disalbe Right click

Monday, January 21, 2019

இப்படியொரு கடன் இருப்பது தெரியுமா?

இப்படியொரு கடன் இருப்பது தெரியுமா?
தனிநபர் கடனுக்கான வட்டி உங்கள் பர்ஸை பதம் பார்க்கிறதா? உங்களுக்கு வாடகை வருமானம் வரக்கூடிய சொத்து இருந்தால், உங்களுடைய வட்டி சுமையைக் குறைத்துக்கொள்ள வழி இருக்கிறது. உங்களுக்கு வரும் வாடகை வருமானத்தின் மீது கடன் வாங்க முடியும். பாதுகாப்பான இந்தக் கடனில், தனிநபர் கடன் உள்ளிட்ட பிற கடன்களைக் காட்டிலும் குறைவான வட்டி வசூலிக்கப்படுகிறது.
அதாவது, வீடு அல்லது வணிக வளா கம் உள்ளிட்டவற்றிலிருந்து கிடைக்கும் வாடகை வருமானத்தின் மீது வங்கிகள் கடன் வழங்குகின்றன. அதிகபட்ச கடன் தொகை வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. ஆனால், கடன் தொகையானது, கடன் முதிர்ச்சியடையும் காலம் வரையிலான வட்டி வருமானம் மற்றும் சொத்தின் மறு விற்பனை மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.
பெரும்பாலான வங்கிகள் சொத்து மதிப்பில் அல்லது கடன் காலத்தில் ஈட்டப் படும் வாடகை வருமானத்தில் 80 சதவீதம் கடனாக வழங்குகின்றன. சில வங்கிகள் இதற்கு மேலும் வழங்குகின்றன. உதார ணத்துக்கு பெடரல் வங்கி, கடன் காலத்தில் ஈட்டப்படும் வாடகை வருமானத்தில் 90 சத வீதம் கடனாக வழங்குகிறது. ஹெச்டி எஃப்சி சொத்து மதிப்பில் 50 சதவீதம் கடனாக வழங்குகிறது. மேலும் மொத்த வாடகை வருமானத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
வங்கிகள் பொதுவாக கடன் தொகையை கடன் வாங்குபவரின் கிரெடிட் ரேட்டிங் மற்றும் மாதாந்திர பணப்புழக்கத்தை அடிப்படையாக வைத்து வழங்குகின்றன. ஐடிபிஐ வங்கி, தனது கடன் தொகையை, குத்தகை முதிர்வுறும் காலத்துக்குள் அல்லது 120 மாதங்களுக்குள் (முதலில் வருவது) திரும்பச் செலுத்தக் கூடிய அளவில் நிர்ணயிக்கிறது.
கடன் முதிர்வுறும் காலமும் வங்கிக்கு வங்கி மாறுகின்றன. ஹெச்டிஎஃப்சி வங்கி 1-9 வருடக் கால அளவில் வழங்குகிறது. பெடரல் வங்கி 10 ஆண்டுகள் வரை வழங்குகிறது.
வட்டி விகிதம்
இந்த வகைக் கடனில் அதிகபட்ச கடன் தொகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த வரம்பு வங்கிக்கு வங்கி மாறினாலும். பெடரல் வங்கி ரூ. 20 கோடி வரை வழங்குகிறது. ஐடிபிஐ ரூ. 10 கோடி வரை மட்டுமே வழங்குகிறது. எனினும், வங்கிகள் தனிநபர்களின் நம்பகத்தன்மையைப் பொறுத்து கூடுதலாகக் கடன் வழங்கவும் செய்கின்றன.
இந்தக் கடன் சொத்து அடிப்படை யிலானது என்பதால் பாதுகாப்பானது. இந்த வகைக் கடனில் வட்டியானது போட்டிக்குரியதாக இருந்தாலும், தனிநபர் கடனோடு ஒப்பிடுகையில் குறைவான வட்டி விகிதத்தையே கொண்டுள்ளன. பொதுவாக வங்கிகள் எம்சிஎல்ஆர் வட்டி விகிதத்தைக் காட்டிலும் 1-3 சதவீதம் கூடுதலாக வசூலிக்கின்றன.
வங்கிகள் 9.75 முதல் 10 சதவீதம் வரை வசூலிக்கின்றன. வங்கி சாரா நிதி நிறுவனங்களை இதைக் காட்டிலும் கூடு தலாக வசூலிக்கின்றன. பஜாஜ் பின்சர்வ் சராசரியாக 11 சதவீதம் வசூலிக்கிறது. ஆனாலும், இறுதி வட்டிவிகிதம், வாடகைதாரரின் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்தே தீர்மானிக்கிறது.
வட்டிவிகிதத்தைத் தீர்மானிக்கும் காரணிகளில், கிரெடிட் ஸ்கோர், முந்தைய கடன் திருப்பிச் செலுத்திய விவரங் கள், குத்தகைதாரரின் வம்சாவளி, சொத்து அமைந்துள்ள இடம் ஆகியவை அடங்கும். ஆனாலும், வாடகை வருமானத்தின் மீது வாங்கப்படும் கடனுக்கு தனிநபர் கடனைக் காட்டிலும் குறைவாக, 3-8 சதவீதம் என்ற அளவில்தான் வட்டிவிகிதம் இருக்கிறது.
வட்டிவிகிதத்துடன் பிராசஸிங் கட்டணம் உண்டு. கடன் மதிப்பில் 1-3 சதவீதம். இந்த விகிதமும் வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. உதாரணமாக, ஐடிபிஐ வங்கி 1 சதவீதம் பிராசஸிங் கட்டணமாக வசூலிக்கிறது. மேலும், கடன் மதிப்பை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும், மதிப்பீட்டு அறிக்கைக்கான பிராசஸிங் கட்டணமும் செலுத்த வேண்டும்.
எப்படி விண்ணப்பிக்கலாம்?
கடன் விண்ணப்பத்தோடு தேவை யான ஆவணங்களைச் சேர்த்து வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். சேர்க்க வேண்டிய ஆவணங்கள்: அடையாள சான்று, முகவரி சான்று, கடைசி ஆறு மாத வங்கிப் பரிவர்த்தனை அறிக்கை (வாடகை வரு மானம் வரவு வைக்கப்படும் வங்கிக் கணக்கு). சொத்து சார்ந்த ஒரிஜினல் ஆவணங்கள், தாய் பத்திரம், அங்கீகரிக்கப்பட்ட கட்டுமான திட்டம், சொத்து வரி செலுத்திய ஒரிஜினல் ரசீதுகள் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும்.
இதோடு சேர்த்து, வாடகைதாரருடன் செய்துகொண்ட ஒப்பந்தப் பத்திரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களை ஆராய்ந்த பின்னர் ஏதேனும் கூடுதல் ஆவணங்கள் தேவையெனில் வங்கிகள் கேட்கலாம். குறிப்பாக, வாடகைதாரர் வாடகைச் செலுத்தும் திறன் பற்றி தெரிந்துகொள்ள, வாடகைதாரரின் வங்கிக் கணக்கு அறிக்கை கேட்கப்படலாம்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவோ அல்லது தொழிலுக்காகவே கடன் வாங்கும் பட்சத்தில், வாடகை வருமானத்தின் மீது கடன் வாங்குவது செலவு குறைவானதாக இருக்கும். இது பாதுகாப்பான கடன் என்றாலும், அந்தச் சொத்தின் மீது வங்கிகளுக்கும் உரிமை உள்ளது. எந்தவொரு கடனுக்கும் விண்ணப்பிக்கும்போது நிறை, குறைகளை, பிற கடன்களோடு ஒப்பிட்டு பார்த்து வாங்குவது பலனளிக்கும்.
- நளினகாந்தி.வி
*******************************************நன்றி : இந்து தமிழ் நாளிதழ் - 10.12.2018
https://tamil.thehindu.com

No comments:

Post a Comment