disalbe Right click

Showing posts with label ஜாமீன். Show all posts
Showing posts with label ஜாமீன். Show all posts

Friday, January 5, 2018

ஜாமீனை ரத்து செய்யலாமா?

மிக முக்கியமான தீர்ப்பு 
ஓர் எதிரிக்கு வழங்கப்பட்டுள்ள முன் ஜாமீனை ரத்து செய்வதற்கு முன்பாக, அந்த எதிரிக்கு அறிவிப்பு அனுப்பி, அவர் தரப்பு வாதத்தையும் நீதிமன்றம் கட்டாயம் கேட்க வேண்டும். நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமீனை தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது
வித்தியாசம் உள்ளது
ஜாமீன் வழங்குவதற்கும், அதனை ரத்து செய்வதற்கும் வேறுபாடு உள்ளது. அவை இரண்டும் வெவ்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஜாமீன் நிபந்தனைகளில் ஒன்றாக எதிரி காவல் நிலையத்தில் அல்லது நீதிமன்றத்தில் முன்னிலையாகி கையெழுத்து போட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தாலும், எதிரி அவ்வாறு செய்யவில்லை என்ற காரணத்திற்காக அவரது ஜாமீனை உடனடியாக ரத்து செய்யக் கூடாது
காரணங்கள் என்ன?
எதிரி காவல் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ ஆஜராகி கையெழுத்து போடாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். எதிரியின் குடும்பத்தில் ஒரு துயர சம்பவம் நடந்திருக்கலாம் அல்லது நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது ஏழ்மை நிலையின் காரணமாகக் காவல் நிலையத்திற்கு செல்ல அவரிடம் பணம் இல்லாமல் இருக்கலாம் அல்லது புகார்தாரர் அவரைக் கையெழுத்து போடவிடாத படி தடுக்கலாம் அல்லது காவல் துறையினரே எதிரி கையெழுத்து போட விடாமல் தடுக்கலாம். எனவே ஜாமீன் மனுவை ரத்து செய்வதற்கு முன்பாக எதிரிக்கு அதுகுறித்து ஒரு அறிவிப்பை அனுப்பி அவர் தரப்பு நியாயத்தைக் கேட்க வேண்டும்
ஜாமீன் உத்தரவை ரத்து செய்யலாமா?
ஜாமீன் உத்தரவை ரத்து செய்வது அபாயமான ஒன்றாகும் ஒரு நபருக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை திரும்பப் பெறுகிற ஒரு விஷயமாகும். இயற்கை நீதிமுறைகள் மிகவும் முக்கியமானதாகும். இயற்கை நீதிமுறைகள் குறித்து சட்டத்தில் கூறப்படவில்லை என்றாலும் ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் இருக்க வேண்டிய ஒன்றாகும். இதற்கு நீதிபதிகளும் விதிவிலக்கானவர்கள் அல்ல
உயர்ந்த நுட்பங்களைக் கொண்ட ஒரு கம்ப்யூட்டர் கூட ஒரு நீதிபதிக்கு மாற்றாகச் செயல்பட முடியாது. ஏனென்றால் கம்ப்யூட்டருக்கு எந்தவிதமான உணர்ச்சிகளோ, உணர்வுகளோ கிடையாது. எனவே ஜாமீன் வழங்கிப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யும்போது நீதிபதிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது
CRL. RC. NO – 253 & 254/2016, DT – 13.06.2016, 
Uma Maheshwari (253/2016)Vs Inspector of police, 
District Crime Branch, 
Madurai 
(2016-3-MWN-CRL-121)
R. Hariharan (254/2016) Vs Inspector of police, 
District Crime Branch, 
Madurai 


நன்றி : முகநூல் நண்பர் வழக்கறிஞர் திரு Dhanesh Balamurugan அவர்கள்
************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 05.01.2018 

Saturday, May 20, 2017

நீதிமன்றம் தானாகவே ஜாமீன் வழங்கலாமா?

நீதிமன்றம் தானாகவே ஜாமீன் வழங்கலாமா?
உயர் நீதிமன்ற வழக்கறிஞர், யு.எம்.ரவிச்சந்திரன் கூறுகிறார்
சாதாரணமாக, ஒரு வழக்கில் ஒருவரை கைது செய்து, மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தும் போது, போலீஸ் தரப்பில், 'ரிமாண்ட்' அறிக்கை அளிக்க வேண்டும். அதை பரிசீலித்த பின், காவலில் வைக்கும்படி, மாஜிஸ்திரேட் உத்தரவிடுவார். சாதாரண குற்ற வழக்குகளில், 60 நாட்களிலும், கடுமையான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில், 90 நாட்களிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். அதன்படி, மாஜிஸ்திரேட்டும், 60 நாட்கள், 90 நாட்கள் வரை, காவலை நீட்டிப்பு செய்யலாம்.
இந்த நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றால், அதன்பின் காவலை நீட்டிக்க முடியாது. காவல் நீட்டிப்பு செய்யும்படி, போலீஸ் தரப்பில் கோரவில்லை என்றாலும், மாஜிஸ்திரேட்டுக்குரிய அதிகாரத்தின்படி, ஜாமினில் விடுவிக்க முடியும்.
ஜாமின் மனுவை, குற்றவாளி தரப்பில் தாக்கல் செய்யவில்லை என்றாலும், விசாரணைக்கு அவர் தேவையில்லாத பட்சத்தில், சிறையில் இருக்க வேண்டிய அவசியம் எழவில்லை. புலன் விசாரணை அதிகாரி, குற்றவாளியை காவலில் வைக்கும்படி கோராத போது, மாஜிஸ்திரேட், தனக்குரிய அதிகாரத்தை செயல்படுத்தி, ஜாமின் வழங்கி இருக்கலாம்.
விசாரணைக்கு குந்தகம் விளைவிப்பார்; சாட்சியங்களை கலைப்பார் என, கருதினால் மட்டுமே, ஒருவரை சிறையில் வைக்க முடியும். தனிமனித சுதந்திரம், ஒவ்வொருவருக்கும் அரசியலமைப்பு சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.
கடந்த, 1984ல் நடந்த ஆசிரியர்கள் போராட்டத்தின் போது, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 15 நாட்களுக்கு பின், காவல் நீட்டிப்புக்காக ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, கோவையில், மாஜிஸ்திரேட்டாக நான் இருந்தேன்.
ஆசிரியர்கள், ஜாமினில் செல்ல விரும்பவில்லை. ஆனால், அவர்களை சிறையில் வைக்க நான் விரும்பவில்லை. அதனால், காவல் நீட்டிப்பு தேவையில்லை; சொந்த ஜாமினில் விடுவிக்கும்படி, நான் உத்தரவிட்டேன்.
எனவே, சிறையில் இருப்பவர், ஜாமின் கோரவில்லை என்றாலும், அவரை ஜாமினில் விட, நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. அது, அந்தந்த நீதிபதிகளைப் பொறுத்தது.
(ஜாமீனில் வெளிவரலாமா வைகோ? என்ற செய்தியில் இருந்து தலைப்புக்குத் தேவையானது மட்டும் எடுக்கப்பட்டுள்ளது.)
நன்றி : தினமலர் நாளிதழ் - 20.05.201

Friday, May 5, 2017

ஜாமீனுக்கு சொத்து ஆவணம் தேவையா? ஐகோர்ட் அதிரடி

ஜாமீனுக்கு சொத்து ஆவணம் தேவையா? ஐகோர்ட் அதிரடி
'ஜாமினில் வருவதற்கு, சொத்து ஆவணங்கள் தாக்கல் செய்யும்படி வற்புறுத்தக் கூடாது; உத்தரவாதம் தருபவர் அரசு ஊழியராகவோ, ரத்த உறவாகவோ இருக்கவும் தேவையில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
நிபந்தனை :
சென்னையை சேர்ந்த சகாயம் என்பவருக்கு, முன் ஜாமின் வழங்கும் போது, சில நிபந்தனைகளை, உயர் நீதிமன்றம் விதித்தது. '15 ஆயிரம் ரூபாய்க்கு உத்தரவாதம், ரத்த உறவாக இருவரது உத்தரவாதம் வழங்க வேண்டும்' என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இந்த நிபந்தனைகளில் மாற்றம் செய்ய கோரி, உயர் நீதிமன்றத்தில் சகாயம் மனு தாக்கல் செய்தார். அவர் தரப்பில், '15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணம் தாக்கல் செய்ய, செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமின்தாரர்களுக்கு சொத்து கிடையாது' என, தெரிவிக்கப்பட்டது.
மனுவை விசாரித்த, நீதிபதி தேவதாஸ் பிறப்பித்த உத்தரவு:
ஜாமினுக்கான உத்தரவாதத்தை குற்றம் சாட்டப்பட்டவர் வழங்கும் போது அல்லது ஜாமின்தாரர் உத்தரவாதம் வழங்கும் போது, சொத்து ஆவணங்களை தாக்கல் செய்யும்படி, வற்புறுத்த முடியாது.
ஜாமின் அளிப்பவர் அரசு ஊழியராகவோ, ரத்த உறவாகவோ, உள்ளூர்காரராகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
சொத்து ஆவணங்கள், கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தாசில்தாரின் சான்றிதழ், வாகன பதிவு சான்றிதழை, குற்றம் சாட்டப்பட்டவரோ, ஜாமின்தாரரோ சமர்ப்பிக்க வேண்டும் என, கட்டாயப்படுத்தக் கூடாது.
ஆவண நகல் :
ஜாமின்தாரர், நேர்மையான நியாயமான நபராக இருக்க வேண்டும்.
ரொக்க உத்தரவாதத்தை வழங்கும்படி, முதல்கட்டத்திலேயே வற்புறுத்தக் கூடாது. தனிப்பட்ட உத்தரவாதம் அளிக்க முடியாமல், ரொக்க உத்தரவாதம் அளிக்க முன்வந்தால், அதை ஏற்கலாம்.
பாஸ்போர்ட், குடும்ப அட்டை, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை போன்ற ஏதாவது ஒரு ஆவணத்தின் நகலை, அடையாளத்தை றுதிப்படுத்துவதற்காக,நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
(இது பற்றிய செய்தியானது மதுரை பதிப்பு தினமலர் நாளிதழில் பக்கம் 14ல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் நகலினை கீழே காணலாம்)
No photo description available.

Image may contain: text

நன்றி : தினமலர் நாளிதழ் - 05.05.2017