disalbe Right click

Friday, May 25, 2018

உட்பிரிவு சொத்துகளுக்கு பத்திரப்பதிவின்போது கட்டணம்

உட்பிரிவு சொத்துகளுக்கு பத்திரப்பதிவின்போது கட்டணம்
பத்திரப்பதிவு செய்யப்படும்போது, அதன் உட்பிரிவு சொத்துகளுக்கு கட்டணம்: வருகின்ற   28.05.2018-ம் தேதி முதல் வசூலிக்கப்பட இருக்கிறது
பத்திரப்பதிவின்போது, உட்பிரிவு செய்யப்படும் சொத்துகளுக்கு அவை அமைந்துள்ள இடம் 
மற் றும் பரப்பளவின் அடிப்படையில் பதிவுத்துறையில் உட்பிரிவு கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
புதிய மென்பொருள் ‘ஸ்டார் 2.0’
கடந்த 13.02.2018-ம் தேதி முதல் பத்திரப்பதிவுத் துறையில், இணைய வழி பத்திரப்பதிவுக்கான புதிய மென்பொருள்ஸ்டார் 2.0’ அறிமுகம் செய்யப்பட்டது. பத்திரப்பதிவின்போது, பரிமாற்றம் செய்யப்படும் சொத்தானது உட்பிரிவு செய்யப்பட வேண்டியிருந்தால் அதற்கான உட்பிரிவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதன் விவரம் மென்பொருள் வழியாக வருவாய்த் துறைக்கு அனுப்பப்பட்டது. இதனால், கட்டணம் வசூலிப்பதில் சில குழப்பங்கள் பதிவுத்துறைக்கு  ஏற்பட்டன.
இவற்றைத் தவிர்க்கும் வகையில், சில அறிவுறுத்தல்களை தற்போதைய பதிவுத்துறைத் தலைவர் ஜெ.குமரகுருபரன் அவர்கள் பதிவு செய்யும் அலுவலர்களுக்கு  வழங்கியுள்ளார். இதன்படி
  1. சொத்தின் பரப்பு அமைந்துள்ள சர்வே எண், உட்பிரிவு சொத்தின் சர்வே எண்ணின் மொத்த பரப்புக்கு சமமாக இருந்தால் உட்பிரிவு கட்டணம் செலுத்தத் தேவையில்லை
  2. சமமாக இல்லாமல் குறைவாக இருந்தால், சொத்து அமைந்துள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் இதரப் பகுதிகளைக் கண்டறிந்து அதற்கேற்ற வகையில், உட்பிரிவு கட்டணம் வசூலிக்கப்படும்.
  3. மாநகராட்சி பகுதி என்றால் ரூ.60, நகராட்சி பகுதி என்றால்   ரூ.50, நகராட்சி அல்லாத பிற பகுதி என்றால்  ரூ.40 என வசூலிக்கப்படும்.
  4. பதிவு ஆவணத்தில் எழுதப்பட்ட ஒரே நான்கு எல்லைக்கு உட்பட்ட சொத்தானது, ஒரு சர்வே எண் அல்லது உட்பிரிவு சர்வே எண்ணில் இருந்தால், ஒரு உட்பிரிவு கட்டணம் வசூலிக்கப்படும்
  5. ஒன்றுக்கும் மேற்பட்ட சர்வே, உட்பிரிவு சர்வே எண்களில் இருந்து, சொத்தின் பரப்பு, சர்வே, உட்பிரிவு சர்வே எண்களின் மொத்த கூடுதல் பரப்புக்கு குறைவாக இருந்தால், எத்தனை சர்வே, உட்பிரிவு சர்வே எண்கள் உள்ளதோ அத்தனைக்கும் தனித்தனியாக  உட்பிரிவு கட்டணம் செலுத்த வேண்டும்.
  6. அடுக்குமாடி குடியிருப்புகளில், பிரிக்கப்படாத பாகங்கள் (யுடிஎஸ்) பதிவு செய்யும்போது அதற்கு உட்பிரிவு கட்டணம் தேவையில்லை
  7. நத்தம் குடியிருப்புப் பகுதியில், தேவைப்பட்டால் அதற்குரிய கட்டணம் வசூலிக்கப்படும்
  8. விவசாய நிலம் மற்றும் மனைகளில் பிரிக்கப்படாத பாகம் பரிமாற்றம் செய்யப்படும்போது, பிரிக்கப்படாத பாகம் அடங்கிய முழு பாகத்தின் பரப்பு, சர்வே, உட்பிரிவு சர்வே எண்ணின் பரப்புக்கு குறைவாக இருந்தால் உட்பிரிவு கட்டணம் செலுத்த வேண்டும்.
  9. ஒரே சர்வே எண் கொண்ட சொத்தில், நான்கு பிரிவுகளாக தனித் தனி எல்லைகளுக்குள் குறிப்பிடப்பட்டிருந்தால் உட்பிரிவு கட்டணம் வசூலிக்கப்படும். சர்வே எண் அல்லது உட்பிரிவு சர்வே எண் என்பது இறுதியாக வருவாய்த்துறையால் உட்பிரிவு செய்த எண்ணை குறிக்கும்.
  10. ஒருமுறை உட்பிரிவு கட்டணம்  வசூலிக்கப்பட்ட சொத்து மீண்டும் வேறு ஒருவருக்கு விற்கப்படும்போது, அதற்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை
இந்த புதிய நடைமுறை வரும் மே 28-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
*************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 26.05.2018 

No comments:

Post a Comment