disalbe Right click

Saturday, December 7, 2019

வெளிநாட்டில் வேலை பார்க்க ஆசையா?


வெளிநாட்டில் வேலை பார்க்க ஆசையா? என்ன செய்ய வேண்டும்?
நமது நாட்டில் நல்ல வேலையில் இருந்தாலும், வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டும்! என்ற ஆகையில் இன்றைய இளைய தலை முறையினர் ஆசைப்படுகின்றனர். அதில் தவறு ஒன்றும் இல்லை. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு! என்று நமது முன்னோர்கள் ஏற்கனவே சொல்லி வைத்திருக்கிறார்கள்.
ஆனால், தவறான நபர்களையும், மோசடி செய்கின்ற ஏஜன்சிகளையும் நம்பி கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை கொடுத்துவிட்டு ஏமாந்து தவிப்பவர்கள் அதிகம் நமது நாட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை.
எனக்குத் தெரிஞ்ச ஏஜன்சி ஒன்று இருக்கிறது. ஆயிரக்கணக்கான இளைஞர்களை வெளிநாட்டுக்கு அவர்கள் அனுப்பி வைத்திருக்கிறார்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னுடன் வாருங்கள் நானே அங்கு உங்களை அழைத்துச் செல்கிறேன் என்று சிலை உங்களை அணுகலாம். உங்களது சிறிய ஆசைக்கு தூபம் போட்டு அதனை பெரிதாக வளர்த்து உங்களை ஏமாற்றலாம். அளவுக்கு அதிகமான ஆசை மற்றவர்களின் எச்சரிக்கையை உதாசினம் செய்யும்.  
ஏஜன்சி உண்மையானதுதானா?
வேலை வாங்கித்தருகின்ற ஏஜன்சி உண்மையானதுதானா? நமது நட்டில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை தெரிந்து கொண்டால் உங்களை ஏமாற்ர அவர்களால் முடியாது. எந்த ஏஜன்சி உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறோம் என்று உங்களை அணுகுகிறதோ, அதனை சேர்ந்தவர்களிடம் உங்களது ஆர்.ஏ. நம்பர் என்ன? என்று கேளுங்கள். மோசடி செய்ய நினைப்பவர்கள் என்றால், உங்களை மறுபடி அணுகவே மாட்டார்கள். 
ஆர். ஏ. நம்பர் என்றால் என்ன?
நமது இந்திய அரசு இது போன்று வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புகின்ற முறைப்படி பதிவு செய்யப்பட்ட ஏஜன்சிகளுக்கு என்று நம்பர் வழங்கியுள்ளது. இதற்கு Recruiting Agency number என்று பெயர். இதனையே சுருக்கி ஆர்.ஏ. நம்பர் என்று சொல்கிறோம். டுபாக்கூர் ஏஜன்சி என்றால் இந்த எண் இருக்காது. நாம் எச்சரிக்கையாக தப்பித்துவிடலாம்.
இந்திய அரசின் இணையதளம்
இதற்கென்றே நமது இந்திய அரசு ஓர் இணையதளத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.  அந்த இணையதளத்தினைப் பார்வையிட கீழ்க்கண்ட லின்க்கை கிளிக் செய்யுங்கள்.
மேற்கண்ட இணையதளத்தில் உங்களுக்கு வேலை வேண்டும் என்ற விபரத்தை பதிவு செய்யலாம். அந்தப் பதிவு மூலம் உங்களது விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அவ்வப்போது பார்த்து தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் உங்களது பணிகளை நீங்கள் செய்து கொள்ளலாம். 
பதிவு செய்யப்பட்ட ஏஜன்சிகள் பட்டியல்
இந்திய அரசிடம் முறைப்படி பதிவு செய்யப்பட்ட ஏஜன்சிகளைப் பற்றி தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட லின்க்கை கிளிக் செய்யுங்கள்.
அரசு அங்கீகாரம் பெற்ற நேரடி நிறுவனங்களிடம் மட்டுமே அணுகுங்கள்.  மேற்கண்ட பி.டி.எஃப் பைலை ஓப்பன் செய்து, உங்களுக்கு அருகாமையில் உள்ள பதிவு செய்யப்பட்ட ஏஜன்சியை நீங்கள் அணுகினால், நீங்கள் ஏமாற்றப்பட மாட்டீர்கள். உங்கள் தகுதிக்கு தகுந்த சிறந்த வேலையையும் நீங்கள் தேர்வு செய்யலாம். பதட்டப்பட வேண்டியதில்லை. நெருக்கடியும் தர மாட்டார்கள். 
நல்ல வேலை தங்களுக்கு கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள்!
******************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 07.12.2019 

No comments:

Post a Comment