவணங்கள், கோப்புறைகள், படங்கள், காணொளிகள், பாடல்கள் மற்றும் புகைப்படங்கள்  போன்ற எதுவாக இருந்தாலும் சுலபமாக உங்களுக்கு மீட்டுத் தருகிறது.
எப்படி  மீட்பது தெரியுமா?
‘Recuva’ என்ற மென்பொருளை முதலில் உங்களது கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்து, இன்ஸ்டால் செய்யவேண்டும். பின் அதன் மூலமாக ஸ்கேன் செய்து தேடி அழிந்த ஃபைல்களை மீட்டெடுத்துவிடலாம். இவற்றுள், வைரஸால் அழிந்துபோன ஃபைல்களும் அடங்கும். இதனை இணைய உதவியோடு நீங்கள் இலவசமாக டவுன்லோடு செய்யலாம்.
'http://www.filehippo.com/ என்ற லிங்க்கை பயன்படுத்துங்கள். அல்லது கூகுள் போன்ற தேடுபொறிகளைக் கொண்டும் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
*********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 04.01.2018 

No comments:

Post a Comment