disalbe Right click

Showing posts with label பாஸ்போர்ட். Show all posts
Showing posts with label பாஸ்போர்ட். Show all posts

Thursday, February 2, 2017

விண்ணப்பித்து ஒருவாரத்திற்குள் பாஸ்போர்ட்


விண்ணப்பித்து ஒருவாரத்திற்குள் பாஸ்போர்ட்

புதிய முறை அமலுக்கு வந்தது !

சென்னை: மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் பாஸ்போர்ட் பெறுவதற்கான புதிய திட்டத்தின்படி சென்னை மண்டலத்தில் விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கும் புதிய முறை அமலுக்கு வந்ததுள்ளதாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 
ரு விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் பெறுவதற்கு ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் கார்டு ஆகிய 3 ஆவணங்களின் நகலை இணைத்து விண்ணப்பித்தால் வழக்கமான கட்டணமான 1500 ரூபாய் செலுத்தி 3 நாட்கள் அல்லது ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளலாம். இவற்றுடன் விண்ணப்பதாரர் நோட்டரி ஒருவரின் கையொப்பத்துடன் கூடிய பிரமான பத்திரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
பிப்ரவரி 1 முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. விண்ணப்பதாரருக்கு பாஸ்போர்ட் வழங்கிய பின்னர் போலீஸ் விசாரணை அறிக்கை பெறப்படும்.
போலீஸ் விசாரணை அறிக்கை கிடைக்க அதிக நாட்கள் ஆகின்றன. இதை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு ஒரு புதிய அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளது. இந்த அப்ளிகேஷனை கொண்டு மொபைல் அல்லது டேப்ளட் மின்னனு பொருட்கள் மூலம் போலீஸார் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர் குறித்த தகவல்களை விசாரித்து, சரிபார்த்து அறிக்கையை பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு ஒரே தினத்தில் அனுப்ப முடியும்.
தமிழக போலீசார் இந்த அப்ளிகேஷனை கொண்டு பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களை விசாரித்து, சரிபார்க்கும் நடைமுறைக்கு அனுமதி வழங்கக்கோரி தமிழக அரசுக்கு, மத்திய வெளியுறவுத்துறை கடிதம் எழுதியுள்ளது. இதனால் போலீஸ் விசாரணை அறிக்கை கிடைப்பது துரிதமாகும்' என்று பாலமுருகன் தெரிவித்தார்.
மேலும், சென்னையில் அண்மையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டு பாஸ்போர்ட் இழந்த 3,970 பேருக்கு இதுவரை மாற்று பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது பாஸ்போர்ட் பெற பிப்ரவரி 7ம் தேதி கடைசி நாள் என்றும் கூறினார்.
ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » தமிழகம் - 03.02.2016

Friday, December 30, 2016

பாஸ்போர்ட் பெற எளிதாக்கப்பட்ட விதிமுறைகள்:


பாஸ்போர்ட் பெற எளிதாக்கப்பட்ட விதிமுறைகள்: 

மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தகவல்

பாஸ்போர்ட் பெறுவதற்கான விதி முறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதாக மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தெரி வித்துள்ளார்.

இதுகுறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பி.கே.அசோக் பாபு நேற்று சென்னையில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வசிக்கும் மக்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு வசதியாக தற்போது புதுச்சேரியில் மினி பாஸ்போர்ட் சேவா கேந்திரா செயல்பட்டு வருகிறது. இங்கு, தற்போது நாள் ஒன்றுக்கு 100 விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை 3 கட்டமாக மேற்கொள்ளப்படுகிறது.

இதில் 2 கட்ட பரிசீலனை புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்டு 3-ம் கட்ட பரிசீலனை சென்னையில் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரி பாஸ்போர்ட் சேவை மையத்திலேயே 3-ம் கட்ட பரிசீலனையையும் மேற்கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி 2-ம் முதல் இந்த மையம் முழு அளவில் செயல்படும். இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாஸ்போர்ட் பெற சென்னைக்கு வர வேண்டிய அவசி யமில்லை.
பாஸ்போர்ட் பெற சில விதிமுறைகள் கடுமையாக இருந்ததால் பொதுமக்கள் பாஸ்போர்ட் பெற மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, மத்திய வெளி யுறவுத் துறை அமைச்சகம் இந்த விதிமுறைகளை தற்போது எளிமையாக்கி உள்ளது.

இதன்படி, 1989-ம் ஆண்டு அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் எடுக்க பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக இருந்தது. ஆனால், இனி அது தேவையில்லை. அதற்குப் பதிலாக தங்களது பிறந்த தேதி இடம் பெற்றுள்ள பள்ளிச் சான்றிதழ்கள், பான்கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, இன்சூரன்ஸ் பாண்டுகள், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்கலாம்.

அதேபோல், ஒற்றை பெற்றோர் உள்ள குழந்தைகள் மற்றும் தத்து குழந்தைகள் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும்போது தங்களது தந்தை, தாய் அல்லது சட்டபூர்வ பாதுகாவலர்கள் பெயர்களை குறிப்பிடுவதற்குப் பதிலாக ஒரு பெற்றோர் பெயர் மட்டும் குறிப் பிட்டால் போதுமானது.

இதற்காக விண்ணப்பதாரர்கள் அளிக்க வேண்டிய பின்னிணைப்புகளில் (அனெக்சர்ஸ்) முன்பு நோட்டரி பப்ளிக், ஜுடிசியல் மாஜிஸ்திரேட் உள்ளிட்டோரின் சான்று அவசியமாக இருந்தது. இனி, விண் ணப்பதாரரே ஒரு வெள்ளைத் தாளில் ஒரு சுய கையொப்பம் (செல்ப் அட்டெஸ்டட்) இட்டு சமர்ப்பித்தால் போதுமானது.

மேலும், திருமணமானவர்கள் பாஸ்போர்ட் பெற திருமணச் சான்று சமர்ப்பிக்கத் தேவையில்லை. விவாக ரத்து பெற்றவர்கள் தங்களது விவாகரத்து சான்றிதழையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை.

அதற்கு பதிலாக விண்ணப்ப தாரர்களே சுய கையொப்பம் இட்ட சான்றிதழை அளித்தால் போதும். அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்ல தங்களது துறை உயர் அதிகாரிகளிடம் தடையில்லா சான்றிதழ் பெற்று பாஸ்போர்ட் பெறுவது அவசியமாக இருந்தது. இனி அவர்கள் தங்களது துறைக்கு தகவல் மட்டும் தெரிவித்தால் போதுமானது.

பெற்றோரை இழந்து காப்பகத்தில் வசிக்கும் குழந்தைகள் பாஸ்போர்ட் பெற அந்தக் காப்பகத்தின் நிறுவனர் சான்றிதழ் அளித்தால் போதும். அதேபோல், சாதுக்கள், சன்னியாசிகள் பாஸ்போர்ட் பெற தங்களது ஆன்மிக குரு தரும் சான்றிதழ் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பான்கார்டு இவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் நடப்பாண்டில் கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரை புதிய பாஸ்போர்ட் பெறுவதற்காக மொத்தம் 4 லட்சத்து 26 ஆயிரத்து 475 விண்ணப் பங்கள் பெறப்பட்டு, அதில் 4 லட்சத்து 15 ஆயிரத்து 319 பேருக்கு பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அசோக் பாபு கூறினார்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 31.12.2016

Friday, December 23, 2016

பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்று தேவையில்லை


பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்று தேவையில்லை

  • 1989 ஜனவரி 26-ம் தேதிக்குப் பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் பெற பிறப்புச் சான்றிதழ் கட்டாய மில்லை.

  •  அதற்குப் பதிலாக பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழ், பான் அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, எல்ஐசி பாலிசி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அளிக்கலாம்.

  • திருமணமானவர்கள் தங்களது திருமண சான்றிதழை விண்ணப்பத்தின்போது அளிக்க தேவை யில்லை. 

  • சாதுக்கள் தங்கள் பெற் றோரின் பெயருக்கு பதிலாக குருவின் பெயரை விண்ணப்பத்தில் குறிப்பிடலாம்.

  • அடையாள அட்டை, தடையில்லா சான்றிதழ் பெற முடியாத அரசு ஊழியர்கள், தங்கள் அலுவலக பரிந்துரை கடிதத்துடன் சுய சான்றை இணைத்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்! 


என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது

தி இந்து தமிழ் நாளிதழ் - 24.12.2016.

Tuesday, July 5, 2016

பாஸ்போர்ட் எடுக்க பயனுள்ள 12 யோசனைகள்


பாஸ்போர்ட் எடுக்க பயனுள்ள 12 யோசனைகள்

வாழ்க்கையின் பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்கொள்ள வேண்டிய விஷயங்களை அதிக சிரமமின்றி கடக்க உதவும் `ஒரு டஜன் யோசனைகள்’ பகுதியில், இந்தமுறை பாஸ்போர்ட் வாங்குவதற்கான வழிமுறைகள்! விண்ணப்பம், கட்டணம், புதுப்பித்தல், காத்திருப்பு நேரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இதோ...

விண்ணப்பம்

புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பிப் பவர்கள்
http://www.passportindia.gov.in
என்ற ஆன்லைன் முகவரி மூலமாகவே விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அதை உறுதிசெய்யும் விதமாக உங்கள் முகவரிக்கு அருகில் உள்ள பாஸ்போர்ட் இ-சேவை மையத்தின் முகவரியும், உங்களுக்கென ஒதுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட தேதி, நேரமும் உங்களுக்கு பதிலாக கிடைக்கும். பிறகு, நீங்கள் வாங்கும் பாஸ்போர்ட்டுக்கு உரிய கட்டணத்தை இணையதளம் மூலமாகவோ அல்லது எஸ்பிஐ (SBI) வங்கி சலான் மூலமாகவோ செலுத்தி, உரிய நேரம் மற்றும் தேதியில் இ-சேவை மையத்துக்குச் செல்லவும்.

இணைக்க வேண்டியவை!

பிறப்புச் சான்றிதழ் (ஜனவரி 26, 1989-க்குப் பிறகு பிறந்தவர்கள், வருவாய்த்துறை அல்லது பதிவுத்துறை வழங்கிய பிறப்புச் சான்றிதழ்களை மட்டுமே ஆதாரமாகக் காட்ட முடியும்), இருப்பிடச் சான்றிதழ், கல்வித்தகுதிக்கான சான்றிதழ், பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் செலுத்திய ரசீது. மேற்கண்ட ஆவணங்களின் நகல்களை விண்ணப்பத்தாரர் சுயகையொப்பமிட்டு சமர்ப்பிக்க வேண்டும். இந்த நகல்களின் அசல் ஆவணங்களை, உங்களுக்கு ஒதுக்கப்பட்ட தினத்தன்று கண்டிப்பாகக் கொண்டுவர வேண்டும்.

வெளியூரிலும் விண்ணப்பிக்கலாம்

வெளியூரில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் அப்பகுதியிலேயேகூட பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க லாம். அவர்கள் தங்கிப் படிக்கும் இடத்தின் முகவரியை ‘தற்போதைய முகவரி’யாக அளித்து, அதற்கான ஆதாரத்தை அந்தக் கல்வி நிறுவன முதல்வரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

காத்திருப்பு நேரம்

பொதுவாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து விண்ணப்பம் காவல்துறைக்கு அனுப்பப்படும். நீங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பகுதியில்தான் வசிக்கிறீர்களா, ஏதேனும் குற்ற வழக்குகள் உங்கள் பெயரில் பதிவாகியுள்ளனவா என உங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து (5 முதல் 10 நாட்களில்) விசாரித்து, நீங்கள் குற்றமற்றவர் என காவல்துறை அறிக்கை பெற்ற பிறகே, பாஸ்போர்ட் வழங்கப்படும். எனவே, நார்மல் பாஸ்போர்ட் வாங்க குறைந்தது 25 நாட்கள் ஆகும்.

‘நான் உடனே வெளிநாடு செல்ல வேண்டும்’ என்பவர்கள் தட்கல் முறையில் 3 முதல் 5 நாட்களில் பாஸ்போர்ட் பெறமுடியும். ஆனால், காவல் துறையினரின் சரிபார்ப்புக்கு முன்னரே பாஸ்போர்ட்டை உங்கள் கையில் கொடுப்பதால் மூன்று வகையான இருப்பிடச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். கட்டணமும் கொஞ்சம் அதிகம். போலீஸ் விசாரணைக்கு முன்னரே பாஸ்போர்ட்டை வழங்கினாலும், விசாரணையில் உங்கள் மீது வழக்குகள் இருப்பது தெரிய வந்தால், உடனே பாஸ்போர்ட் முடக்கப்படும்.

கட்டணம்

நார்மல் பாஸ்போர்ட்

(36 பக்கங்கள் கொண்டது) - 1,500 ரூபாய்.

60 பக்கங்கள் கொண்ட ஜம்போ பாஸ்போர்ட் (அடிக்கடி வெளிநாடு செல்கிறவர்கள் பயன்படுத்துவது) - 500 ரூபாய் கூடுதலாகச் செலுத்த வேண்டும். தட்கல் - 3,500 ரூபாய்

மைனர் - 1,000 ரூபாய்

டேமேஜ் / லாஸ்ட் - 3,000 ரூபாய்

புதுப்பித்தல்

ஒருமுறை எடுக்கும் பாஸ்போர்ட் 10 ஆண்டுகள் வரை செல்லுபடி ஆகும். தற்போது பாஸ்போர்ட்டில் வருடங்களை நீட்டித்து ‘ரெனியூவல்’ செய்யப்படுவதில்லை. எனவே, பாஸ்போர்ட் காலாவதியானால் மீண்டும் புது பாஸ்போர்ட்தான் பெற வேண்டும். காலாவதி தேதிக்கு இன்னும் ஓராண்டு இருக்கும்போது தொடங்கி, காலாவதி தேதிக்கு பின் மூன்று ஆண்டுகள் வரை விண்ணப்பிக்கலாம். பழைய பாஸ்போர்ட்டை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். விலாசம் மாறியிருந்தால் அதற்கான சான்றிதழ்களுடன் புதுப்பிக்கலாம். பாஸ்போர்ட் புதுப்பிக்க
http://www.passportindia.gov.in
என்ற இணைய முகவரியில், ரீ-இஷ்யூக்கான காரணத்தை க்ளிக் செய்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். இரண்டாவது முறை விண்ணப்பித்தாலும் புதிதாக விண்ணப்பிப்பவர் போலவே பாஸ்போர்ட் சேவை மையங்களை அணுகி நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். வெளிநாட்டில் தங்கி இருக்கும்போது பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை அணுக வேண்டும்.

குழந்தைகளுக்கு

14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் எடுக்கும்போது, அவர்களின் பெற்றோருக்கு பாஸ்போர்ட் இருந்தால் காவல்துறை அறிக்கை தேவைப்படாது.

பெயர் மாற்றம்

பாஸ்போர்ட்டில் பெயரில் ஏதேனும் தவறுகள் இருந்தால், பெயர் சரியாக இருக்கும் ஆவணங்களை மீண்டும் சமர்ப்பித்து, பாஸ்போர்ட்டை ரீ-இஷ்யூ செய்துகொள்ளலாம். ‘மேஜர் நேம் சேஞ்ச்’ எனில், மாற்றப்பட்ட பெயரை, தங்களுடைய நிரந்தர முகவரி மற்றும் தற்போதைய முகவரி உள்ள இடங்களில் பிரசுரமாகும் செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்து, அந்த செய்தித்தாளோடு மற்ற தேவையான ஆவணங்களை இணைத்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

திருமணத்துக்குப் பிறகு...

கணவரின் பெயரை தங்கள் பெயருடன் இணைக்க விரும்பும் பெண்கள் நவம்பர் 24, 2009-க்குப் பிறகு திருமணமாகி இருந்தால் திருமணச் சான்றிதழை இணைத்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். மற்றவர்கள் திருமணச் சான்று அல்லது ஜாயின்ட் நோட்டரி அஃபிடவிட் (Joint Notary Affidavit) இணைக்க வேண்டும்.

பாஸ்போர்ட் தொலைந்தால்...

உடனே காவல் நிலையத்தில் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். மற்றவர்கள் உங்களுடைய பாஸ்போர்ட்டை பயன்படுத் தாதவாறு அது முடக்கப்படும். உங்களுடைய பாஸ்போர்ட் கிடைக்காத பட்சத்தில், அவர்கள் ‘Non Traceable’ சான்றிதழ் தருவார்கள். பிறகு பாஸ்போர்ட் ரீ-இஷ்யூவுக்காக விண்ணப்பித்து, தொலைந்த பாஸ்போர்ட்டின் நகல் (இருந்தால்), ‘அனக்சர் எல்’

என்ற உறுதிமொழிப் பத்திரம்,

நோட்டரி பப்ளிக் ஒப்புதல் இவற்றை எல்லாம் இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஏமாற வேண்டாம்!

ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தெரியாதவர்கள், ஏஜென்டுகளை நாடும்போது கவனம் தேவை. அவர்கள் இஷ்டம்போல பணம் வசூலிக்கக்கூடும். உங்கள் பகுதியில் (வட்டாட்சியர் அலுவலகத்தில்) உள்ள இ-சேவை மையத்தை அணுகினால், உரிய செலவில் பாஸ்போர்ட் பெறமுடியும்.

மேலதிக தகவல்கள்

பாஸ்போர்ட் தொடர்பான சந்தேகங்களை மேலும் தெளிவுபடுத்திக்கொள்ள
www.passportindia.gov.in
என்ற இணையதள முகவரியையோ அல்லது 1800-258-1800 என்ற டோல்ஃப்ரீ எண்ணையோ தொடர்புகொள்ளுங்கள்.

சு.சூர்யா கோமதி

நன்றி : அவள்விகடன் - 01.12.2015

Wednesday, June 22, 2016

பாஸ்போர்ட் - இனி போலீஸ் விசாரணை கிடையாது


பாஸ்போர்ட் - இனி போலீஸ் விசாரணை கிடையாது
என்ன செய்ய வேண்டும்?

பாஸ்போர்ட் வாங்கும் போது இனி போலீஸ் விசாரணை  இருக்காது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும்போது பான்கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்களார் அடையாள அட்டை, மூத்த குடிமக்களுக்கான அட்டை என ஏதாவது ஒரு ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதனுடன் ரேஷன் கார்டு, மின்சார கட்டணம் செலுத்தும் ரசீது, வீட்டு வாடகை ரசீது ஆகியவற்றை பாஸ்போர்ட் சேவை மையத்தில் ஆவணங்களாக  சமர்ப்பிக்க  வேண்டும். இப்படி செய்யும் போது அதிக சிக்கலாக மற்றும் கடினமாக இருக்கும் போலீஸ் விசாரணையைத்  தவிர்க்க முடியும். இது முதல் முறையாக பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பம் செய்பவர்களுக்குதான்.

இப்போது இந்த மாற்றம் செய்யப்பட்டதற்கான முக்கிய காரணம் பல்வேறு மாநிலங்களிலும் போலீஸ் விசாரணையை  முடிப்பதற்கே பல நாட்கள் ஆகிகின்றன. இதனால் பாஸ்போர்ட் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது என்பதால்தான். 

வழக்கமாக போலீஸ் விசாரணையை முடிப்பதற்கு வளர்ச்சி அடைந்த மெட்ரோ நகரங்களில்  10-15 நாட்களும், கிராமப்புறங்களில்  20-30 நாட்களும் ஆகின்றன. தமிழகத்தில் 18 நாட்களும், குஜராத்தில் 27 நாட்களும், டெல்லியில் 12 நாட்களும், அசாமில் சராசரியாக 265 நாட்களும் ஆகின்றன.

இதைக் குறைக்கும் விதமாக பெங்களூருவில் ஆன்லைன் மூலம் போலீஸ் விசாரணை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வேலை எளிதாக முடிக்கப்பட்டு பாஸ்போர்ட் 10 நாட்களில் வழங்கப்படுகிறது. இது எல்லா மாநிலத்திலும் அமலானால் நன்றாக இருக்கும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறத் தொடங்கி இருக்கிறது எனலாம்.
  
இது குறித்து   மண்டல பாஸ்போர்ட் அதிகாரி (Regional Passport Officer) க.பாலமுருகனிடம் பேசினோம். 

"போலீஸ் விசாரணை என்பது ஒருவரின் குற்றப் பின்னணி குறித்து தெரிந்து கொள்வதற்காகத்தான். முன்பெல்லாம் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள் நேரில் வரமாட்டார்கள். ஆனால் இப்போதுள்ள முறையில் ஒருவருக்கு பாஸ்போர்ட் வேண்டுமெனில் கட்டாயம் பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு நேரில் வரவேண்டும்.  அங்கு வைத்துதான் விண்ணப்பதாரரை புகைப்படம் எடுப்பது, கைரேகை  பதிவு செய்வது ஆகியவை செய்யப்படுகிறது.  அதோடு இரண்டு டிசிஎஸ் பணியாளர்கள், இரண்டு அரசு அதிகாரிகள் என 4 நபர்களின் விசாரணைக்கு பிறகுதான் பாஸ்போர்ட் வழங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்படும்  இவை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. இதனால் போலி பாஸ்போர்ட் பெறுவது மற்றும் குற்றப்  பின்னணி இருப்பவர்கள் பாஸ்போர்ட் பெறுவது குறைந்துள்ளது. 

ஆனால் இப்போது உள்ள நடைமுறை மற்றும் தொழில்நுட்பங்களின்படி, காவல் நிலையத்தில் பதிவாகும் புகார்களின் விவரங்கள் அனைத்தும்  பாஸ்போர்ட் வழங்கும் மையத்துடன் இணைக்கப்பட்டு விடும். இதன் மூலமாக குற்றப் பின்னணி இருப்பவர்களின் விவரத்தை எளிதாக  தெரிந்து கொள்ள முடியும்.  

இதற்கு முன்பு, போலீஸ் விசாரணை இல்லாமல் பாஸ்போர்ட் வழங்கும் நடைமுறை இருந்தது. ஆனால் அந்த முறையில் பாஸ்போர்ட் வழங்கிய பிறகு போலீஸ் விசாரணை இருக்கும். அதாவது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான்கார்டு ஆகிய ஏதாவது ஒரு ஆவணத்துடன்,  விண்ணப்பதாரர், என் மீது எந்தவிதமான வழக்கும் இல்லை. நான் வெளிநாடு செல்வதால் எந்தவிதமான சிக்கலும் வராது' என இணைப்பு படிவம் 'ஐ' யில் கையெழுத்துப் போட்டு கொடுக்க வேண்டும். 

இதைக்  கொடுத்த பிறகு பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு வந்த 4வது நாளில் பாஸ்போர்ட் கிடைத்துவிடும். இதற்கு சாதாரண கட்டணம்தான். இருப்பினும் பாஸ்போர்ட் பெறுபவர் குறித்து அவரது வாழ்நாளில் ஒருமுறையாவது போலீஸ் விசாரணை இருக்கும்" என்றார்.

போலீஸ் விசாரணைக்கு பயந்தே பலரும் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதை தவிர்ப்பார்கள். இனி அந்த கவலை இருக்காது. எளிதாக எடுக்கலாம் பாஸ்போர்ட்!

- இரா. ரூபாவதி

நன்றி : விகடன் செய்திகள் = 20.06.2016

Thursday, May 21, 2015

ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் எடுக்க


ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் எடுக்க என்ன செய்ய வேண்டும்?
***********************************************************************
அரசு சார்ந்த பல சேவைகள் ஆன்லைனில் கிடைக்க துவங்கி இருப்பது பொதுமக்களுக்கு பேருதவியாக இருந்து வருகின்றது. இண்டர்நெட் மூலம் அரசு ஆவணங்களை பூர்த்தி செய்வது மிகவும் எளிமையான நடைமுறையாகிவிட்டது. அந்த வகையில் ஆன்லை் மூலம் இந்தியாவில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி? என்பதை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம். தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் இணையத்தில் பாஸ்போர்ட் பெற செய்ய வேண்டியவைகளை பாருங்கள்..

இணையதளம்:
முதலில் பாஸ்போர்ட் சேவா (Passport seva) இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 
ரெஜிஸ்டர்:
பாஸ்போர்ட் சேவா தளத்தை பயன்படுத்தும் முன் அதில் உங்களை பதிவு (Register) செய்து கொள்ள  வேண்டும்.

லாக் இன்: 
ரெஜிஸ்டர் செய்த பின் மீண்டும் பாஸ்போர்ட் சேவா தளத்திற்கு சென்று (Log in) லாக் இன் செய்ய வேண்டும்.
அப்ளை:
லாக் இன் செய்ததும் "Apply for Fresh Passport / Re-issue of Passport" க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு க்ளிக் செய்தவுடன் புதிய பக்கத்தில் விண்ணப்ப படிவம் காணப்படும்.

விண்ணப்பம்:
இங்கு காணப்படும் விண்ணப்ப (Application) படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்த பின் சமர்பிக்கலாம்.
பணம்:
விண்ணப்ப படிவத்தை சமர்பித்த பின் "Pay and Schedule Appointment" க்ளிக் செய்ய வேண்டும். ஆன்லைனில் பணம் செலுத்த உங்களது க்ரெடிட் அல்லது டெபிட் கார்டு போன்றவைகளை பயன்படுத்தலாம். பணம் செலுத்திய பின் அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டிய தேதியை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

ப்ரிண்ட்:
பணம் செலுத்தி முடித்த பின் "Print Application Receipt" க்ளிக் செய்து உங்களது விண்ணப்பத்தை ப்ரிண்ட் செய்து கொள்ளலாம்.

பாஸ்போர்ட்:
விண்ணப்பத்தை ப்ரிண்ட் செய்த பின் தேர்வு செய்த தேதியில் வட்டார பாஸ்போர்ட் அலுவலகம் செல்ல வேண்டும். அங்கு செல்லும் போது அனைத்து படிவங்களின் ஒரிஜினல்களையும் எடுத்து செல்ல வேண்டும்.
                                     வாழ்த்துக்கள்!      . 

நன்றி: TAMIL GIZBOT

பாஸ்போர்ட் பெறுவதில் தாமதமா?- உரிய காரணத்தை தொலைபேசியில் தெரிவிக்கும் புதிய நடைமுறை அறிமுகம்: சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தகவல்

பாஸ்போர்ட் பெறுவதற்கு தாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை விண்ணப்பதாரருக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கும் புதிய நடைமுறை சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு, கல்வி, மருத்து வம், சுற்றுலா என பல்வேறு தேவைகளுக்காக இந்தியாவில் இருந்து ஏராளமானவர்கள் வெளிநாடு செல்கின்றர். இப்படி வெளிநாடு செல்பவர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்காக தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன.
பாஸ்போர்ட் கோரி விண்ணப் பிப்பவர்களிடம் நேர்காணல் நடத்தி பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இதற்காக ஆன்லைனில் பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு விண்ணப் பிக்கும்போது ஏதேனும் ஒரு காரணத்துக்காக பாஸ்போர்ட் வழங்குவதில் தாமதம் ஏற்பட் டால் அதுகுறித்த காரணத்தை சம்மந்தப்பட்ட விண்ணப்ப தாரருக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கும் புதிய நடைமுறை சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள் ளது.
இதுகுறித்து, மண்டல பாஸ் போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
பல்வேறு தேவைகளுக்காக பாஸ்போர்ட் கோரி தினமும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப் பிக்கின்றனர். இவ்வாறு விண்ணப் பிப்பவர்களில் நாள்தோறும் 2 ஆயிரத்து 550 பேருக்கு நேர்காணல் நடத்தி பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்நிலையில், சிலர் நாங்கள் கேட்கும் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமல் விண்ணப்பிக்கின்றனர். அல்லது விண்ணப்பத்தைத் தவறாக பூர்த்தி செய்கின்றனர்.
மேலும், எங்கள் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் விண்ணப்பத்தை சரியான முறையில் பரிசீலனை செய்யாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர்களுக்கு பாஸ்போர்ட்டை உரிய நேரத்தில் விநியோகிக்க முடிவதில்லை. இதுகுறித்து சம்மந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு சரியான தகவல் கிடைக்காததால் அவர்கள் தொடர்ந்து எங்கள் அலுவலகத்துக்கு வருகின்றனர். இதனால், அவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காண்பதற்காக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் புதிய தொலைபேசி சேவையை தொடங்கியுள்ளோம். இதற்காக ஒரு ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்தவர்களை தொடர்புகொண்டு அவர்களின் பாஸ்போர்ட் விண்ணப்பம் என்ன காரணத்துக்காக தாமதமாகிறது என்ற காரணத்தைத் தெரிவிப்பார். மேலும் எத்தனை நாட்களுக்குள் பாஸ்போர்ட் தயார் செய்து வழங்கப்படும் என்ற விவரத்தையும் கூறுவார்.
இதன் மூலம், சம்மந்தப்பட்ட விண்ணப்பதாரர் தேவையின்றி எங்கள் அலுவலகத்துக்கு வந்து செல்ல வேண்டிய நிலை தவிர்க்கப்படுகிறது.

 மேலும் கூடுதல் விவரங்களுக்கு 18002581800, 28513640, 28518848, 28513639, 28513641, 28513575 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.
இவ்வாறு பாலமுருகன் கூறினார்.

நன்றி தி இந்து நாளிதழ் - 01.06.2015

Friday, April 10, 2015

பாஸ்போர்ட் எடுப்பது எப்படி?


பாஸ்போர்ட் எடுப்பது எப்படி?
*****************************************
எளிய முறையில் பாஸ்போர்ட் வாங்குவது எப்படி தெரியுமா?
நம் நாட்டில் ஆர்டினரி (Ordinary), அப்பிசியல் (Official), டிப்ளோமேட்டிக் (Diplomatic), ஜம்போ (Jumbo) என நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன.
Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும்,
Official பாஸ்போர்ட் அரசாங்க ஊழியர்களுக்கும்,
Diplomatic பாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும்,
 Jumbo பாஸ்போர்ட் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.
ஆவணங்கள்:
முக்கியமாக இரண்டு ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
1. இருப்பிடச் சான்றிதழ்
2. பிறப்புச் சான்றிதழ்.
* இருப்பிடச் சான்றாக – குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், குடிநீர் வரி, மின் கட்டண ரசீது, தொலைபேசிக் கட்டண ரசீது, வருமான வரி மதிப்பீட்டுச் சான்றிதழ் போன்றவற்றைக் காட்டலாம்.
* பிறந்த நாளுக்கான ஆதாரமாக பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்களையோ, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, அல்லது பதிவுத்துறை வழங்கும் சான்றிதழ்களையோ ஆதாரமாகக் காட்டலாம்.
* ஜனவரி 26, 1989க்குப் பிறகு பிறந்தவர்கள், வருவாய்த்துறை அல்லது பதிவுத்துறை வழங்கிய பிறப்புச் சான்றிதழ்களையே ஆதாரமாகக் கட்ட வேண்டும்.
* விண்ணப்பத்துடன் மேற்குறிப்பிட்ட இரண்டு சான்றிதழ்களின் நகல்களின் இரண்டு படிகளை இணைக்க வேண்டும். நேரடியாக பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கிறவர்கள் உண்மைச் சான்றிதழ்களை உடன் எடுத்துச் சென்றால், சமர்ப்பித்துள்ள நகல்களுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பார்கள்.
* சொந்த ஊர்விட்டு வெளியூர் சென்று படிப்போர், விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் அப்பகுதிகளிலேயே கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது பெற்றோர்கள் வசிக்கும் பகுதியிலும் விண்ணப்பிக்கலாம்.
* அவ்வாறு படிக்கும் இடத்தில் இருந்து விண்ணப்பிப்பதாயின், தங்கிப்படிக்கும் இடத்தின் முகவரியைத் தற்போதைய முகவரியாக அளிக்க வேண்டும். அதற்கான ஆதாரத்தை அந்தக் கல்வி நிறுவன தலைவரிடம் / முதல்வரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
விண்ணப்பத்தில் இருப்பிட முகவரி தெளிவாக இருத்தல் வேண்டும்.
பொதுவாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, அந்த அலுவலகத்திலிருந்து விண்ணப்பத்தை காவல் துறைக்கு அனுப்பி, நீங்கள் அந்தப்பகுதியில்தான் வசிக்கிறீர்களா? நீங்கள் ஏதேனும் கிரிமினல் குற்றம் புரிந்தவரா? அப்படி ஏதும் குற்றங்கள் உங்கள் பெயரில் உள்ளனவா என உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து விசாரித்து நீங்கள் குற்றமற்றவர் என காவல்துறை அறிக்கை பெற்ற பிறகே பாஸ்போர்ட் வழங்குவர்.
சிறுவர்-சிறுமியர்:
சிறுவர்-சிறுமியர்க்கு (14 வயதுக்கு உட்பட்டவர்) பாஸ்போர்ட் எடுக்க விரும்பினால், பெற்றோர்கள் பாஸ்போர்ட் இருப்பவராக இருந்தால், காவல்துறை அறிக்கை தேவைப்படாது. பெற்றோர்க்கு பாஸ்போர்ட் இல்லாவிட்டால் அவர்தம் விண்ணப்பங்களும் காவல் துறைக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே பாஸ்போர்ட் அளிப்பர்.
கட்டணம்:
பொதுவாக சாதாரண பாஸ்போர்ட் பெற ரூ. 1000/- செலுத்தினால் போதுமானது . ஆனால் ஜம்போ பாஸ்போர்ட் பெற ரூ 1500/- கட்டணம் செலுத்த வேண்டும்.
(Jumbo) ஜம்போ பாஸ்போர்ட் – அடிக்கடி வெளிநாடு செல்கிறவர்கள் (பெரு வணிகர்கள் போன்றோர்) பெறக்கூடியது. சிறுவர் சிறுமியர்க்கு கட்டணம் ரூ. 600/-.
தட்கல் திட்டம்:
பொதுவாக, பாஸ்போர்ட் விண்ணப்பங்களை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் செலுத்தி 30 நாள்களில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு விடுகின்றன.
அவசரமாக வெளிநாடு செல்பவர்க்கு உதவியாக விரைந்து பாஸ்போர்ட் பெறவும் வகையிருக்கிறது. இதற்கு “தத்கல் திட்டம்” என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் சிறப்புரிமை அடிப்படையில் விரைந்து பாஸ்போர்ட் பெற முடியும்.
காவல்துறை சான்றிதழ் பெற்றவர்கள், காவல்துறைச் சான்று தேவைப்படாத 14 வயதுக்கு உட்பட்ட (பாஸ்போர்ட் உடைய பெற்றோர்களின் குழந்தைகள்) சிறுவர் சிறுமியர், ஆட்சேபனை இல்லாச் சான்று பெற்ற அரசு ஊழியர்கள், அவர்களது துணைவியர் மற்றும் பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டோர் மட்டுமே தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன் பெற முடியும்.
அவ்வாறு விரைந்து பாஸ்போர்ட் பெற விழைவோர் ரூ.2500/- கட்டணமாக செலுத்த வேண்டும். 3 ஆவணங்கள் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும்.
பாஸ்போர்ட்டை புதுப்பித்தல்:
பாஸ்போர்ட் பெற்றவர்கள் அதை 10 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். பிறகு புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்கு ரூ. 1000/- கட்டணம் செலுத்த வேண்டும்.
தொலைந்து போனால் என்ன செய்வது?
பாஸ்போர்ட் தொலைந்து போனால் காவல் துறையினரிடம் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் “Non Traceable” சான்றிதழ் தருவார்கள். அதை ஒப்படைத்தால் டூப்ளி கேட் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு ஆர்டினரிக்கு 2500 ரூபாய் மற்றும் தட்கலுக்கு 5000 ரூபாய் கட்டணம்.
பாஸ்போர்ட் கட்டணம் தெரிந்து கொள்ள :
பாஸ்போர்ட் ஆன்லைன் வெப்சைட்: