disalbe Right click

Friday, June 21, 2019

நீர்நிலை, பராமரிப்பு, பாதுகாப்பு - உத்தரவுகள்

நீர்நிலை, பராமரிப்பு, பாதுகாப்பு
நீர்நிலை, பராமரிப்பு, பாதுகாப்பு, தொடர்பான சில உத்தரவுகளை பல்வேறு கால கட்டங் களில் உயர்நீதிமன்றங்கள் பிறப்பித்துள்ளன.
நம் மாநிலத்தில், அனைத்து நீர் ஆதாரங்கள் இருந்தும், முறையாக பயன்படுத்தாததால், வளமான நிலங்களை ஆக்கிரமித்தும், கழிவுகளை கொட்டியும், வீணாக்கப் பட்டுவிட்டன. கடுமையான நடவடிக்கை எடுக்க வில்லை என்றால்,தென் ஆப்ரிக்காவில், கேப் டவுன் நகரில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சம், நமக்கும் ஏற்படும் நாள், வெகு துாரத்தில் இல்லை!
நீதிபதிகள், எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் தலைமையிலான, சென்னை உயர் நீதிமன்ற பெஞ்ச். ஏப்., 2019 -ல் பிறப்பித்த உத்தரவு
⧭ நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளுக்காக, தலைமை செயலர் தலைமையில், பொதுப்பணித் துறையில், சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும்.
⧭ ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகள் குறித்து, தலைமை செயலர், மாதம் ஒரு முறை ஆய்வு நடத்த வேண்டும்.
⧭ ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு, போலீசார் ஒத்துழைக்காத பட்சத்தில், ராணுவத்தை அழைக்கலாம்.
 நீதிபதி, கிருஷ்ணகுமார், சென்னை உயர் நீதிமன்றம். ஏப்., 2019-ல் பிறப்பித்த உத்தரவு
⧭ கடலில் வீணாக கலக்கும் மழைநீரை, குளம், குட்டை களுக்கு திருப்பி விட, முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
⧭ இதற்கு, ஆலோசனை தெரிவிக்க, தமிழக அரசு, சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும்.
நீதிபதிகள், மணிகுமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச், சென்னை உயர் நீதிமன்றம். 18 ஜூன், 2019ல் பிறப்பித்த உத்தரவு
⧭ மாநிலம் முழுவதும் தண்ணீர் பிரச்னை உள்ளது. இந்த சூழ்நிலை கருதி, எத்தனை நீர்த்தேக்கங்கள் துார் வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு, பணிகளின் நிலை என்ன... சாகப் போகும்போது என்னவோ சொல்வரே, அதுபோல் கடைசி நேரத்தில், தண்ணீர் சேமிப்பு குறித்து, விழிப்புணர்வு பிரசாரம் செய்வதால் என்ன பயன்?
⧭ நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகள், ஆக்கிர மிப்புகளால் சுருங்கிவிட்டதாக, கவனத்திற்கு வந்து உள்ளது
⧭ ஏரிகள், நீர்நிலைகளில் உள்ள ஆக்ரமிப்புகளும், தண்ணீர் தேக்கம் குறைவுக்கு முக்கிய காரணம். ஆக்கிரமிப்புகள் குறித்தும், பொதுப்பணித்துறை செயலர், அறிக்கை அளிக்க வேண்டும்.
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் குறித்தும், கூடுதலாக நிலையம் அமைக்க, ஆய்வு ⧭ மேற்கொள்ளப் பட்டதா எனவும், அறிக்கை அளிக்க வேண்டும்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 19.06.2019

No comments:

Post a Comment