disalbe Right click

Showing posts with label பள்ளி. Show all posts
Showing posts with label பள்ளி. Show all posts

Tuesday, January 2, 2018

குழந்தைகளுக்கான பிளே ஸ்கூல்

தமிழகத்தில் குழந்தைகளுக்கான பிளே ஸ்கூல் துவங்குவதற்கான புதிய விதிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை சென்ற ஆண்டின் துவக்கத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பில், "இளம் மழலையர் பள்ளிகள் எனப்படும் பிளேஸ்கூல் விதி தொகுப்பு-2015 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து 6 மாத காலத்துக்குள் இந்த பள்ளிகளுக்கான அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். விதிகளில் கூறப்பட்டுள்ள தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்றால், அந்த பள்ளிகளை மூட உத்தரவிடப்படும் என்பது முக்கிய விதிகளாகும்..
3 ஆண்டுகளுக்கு மட்டுமே அங்கீகாரம்
அங்கீகாரம் அளிப்பது மற்றும் புதுப்பித்தலுக்கு அந்தந்த மாவட்டத்திலுள்ள தொடக்கக்கல்வி அதிகாரி தான் பொறுப்பு அதிகாரி ஆவார். இந்த அங்கீகாரம் பெற்ற நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன் பின்னர் மீண்டும் பள்ளி நிவாகத்தினர் புதுப்பிக்க வேண்டும். விதிகளுக்கு முரணாக நடந்து கொள்ளும் பள்ளிகளின் அங்கீகாரத்தை திரும்பப்பெற அதிகாரிக்கு அதிகாரம் இந்த விதிகளின் மூலம் அளிக்கப்பட்டு உள்ளது.
தரைத்தளத்தில்தான் வகுப்புகள் இருக்க வேண்டும்
இந்த பள்ளி கட்டிடங்கள் சொந்த கட்டிடமாகவோ அல்லது 5 ஆண்டுகளுக்கு குறையாமல் குத்தகைக்கு எடுக்கப்பட்ட கட்டிடமாகவோ இருக்க வேண்டும்அவை கான்கிரீட் கட்டிடங்களாகவும், சுற்றுச்சுவருடன் கூடியதாகவும் இருக்க வேண்டும். வகுப்பறை குழந்தைகளின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு, கண்டிப்பாக தரைதளத்தில் மட்டும் இருக்க வேண்டும்.
2 நுழைவுவாயில்கள் இருக்க வேண்டும்
வகுப்பறைகளின் கதவுகள், ஜன்னல்கள் எளிதில் தீப்பிடிக்காத பொருட்களாலும், வெளிப்பக்கம் திறப்பதாகவும் இருக்க வேண்டும். வகுப்பறைகளுக்கு 2 நுழைவுவாயில்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
கண்காணிப்பு கேமரா அவசியம் இருக்க வேண்டும்
கழிவறை, குடிநீர் வசதி மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவை சரியான முறையில் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். குப்பைத்தொட்டி, அதிக ஒலி எழுப்பும் போக்குவரத்து சாலைகள், தொழிற்சாலைகள் மற்றும் பெட்ரோல் பங்க் ஆகியவற்றின் அருகே பள்ளிகள் இருக்கக்கூடாது. பள்ளிப்பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் இருக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கான கல்வித்தகுதி என்ன?
ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 15 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்றும், அவர்களும் பெண் ஆசிரியர்களாக மட்டுமே நியமனம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆசிரியை பிளஸ் 2 படித்து, அதன் பின்னர் டி.டி.எட், டி.எட், ஹோம் சயின்ஸ் ஆகியவற்றுக்கான பட்டயப்படிப்பு படித்து இருக்க வேண்டும் அல்லது ஹோம் சயின்சில் பட்டம், பி.எட், குழந்தைகள் படிப்புக்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
ஒரு வகுப்புக்கு 15 குழந்தைகள் மட்டுமே:
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 ஆம் தேதியுடன் 1 வயது 6 மாதத்தினை பூர்த்தி செய்த குழந்தைகளை மட்டுமே பள்ளியில் சேர்க்க வேண்டும்பள்ளிகளில் சேரும் குழந்தைகளின் வயது 1 வயது 6 மாதம் முதல் 5 வயது 6 மாதம் வரை இருக்கலாம்ஒரு வகுப்புக்கு 15 குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்குழந்தைகள் அனுமதிக்கான நுழைவுத்தேர்வு எழுத்து வடிவிலோ, வாய்வழியாகவோ இருக்கக்கூடாது.
சரியான நேரம் பராமரிக்க வேண்டும்
பள்ளி நடக்கின்ற ஒவ்வொரு பகுதி நேரமும் 3 மணி நேரத்துக்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு பகுதி நேரத்தில் படிக்கும் குழந்தைகளை அடுத்த பகுதி நேரத்தில் சேர்க்கக்கூடாது. காலை 9.30 மணிக்கு முன்பாக பள்ளிகளை கண்டிப்பாக திறக்கக்கூடாது. மாலை 4.30 மணியுடன் நிறைவு செய்துவிட வேண்டும்.
பாதுகாப்பு கருவிகள் மிக அவசியம்
பெற்றோரின் ஒப்புதலின்படி, பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட வேண்டும். முதலுதவி பெட்டி உள்ளிட்ட மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். குழந்தைகள் யாராவது தண்டிக்கப்பட்டால், அந்த பள்ளி மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி பஸ், வேன் மற்றும் ஆட்டோக்களில் வேக கட்டுப்பாட்டு கருவி, பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக  செய்யப்பட்டு இருக்க வேண்டும். வாகனங்களின் பராமரிப்புகளை அடிக்கடி பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். டிரைவருடன் ஒரு உதவியாளர் கண்டிப்பாக இருக்க வேண்டும்!
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 02.01.2018

Monday, December 11, 2017

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு

தினமும் ரூ.10 லட்சம் அபராதம்
அங்கீகாரம் இன்றி பள்ளிகளை நடத்தினால், தினமும், 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது. சி.பி.எஸ்.., பள்ளிகளுக்கும், 'செக்' வைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தனியார் மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகள் செயல்படுகின்றன. அதேபோல், 700க்கும் மேற்பட்ட, சி.பி.எஸ்.., பள்ளிகளும் இயங்குகின்றன. இந்த பள்ளிகளுக்கு, தமிழக பள்ளிக் கல்வி, தொடக்க கல்வி, மெட்ரிகுலேஷன் இயக்குனரகங்கள் மற்றும், சி.பி.எஸ்.., எனும் மத்திய கல்வி வாரியம் ஆகியவை சார்பில், தனித்தனியாக அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
சில பள்ளிகள், .சி.எஸ்.., மற்றும், .ஜி.சி.எஸ்.., எனும் கல்வி வாரியங்களின் அங்கீகாரம் பெற்றுள்ளன. இவை தவிர, 1,000க்கும் மேற்பட்ட பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமலும் செயல்படுகின்றன.
இந்த பள்ளிகள், அங்கீகாரம் பெற்றது போல், இயங்கி வருகின்றன. அதனால், பல பெற்றோர், பல லட்சம் நன்கொடை செலுத்தி, அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில், தங்கள் பிள்ளைகளை சேர்த்துள்ளனர்.
இது குறித்து, பள்ளிக் கல்வித்துறைக்கு, பல்வேறு தரப்பினரும் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக் கல்வி இயக்குனர்,  இளங்கோவன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், அவர் கூறி உள்ளதாவது:
கட்டாய கல்வி சட்டத்தின்படி, அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் செயல்பட்டால், அவற்றுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மூட வேண்டும். எச்சரிக்கையை மீறி, மீண்டும் நடத்தினால், ஒரு நாளைக்கு, 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம்.
இதுகுறித்து, தமிழக பாடத்திட்ட பள்ளிகள் மட்டுமின்றி, சி.பி.எஸ்.., பள்ளிகளிலும், அதிகாரிகள் நேரடி ஆய்வு நடத்தி, அங்கீகாரத்தை சோதனையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 12.12.2017 

Thursday, September 14, 2017

‛அங்கீகாரம் ரத்து': பள்ளி நிர்வாகங்களுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

அங்கீகாரம் ரத்து': பள்ளி நிர்வாகங்களுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை
புதுடில்லி: 'பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் துன்புறுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.
வழிகாட்டி நெறிமுறைகள்:
ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள ஒரு பள்ளியில், 7 வயது மாணவர் படுகொலை செய்யப்பட்டார். டில்லியில், 5 வயது மாணவி, பள்ளி ஊழியரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையடுத்து, பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ளது.
எச்சரிக்கை:
அதில், கூறப்பட்டுள்ளதாவது: மாணவர்களின் பாதுகாப்புக்கு, பள்ளி நிர்வாகம் மட்டுமே முழு பொறுப்பு. பள்ளி வளாகத்தில் மாணவர்கள் உடல்ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ துன்புறுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். மாணவர்களை பாதுகாப்பதில் உள்ள பொறுப்பு குறித்து, பள்ளி ஊழியர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும். பள்ளி வளாகத்தில், கண்டிப்பாக, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 15.09.2017