disalbe Right click

Tuesday, January 2, 2018

பெண்களுக்கான அரசு இணையதளம்

பெண்களுக்காக அரசு தனியாக ஒரு இணையதளம் தொடங்கியுள்ளது.  இதனை   மத்திய  பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் இணையதள முகவரி http://nari.nic.in/ ஆகும்.
இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது?
இந்த இணையதளத்தை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் திருமதி மேனகா காந்தி அவர்கள் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.  இதில் முக்கியத் தகவல்கள் அடங்கிய, பெண்கள் நலம்பெறும் வகையிலான சுமார் 350 திட்டங்கள் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.
இதன் முகப்புப் பக்கத்தில் பெண்கள் அவர்களது வயது அடிப்படையில் 4 பிரிவினராகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவர்களின் வயது, மாநிலம் மற்றும் எந்த பிரிவில் உதவி தேவைப்படுகிறது என்ற தேர்வுகளின் அடிப்படையில் உதவிகள் இந்த இணையதளம் மூலமாக பெண்களுக்கு வழங்கப்படுகின்றன.
அமைச்சகங்கள், துறைகள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் வழங்கும் திட்டங்களுக்கு நேரடியாகச் செல்லும் வகையில், இந்த இணையதளத்தில்  இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் குறை தீர்க்கும் பகுதி ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.
சட்ட ரீதியாக பாதுகாப்பு
பெண்கள் வன்முறைகள், சைபர் குற்றங்கள் ஆகியவற்றுக்கு எதிராக  தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்த வழிமுறைகள் இந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இலவச சட்ட உதவி பெறுவது குறித்தும், ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள பெண்கள் உதவி எண்களும் இதில் பட்டியலிடப்பட்டுள்ளது
மொத்தத்தில் பெண்களுக்கு மிகவும் உபயோகமான இணையதளம் இதுவாகும்.
************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 03.01.2018  

No comments:

Post a Comment