disalbe Right click

Showing posts with label வங்கி. Show all posts
Showing posts with label வங்கி. Show all posts

Wednesday, September 19, 2018

‘இந்தியா போஸ்ட் பேமென்ட்’ வங்கி

 இந்தியா போஸ்ட் பேமென்ட்வங்கி
நமக்கு அளிக்கும் சாதகங்கள்
வங்கிச்சேவையை பரவலாக்கும் நோக்கத்துடன் இந்திய ரிசர்வ் வங்கி, புதிய வகை வங்கியான, ‘பேமென்ட்ஸ்வங்கிகளுக்கு அனுமதியை அளித்துள்ளது.
இதன் அடிப்படையில் அனுமதி பெற்ற இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி இம்மாத துவக்கத்தில் இருந்து, நம் நாடு முழுவதும் தன் செயல்பாடுகளை துவங்கி இருக்கிறது. இதன் மூலம் வங்கி சேமிப்பு கணக்கு சேவை, பரிவர்த்தனை வசதிகளை பெறுவதோடு, வீடு தேடி வரும் வங்கி சேவையையும் பொதுமக்கள் பெறலாம்.
மூன்று வகையான கணக்குகள்
மூன்று வகையான சேமிப்பு கணக்கு சேவையை இந்தியா பேமென்ட் போஸ்ட் வங்கி நமக்கு அளிக்கிறது. மற்ற வங்கிகளில் உள்ளது போல வழக்கமான சேமிப்பு கணக்கு மூலம், எந்தவித கட்டணமும் செலுத்தாமல், இதில் பணத்தை எடுக்கலாம். இதற்கான மையங்களில் அல்லது வீடு தேடிய சேவைக்கு விண்ணப்பித்து, இந்த வகை கணக்கை நாம் துவக்கலாம். ‘ஜீரோ பேலன்ஸ்கணக்கு என்பதால் குறைந்த பட்ச தொகையை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், காலாண்டு சேமிப்பு கணக்கு அறிக்கை இலவசமாக அளிக்கப்படும்.
இரண்டாவதாக, டிஜிட்டல் சேமிப்பு கணக்கை, இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி செயலி மூலம் நாம் துவக்கலாம். நமது பான் கார்டு மற்றும் ஆதார் எண் விபரங்களை அளித்து, எளிதாக இந்த சேமிப்பை கணக்கை இங்கு துவக்கலாம். இருந்தாலும், ஒராண்டுக்குள், Know Your Customer நடைமுறையை பூர்த்தி செய்ய வேண்டும். அதற்குப் பிறகே, இது வழக்கமான கணக்காக எடுத்துக் கொள்ளப்படும். ‘பேஸிக் அக்கவுன்ட்எனப்படும் அடிப்படை சேமிப்பு கணக்கு சேவையும் இங்கு வழங்கப்படுகிறது. வழக்கமான சேமிப்பு கணக்கு அம்சங்கள் கொண்டிருந்தாலும், மாதம் நான்கு முறை மட்டுமே, பணம் எடுக்க முடியும்.
இந்திய அஞ்சலகத்துறை சேமிப்பு கணக்குடன், பேமென்ட் வங்கி கணக்கு சேவையை இணைத்துக்கொள்ளும் வசதியும் இங்கு உண்டு. இதன்படி இணைக்கப்பட்டால், பேமென்ட் வங்கியிலுள்ள நமது கணக்கில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் இருந்தால், எஞ்சிய தொகை அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கு மாற்றப்படும். இந்த வங்கியிலுள்ள எல்லாவகை சேமிப்பு கணக்குகளுமே, 4 சதவீத வட்டியை நமக்கு அளிக்கின்றன.
காலாண்டு அடிப்படையில்தான் வட்டி விகிதம் கணக்கிடப்படுகிறது. அஞ்சலகத்தில் கூட சேமிப்பு கணக்கு துவக்க குறைந்தபட்ச டிபாசிட்டாக, 20 ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால், பேமென்ட் வங்கியில் இதற்கான அவசியமே இல்லை. மேலும், பேமண்ட் வங்கி கணக்கில், குறைந்தபட்ச தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அஞ்சலக சேமிப்பு கணக்கில்கூட குறைந்தபட்சம், 50 ரூபாய் வைத்திருக்க வேண்டும்.
பணம் எடுக்கும் வசதி
இந்தியா பேமென்ட் வங்கியில் டெபிட் கார்டுக்கு பதில், QR., கோடு வசதி கொண்ட கார்டு வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் அல்லது மைக்ரோ, .டி.எம்., மூலம் இந்த கார்டு முதலாவதாக சரி பார்க்கப்பட்டு, அஞ்சலக ஊழியர் அல்லது வர்த்தக பிரதிநிதியால் பணம் நமக்கு அளிக்கப்படும். வீடு தேடி வரும் வங்கிச்சேவையில்
பயோமெட்ரிக்முறையால் இரண்டாவது முறையாக சரிபார்த்தல் மேற்கொள்ளப்படும். ஆனால், இதற்கென்று கட்டணம் உண்டு. QR கோடு கார்டு மூலமாக, பில் செலுத்துவது, பணம் அனுப்புவது மற்றும் ரொக்கமில்லா ஷாப்பிங் போன்ற சேவைகளையும் நாம்பெற்றுக் கொள்ளலாம்.
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 19.09.2018 

Monday, March 12, 2018

மினிமம் பேலன்ஸ் அபராத கட்டணம்

எஸ்பிஐ வங்கியில் மினிமம் பேலன்ஸ் அபராத கட்டணம் குறைப்பு!
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான STATE BANK OF INDIA கடந்த 06.03.2018 செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்ட அறிவிப்பில் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்காத சேமிப்புக் கணக்குகளுக்கான அபராதத் தொகையை ஏப்ரல் 1 முதல் குறைப்பதாகத் தெரிவித்துள்ளது
எந்தக் கிளை அக்கவுண்டுக்கு எவ்வளவு அபராதம்?
மெட்ரோ நகரங்கள் மற்றும் புற நகர் பகுதி STATE BANK OF INDIA வங்கி கிளைகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் 3,000 ரூபாய்க்கும் குறைவாக இருப்புத் தொகையினை நிர்வகிக்கவில்லை என்றால்..... 
 சேமிப்புக் கணக்குகளில் 50 சதவீதம் வரை இருப்புத் தொகை வைத்து இருக்கும் அக்கவுண்டுக்கு முன்பு 30 ரூபாய் + ஜிஎஸ்டி அபராதம் ஆக இருந்தது. அது தற்போது 10 ரூபாய் + ஜிஎஸ்டியாகக்  குறைக்கப்பட்டு உள்ளது
  50 முதல் 70 சதவீதத்திற்கும் குறைவாக வைத்து இருந்தால் 40 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணமானது 12 ரூபாய் +  ஜிஎஸ்டியாகக்  குறைக்கப்பட்டு உள்ளது  
  75 சதவீதத்திற்கும் குறைவாக வைத்து இருந்தால் 50 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணத்தினை 15 ரூபாய்ஜிஎஸ்டியாகக்  குறைக்கப்பட்டு உள்ளது
நகரப் புகுதிகள் உள்ள வங்கிக் கிளைகளில்.....
நகரப் பகுதிகளில் உள்ள STATE BANK OF INDIA வங்கி கிளைகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை 2,000 ரூபாய் வரை நிர்வகிக்க வேண்டும். இல்லை என்றால், 
  சேமிப்புக் கணக்குகளில் 50 சதவீதம் வரை இருப்புத் தொகை வைத்து இருந்தால் முன்பு 20 ரூபாய் + ஜிஎஸ்டி அபராதம் ஆக இருந்த கட்டணமானது, தற்போது 7.50 ரூபாய்ஜிஎஸ்டியாகக்  குறைக்கப்பட்டு உள்ளது
  50 முதல் 70 சதவீதத்திற்கும் குறைவாக இருப்புத் தொகை வைத்து இருந்தால் 30 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணமானது 10 ரூபாய்ஜிஎஸ்டியாகக்  குறைக்கப்பட்டு உள்ளது.
  75 சதவீதத்திற்கும் குறைவாக இருப்புத் தொகை வைத்து இருந்தால் 40 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணமானது 12 ரூபாய் +ஜிஎஸ்டியாகக்  குறைக்கப்பட்டு உள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள வங்கிக் கிளைகளில்.... 
கிராமப்புற STATE BANK OF INDIA வங்கி கிளைகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக 1,000 ரூபாய்  இருக்கவேண்டும். அதனை நிர்வகிக்கவில்லை என்றால்....
  சேமிப்புக் கணக்குகளில் 50 சதவீதம் வரை இருப்புத் தொகை வைத்து இருந்தால் முன்பு 20 ரூபாய் + ஜிஎஸ்டி அபராதம் ஆக இருந்த கட்டணமானது, தற்போது 5 ரூபாய்ஜிஎஸ்டியாகக்  குறைக்கப்பட்டு உள்ளது
  50 முதல் 70 சதவீதத்திற்கும் குறைவாக வைத்து இருந்தால் 30 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணமானது 7.50 ரூபாய்ஜிஎஸ்டியாகக்  குறைக்கப்பட்டு உள்ளது
  75 சதவீதத்திற்கும் குறைவாக வைத்து இருந்தால் 40 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணமானது 10 ரூபாய்ஜிஎஸ்டியாகக்  குறைக்கப்பட்டு உள்ளது
மினிமம் பேலன்ஸ் தேவையில்லாத கணக்குகள் 
நாடு முழுவதிலுமுள்ள STATE BANK OF INDIA வங்கியில் மொத்தம்  41 கோடி சேமிப்புக் கணக்குகள்   இருக்கிறது. இவற்றில் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா மற்றும் அடிப்படை சேமிப்புக் கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் தேவையில்லை. அது மட்டும் இல்லாமல் 21 வயதுக்கும் குறைவாக உள்ள மாணவ, மாணவியர்களின் சேமிப்பு கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை நிர்வகிக்க அவசியமில்லை
********************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 13.03.2018