disalbe Right click

Showing posts with label தங்கம். Show all posts
Showing posts with label தங்கம். Show all posts

Sunday, February 8, 2015

வெளிநாட்டில் இருந்து தங்கம் கொண்டுவர


வெளிநாட்டில் இருந்து தங்கம் கொண்டுவர முடியுமா?
**********************************************************************

நீங்கள் வெளிநாட்டில் இருந்து,இந்தியாவிற்கு பயணிக்க திட்டமா?
************************************************************
அப்படி வரும் போது தங்கத்தையும் கொண்டு வரும் எண்ணம் இருந்தால் இந்திய அரசாங்கம் விதித்துள்ள நிபந்தனைகளை கண்டிப்பாக நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவுக்கு வரும் போது உங்கள் பயண உடைமைகளுடன் தங்க நகைகள் அல்லது தங்கத்தை சேர்த்து கொண்டு வருவதற்கு, கீழ்கூறிய 5 முக்கியமான நிபந்தனைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

1) ஒரு இந்திய ஆண் பயணி ரூ.50,000/- மதிப்புள்ள நகைகளை கொண்டு வர மட்டுமே அனுமதிக்கப்படுவார். அதுவே பெண் பயணி என்றால் ரூ.1 லட்சம் வரை வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி தங்கம் கொண்டு வருவதற்கு ஒரு வருட காலத்திற்கு அதிகமாக அந்த பயணி வெளிநாட்டில் இருந்திருக்க வேண்டும். இந்த வரம்பிற்கு மேல் கொண்டு வரும் தங்க நகைகளுக்கு சுங்க வரி வசூலிக்கப்படும்.

2) பாஸ்போர்ட்டை கொண்டிருக்கும் பயணி தன்னுடைய பயண உடைமையாக தங்கத்தை இறக்குமதி செய்யலாம். 6 மாதங்கள் கழித்து வெளிநாட்டில் இருந்து வருகை தரலாம். ஆனால் இந்தியாவில் 30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்க கூடாது.

3) வெளிநாட்டில் இருந்து தாயகத்திற்கு தங்க கட்டிகளை நீங்கள் கொண்டு வந்தால், அந்த தங்க கட்டிகளில் வரிசை எண், எடை மற்றும் தயாரிப்பாளரின் பெயர் கட்டாயமாக இருக்க வேண்டும்.

4) நீங்கள் தங்க கட்டிகள் அல்லது நாணயங்கள் கொண்டு வந்தால், அதன் மீது சுங்க வரியாக, ஆறு சதவீத வரியும், மூன்று சதவீத மேல் வரியும் கட்ட வேண்டும். நீங்கள் டோலா கட்டிகள் அல்லது நகைகள் கொண்டு வந்தால், அதன் மீது சுங்க வரியாக பத்து சதவீத பெறுமான வரியும் மூன்று சதவீத மேல் வரியும் கட்ட வேண்டும். தங்கமும் முத்துக்களும் பதிக்கப்பட்ட நகைகளுக்கு விலக்கு அளிக்கப்படும்.

5) இந்தியாவுக்கு வந்து இறங்கியவுடன் தங்கம் இருப்பதை அறிவித்து விட்டு, வட்டியை கட்ட வேண்டும். ஒரு வேளை, உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்துள்ள தங்க நகைகள் தீர்வையில்லா வரம்புக்கு மீறி உள்ளதென்றால், தீர்வையில்லா பொருட்களை கொண்டுள்ள பயணிகளுக்கான பச்சை சேனலை பயன்படுத்த முடியாது. மாறாக, வரி கட்ட வேண்டிய பொருட்களை கொண்டுள்ளதால் சிவப்பு சேனல் வாயிலாக நடக்க வேண்டும். வரம்பு எல்லைக்கு மீறிய பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். சம்பந்தப்பட்ட அந்த பயணி சுங்க வரி சட்டம் 1962ன் கீழ் தண்டிக்கப்படுவார்.