disalbe Right click

Showing posts with label அரசுத் துறைகள். Show all posts
Showing posts with label அரசுத் துறைகள். Show all posts

Thursday, January 31, 2019

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
விளையாட்டு வீரர்களுக்கு செய்யும் உதவிகள் என்னென்ன?
விளையாட்டு துறையில் தமிழக வீரர்கள் சாதனை படைக்க எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவில், மாநில அளவில் வீரர்களுக்கு உதவியாக அரசு செய்துள்ள திட்டங்கள் பலருக்குத் தெரிவதில்லை. விளையாட்டு வீரராக தயார் செய்து கொண்டிருக்கும் வீரருக்கு ஊக்கத் தொகைகள், வசதிகள், அனைத்தும் பெற இக்கட்டுரை.
தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளிலும் மக்களிடையே விளையாட்டு மேம்பாட்டுக்காகவும், , அரசாணை G.O.Ms.No. 641, கல்வி (Y1) நாள் 18.7.1992, விளையாட்டு மற்றும் இளைஞர் சேவைகள் இயக்குனரகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு விளையாட்டு மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றை இணைத்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் இந்த ஆணையத்தின் தலைவர் ஆவார்.
ஆணையத்தின் செயல்பாடுகள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒவ்வொரு விளையாட்டிற்கும் பயிற்றுனா்களை நியமித்து பள்ளி, கல்லுாரி மற்றும் பொதுமக்களுக்கு அந்தந்த விளையாட்டுக்களில் இலவச பயிற்சி அளித்து அனைத்து விளையாட்டுக்களையும் மேம்படுத்துவது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் நடத்தப்படும் விளையாட்டு விடுதிகள்/ விளையாட்டுப் பள்ளிகளில் மாணவ, மாணவியா்கள் சோ்க்கப்பட்டு அவா்களின் விளையாட்டுத் திறனை தேசிய மற்றும் சா்வதேச அளவிற்கு வளா்த்துக் கொள்ள செய்தல்.
அனைத்து பள்ளிகளில் 6,7,8 வகுப்புகள் பயிலும் மாணவ, மாணவியா்களுக்கு உடற்திறனாய்வு நடத்தி தோ்வு பெற்றவா்களுக்கு போட்டிகள் நடத்தி இருப்பிடமில்லா மற்றும் இருப்பிட பயிற்சி முகாம் நடத்துதல்.
கோடைகால விடுமுறையின் போது மாணவ, மாணவியா்களுக்கு மாவட்ட விளையாட்டரங்கத்தில் பயிற்சிகள் நடத்துதல்.
பள்ளி மாணவ, மாணவியா்களுக்கு பேரறிஞா் அண்ணா அவா்களின் பிறந்த தின சைக்கிள் போட்டி நடத்துதல்.
பள்ளி மாணவ, மாணவியா்களுக்கு மாவட்ட அளவில் கேரம் விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்.
மாண்புமிகு முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு மாநிலப் போட்டிக்கு அணிகள் அனுப்பிவைத்தல்.
உடற்கல்வி ஆசிரியா் / ஆசிரியைகளுக்கு பயிறிசி முகாம் நடத்துதல்.
மாவட்ட அளவில் அரசு ஊழியா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்.
மாவட்ட அளவில் கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்
ஒவ்வொறு ஆண்டும் தேசிய அளவில் பதக்கம் பெற்றவீரா், வீராங்கனைகளுக்கு ஊக்க உதவித்தொகை அளித்தல்.
செயல்படுத்தப்படும் திட்டங்களின் விபரம்
விளையாட்டுப்பள்ளி / விளையாட்டு விடுதியில் சேர மாவட்ட அளவிலான தோ்வுப் போட்டிகள்
கோடைகால பயிற்சி முகாம்
ஐந்துநாட்கள் இருப்பிடமில்லா பயிற்சி முகாம்
15 நாட்கள் இருப்பிட பயிற்சி முகாம்
அண்ணா பிறந்ததின சைக்கிள் போட்டி நடத்துதல்
மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்
முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்
மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்
உடற்கல்விஆசிரியா் / ஆசிரியைகளுக்கு மூன்றுநாள் பயிற்சி முகாம் நடத்துதல்
மாவட்ட அளவில் அரசுஊழியா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்
மாவட்ட அளவிலான கடற்கரைவிளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்
உலக உடற்திறனாய்வு திட்டம்.
திட்டங்கள் பற்றிய விளக்கம்
விளையாட்டுப்பள்ளி / விளையாட்டு விடுதியில் சேரமாவட்ட அளவிலான தோ்வுப் போட்டிகள்
மாநிலத்தில் மாவட்ட தலைநகரங்களில் செயல்பட்டுவரும் விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவியா்கள் சோ்க்கைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப்பள்ளி / விளையாட்டு விடுதிதோ்வுப் போட்டி ஒவ்வொரு ஆண்டும் மேமாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
கோடைகால பயிற்சி முகாம்
பள்ளிகளில் பயிலும் 16-வயதிற்குட்பட்ட மாணவ/ மாணவியா்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் ஒவ்வொரு ஆண்டும் மேமாதங்களில் 21- நாட்கள் திருவாரூா் மாவட்ட விளையாட்டரங்கத்தில் காலை மற்றும் மாலை வேலைகளில் தடகளம், ஹாக்கி ,கூடைப்பந்து , நீச்சல், வாலிபால், கிரிக்கெட் மற்றும் யோகா ஆகிய விளையாட்டுக்களில் நடத்தப்பட்டுவருகிறது.
ஐந்து நாட்கள் இருப்பிடமில்லா பயிற்சி முகாம்
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6,7 மற்றும் 8-ம் வகுப்பில் பயிலும் மாணவ/ மாணவியா்களுக்கு 100மீ, 200மீ, 400மீ, உயரம்தாண்டுதல், நீளம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் ஆகிய உலக திறனாய்வு போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் 10 இடங்களை பெற்றவா்களுக்கு இருப்பிடமில்லாத பயிற்சி முகாம் திருவாரூா்மாவட்ட விளையாட்டு அரங்கமைதானத்தில் ஒவ்வொரு ஆண்டும் மேமாதங்களில் காலை வேலையில் மட்டும் 5 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது.
15 நாட்கள் இருப்பிட பயிற்சி முகாம்
5 நாட்கள் இருப்பிடமில்லா பயிற்சி முகாமில் தோ்ந்தெடுக்கப்பட்ட 30 மாணவா்கள், 30 மாணவியா்களுக்கு 15 நாட்கள் இருப்பிட பயிற்சி முகாம் திருவாரூா் மாவட்ட விளையாட்டரங்கில் ஒவ்வொரு ஆண்டும் மேமாதங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பயிற்சி முகாமில் கலந்து கொள்பவா்களுக்கு மூன்று வேளை சத்தான உணவு, சீருடை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அண்ணா பிறந்ததின சைக்கிள் போட்டி நடத்துதல்
பேரறிஞா் அண்ணா அவா்களின் பிறந்த தினத்தினைச் சிறப்பிக்கும் வகையி்ல் மாவட்ட அளவில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியா்களுக்கான விரைவு சைக்கிள் போட்டி 13 வயது, 15வயது மற்றும் 17 வயதிற்குட்பட்ட மூன்று பிரிவுகளாக 5 கி.மீ, 10 கி.மீ, 15 கி.மீ துாரத்திற்கு போட்டிகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெறுபவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்
மாவட்டத்தில் சிறந்து விளங்கும் விளையாட்டுக்களை தோ்வு செய்து மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் சூலை,ஆகஸ்ட் ,அக்டோபா் மற்றும் மார்ச் மாதங்களில் மாவட்ட விளையாட்டரங்க மைதானத்தில் வயது வரம்பின்றி ஆடவா் மற்றும் மகளிருக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
முதலமைச்சா் கோப்பை - மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவாரூா் மாவட்ட விளையாட்டுப் பிரிவால் மாவட்ட அளவிலான மாண்புமிகு முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்க மைதானத்தில் ஆண்டு தோறும் அக்டோபா்/ நவம்பா் மாதங்களில் வயது வரம்பின்றி கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து, தடகளம், ஹாக்கி, மற்றும்கபாடிபோட்டிகள்நடத்தப்பட்டுவருகிறது. முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரா்மற்றும் வீரங்கனைகளுக்கு ரொக்கபரிசாக முறையே ரூ.1000/-, ரூ.750/-மற்றும் ரூ.500/-ம் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு மாவட்ட அளவில் தோ்வு பெற்ற வீரா் ,வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள அழைத்துச் செல்லப்படுவார்கள். மாநிலப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறுபவா்களுக்கு முறையே தலா ரூ.1 இலட்சம், ரூ75 ஆயிரம் ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசுகளும் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், மாவட்ட கேரம் கழகமும் இணைந்து பள்ளிக்கல் வித்துறையின் ஒத்துழைப்புடன் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கேரம் விளையாட்டுப் போட்டியினை இளநிலைப் பிரிவு (மழலை வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை) மற்றும் முது நிலைப்பிரிவு (6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை) ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. முதல் மூன்றிடம் பெற்றமாண, மாணவியா்களுக்கு ரொக்கப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
உடற்கல்விஆசிரியா் / ஆசிரியைகளுக்கு மூன்று நாள் பயிற்சி முகாம் நடத்துதல்
புதிய விளையாட்டுகளின் (வாள்ச்சண்டை, டேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ,நீச்சல், ஸ்குவாஷ், குத்துச்சண்டை, சதுரங்கம், சாலைசைக்கிள், கடற்கரைகையுந்துபந்து, கேரம் , சிலம்பம் , வலைபந்து) நுணுக்கங்கள் மற்றும் புதிய விதிமுறைகளை விளையாட்டு வல்லுனா்கள் மூலம் உடற்கல்வி ஆசிரியா்/ஆசிரியைகளுக்கு பயிற்சி அளித்தல்.
மாவட்ட அளவில் அரசு ஊழியா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்
மாவட்ட அளவில் அரசு ஊழியா்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்கள் நடத்தப்பட்டு சீருடை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு மாநில போட்டியில் கலந்துகொள்ள அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்
மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் 2013-ம் ஆண்டு முதல் திருவாரூா் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் விளாங்காடு ஊராட்சியில் கடற்கரை கபாடி ,கடற்கரை கால்பந்து மற்றும் கடற்கரை வாலிபால் விளையாட்டுப் போட்டிகள் வயது வரம்பின்றி நடத்தப்பட்டு வருகிறது. முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் வீரா் ,வீராங்கனைகளுக்கு முதலிடம் ரூ.350-, இரண்டாமிடம் ரூ.200-, மூன்றாமிடம் ரூ.150- ரொக்கப்பரிசுத் தொகை , சான்றிதழ்கள் மற்றும் சீருடை வழங்கப்பட்டு மாநில போட்டியில் கலந்துகொள்ள அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
உலக உடற்திறனாய்வு திட்டம்.
மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளி மற்றும் உயா்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6,7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவ,மாணவியா்களுக்கு உடற்திறனாய்வு தோ்வுகள் பள்ளியில் நடத்தப்பட்டு குறைந்தபட்சம் 8 மதிப்பெண்கள் பெற்றமாணவ, மாணவியா்கள் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடத்தப்படும் கல்வி மாவட்டஅளவிலான உலக உடற்திறனாய்வு தடகளப் போட்டிகளுக்கு கலந்துகொள்ள தகுதியுடையவா்கள். மாவட்ட போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பெறும்மாணவ, மாணவியா்கள் மண்டல அளவிலான போட்டிகளுக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவா்மண்டல அளவிலான போட்டிகளில் முதல் 10 இடங்களில் வெற்றி பெறும் மாணவ ,மணவியா்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.6000-ம் மற்றும் சான்றிகள் வழங்கப்படும்
உதவித்தொகை, விருதுகள் மற்றும் ஊக்கத்தொகை
தமிழ்நாடு அரசு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஸ்காலர்ஷிப், விருதுகள் மற்றும் சலுகைகள் வழங்கியுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாயிலாக விளையாட்டு வீரர்களாக இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாயும், கல்லூரி, பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 13 ஆயிரம் ரூபாயும் கல்வி உதவித்தொகையாக வழங்குகிறது
தேசிய அளவிலான போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு ஆணையங்கள் நடத்திய போட்டிகள், இந்தியப் பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு ஆணையம், மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மற்றும் அகில இந்திய பல்கலைக்கழகங்களின் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
எலைட் விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி (ஒலிம்பிக்ஸ் கௌரவித்தல்):
ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வெல்ல தகுதியுள்ள விளையாட்டு நபர்களை தயார் செய்து உதவுவதற்கான சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஆறு திறமையான ஆண்கள் / பெண்கள் விளையாட்டு நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, சர்வதேச போட்டிகளில் (குறிப்பாக ஒலிம்பிக்) பதக்கங்களை வென்றெடுக்க வசதிகள் வழங்கப்படும். சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உதவி, அறிவியல் பயிற்சி, உயர் தரமான விளையாட்டு மற்றும் பயிற்சி உபகரணங்கள் மற்றும் சத்துணவு உணவு இந்த ஆட்களுக்கு வழங்கப்படும். ரூ .1.25 கோடியின் வருடாந்திர தொடர்ச்சியான செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
விளையாட்டு வீரர்கள் உதவித் திட்டம்:
இந்தத் திட்டத்தின் கீழ், தேசிய மாணவர்களுக்கான சிறந்த பதக்கம் வென்றவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு ரூ .10,000 / - மாணவர்களுக்கும், ரூ .13,000 / - வழங்கப்படும்.
2) விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்:
அவசரகால சூழ்நிலைகளில் முன்னோடிகளின் சிறந்த விளையாட்டு வீரர்கள், மாத வருமானம் ரூ .6,000 / - க்கும் அதிகமாக இருக்காது மற்றும் 58 வயதை தாண்டியவர்கள் தங்கள் வாழ்நாளில் மாதத்திற்கு ரூ .3000 / - ஓய்வூதியத்துடன் வழங்கப்படுகின்றனர். அவர்களின் மரணத்திற்குப் பின், குடும்ப ஓய்வூதியம் தனது வாழ்நாள் முழுவதும் மனைவிக்கு தகுதியுடையது.
3) விளையாட்டு வீரர்கள் சேமநல நிதி:
தேசிய மற்றும் மாநில மட்ட போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்டபோது காயமடைந்தவர்களுக்கும் இழப்புக்களுக்குமான நிதி உதவியை வழங்குவதற்காக ஒரு விளையாட்டு வீரர்கள் நலன்புரி நிதி உருவாக்கப்பட்டது.
4) தகுதிவாய்ந்த விளையாட்டுப் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு:
5% போலிஸ் திணைக்களத்தில் ஆட்சேர்ப்புகளில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கல் உள்ளது. பொறியியல் கல்லூரிகளில் 500 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டுத்துறை ஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரிகளில் மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
5) முதலமைச்சரின் விளையாட்டு விளையாட்டு விருது:
ஒவ்வொரு வருடமும் சிறந்த விளையாட்டு வீரர்கள், பயிற்சிகள் மற்றும் உடற்கல் கல்விப் பயிற்றுவிப்பாளர்களுக்கு விருது வழங்கப்படும்.
6) முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது:
சமூகத்தின் நல்வாழ்வுக்கான இளைஞர்களால் அங்கீகரிக்கப்படும் சேவைகளை அங்கீகரிப்பதில், ஒவ்வொரு வருடமும் சுதந்திர தின நிகழ்வில் 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது 50,000 ரூபாயும், மேற்கோள் மற்றும் ஒரு பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கும்.
உயர் பண ஊக்கத்தொகை
பதக்கம் பெற்றவர் பதக்கம் பெற்ற தேதிக்கு முன்னர் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் குடிமகனாக இருக்க வேண்டும்.
விளையாட்டு
தங்கம்
வெள்ளி
வெண்கலம்
ஒலிம்பிக் விளையாட்டு (4 ஆண்டுகளுக்கு ஒரு முறை)
* தனிப்போட்டி /
ரூ. 2 கோடி
ரூ. 1 கோடி
ரூ.50 லட்சம்
ஆசிய விளையாட்டுகள் (4 ஆண்டுகளுக்கு ஒரு முறை)
* தனிப் போட்டி / வீரர் ஒன்றுக்கு அணி
ரூ.50 லட்சம்
ரூ.30 லட்சம்
ரூ.20 லட்சம்
காமன்வெல்த் விளையாட்டுக்கள் (4 ஆண்டுகளுக்கு ஒரு முறை)
* தனிப்போட்டி நிகழ்வு / வீரர் ஒன்றுக்கு அணி
ரூ.50 லட்சம்
ரூ.30 லட்சம்
ரூ.20 லட்சம்
தெற்காசிய விளையாட்டுகள் (2 ஆண்டுகளுக்கு ஒரு முறை)
* தனிப்போட்டி நிகழ்வு /வீரர் ஒன்றுக்கு அணி
ரூ.5 லட்சம்
ரூ.3 லட்சம்
ரூ.2 லட்சம்
தேசிய விளையாட்டுகள் (2 ஆண்டுகளுக்கு ஒரு முறை)
* தனிப்போட்டி
ரூ.5 லட்சம்
ரூ.3 லட்சம்
ரூ.2 லட்சம்
விளையாட்டு வீரர்களுக்கு விடுதிகள்
பள்ளி மாணவ-மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 28 விளையாட்டு விடுதிகள், 5 விளையாட்டுப் பள்ளிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்டு வருகின்றன. ஈரோடு, திருவண்ணாமலை, திண்டுக்கல், நாகர்கோயில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தர்மபுரி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம், ஆகியவற்றில் விடுதிகள் உள்ளன. மாணவர்களை பொருத்தவரை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரிகோவை, கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், ஊட்டி, விழுப்புரம், சென்னை, நெய்வேலி, நாமக்கல் ஆகிய இடங்களில் விடுதிகள் உள்ளன.
விளையாட்டில் ஆர்வமுடைய மாணவ-மாணவிகள் அனைத்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்களிடம் விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். மேற்காணும் விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு நடைபெறும்.
மாணவர்களுக்கான விளையாட்டு
1. தடகளம் 2. இறகுப்பந்து 3. கூடைப்பந்து 4. குத்துச்சண்டை 5. கிரிக்கெட் 6. கால்பந்து 7. வாள்சண்டை 8. ஜிம்னாஸ்டிக்ஸ் 9. கைப்பந்து 10. ஹாக்கி 11. நீச்சல் 12. டேக்வோண்டோ 13. வாலிபால் 14. பளூதூக்குதல் 15.கபாடி 16. மேசைப்பந்து 17. டென்னிஸ் 18. ஜீடோ 19. ஸ்குவாஷ் மற்றும் 20.வில்வித்தை
மாணவிகளுக்கான விளையாட்டு
1. தடகளம் 2. இறகுப்பந்து 3. கூடைப்பந்து 4. குத்துச்சண்டை 5. கால்பந்து 6. வாள்சண்டை 7. கைப்பந்து 8. ஹாக்கி 9. நீச்சல் 10. டேக்வோண்டோ 11. வாலிபால் 12. பளூதூக்குதல் 13.கபாடி 14. டென்னிஸ் மற்றும் 15. ஜீடோ மற்றும் 16. ஸ்குவாஷ். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள மாணவ / மாணவியர் விண்ணப்பிக்கலாம். மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் தொடர்பு எண்கள்...
அரியலூர் 7401703499,    சென்னை 7401703480, கோயம்புத்தூர்  7401703489, கடலூர்  7401703495, தர்மபுரி 7401703486, திண்டுக்கல் 7401703504, ஈரோடு 7401703490,  காஞ்சிபுரம்  7401703481,  கன்னியாகுமரி  7401703507,  கரூர்  7401703493,   கிருஷ்ணகிரி  7401703487,  மதுரை  7401703501,  நாகப்பட்டினம்  7401703497,  நாமக்கல் 7401703492,  பெரம்பலூர்   7401703516,  புதுக்கோட்டை   7401703498, ராமநாதபுரம்  7401703509,  சேலம்  7401703488,    சிவகங்கை  - 7401703503,    தஞ்சாவூர்  7401703496,   நீலகிரி    7401703491,   தேனி   7401703505,    திருநெல்வேலி  7401703506,  திருவள்ளூர்   7401703482,
திருவண்ணாமலை  7401703484,   திருவாரூர்    7401703500,   திருப்பூர்   7401703515,  திருச்சிராப்பள்ளி  7401703494,   தூத்துக்குடி  7401703508,   வேலூர்   7401703483,  விழுப்புரம்     7401703485,    விருதுநகர்     7824009970

By வழக்கறிஞர் சி.பி. சரவணன்
***************************************************நன்றி : தினமணி நாளிதழ் - 30.01.2019