disalbe Right click

Showing posts with label தீர்ப்பு. Show all posts
Showing posts with label தீர்ப்பு. Show all posts

Tuesday, January 30, 2018

உடந்தை குற்றவாளி

Indian Penal Code - Sec 107 & 306
தற்கொலை செய்துகொண்ட நபர் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு இவர்தான் காரணம் என்று, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவரால் எழுதப்பட்ட கடிதத்தை மட்டும் (Suicide Note) அடிப்படையாக கொண்டு "தற்கொலைக்கு உடந்தையாயிருந்தார்" (Abetment to Suicide) என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபருக்கு தண்டனை வழங்க முடியாது.
இ. த. ச பிரிவு 306 தற்கொலைக்கு உடந்தையாக இருப்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என கூறுகிறது.
அவ்வாறு தண்டனை வழங்குவதற்கு
  • (1)- ஒருவர் தற்கொலை செய்திருக்க வேண்டும்.
  • (2)- தற்கொலைக்கு ஒருவர் உடந்தையாக இருக்க வேண்டும்.
ஆனால் அதே நேரத்தில் உடந்தையாக இருந்தவருக்கு குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான குற்ற மனம் இருக்க வேண்டும். மற்றொருவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்கிற உள் நோக்கத்தோடு, அந்த செயலை செய்வதற்கு உடந்தையாக ஒருவர் இருக்க வேண்டும். பொதுவாக பேச்சுவாக்கில் கூறப்படும் வார்த்தைகளையும் உடந்தையாக இருந்ததாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது.
தற்கொலை செய்து கொள்கிற நபர் அதற்கு முன்பாக எழுதப்பட்ட கடிதத்தில், ஒருவருடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது என்ற காரணத்தினால், அந்த நபர் இ. த. ச பிரிவு 306 ன் கீழான குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார் என்கிற முடிவுக்கு உடனடியாக வந்துவிடக்கூடாது.
  • உடந்தையாக இருத்தல் என்பதற்கு பிரிவு 306ல் எவ்வித விளக்கமும் கொடுக்கப்படவில்லை.
  • ஒரு நபரை சில செயல்களை செய்யும்படியோ அல்லது செய்யாது இருக்கும்படியோ தூண்டி விடுவது என்பதுதான் உடந்தை என்பதற்கு பொருளாகும்.
  • அவ்வாறு தூண்டிவிடும் செயலானது வார்த்தைகள், செயல்கள் அல்லது எழுத்துக்கள் மூலம் அல்லது செய்கைகள் மூலமாகவும் இருக்கலாம்.
  • மற்றவர்கள் முன்பு ஒருவரை அவமானப்படுத்திய செயலாகவும் இருக்கலாம்.
  • எனவே ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கான முடிவினை எடுப்பதற்கு எதிரி ஒரு முக்கியமான பங்கினை ஆற்றியிருக்க வேண்டும்.
  • காதல் தோல்வியால் காதலன் தற்கொலை செய்து கொள்வது, தேர்வை சரியாக எழுதாததால் மாணவர் தற்கொலை செய்து கொள்வது, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் கட்சிக்காரன் தற்கொலை செய்து கொள்வது போன்ற தற்கொலை சம்பவங்களில் காதலித்த பெண், ஆசிரியர், வழக்கறிஞர் போன்ற நபர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு உடந்தையாக இருந்தார்கள் என்று கூற முடியாது.
  • ஒரு நபர் கோழைத்தனமாக, முட்டாள்தனமாக, பலவீனமான மனநிலை காரணமாக தற்கொலை செய்து கொண்டால், அதற்காக மற்றொரு நபர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சுமத்த முடியாது.
  • தற்கொலை செய்து கொள்வது இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம் கிடையாது.
  • ஆனால் தற்கொலைக்கு தூண்டும் செயல் குற்றமாகும்.
  • தற்கொலை செய்து கொள்வது, தற்கொலை செய்து கொண்ட நபரின் விருப்பமாக இல்லாமல், அந்த நபர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பது எதிரியின் விருப்பமாக இருக்க வேண்டும்.
  • ஒரு நபர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு எதிரி செயல்பட்டிருக்க வேண்டும்.
  • அந்த செயல் வார்த்தைகளாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ நடைபெற்றிருக்கலாம்.
  • அதேசமயம் மிகவும் பலவீனமான மனநிலை கொண்ட ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் அதனை ஒருவர் தூண்டிவிட்டதாக கருதுவது தவறு.
  • ஒருவருடைய முட்டாள்தனமான செயலுக்காக மற்றொரு நபரை பொறுப்பாளியாக்க முடியாது.
  • எனவே ஒரு பெண் முட்டாள்தனமாக தற்கொலை செய்து கொண்டால் அதற்கு காதலனை தண்டிக்க முடியாது என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
  • எனவே பெண்கள் காதலனை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டால் அந்த காதலனுக்கு தண்டனை கிடைக்காது என்பதை புரிந்து கொள்ளவும்.
CRL. OP. NO - 142/2016, DT - 16.06.2016,
Manikandan Vs Inspector of police, Tiruneelakkudi Police Station, Thanjavur District
(2016-4-MLJ-CRL-240)
Thanks to: https://m.facebook.com/adpdhandapani/

Monday, January 1, 2018

ஊர்வலம் - ரிட் மனு

காவல்துறை தடை - ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ரிட் வழக்கு
இது விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்கறிஞர் சங்கத்தை சேர்ந்த திரு. கோவிந்தராஜ் மற்றும் நீராத்லிங்கம் ஆகியோர்களை சட்டத்திற்கு புறம்பாக காவல்துறையினர்  கைது செய்து பொய் வழக்கு பதிவு செய்ததாக பிரச்சினை சம்பந்தப்பட்ட ரிட் மனு  வழக்கிற்கு மதுரை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.
வழக்கின் உற்பத்தி
ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்கறிஞர் சங்கத்தினர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல்நிலைய ஆய்வாளரிடம் தங்கள் சங்கத்தின் சார்பில் சில கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடத்த அனுமதி கோரியிருந்தனர்.  
அந்த மனுவை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர், (காவல்துறை சட்டம் 42-A ன் கீழ் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி) வழக்கறிஞர் சங்கம் நடத்த அனுமதி கோரிய ஊர்வலத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எழும் எனக்கூறி காவல்துறை சட்டம் பிரிவு 42-A ன் கீழ் ஊர்வலம் நடத்த தடை விதித்து ஒரு உத்தரவை பிறப்பித்தார்
காவல்துறை துணை கண்காணிப்பாளர் உத்தரவு
அவருடைய உத்தரவுக்கு ஆதரவாக காவல்துறை துணை கண்காணிப்பாளின் 12.08.2012 ஆம் தேதியிட்ட நடவடிக்கை குறிப்புகளை உத்தரவுடன் இணைத்திருந்தார். அந்த நடவடிக்கை குறிப்பில் காவல்துறை சட்டம் பிரிவு 42 - A ன் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூர் உட்பிரிவு பகுதியில் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், யாரேனும் ஊர்வலம் அல்லது பொதுக்கூட்டம் நடத்த விரும்பினால் அதற்காக அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டுமெனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ரிட் மனு தாக்கல்
அந்த தடை உத்தரவை எதிர்த்து ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தது.
வழக்கை நீதியரசர் திரு. K. சந்துரு அவர்கள் விசாரித்தார்.
காவல் ஆய்வாளர் உத்தரவில் காவல்துறை சட்டம் பிரிவு 42 - A என குறிப்பிட்டிருந்தது தவறானதாகும் என்றார். காவல்துறை சட்டத்தில் 42-A என்ற சட்டப்பிரிவு ஏதுமில்லை. ஆனால் 42-A என்ற சட்டப்பிரிவு தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டத்தில் (Tamilnadu District Police Act, 1859) உள்ளது. அந்தப் பிரிவின்படி காவல்துறை துணை கண்காணிப்பாளர் (DSP) என்கிற பதவிக்கு குறையாத பதவி வகிப்பவர் பொது அமைதி கருதி ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காவல் அதிகாரிகளை ஒரு கூட்டம் அல்லது ஊர்வலம் ஆகியவை பொது இடங்களில் நடக்கும் பொழுது அந்த கூட்ட நடவடிக்கைகள் குறித்து ஒரு அறிக்கை தயார் செய்யும்படி எழுத்து மூலமாக உத்தரவிடலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல் சட்டத்தில் மேற்சொன்னவாறு கூறப்பட்டுள்ள நிலையில் காவல்துறை சட்டம் பிரிவு 42-A ன் கீழ் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அல்லது காவல்துறை ஆய்வாளர் ஆகியோர்களுக்கு ஒரு ஊர்வலம் அல்லது பொதுக்கூட்டம் ஆகியவற்றை தடை செய்வதற்கு எப்படி அதிகாரம் உள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.
வழக்கறிஞர் சங்கம் சார்பில்
வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை பொது மக்களிடத்தில் எடுத்துச் சொல்வது இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என்று கூறி அதற்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் "S. ரங்கராஜன் Vs P. ஜெகஜீவன்ராம் (1989-2-SCC-574)" மற்றும் "CJ. ரீஜன் Vs காவல்துறை துணை கண்காணிப்பாளர் (2008-3-MLJ-926)" ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார்.
காவல்துறை கண்காணிப்பாளரின்  பிரமாண வாக்குமூலம்
காவல்துறை கண்காணிப்பாளர் ஒரு பிரமாண வாக்குமூலத்தை எதிருரையாக தாக்கல் செய்தார். அந்த எதிருரையில் காவல் ஆய்வாளர், துணை கண்காணிப்பாளரின் உத்தரவைதான் செயல்படுத்தியுள்ளார் என்றும் காவல்துறை அதிகாரிகள் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை வழக்கறிஞர் சங்கம் கூறியுள்ளதாகவும் கூறி உச்சநீதிமன்றம் " D. K. பாசு Vs மேற்கு வங்க மாநிலம் (AIR-1997-SC-610)" என்ற வழக்கில் வழங்கப்பட்ட நெறிமுறைகளை காவல்துறை பின்பற்றியுள்ளதாகவும் கூறியிருந்தார்
மேலும் பொதுமக்கள் வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நகரில் பல இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியிருந்ததாகவும், வழக்கறிஞர்கள் மீது காவல்துறை வாகனத்தை சேதப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். மேலும் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கினால் வழக்கறிஞர்கள் வன்முறையில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறியிருந்தார்
மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 19(1) ன்படி வழங்கப்பட்டுள்ள கருத்துக்களை வெளியிடும் சுதந்திரமானது சில நியாயமான வரைமுறைகளுக்கு உட்பட்டுத்தான் இருக்க வேண்டும், இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 14 அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென கூறுவதாகவும் கூறியிருந்தார்
மேலும் வழக்கறிஞர்கள் தற்போது வரை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அதனால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறியிருந்தார். மேலும் காவல்துறை அதிகாரிகளை நீதிமன்றத்திற்குள் நுழைய விடாமல் தடுப்பதாகவும், இந்த சூழ்நிலையில் அனுமதி வழங்க முடியாது என்றும் பொதுமக்களும் வழக்கறிஞர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த தயாராக இருப்பதாகவும், இந்த சூழ்நிலையில் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கினால் வன்முறை வெடிக்கும் என்றும் கூறியிருந்தார்.
காவல்துறை சட்டம் பிரிவு 42-A ன் படி காவல்துறை அதிகாரி ஒரு காவல் அலுவலரை பொதுக்கூட்டம் அல்லது போராட்டம் நடக்கும் இடத்திற்கு அனுப்பி அங்கு நடைபெறுவதை பதிவு செய்யலாம் என்று கூறுகிறது. பிரிவு 30(2) பொதுச்சாலைகளில் நடைபெறும் ஊர்வலங்கள், கூட்டங்கள் ஆகியவற்றை பற்றி கூறுகிறது.
இது போன்ற ஒரு சூழ்நிலையில் எழுந்த ஒரு வழக்கில் காவல்துறை ஆணையருக்கு மெட்ராஸ் நகர காவல்துறை சட்டம் (City Police Act) பிரிவு 41 ன் கீழ் உள்ள அதிகாரங்களை "நெடுமாறன் Vs தமிழக அரசு (1999-1-LW-CRL-73)" என்ற வழக்கில் இந்நீதிமன்றம் குடிமக்களுக்குள்ள உரிமைகள் பற்றியும் அந்த உரிமைகளை செயல்படுத்துவதை நியாயமான முறையில் கட்டுப்படுத்துவது பற்றியும் விரிவாக கூறியுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 19 
இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 19 ல் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மிகவும் மதிப்பு வாய்ந்த உரிமைகளாகும். அந்த உரிமைகளை மாநில அரசு கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரம் ஆளுகிறவரின் விருப்பத்தின் அடிப்படையில் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவாகவும் இருக்கக்கூடாது
ஜனநாயகம் வலுவாகவும் உயிரோட்டத்துடனும் இருப்பதற்கு ஒவ்வொருவருடைய கருத்துக்களையும், அக்கருத்துகள் குறித்த விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் எந்த தடையும் இல்லாமல் நடைபெற வேண்டும். எதிர் தரப்பினரால் வெளியிடப்படும் அனைத்து கருத்துக்களும் நாட்டின் நலனுக்கும், பாதுகாப்பிற்கும் எதிராகிவிடும் என கண்ணை மூடிக் கொண்டு ஆட்சியாளர்கள் ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது.
காவல்துறை ஆணையர் மெட்ராஸ் நகர காவல் சட்டம் பிரிவு 41 ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை மிகுந்த கவனத்தோடும், எச்சரிக்கையோடும் பயன்படுத்த வேண்டும். அந்த சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு இயற்றப்பட்டதாகும்.அந்த காலகட்டத்தில் போராட்டங்களை அடக்குவதென்பது கொள்கையாக இருந்தது. ஆனால் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட பிறகு முன்பு போல் காவல்துறை சட்டத்தை பயன்படுத்த முடியாது.
காவல்துறையினருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது என்ற காரணத்திற்காக அவர்கள் நினைக்கிறபடியெல்லாம் ஆட முடியாது. அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டுதான் அதிகாரங்களைப் காவல்துறையினர் பயன்படுத்த வேண்டும். அடிப்படை உரிமைகள் மீது காவல்துறையினரால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் நியாயமானதாக இருக்க வேண்டும்.
உச்சநீதிமன்றம் "ஹிமாட்லால் கோ Vs காவல் ஆணையர், அகமதாபாத் (AIR-1973-SC-87)" என்ற வழக்கில் இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 19 ல் கூறப்பட்டுள்ள 'சுதந்திரமாக கூடுதல்' என்கிற உரிமைக்கு எதிராக இருக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் தடை செய்யலாம்! என்று தீர்ப்பு கூறியுள்ளது. அதேபோல் " S. ரங்கராஜன் Vs P. ஜெகஜீவன்ராம் (1989-2-SCC-574)" என்ற வழக்கிலும் இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 19 பற்றி விரிவாக தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
குறைகளை பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டு செல்வது அடிப்படை உரிமையாகும். அந்த உரிமையை எந்த காரணமும் இல்லாமல் காவல்துறையினர் தடை செய்ய முடியாது
அப்படி தடை விதிப்பது சட்ட விரோதமாக கருதப்படும் என கூறி வழக்கறிஞர் சங்கம் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
W. P. NO - 11282/2012
Srivilliputhur Advocate Bar Association, Reb by the Secretary, P. Rasaiya
                                                         Vs
1.தமிழ்நாடு அரசிற்காக அதன் செயலாளர் 
2. மாவட்ட ஆட்சியர், விருதுநகர் மாவட்டம் 
3. காவல் கண்காணிப்பாளர், விருதுநகர் மாவட்டம்
2012-2-LW-CRL-509
நன்றி : முகநூல் நண்பர் வழக்கறிஞர் Dhanesh Balamurugan அவர்கள் 

Sunday, December 31, 2017

ரிட் பெட்டிஷன் தீர்ப்பு நகல்

இந்திய அரசியல் சாசனம் பிரிவு 226ன் கீழ் சென்னை உயர்நீதிமன்றத்தில் திண்டிவனம் ஜின்ஞ்சி  ரோடு ஆட்டோ தொழிலாளர் நலசங்கத்தின் சார்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்,  திண்டிவனம் தாலுகா ரெவின்யூ டிவிசனல் ஆபிஸர் மற்றும் திண்டிவனம் முனிசிபாலிட்டி கமிஷ்னர் ஆகியோர்கள் மீது தொடரப்பட்ட ரிட்  வழக்கின் தீர்ப்பு நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அதில் 30 நாட்களுக்குள் பெட்டிஷனர் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும், ஒரு வேளை அதற்குள் தீர்க்க முடியாவிட்டால், மேலும் நாட்கள் தேவைப்பட்டால் அதனை பெட்டிஷனருக்கு எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 
நன்றி : முகநூல் நண்பர் திரு N R Mohan Raam அவர்கள்




************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 31.12.2017 

Thursday, December 21, 2017

2ஜி வழக்கு:

.பி. சைனி வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் .ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டவர்களை விடுதலை செய்து டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி .பி.சைனி இன்று (வியாழக்கிழமைதீர்ப்பளித்தார்.

2ஜி தீர்ப்பு: முக்கிய அம்சங்கள்

2ஜி தீர்ப்பு: முக்கிய அம்சங்கள்
சிபிஐ இரண்டு வழக்குகளையும், மத்திய அமலாக்கத்துறை ஒரு வழக்கையும், டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் தொடர்ந்தன.
முதலாவது குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் .ராசா, அக்கட்சித் தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, முன்னாள் தொலைத்தொடர்புத் துறைச் செயலாளர் சித்தார்த் பெஹுரா உள்ளிட்ட 14 நபர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் ஆகிய 3 தனியார் நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
நீதிபதி .பி. சைனி வழங்கிய இந்த தீர்ப்பில் உள்ள சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு நடைமுறையில் குற்றங்கள் நடைபெற்றதா என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்ட .பி. சைனி, குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சிபிஐ அமைப்பு தவறிவிட்டது என்று தெரிவித்தார்.
பிரதான வழக்கான 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வழக்கிலிருந்து விடுதலை ஆன நிலையில், மற்றொரு வழக்கான தனியார் டி.வி.க்கு ரூ.200 கோடி பெறப்பட்டதா என்ற கேள்வி எழவில்லை என்றும் நீதிபதி .பி.சைனி குறிப்பிட்டார்.
இந்த வழக்கின் தொடக்கம் மற்றும் தோற்றம் . ராசாவின் செயல்பாடுகளில் இல்லை, ஆனால், மற்றவர்களின் செயல்பாடு அல்லது செயலின்மையால்தான் நடந்தது என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி .பி.சைனி, இந்த உடனடி வழக்கில் குறிப்பிடப்பட்ட சதித்திட்டத்தின் மொத்த உருவமாக ராசா திகழ்ந்தார் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்தார்.
இந்த சதித்திட்டத்தில், தவறில் அல்லது ஊழலில் ராசாவுக்கு எந்த தொடர்பும் இருந்ததாக ஆதாரம் இல்லை என்றும் சைனி குறிப்பிட்டார்.
அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான கட்டணத்தை மாற்ற நிதிச்செயலாளர் மற்றும் டிராய் அமைப்பு பரிந்துரை செய்ததாக அரசு தனது குற்றப்பத்திரிகையில் கொடுத்த தகவல் தவறானது என்றும், அரசு ஆவணங்களை தவறாக புரிந்து கொண்டதன் அடிப்படையில் தான், வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் நீதிபதி .பி. சைனி குறிப்பிட்டார்.
மத்திய அரசின் அலைக்கற்றை ஒதுக்கீட்டு கொள்கைகளில், தெளிவில்லாததுதான், வழக்கில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நீதிபதி வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றச்செயலால் ஈட்டியதான வருமானம் ஏதும் இல்லாதபோது பணத்தை வெளுக்கும் குற்றம் இருக்கமுடியாது. எனவே இந்த வழக்கின் அடிப்படையே இல்லாமல் போனதாகவும், சாட்டப்பட்ட குற்றம் இல்லாமல் போவதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல்முறையீடு தாக்கல் செய்யப்படுவதற்கான நேரம் முடிந்தவுடன், அமலாக்கத் துறையால் இணைக்கப்பட்டுள்ள சொத்துகள் அனைத்தும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ள பல அம்சங்கள் தவறானவை என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நன்கு ஜோடிக்கப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரிக்கையால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றங்களை நிரூபிக்க வழக்கு தொடர்ந்தவர்கள் தவறிவிட்டனர் எனக் கூறுவதில் எந்த தயக்கமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
நீதிபதி .பி.சைனி வேதனை
கடந்த ஏழு வருடங்களாக, எல்லா வேலை நாள்களிலும், கோடை விடுமுறை நாள்களிலும் தாம் நீதிமன்றத்திலேயே காலை 10 முதல் மாலை 5 வரை யாராவது சட்டரீதியாக ஏற்கத்தக்க ஆதாரங்களோடு வருவார்கள் என்று காத்திருந்து ஏமாந்ததாகத் தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி சைனி, புரளியாலும், கிசுகிசுக்களாலும், ஊகத்தாலும் உருவான பொதுக்கருத்தின்வழி யாவரும் சென்றதாகவும் குறிப்பிட்டார். பொதுக் கருத்துக்கு நீதித்துறை நடைமுறையில் இடமில்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீர்ப்பு
2ஜி வழக்கு குறித்த தகவல்கள்
முன்னதாக, இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் . ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோ் மற்றும் சில தனியார் நிறுவனங்களின் தரப்பு வாதங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தன.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசு 2004-2009 மற்றும் 2009 முதல் 2014-ஆம் ஆண்டுகள்வரை ஆட்சியில் இருந்தது. அதில் முதலாவது ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது. அதில் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சரான . ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும் மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011-ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்தது.
இதேபோல மத்திய அமலாக்கத் துறையும் தனியாக தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்தது.
இந்த வழக்குகளின் விசாரணை கடந்த ஆறு ஆண்டுகளாக டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி .பி. சைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது.
நன்றி : பி.பி.சி.நியூஸ் – 21.12.2017