disalbe Right click

Showing posts with label நுழைவுத்தேர்வு. Show all posts
Showing posts with label நுழைவுத்தேர்வு. Show all posts

Saturday, December 30, 2017

மேட் நுழைவுத்தேர்வு-2018

நமது நாட்டிலுள்ள தலைசிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களில், உங்களுக்கு படிக்க விருப்பம் உள்ளதா? ‘ஆம்என்றால், ‘மேட்எனும் மேலாண்மை நுழைவுத் தேர்வை நீங்கள் அவசியம் எழுத வேண்டும்.
Management Aptitude Test (MAT)
அகில இந்திய அளவில் நடத்தப்படும் இந்த பொது நுழைவுத் தேர்வு Management Aptitude Test (மேட்). என்று அழைக்கப்படுகிறது. இந்தத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் மேலாண்மை கல்வி நிறுவனங்களில் எம்.பி.., அல்லது முதுநிலை டிப்ளமோ படிப்புகளில் சேர்க்கை பெறலாம்.
All India Management Association (AIMA)
அகில இந்திய மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் சார்பாக பிப்ரவரி, மே, செப்டம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் ஒரு ஆண்டுக்கு நான்கு முறை நடத்தப்படும், இந்த நுழைவுத் தேர்வை, லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதுகின்றனர்.
ஒருமுறை தேர்வு எழுதினால், அது ஓர் ஆண்டுக்கு செல்லும்!
ஒரு முறை இந்த தேர்வை எழுதிப் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு, ஒரு ஆண்டு வரை பல்வேறு மேலாண்மை கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு எழுத தகுதிகள்
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் அல்லது கல்லூரிகளில், ஏதேனும் ஒரு துறையில், இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு, இளநிலை பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களே
தேர்வு விவரம்
நாடு முழுவதும் நடைபெறும் இத்தேர்வினை, மாணவர்கள் தாள் அடிப்படையிலும் (பேப்பர் பேஸ்ட் டெஸ்ட்) அல்லது கணினி அடிப்படையிலும் (கம்ப்யூட்டர் பேஸ்ட் டெஸ்ட்) தங்களது விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்து, எழுதலாம்.
லாங்க்வேஜ் காம்பிரிஹென்சன், மேத்மேட்டிக்கல் ஸ்கில், டேட்டா அனலைசஸ் அன்ட் டேட்டா சவ்பீஸியன்சி, இன்டலிஜென்ஸ் அண்ட் கிரிட்டிக்கல் ரீசனிங், இந்தியன் அன்ட் குளோபல் என்விராண்மெண்ட் எனும் ஐந்து பிரிவுகளில், ’அப்ஜெக்டிவ்அடிப்படையில், ஒரு சப்ஜக்ட்டிற்கு 40 கேள்விகள் வீதம் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.
https://apps.aima.in/matfeb18 என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அட்மிஷன் 20.12.2017 முதல் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
Paper based test, 04.02.2018 ஞாயிற்றுக்கிழமை அன்றும், Computer-based training, 10.02.2018 சனிக்கிழமை அன்றும் நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 26 January 2018 (Friday)
மேலும் விவரங்களுக்கு: www.apps.aima.in
*********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 31.12.201


Thursday, December 21, 2017

சட்டம் படிப்பதற்கான கிளாட் நுழைவு தேர்வு

கிளாட் நுழைவு தேர்வு தேதி அறிவிப்பு
சட்டபடிப்பு படிப்பதற்கு மாணவர்களுக்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதி என்ன? (For U G Program)
கிளாட் சட்டப்படிப்புக்கான  UG நுழைவு தேர்வு எழுத விரும்பும் மாணவ, மாணவியர்கள்  பனிரெண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.  SC/ST பிரிவினர்கள் 40% மதிப்பெண்களும், மற்ற பிரிவினர்கள் 45% மதிப்பெண்களும் பனிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு என்ன? 
கிளாட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான வயது வரம்பு இன்னும்  அறிவிக்கப்படவில்லை. 2008ம் ஆண்டு கல்வி விதி எண்:28ன்படி 5 வருடப் படிப்பிற்கான அதிகபட்ச வயது 20 என்று இந்திய பார் கவுன்சில் ஏற்கனவே விதி வகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.. 
தகுதி என்ன? (For P G Program)
கிளாட் சட்டப்படிப்புக்கான  PG நுழைவு தேர்வு எழுத விரும்பும் மாணவ, மாணவியர்கள் எல்எல்பி டிகிரி முடித்தவர்கள் அல்லது அதற்கு இணையான படிப்பு படித்திருக்க வேண்டும். அதில் SC/ST பிரிவினர்கள் 50% மதிப்பெண்களும், மற்ற பிரிவினர்கள்  55% மதிப்பெண்களும்  பெற்றிருக்க வேண்டும். 
இந்த கிளாட் தேர்வானது நமது நாடு முழுவதும் உள்ள மாணவ, மாணவியர்கள் சட்டப்படிப்பு படிப்பதற்கான 18 பல்கலைக்கழகங்களில் தங்கள் படிப்பை படிக்க எழுதப்படும் நுழைவுத் தேர்வு ஆகும்.
விண்ணப்பிக்கும் நாள்:
014.01.2018 முதல் 31.03.2018 வரை இந்த நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.  அதனை பின்னர் அறிவிப்பார்கள் என்று அறியப்படுகின்றது
கிளாட் தேர்வு எழுதும் முறை
கிளாட் தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 200 ஆகும். தேர்வு எழுதும் காலம் 2 மணி நேரம் ஆகும்.  கிளாட் தேர்வுக்கான கேள்வித்தாள் 200 கேள்விகள் கொண்டது. ஒவ்வொரு கேள்விக்கும் பதில்கள் பல கொடுக்கப்பட்டு இருக்கும். அதில் சரியான பதிலை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். English including Comprehension 40 கேள்விகளும்Elementary Mathematics (Numerical Ability)  20 கேள்விகளும்,  Legal Aptitude 50 கேள்விகளும், Logical Reasoning 40 கேள்விகளும்,  General Knowledge and Current Affairs 50 கேள்விகளும் கேட்கப்படும்.
தவறாக எழுதும் விடைகளுக்கு 0.25 மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்களில் இருந்து குறைக்கப்படும்
சட்டம் படிக்கும் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் உள்ள முக்கிய சட்டப் பல்கலைக் கழகங்களில் சட்டம் கற்பதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கூடுதல் தகவல்களுக்கு இந்த https://www.abtutorials.com  இணையதளம் செல்லுங்கள்.
********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 22.12.201

Wednesday, November 22, 2017

NEET Exam

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு முறை (National Eligibility cum Entrance Test - NEET) கட்டாயமாக்கப் பட்டுவிட்டது. இதனால் தற்போது பிளஸ் டூ படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் அவர்களுடைய பெற்றோரும் குழப்பத்திலும் அச்சத்திலும் ஆழ்ந்திருக்கிறார்கள். 
புதிய தேர்வு முறை என்பதால் இதற்கு எப்படித் தயாராவது, தேர்வை எப்படி எதிர்கொள்வது, ஓஎம்ஆர் ஷீட்டில் (OMR sheet) எப்படி பதிலளிப்பது போன்ற பல கேள்விகள் எழும். 
இவை அனைத்துக்கும் உங்களுக்குப் பயிற்சி அளித்து நீட் தேர்வுக்கு முழுவதுமாகத் தயார்படுத்தும் விதத்தில் உண்மையான தேர்வுபோன்ற ஒரு மாதிரித் தேர்வை நடத்தும் முயற்சியை ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழின் இணைப்பிதழான எஜுகேஷன் பிளஸ்ஸும் ஸ்மார்ட் பயிற்சி மையமும் இணைந்து முன்னெடுத்து இருக்கின்றன.
இந்த மாதிரித் தேர்வில் உயர்ந்த மதிப்பெண் பெறும் முதல் 100 பேருக்கு நீட் தேர்வு எழுத இலவசமாகச் சிறப்புப் பயிற்சி அளிக்க ஸ்மார்ட் மையம் முன்வந்திருக்கிறது. மாநில அளவிலான இந்த மாதிரித் தேர்வு எழுத ரூ. 650/- கட்டணம் செலுத்த வேண்டும்.
பணி வாழ்க்கைக்குப் பயிற்சி அளிப்பதில் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களில் ஒன்று ஸ்மார்ட். அந்நிறுவனம் நீட் தேர்வுக்குத் தமிழக மாணவர்களைத் தயார்படுத்த முடிவெடுத்திருக்கிறது. பொதுத் தேர்வுகளுக்குக் கேள்வித் தாளைத் தயாரிக்கும் கல்வியாளர்கள் மற்றும் தேர்வு ஆய்வாளர்களின் ஆலோசனையின்படி இந்தத் திட்டத்தை ஸ்மார்ட் நிறுவனம் வகுத்திருக்கிறது. “மாநில அளவிலான இந்த மாதிரித் தேர்வை எழுதும் ஒவ்வொரு மாணவருக்கும் மாநில அளவில் ராங்க் அளிப்போம்.
படிப்பில் அவர்களுடைய பலம் / பலவீனம் மற்றும் எந்தப் பாடப் பகுதிகளில் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் ஆகியவற்றையும் விரிவான பகுப்பாய்வு அறிக்கையாகத் தருவோம். 
குறிப்பாக, இந்த மாதிரித் தேர்வை எழுதும் அனைத்து மாணவர்களும் நீட் புளூ பிரிண்ட்டை பின்பற்றும் ஆன்லைன் தொடர் தேர்வுகளை எழுதுவதற்கான வாய்ப்பை இலவசமாக அளிக்கவிருக்கிறோம்” என்கிறார் ஸ்மார்ட் மையத்தின் நிர்வாக இயக்குநரான அர்ச்சனா ராம்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டம் (CBSE), மாநிலக் கல்வி வாரிய பாடத்திட்டம் மற்றும் இதர வாரிய பாடத் திட்டத்தின் கீழ் பிளஸ் 2 படிக்கும் அல்லது பிளஸ் டூ முடித்தவர்கள் அனைவரும் நீட் தேர்வு எழுதத் தகுதி பெற்றவர்கள்.
தேர்வில் நேரடியாகப் பங்குபெற விரும்பும் மாணவர்கள் www.smartneet.in-ல் விண்ணப்பிக்கலாம். 
தங்களுடைய பள்ளி வளாகத்திலேயே மாநில அளவிலான மாதிரித் தேர்வை நடத்த விரும்பும் பள்ளிகள் தொடர்புக்கு: 
பிரவீன் 7401658483.நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 22.11.2016  

Sunday, June 25, 2017

மருத்துவ படிப்பிற்கான அட்மிஷன் எப்படி?

மருத்துவ படிப்பிற்கான அட்மிஷன் எப்படி?
’நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, எப்படி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்’ என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ.,யின், ’நீட்’ தேர்வு பொறுப்பு இணை செயலர், சன்யம் பரத்வாஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
’நீட்’ தேர்ச்சிக்கான தகுதி மதிப்பெண்கள், இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. தகுதி பெற்றவர்கள், சம்பந்தப்பட்ட கவுன்சிலிங் கமிட்டியை தொடர்பு கொண்டு, மாணவர் சேர்க்கை நடவடிக்கையை துவங்க வேண்டும்.
’நீட்’ தேர்வில், முன்னேறிய வகுப்பினருக்கு, 131; முன்னேறிய மாற்று திறனாளிகளுக்கு, 118 மற்றும் மற்றவர்களுக்கு, 107 மதிப்பெண், தேர்ச்சியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், digilocker.gov.in என்ற இணையதளத்தில், தங்களின் தரவரிசை கடிதங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள, 15 சதவீத மத்திய அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு, மத்திய அரசின் சுகாதார பணிகள் துறை, பொது இயக்குனரகம்சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படும். இதுகுறித்த, ’கட் - ஆப்’ விபரங்களை, www.mcc.nic.in என்ற, இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, ’நீட்’ தேர்வின் அகில இந்திய தரவரிசை பட்டியலின் அடிப்படையிலும், மாநில விதிகளின் படியும், அந்தந்த மாநிலங்களால், கவுன்சிலிங் நடத்தப்படும்.
தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு, மாநில கவுன்சிலிங் கமிட்டி சார்பில், மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிளஸ் 2 மதிப்பெண் உண்டா
தமிழகத்தில், பல மாணவர்கள், ’நீட்’ தேர்வில், 450 மதிப்பெண் வரை பெற்றுள்ளனர். தமிழகத்தில், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, ’நீட்’ தேர்வு மதிப்பெண்படி மட்டுமே, மாணவர் சேர்க்கை நடக்குமா அல்லது பிளஸ் 2 மதிப்பெண்படி நடக்குமா என, குழப்பம் நீடிக்கிறது. பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில், ’நீட்’ தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மாநில அளவில் தரவரிசை பட்டியல் தயாரித்து, சேர்க்கை நடத்தலாம் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின், பொதுச்செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில், ”தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்கு, மருத்துவ சேர்க்கையில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும், ’நீட்’ தேர்வில், தேர்ச்சியை மட்டுமே கணக்கிட்டு, பிளஸ் 2 மதிப்பெண்ணில் அதிகம் பெற்றவருக்கு சேர்க்கை வழங்க வேண்டும்,” என்றார்.
கல்வியாளர்கள் கூறுகையில், ’தமிழக பிளஸ் 2 தேர்வை விட, நீட் தேர்வு சிந்திக்கும் திறன் வாய்ந்ததாக உள்ளது. எனவே, அதில் அதிக மதிப்பெண் எடுப்போருக்கு முக்கியத்துவம் தர வேண்டும். எனவே, ’நீட்’ தேர்வு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு சமவாய்ப்பு வழங்கி, இரண்டிலும் அதிகம் பெற்றவர்களுக்கான தரவரிசை பட்டியல் தயாரித்து, சேர்க்கை நடத்தலாம்’ என்றனர்.
உள் ஒதுக்கீடு அவசியம்
‘நீட் தேர்வில் பங்கேற்ற, தமிழக மாணவர்களின் மதிப்பெண்கள் குறைவாகவே உள்ளது. 1,000க்கும் மேல் மாணவர்கள் படித்த டாப் பள்ளிகளில் கூட, நீட் தேர்வில், 300 மதிப்பெண்களை தாண்டியவர்களின் எண்ணிக்கை, 15ஐ கூட எட்டவில்லை. ஓராண்டு முழுவதும் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே, ஓரளவுக்கு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தமிழக அரசு, மாணவர்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில், உள் ஒதுக்கீடு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அடுத்த ஆண்டு அனைத்து மாணவர்களும், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்துக்கு சென்றுவிடுவர். நீட் தேர்வில், கடந்த ஆண்டு 118 ஆக இருந்த தேர்ச்சி, நடப்பாண்டில் 125 முதல் 150 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது’, என்று கல்வி ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 24.06.2017

Sunday, February 5, 2017

ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு - டிப்ஸ்

Image may contain: 1 person

ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு - டிப்ஸ்

1. JEE நுழைவுத் தேர்வு:

இது மெயின் பேப்பர்-I, மெயின் பேப்பர்-II என இரு பிரிவுகளாக நடத்தப்படும். பேப்பர்-I தேர்வில் தேர்ச்சிபெறும் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் 60%க்கும், ப்ளஸ் டூ மதிப்பெண்கள் 40%க்கும் வெயிட்டேஜ் பார்க்கப்பட்டு, தரவரிசையின் அடிப்படையில் நாட்டில் உள்ள 30 NIT கல்லூரிகள், 18 IIT கல்லூரிகள், 18 GFTI கல்லூரிகளிலும் இடம் கிடைக்கப்பெறுவார்கள். தவிர, மத்திய அரசின் கீழ் இயங்கும் 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலும் B.E., B.Tech பிரிவுகளில் சேரும் வாய்ப்பும் கிட்டும்.

2. JEE அட்வான்ஸ்:

டாப் ரேங்க் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள், அட்வான்ஸ் எனப்படும் இரண்டாம் கட்டத் தேர்வு எழுதலாம். மெயின் பேப்பர்-I எழுதியவர்களின் மதிப்பெண் மற்றும் மத்திய அரசால் வகுக்கப்பட்ட இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தர வரிசையில் முதல் ஒன்றரை லட்சம் இடங்களுக்குள் வரும் மாணவர்கள் மட்டுமே அட்வான்ஸ் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இந்தத் தேர்வு முடிவின் தரவரிசைப் பட்டியலில் வரும் பதினெட்டாயிரம் மாணவர்களில், முதல் பத்தாயிரம் பேர் IIT, ISM Dhanbad கல்வி நிறுவனங்களிலும், அடுத்து வரும் எட்டாயிரம் மாணவர்கள் IIST, RGIPT, IISTC, ஆறு IISER கல்வி நிறுவனங்களிலும், சேர்க்கை பெற முடியும்.

3. JEE மெயின் பேப்பர்-II:

இதில் தேர்ச்சிபெறும் மாணவர்கள் ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர், NIT-ல் உள்ள ஆர்க்கிடெக்சர் பிரிவு மற்றும் எல்லா மாநிலங்களிலும் உள்ள மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் B.Arch, B.Planning பிரிவுகளில் சேர்க்கை பெற முடியும்.

4. கொஸ்டின் பேப்பர்:

மெயின் பேப்பர் I, அட்வான்ஸ் பேப்பர்-I, அட்வான்ஸ் பேப்பர்-II இந்தத்தேர்வுகளுக்கெல்லாம் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பின் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களே சிலபஸ். மெயின் பேப்பர்-II எழுதுபவர்களுக்கு கணிதம், ஆர்க்கிடெக்சர், ஆப்டிட்யூட், படம் வரைதல் தொடர்பான மூன்று மணி நேரத் தேர்வு நடைபெறும்.
எல்லாப் பிரிவு தேர்வுகளுக்கும் தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.

5. விண்ணப்பம்:

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதே, அந்தக் கல்வியாண்டின் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதத்துக்குள் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைச் செலுத்தி இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

6. இணைக்க வேண்டியவை:

விண்ணப்பத்துடன் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து இணைக்க வேண்டியவை...

* மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட சாதிச்சான்று

* 10-ம் வகுப்புத் தேர்ச்சி மதிப்பெண் பட்டியல்

* வெள்ளை நிறப் பின்னணி பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்

* கறுப்பு நிற மையில் மாணவரின் கையொப்பம்

* மாணவரின் கைரேகை

* மாற்றுத்திறனாளிகள், சிறப்புப் பிரிவினருக்குரிய சான்று.

7. தேர்வு முறை:

மெயின் பேப்பர்-I தேர்வு, ஆன்லைனிலேயே எழுதலாம். ஏப்ரல்/மே மாதங்களில் மத்திய அரசால் அறிவிக்கப்படும் ஏதேனும் மூன்று தேதிகளில் தேர்வு நடைபெறும். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். மெயின்-II மற்றும் அட்வான்ஸ் தேர்வுகள், தேர்வு மையத்தில்தான் எழுத வேண்டும்.

8. போனஸ் வாய்ப்புகள்:

JEE தேர்வு எழுத, மாணவர்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. 12-ம் வகுப்பு முடித்தவுடன் ஒரு வாய்ப்பும், 12-ம் வகுப்பு முடித்த அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்வு எழுதும் வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன. ஆனால், அட்வான்ஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு 12-ம் வகுப்பு முடித்த வருடம், அதற்கு அடுத்த வருடம் மட்டுமே வாய்ப்பளிக்கப்படும்.

9. தமிழ்வழிக் கல்வி மாணவர்கள் கவனத்துக்கு:

வினாக்கள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்கும். தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கு மெயின் பேப்பர் I-ஐ விட, பேப்பர்-II எளிமையாக இருக்கும். முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதை மனதில் வைக்கவும்.

10. எப்போதில் இருந்து படிக்க வேண்டும்:

சிலர் 6-ம் வகுப்பில் இருந்தே தயாராக வேண்டும் என்பார்கள். உண்மையில் தேர்வு முறை மற்றும் மதிப்பெண் வழங்கும் முறையானது ஒவ்வோர் ஆண்டும் மாறிக்கொண்டே இருக்கும் என்பதால், அது பயனற்றது. 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்புப் பாடங்களைப் புரிந்து படித்தாலே தேர்ச்சி பெற்றுவிடலாம்.

11. கவனிக்க:

மாணவர்கள் எந்த மாநிலத்தில் மேல்நிலைக் கல்வி கற்கிறார்களோ, அந்த மாநிலத்தில் மட்டுமே JEE தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

12. மேலும் விவரங்களுக்கு...

www.jeemain.nic.in
,
www.indiacollegefinder.org
,
www.jeeadv.iitk.ac.in
என்ற இணையதள முகவரிகளைப் பார்வையிடலாம்.

சு.சூர்யா கோமதி

நன்றி : அவள்விகடன் - 17.11.2015