disalbe Right click

Showing posts with label கல்வித்துறை. Show all posts
Showing posts with label கல்வித்துறை. Show all posts

Monday, October 23, 2017

பி.எட்., படிப்பு உடனடி சேர்க்கை

பி.எட்., படிப்பு உடனடி சேர்க்கை
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் செல்லத்துரை கூறியதாவது:
இப்பல்கலை தொலைநிலை கல்வி சார்பில் பி.எட்., உடனடி மாணவர் சேர்க்கை (ஸ்பாட் அட்மிஷன்) இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2017 -2019 ஆண்டு சேர்க்கைக்கு இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ளவர்களுக்கு அக்., 26, 27 மற்றும் அக்.,30 முதல் நவ.,3 வரை உடனடி சேர்க்கை நடக்கிறது.
நுழைவு தேர்வு இல்லை. 
ஆசிரியர் பணி அனுபவத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். அனைத்து சான்றிதழ்களுடன் அறிவிக்கப்பட்ட நாட்களில் காலை 10:00 - மதியம் 3:30 மணிக்குள் பங்கேற்கலாம்.

மேலும் விபரங்களுக்கு www.mkudde.org என்ற இணைய தளம் அல்லது இயக்குனர் (பொறுப்பு) கலைச் செல்வனை 98657 32822ல் தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.
நன்றி: தினமலர் நாளிதழ் - 24.10.2017 

Saturday, October 21, 2017

மாணவர்களின் வயது சிக்கலுக்கு தீர்வு; சி.பி.எஸ்.இ., அறிவிப்பு

மாணவர்களின் வயது சிக்கலுக்கு தீர்வு; சி.பி.எஸ்.., அறிவிப்பு
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்..,யில் மாணவர் சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்கு, சி.பி.எஸ்.., தீர்வை அறிவித்துள்ளது.
சி.பி.எஸ்.., பள்ளிகளை பொறுத்தவரை, பல ஆண்டுகளாக வயது குழப்பம் நிலவுகிறது. பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் போது, சம்பந்தப்பட்ட, சி.பி.எஸ்.., பள்ளிகள் இடம் கொடுக்க விருப்பம் இல்லாவிட்டால், வயதை காரணம் காட்டி, மாணவர்களின் விண்ணப்பத்தை நிராகரிப்பது வழக்கமாக உள்ளது.
திருப்பி அனுப்பும்
நான்கரை வயது அல்லது ஐந்து வயது முடியும் முன், சி.பி.எஸ்.., பள்ளியில், 1ம் வகுப்பில் சேர மாணவர் சென்றால், ’மார்ச், 31ல், ஐந்து வயது முடிந்திருக்க வேண்டும்என, அட்மிஷன் வழங்காமல், மாணவர்களை பள்ளிகள் திருப்பிஅனுப்பும். ஆனால், தமிழக பாடத்திட்ட மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், வயது வரம்பு பிரச்னைக்கு, சி.பி.எஸ்.., தீர்வை அறிவித்துள்ளது.’பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் வயது பற்றி குழப்ப வேண்டாம்; பள்ளிகள் எந்த மாநிலத்தில் செயல்படுகின்றதோ, அந்த மாநிலம் பின்பற்றும் வயது வரம்பை, சி.பி.எஸ்.., பள்ளிகள் பின்பற்றலாம்என, தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில், 10ம் வகுப்பு, பிளஸ்2 படிக்கும் மாணவர்கள், பொது தேர்வு எழுதுவதற்கான, ஆன் - லைன் பதிவுக்கான, சி.பி.எஸ்.., சார்பில் வழிகாட்டு நெறிமுறைகளில், இது, தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.
தேர்வு எழுத வாய்ப்பு
இதன்படி, தமிழகத்தில், ஜூலை,31ல், 14வயது முடிந்தோர், 10ம் வகுப்பு தேர்வையும்; 16 வயது முடிந்தோர்,பிளஸ் 2 தேர்வையும் எழுதலாம். இந்த வயதையும் விட குறைவாக இருந்தால், மருத்துவ தகுதி சான்றிதழ் வாங்கி கொடுத்தால், தேர்வை எழுத வாய்ப்பு உள்ளது.
அதே போல், ஜூலை, 31ல், நான்கு வயது முடிந்தோர், சி.பி.எஸ்.., பள்ளிகளில் சேர முடியும். எனவே, சி.பி.எஸ்.., பள்ளிகளில், வயது பிரச்னையில் தவிக்கும் மாணவர்களுக்கு உற்சாகமான தீர்வு கிடைத்து உள்ளது.
நன்றி : தினமலர் (கல்விமலர்) - 22.10.2017 

Sunday, October 15, 2017

தமிழக பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம்!

தமிழக பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம்!
தமிழகத்தில், மும்மொழி பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள், ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும், பல மாநிலங்களில், மும்மொழி பாடத்திட்டமே நடைமுறையில் உள்ளது.
மூன்று மொழிகள்
இதன்படி, மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் தேசிய அளவில் ஹிந்தி என, மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இவற்றில், சில மாநில பாடத்திட்ட பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.., பள்ளிகளில், பிரெஞ்ச், ஜெர்மன், ரஷ்ய மொழிகளில் ஒன்று, மூன்றாவது மொழியாக கற்று தரப்படுகிறது.
ஆனால், அடுத்த ஆண்டு முதல், மூன்றாம் மொழியாக பிறநாட்டு மொழிக்கு பதில், இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு மொழியை, கூடுதலாக படிக்க வைக்க வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பாடத்திட்டம்
இந்நிலையில், தமிழகத்தில், பாடத்திட்டத்தை மாற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதில், பாடத்திட்டம் மட்டுமின்றி, மொழி வாரியாகவும் மாணவர்களுக்கு கூடுதல் வசதி கிடைக்கும் வகையில், மூன்று மொழிகளை கற்பிக்கலாம் என, கல்வியாளர்கள் சிலர், பாடத்திட்ட கமிட்டியிடம் மனு அளித்துள்ளனர்.
மத்திய அரசின், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகளும், மும்மொழி திட்டத்தை கொண்டு வர ஆலோசனை வழங்கி உள்ளனர்.
எனவே, புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்தும் போது, மும்மொழி திட்டத்தை அறிமுகப்படுத்தலாமா என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஆறாம் வகுப்பு வரை அனைத்து அரசு, தனியார் பள்ளிகளில், தாய்மொழி வழியிலும், பின், அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப, ஆங்கில வழியிலும் பாடம் படிக்க, மாணவர்களுக்கு வசதி செய்யலாமா என்றும், பரிசீலிக்கப்படுகிறது.
தமிழ் கட்டாயம்
இந்த திட்டம் வந்தால், தமிழ் கட்டாயமாகும். இரண்டாவது மொழியாக, ஆங்கிலமும், பின், ஹிந்தி, அரபிக், சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என, பிறமொழிகளில் ஏதாவது ஒன்றும், அரசு பள்ளிகளில் கற்றுக் கொடுக்கப்படும் வாய்ப்புள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
நன்றி : தினமலர் (கல்விமலர்) – 16.10.2017 

Tuesday, July 18, 2017

பள்ளிகளை ஒரே நிர்வாகத்திற்கு மாற்ற உத்தரவு

பள்ளிகளை ஒரே நிர்வாகத்திற்கு மாற்ற உத்தரவு
தமிழகத்தில், 18 வகை நிர்வாகங்களின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளை ஒருங்கி ணைத்து, ஒரே நிர்வாக முறையில் கொண்டு வர, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில், 8,400 அரசு உதவிபெறும் பள்ளிகள் உட்பட, 40 ஆயிரம் பள்ளிகள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. மற்ற பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக் என, தனியார் பள்ளிகளாக, தனி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பள்ளிகளில், மாநிலம் முழுவதும், 5.60 லட்சம் பேர் படிக்கின்றனர்.
பல்வேறு விதிகள்
அரசு பள்ளிகளை பொறுத்த வரை, அரசின் பல்வேறு துறைகள் மூலம் நிர்வாகம் செய்யப்படுகிறது.
அதாவது, பள்ளிக்கல்வித் துறை, நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்துகளுக்கான ஊரக வளர்ச்சித் துறை, கள்ளர் மறுசீரமைப்பு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை, வனத்துறை, சமூகநலத் துறை, பழங்குடியினர் நலத்துறை மற்றும் கன்டோன்மென்ட் என, பல்வேறு துறைகளின் நிர்வாகத்தில் செயல்படுகின்றன. மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் நியமனம், உள்கட்டமைப்பு மேம்பாடு, பள்ளி நிர்வாகம்போன்றவற்றில், பல்வேறு விதிகள் தனித்தனியாக வகுக்கப்படுகின்றன.
குளறுபடிகள் கண்டறிந்துள்ளது.
அதனால், பள்ளிகளின் திட்டங்களை வகுப்பதிலும், ஒழுங்குமுறை செய்வதிலும், பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. இது குறித்து, தமிழக பள்ளிக்கல்வியின் ஆண்டறிக்கையை ஆய்வு செய்த மத்திய அரசு, குளறுபடிகளை கண்டறிந்துள்ளது. இதை தொடர்ந்து, அனைத்து நிர்வாகங்களையும், ஒரே குடையின் கீழ் வரும் வகையில் ஒன்றிணைக்க வேண்டும். இதில், தாமதம் ஏற்படக் கூடாது என, தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 18.07.2017


Sunday, June 25, 2017

எச்சரிக்கை! நர்சிங் பள்ளிகளில் 17 போலி படிப்புகள்:

எச்சரிக்கை! நர்சிங் பள்ளிகளில் 17 போலி படிப்புகள்:
மாணவர்கள் உஷார்
தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத, 'டுபாக்கூர்' நர்சிங் பள்ளி, கல்லுாரிகளில், 17 வகையான போலி படிப்புகள் நடத்தப்படுவது தெரிய வந்துள்ளது. 'விபரம் தெரியாமல், மாணவர்கள் இவற்றில் சேர்ந்து ஏமாற வேண்டாம்' என, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் எச்சரித்து உள்ளது.
தமிழகத்தில், ஜூலை, 17ல், மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் துவங்க உள்ளது. அடுத்த கட்டமாக, நர்சிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.
வேலை கிடைக்கும்
இந்நிலையில், தமிழகத்தில், அனுமதியின்றி செயல்படும், 'டுபாக்கூர்' நர்சிங் பள்ளி, கல்லுாரிகளில், 17 வகையாக, போலியான நர்சிங் படிப்புகள் நடத்தப்படுவது தெரிய வந்துள்ளது. இதில், சேர்ந்து ஏமாற வேண்டாம் என, நர்சிங் கவுன்சில், எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் பதிவாளர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு:
தமிழகத்தில், நர்சிங் பள்ளி, கல்லுாரிகளுக்கு, இந்தியன் நர்சிங் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் மூலம் அங்கீகாரம் வழங்கப்படு கிறது. இவற்றின் அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளில் படித்தால் மட்டுமே, அந்த சான்றிதழ்கள், நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்யப்படும்; அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
எனவே, நர்சிங் படிக்க விரும்பும்மாணவர்கள், தாங்கள் தேர்வு செய்யும் பள்ளி, கல்லுாரி மற்றும் நர்சிங் படிப்பு ஆகியவை, அங்கீகாரம் பெறப்பட்டதா என, சரிபார்த்து சேர வேண்டும். கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற, கல்லுாரி, படிப்பு விபரங்களை, /www.tamilnadunursingcouncil.com என்ற, இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால், நர்சிங் பயிற்சி என்ற பெயரில், சில பெரிய, சிறிய மருத்துவமனைகள், நிறுவனங்கள், பல்கலைகள், கல்லுாரிகள், பள்ளிகள் போன்றவை, 17 வகையான, போலி நர்சிங் படிப்புகளை நடத்து கின்றன.
இந்த படிப்பை முடிக்கும் மாணவர்கள், பெறக்கூடிய சான்றிதழ்களை, நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய முடியாது. அரசுப்பணியில் சேர முடியாது. எந்த மருத்துவமனையிலும், செவிலியர்களாக பணியாற்ற முடியாது.
போலி படிப்பை நடத்தும் நிறுவனங்கள்,பள்ளி, கல்லுாரி, பல்கலைகள் ஆகியவை மீது, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலின் சட்டப்படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; அபராதம் விதிக்கப்படும்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, போலி நர்சிங் பயிற்சி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே, போலி படிப்பு நடத்தும் நிறுவனங்கள், தாங்களாகவே போலி படிப்பு நடத்துவதை நிறுத்திக் கொள்வது நல்லது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
போலி படிப்புகள் என்ன?
ஆறு மாத படிப்புகள்
டிப்ளமா இன் நர்சிங் அசிஸ்டென்ஸ் கோர்ஸ்
இரண்டு ஆண்டு படிப்புகள்:
டிப்ளமா இன் நர் சிங்,
டிப்ளமா இன் பர்ஸ்ட் எய்ட் நர்சிங்,
வில்லேஜ் ஹெல்த் நர்சிங்,
டிப்ளமா இன் நர்சிங் எய்ட்,
டிப்ளமா இன் பர்ஸ்ட் எய்ட் அண்ட் பிராக்டிகல் நர்சிங்
ஓர் ஆண்டு படிப்புகள்:
சர்டிபிகேட் இன் நர்சிங்,
அட்வான்ஸ்ட் டிப்ளமா இன் நர்சிங் அசிஸ்டென்ட்,
டிப்ளமா இன் ஹெல்த் அசிஸ்டென்ட்,
நர்ஸ் டெக்னிசியன் கோர்ஸ்,
ஹெல்த் கெய்டு கோர்ஸ்
சான்றிதழ் படிப்புகள்:
ஹெல்த் அசிஸ்டென்ட்,
ஹாஸ்பிடல் அசிஸ்டென்ட்,
பெட் சைட் அசிஸ்டென்ட்,
பேஷண்ட் கேர்,
ஹோம் ஹெல்த் கேர்.
நன்றி : தினமலர் நாளிதழ் – 26.06.2017