disalbe Right click

Monday, February 26, 2018

போலீஸ் தாக்கியதால் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு

 ரூ.10 லட்சம் தர மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர், பஞ்சவர்ணம், இவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில்,
கோவையில் உள்ள ஒரு தோட்டத்தில், நாங்கள் பணியாற்றினோம். எனது கணவரின் பெயர் ஜெயபாண்டி. கடந்த  2008-ம் ஆண்டில், துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, அவரது சொந்த ஊருக்கு என் கணவர் ஜெயபாண்டி சென்றிருந்தார். அப்போது, அவர் தோட்ட உரிமையாளர் அனுமதியுடன், ஆழ்துளை கிணற்றுக்கு பயன்படுத்தப்படும், மின் ஒயரையும் உடன் எடுத்து சென்றார்.
வத்தல்பட்டி என்ற ஊருக்கு ஆட்டோவில் சென்ற போது, விருவீடு காவல் நிலையத்தின்  இன்ஸ்பெக்டர் திரு சக்கரை, எஸ்.., பாண்டியம்மாள், ஏட்டு ஜெயபிரகாஷ் ஆகியோர், என் கணவரை, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அவர் எடுத்துச் சென்றிருந்த மின் ஒயரை, திருடியதாக ஏற்றுக்கொள்ளுபடி கூறி, அவரைத் தாக்கியுள்ளனர்.  அவர் அதனை திருடவில்லை என்ற உண்மை தெரிந்த பிறகு, எனது கணவரை காவல்துரையினர்  விடுவித்தனர். கோவைக்கு வந்த எனது கணவர் மறுநாள் இறந்து விட்டார். போலீசார் கடுமையாக தாக்கியதால்தான், எனது கணவர் இறந்துவிட்டார் எனவே, போலீசார் மீது தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதனை விசாரித்த ஆணைய நீதிபதி, டி.ஜெயச்சந்திரன் அவர்கள் பிறப்பித்த உத்தரவு:
காவல்துறையைச் சேர்ந்த மூன்று பேரும் தவறு செய்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் பஞ்சவர்ணத்திற்கு, நான்கு வாரத்திற்குள், 10 லட்சம் ரூபாயை, தமிழக அரசு, வழங்க வேண்டும்
இந்த தொகையை, இன்ஸ்பெக்டர் சக்கரை உட்பட, காவல்துறைஉயைச் சேர்ந்த மூவரிடமும் இருந்துதான் வசூலிக்க வேண்டும்மேலும், அந்த மூவர் மீதும், துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவர்கள் மீது, கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்கும் பதிவு செய்ய வேண்டும். மனுதாரருக்கு, அரசு வேலையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

 ************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 27.02.2018 

No comments:

Post a Comment