disalbe Right click

Saturday, May 6, 2017

அங்கீகாரமற்ற வீட்டு மனைகள் - அரசு விதிமுறைகள்

அங்கீகாரமற்ற வீட்டு மனைகள் - அரசு விதிமுறைகள்
சென்னை:அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரன்முறை செய்வதற்கான விதிமுறைகளை, தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் மூலம், ஏரி, குளம், கால்வாய் மற்றும் கோவில் நிலத்தில் வீடுகள் கட்டவும், விவசாய நிலத்தை வீட்டு மனையாக மாற்றவும், தடை விதிக்கப் பட்டு உள்ளது. இது தொடர்பான, இரண்டு அரசாணைகளை, உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு, நேற்று தாக்கல் செய்தது.
தமிழகத்தில், அங்கீகாரமற்ற வீட்டு மனை களை பதிவு செய்ய, சென்னை உயர் நீதிமன்றம், 2016 செப்., 9ல், தடை விதித்தது. இதையடுத்து, மனைகள் வரன்முறை திட்டம், விவசாய நிலங்கள் பயன்பாடு மாற்றம் தொடர்பான புதிய விதிமுறைகளுக்கு, மே, 2ல் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர், தர்மேந்திர பிரதாப் யாதவ், இரண்டு அரசாணைகளை, நேற்று வெளியிட்டார். அவற்றை, உயர் நீதிமன்றத் தில், தமிழக அரசு தாக்கல் செய்தது.முதலாவது அரசாணை யில், அங்கீகாரமற்ற மனைகளை, வரன்முறை செய்வதற்கான, விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அங்கீகார மின்றி உருவாக்கப்பட்டு, 2016 அக்., 20க்கு முன், விற்பனை பத்திரம் பதிவு செய்த மனைகளை, வரன்முறை செய்யலாம். இதில், விண்ணப்ப தாரர் பெயரில், பத்திரம் பதிவாகி இருக்க வேண்டும். 'பவர்' பத்திரம் பெற்றவர்களுக்கு, வரன்முறையில் விண்ணப் பிக்க தகுதி இல்லை.
இத்திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், வரன் முறைக்கு, மனை உரிமையாளர்கள் விண்ணப் பிக்க வேண்டும். தவறினால், குடிநீர், கழிவுநீர், மின்சார இணைப்புகள் துண்டிக்கப்படும்;
பத்திரப்பதிவு, கட்டட அனுமதிக்கு தடை விதிக்கப்படும்.இந்த வரன்முறை, நிலத்துக்கு மட்டும் தான்; அதில், அனுமதியின்றி கட்டிய கட்டடங்களை வரன்முறைபடுத்தியதாக ஆகாது.நீர் வழித்தடம், கால்வாய், குளம், ஆறு உள்ளிட்டவற்றை ஆக்கிரமித்து உருவாக்கப் பட்ட மனைகளை வரன்முறை செய்ய முடியாது. அரசு புறம்போக்கு நிலம் ஏற்கப் படாது.ஓ.எஸ்.ஆர்., எனப்படும், திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலத்தில், உருவாக்கப்பட்ட மனை யாக இருக்ககூடாது.
உத்தேச சாலைகள், ரயில் பாதைகள், புற வழிச்சாலைகளில் இருக்கக் கூடாது. பொது பாதையை ஆக்கிரமித்த மனைகளுக்கு, வரன்முறை கிடையாது. இவ்வாறு முதல் அரசாணையில் கூறப்பட்டு உள்ளது. இரண்டாவது அரசாணை மூலமாக, விவசாய நிலத்தை வீட்டு மனையாக மாற்ற,அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என்பதை, அரசு கட்டாயமாக்கி உள்ளது.
கட்டணம் எவ்வளவு?
* பரிசீலனை கட்டணம்:
ஒரு மனைக்கு, 500 ரூபாய்; வரன்முறை கட்டணம், மாநகராட்சிகளில் ஒரு சதுர மீட்டருக்கு, 100 ரூபாய்; நகராட்சிகளில், 60; பேரூராட்சி, ஊராட்சிகளில், 30 ரூபாய்
* வளர்ச்சி கட்டணம்:
மாநகராட்சிகளில் ஒரு சதுர மீட்டருக்கு, 600 ரூபாய்; நகராட்சிகளில், 250 - 350; பேரூராட்சிகளில், 150; ஊராட்சிகளில், 100 ரூபாய்
* ஓ.எஸ்.ஆர்., கட்டணம்:
மொத்த பரப்பளவில், 10 சதவீத அளவுக்கு, பதிவுத்துறையின் வழிகாட்டி மதிப்பு அடிப்படையில், செலுத்த வேண்டும்
* இதில், 2012 மார்ச், 31க்கு முன், பதிவு செய்யப்பட்ட மனைகளுக்கு, 2007 ஆக., 1ன் படியான வழிகாட்டி மதிப்பும், அதற்கு பிந்தைய மனைகளுக்கு, தற்போது நடைமுறையில் இருக்கும் வழிகாட்டி மதிப்பும், கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
வரன்முறை அதிகாரம்
* தனிபட்ட மனைகளை வரன்முறை செய்ய, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி களின் நிர்வாகங்களுக்கு, அதிகாரம் வழங்கப் படுகிறது
* மனைப்பிரிவு வரன்முறையில் முடிவு எடுக்க, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர், நகர், ஊரமைப் புத் துறை இயக்குனருக்கு, அதிகாரம் வழங்கப் படுகிறது
* தகுதிகள்முழுமையாக இருந்து,சம்பந்தப்பட்ட அதிகாரி வரன்முறை செய்ய முடியாது என நிராகரித்தால், சென்னையில் இருப்பவர்கள், அரசிடமும், இதர பகுதிகளில் இருப்பவர்கள் நகர், ஊரமைப்பு துறையிடமும், மேல் முறையீடு செய்யலாம்.
விவசாய நிலங்களை மாற்ற அரசு புதிய கட்டுப்பாடு
விவசாய நிலங்களை அடிப்படையாக கொண்ட புதிய மேம்பாட்டு திட்டங்களுக்கு, கலெக்டர், நகரமைப்பு துறை இயக்குனரிடம், முன் அனுமதி பெறுவது கட்டாயம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பான புதிய அரசாணை மற்றும் அறிவிக்கையை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர், தர்மேந்திர பிரதாப் யாதவ், நேற்று வெளியிட்டார்.
அதன் விபரம்:
* திட்டமில்லா பகுதிகளில், விவசாய நிலத்தை வேறு தேவைக்கு பயன்படுத்த, உள்ளூர் திட்ட அமைப்பிடம் விண்ணப்பிக்கும்போது, 1,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்; இது, திருப்பி தரப்பட மாட்டாது.
* உள்ளூர் திட்ட அமைப்பு, அந்த விண்ணப் பத்தை பரிசீலித்து, அனுமதி வழங்கும் முன், நகரமைப்புத்துறை இயக்குனரின் முன் அனுமதியை பெற வேண்டும்.
* நகரமைப்பு இயக்குனர் முன் அனுமதி அளிக்கும் முன், அந்த நிலம் நஞ்சையா, விவசாயம் செய்ய ஏற்றதா என்பது குறித்து, கலெக்டர், வேளாண் இணை இயக்குனர் ஆகியோரிடம் அறிக்கை பெற வேண்டும்
* அதற்கு முன், அந்த நிலத்தின் தன்மை, பயன்பாடு, ஆக்கிரமிப்பு ஆகியவை குறித்து, கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும்
* வருவாய் துறை ஆவணங்கள் அடிப்படை யில், நிலத்தின் உரிமை, உண்மை தன்மை ஆகிய விபரங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்
* இவை அனைத்தும் திருப்தி அளித்தால் மட்டுமே, நகரமைப்புத்துறை இயக்குனர் முன் அனுமதி அளிப்பது குறித்து, முடிவு எடுக்க வேண்டும்.
* முன் அனுமதி அளிக்கும்போது, நிலத்தின் சந்தை மதிப்பில், மூன்று சதவீத தொகையை, பயன்பாடு மாற்ற கட்டணமாக வசூலிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள், நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவின் அடிப்படையில் அமலுக்கு வரும். இதன்படி, விவசாய நிலங்களை, உரிய முன் அனுமதி இன்றி, வேறு தேவைகளுக்கு பயன்படுத்த முடியாது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 05.05.2017
Image may contain: text
தினமணி நாளிதழ் - மதுரை பதிப்பு - 06.05.2017 - பக்கம் 7

Friday, May 5, 2017

ஜாமீனுக்கு சொத்து ஆவணம் தேவையா? ஐகோர்ட் அதிரடி

ஜாமீனுக்கு சொத்து ஆவணம் தேவையா? ஐகோர்ட் அதிரடி
'ஜாமினில் வருவதற்கு, சொத்து ஆவணங்கள் தாக்கல் செய்யும்படி வற்புறுத்தக் கூடாது; உத்தரவாதம் தருபவர் அரசு ஊழியராகவோ, ரத்த உறவாகவோ இருக்கவும் தேவையில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
நிபந்தனை :
சென்னையை சேர்ந்த சகாயம் என்பவருக்கு, முன் ஜாமின் வழங்கும் போது, சில நிபந்தனைகளை, உயர் நீதிமன்றம் விதித்தது. '15 ஆயிரம் ரூபாய்க்கு உத்தரவாதம், ரத்த உறவாக இருவரது உத்தரவாதம் வழங்க வேண்டும்' என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இந்த நிபந்தனைகளில் மாற்றம் செய்ய கோரி, உயர் நீதிமன்றத்தில் சகாயம் மனு தாக்கல் செய்தார். அவர் தரப்பில், '15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணம் தாக்கல் செய்ய, செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமின்தாரர்களுக்கு சொத்து கிடையாது' என, தெரிவிக்கப்பட்டது.
மனுவை விசாரித்த, நீதிபதி தேவதாஸ் பிறப்பித்த உத்தரவு:
ஜாமினுக்கான உத்தரவாதத்தை குற்றம் சாட்டப்பட்டவர் வழங்கும் போது அல்லது ஜாமின்தாரர் உத்தரவாதம் வழங்கும் போது, சொத்து ஆவணங்களை தாக்கல் செய்யும்படி, வற்புறுத்த முடியாது.
ஜாமின் அளிப்பவர் அரசு ஊழியராகவோ, ரத்த உறவாகவோ, உள்ளூர்காரராகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
சொத்து ஆவணங்கள், கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தாசில்தாரின் சான்றிதழ், வாகன பதிவு சான்றிதழை, குற்றம் சாட்டப்பட்டவரோ, ஜாமின்தாரரோ சமர்ப்பிக்க வேண்டும் என, கட்டாயப்படுத்தக் கூடாது.
ஆவண நகல் :
ஜாமின்தாரர், நேர்மையான நியாயமான நபராக இருக்க வேண்டும்.
ரொக்க உத்தரவாதத்தை வழங்கும்படி, முதல்கட்டத்திலேயே வற்புறுத்தக் கூடாது. தனிப்பட்ட உத்தரவாதம் அளிக்க முடியாமல், ரொக்க உத்தரவாதம் அளிக்க முன்வந்தால், அதை ஏற்கலாம்.
பாஸ்போர்ட், குடும்ப அட்டை, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை போன்ற ஏதாவது ஒரு ஆவணத்தின் நகலை, அடையாளத்தை றுதிப்படுத்துவதற்காக,நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
(இது பற்றிய செய்தியானது மதுரை பதிப்பு தினமலர் நாளிதழில் பக்கம் 14ல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் நகலினை கீழே காணலாம்)
No photo description available.

Image may contain: text

நன்றி : தினமலர் நாளிதழ் - 05.05.2017

தூக்கு!

தூக்கு!
மாணவி 'நிர்பயா' வழக்கில் நால்வருக்கு...
சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
புதுடில்லி:நாட்டையே உலுக்கிய, மருத்துவ மாணவி, 'நிர்பயா'வை ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்து, தெருவில் வீசியெறிந்து கொலை செய்த வழக்கில், நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது.
  • டில்லியைச் சேர்ந்த, 23 வயது மருத்துவ மாணவி ஒருவர், கடந்த, 2012, டிச., 16 இரவில், தன் நண்பருடன் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
  • அப்போது, பஸ் டிரைவர் உட்பட ஆறு பேர், இவ்விருவரையும் தாக்கியுள்ளனர்.
  • மேலும், ஓடும் பஸ்சில், மாணவியை, கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்ததுடன், இரும்பு கம்பியால் அவருடைய பிறப்புறுப்பை தாக்கினர்.
  • பின், இருவரையும் பஸ்சில் இருந்து துாக்கி வீசியது அந்த கும்பல்.
கொந்தளிப்பு
  • இதில் பலத்த காயமடைந்த அந்த மாணவி, டில்லியிலும், பின், சிங்கப்பூர் மருத்துவமனை யிலும் சேர்க்கப்பட்டார்.
  • ஆனால், 2012, டிச., 29ல் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
  • கொடூரமான முறையில் நடந்த இந்த சம்பவம், நாடு முழுவதும் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
  • மாணவிக்கு, 'நிர்பயா' எனப்படும், பயமறியாதவள் என்று பெயரிட்டு, பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக மிகப் பெரிய அளவில் டில்லி மற்றும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன.
  • இந்த சம்பவத்தைத் தொடர்ந்தே, பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு நிவாரணம் அளிக்கும், 'நிர்பயா நிதி' உருவாக்கப்பட்டது.
  • இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ஒரு சிறுவன் உட்பட, ஆறு பேரை கைது செய்தனர்.
  • இதில், பஸ் டிரைவர் ராம் சிங், சிறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
  • சிறுவனுக்கு 3 ஆண்டு:இந்த வழக்கில் தொடர்பு டைய சிறுவன் மீதான வழக்கு சிறார் கோர்ட்டில் நடந்தது.
  • அதிகபட்ச தண்டனையாக, சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அவனை, மூன்றாண்டு அடைப் பதற்கு, 2016, ஆகஸ்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
  • இதனிடையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள அக்ஷய், பவன், வினய் சர்மா, முகேஷ் ஆகியோ ருக்கு மரண தண்டனை விதித்து, டில்லி கோர்ட், 2013ல் தீர்ப்பு அளித்தது.
  • இந்த தண்டனையை, டில்லி ஐகோர்ட், 2014ல் உறுதி செய்தது.
  • இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி, அசோக் பூஷண் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரித்து, நேற்று தீர்ப்பு அளித்தது.
அரிய வழக்கு
  • 'டில்லி ஐகோர்ட் உறுதிசெய்துள்ள, மரண தண்டனையை உறுதி செய்கிறோம்' என, சுப்ரீம் கோர்ட் அமர்வு தன் தீர்ப்பில் கூறியுள்ளது.
  • 'நிர்பயா பலாத்கார, கொலை வழக்கு, அரிதிலும் அரிதான வழக்கு.
  • அதனால், இந்த வழக்கில் குற்றவாளி களுக்கு மிகவும் அதிகபட்ச தண்டனை தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
  • அவர்களுக் கான மரண தண்டனையை உறுதி செய்கிறோம்' என, சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியுள்ளது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து, நிர்பயாவின் தந்தை பத்ரிநாத் சிங் கூறுகையில்,
  • ''எங்களுடைய மகள் வழக்கில் நல்ல தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது; இனி நிம்மதியாக துாங்குவோம்,'' என்றார்.
வழக்கு கடந்து வந்த பாதை
  • 2012, டிச., 16: டில்லியில், 23 வயது மருத்துவ மாணவி, 'நிர்பயா' நண்பருடன் இரவில், தனியார் பஸ்சில் பயணம் செய்த போது, ஆறு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு, ஆயுதங்களால் தாக்கப்பட்டு, பஸ்சில் இருந்து துாக்கி வீசப்பட்டார். அவரது நண்பரும் தாக்கப்பட்டார்.
  • டிச., 17: நிர்பயா, சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்ப்பு.
  • டிச., 17 - டிச., 21: இக்குற்றத்தில் ஈடுபட்ட பஸ் டிரைவர், ராம் சிங், அவன் சகோதரர் முகேஷ் சிங் ஆகிய இரண்டு பேரும் ராஜஸ்தானில் கைது. வினய் சர்மா, புவன் குப்தா, ஒரு சிறுவன் ஆகியோர் டில்லியில் கைது. அக் ஷய் தாகூர், அவுரங்காபாத்தில் கைது.
  • டிச., 21: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மாணவி, சப்தர்ஜங் மருத்துவமனையில்மாஜிஸ்தி ரேட்டிடம் வாக்குமூலம்.
  • டிச., 26: குற்றவாளிகளை துாக்கிலிட வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம்.
  • டிச., 27:நிர்பயா, மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
  • டிச., 29: சிகிச்சை பலனின்றி, அதிகாலை, 2:15 மணிக்கு உயிரிழந்தார். பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டம், பார்லிமென்டில் தாக்கல்.
  • 2013 ஜன., 3: கற்பழிப்பு, கொலை, கடத்தல், ஆவணங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளில் ஐந்து குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு. ஆறு பேரில் மைனர் குற்றவாளி வழக்கு மட்டும், சிறுவர் கோர்ட்டுக்கு மாற்றம்.
  • ஜன., 17: டில்லி சாகேட் விரைவு கோர்ட்டில் விசாரணை துவங்கியது.
  • மார்ச் 11: திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்கிய குற்றவாளியான ராம் சிங், துாக்கிட்டு தற்கொலை. மற்ற ஐந்து பேர் மீதான விசாரணை தொடர்ந்தது.
  • ஆக., 31: குற்றம் நிரூபிக்கப்பட்ட மைனர் குற்றவாளிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை.
  • செப்., 3: விரைவு கோர்ட்டில் விசாரணை முடிந்தது; தீர்ப்பு செப்., 10ல் வெளியாகும் என அறிவிப்பு.
  • செப்., 10: இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பு. 13 பிரிவுகளில் இவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டுஉள்ளது.
  • செப்., 11: இரு தரப்பு விசாரணை நிறைவு. தீர்ப்பு செப்., 13க்கு ஒத்திவைப்பு.
  • செப்., 13: குற்றவாளிகளான அக் ஷய் தாகூர், பவன் குப்தா, வினய் சர்மா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் மரண தண்டனை வழங்கி சிறப்பு கோர்ட் தீர்ப்பு.
  • 2014 ஜன., 3: சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.
  • 2014 ஜூன் 2: குற்றவாளிகள் இருவர் இத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு.
  • 2014 ஜூலை 14: குற்றவாளிகளின் துாக்கு தண்டனைக்கு இடைக்கால தடை.
  • 2015 டிச.: மைனர் குற்றவாளியை விடுவிக்கக் கூடாது என பா.ஜ.,வின் சுப்பிரமணியன் சாமி டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு.
  • 2015 டிச., 18: இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இதை தள்ளுபடி செய்தது.
  • டிச., 20: மைனர் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு சிறை தண்டனை முடிந்ததால், விடுதலை.
  • 2016 ஏப்., 3: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை துவக்கம்.
  • 2017 மே 5: நான்கு பேருக்கும் மரண தண்டனை விதித்த டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 05.05.2017

Wednesday, May 3, 2017

பிளஸ் 1, பிளஸ் 2 சேர்க்கையில் பாடப்பிரிவு வாரியாக இட ஒதுக்கீடு

பிளஸ் 1, பிளஸ் 2 சேர்க்கையில் பாடப்பிரிவு வாரியாக இட ஒதுக்கீடு
அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும் பின்பற்ற இயக்குநர் உத்தரவு
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர் சேர்க்கையில் பாடப்பிரிவு வாரியாக இட ஒதுக்கீடு பின்பற் றப்பட வேண்டும் என்று அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அவர் அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:
மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு விதிகள் பாடப்பிரிவுகள் வாரியாக (குரூப் வாரியாக) கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் மேல்நிலைப் பள்ளிகள் அங்கீகாரம் வழங்கும் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இட ஒதுக் கீடு தொடர்பான சட்டங்களின்படி, 2017-18-ம் கல்வி ஆண்டிலும் மேல்நிலைக் கல்விக்கான மாணவர் சேர்க்கையில் மாநில அரசின் அதிகார வரம்புக்குள் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் (சிறுபான்மை பள்ளிகள் தவிர) பின்வரும் விகிதத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்.
பொதுப் பிரிவினர் (ஓசி) - 31 சதவீதம்
பழங்குடியினர் (எஸ்டி) - 1 சதவீதம்
ஆதி திராவிடர் (எஸ்சி) - 18 சதவீதம் (இதில் 3 சதவீதம் அருந்ததியினருக்கு)
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (எம்பிசி, டிஎன்சி) - 20 சதவீதம்பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் - 3.5 சதவீதம்
பிற்படுத்தப்பட்டோர் (பிசி) - 26.5 சதவீதம்
மேற்கண்ட இட ஒதுக்கீடு முறையில், முதலில் பொதுப் பிரிவினருக்கான 31 சதவீத இடத் துக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.
அதில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படை யில் மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
இந்த பட்டியலை ஓசி, பிசி, எம்பிசி என எந்தவித பாகுபாடும் இல்லாமல் தயாரித்து அதன் பின்னர் அந்தந்த பிரிவினருக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.
மாநிலத்தின் அதிகார வரம்புக்குள் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளிலும் (சிறுபான்மை கல்வி நிலையங்கள் நீங்கலாக) பாடப்பிரிவு வாரியாக (Group-wise) இட ஒதுக் கீடு முறை பின்பற்றப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக் கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 04.05.2017

Tuesday, May 2, 2017

தகவலறியும் சட்டம்-தவறான தகவல் தந்த அதிகாரிகள் பணியிடை நீக்கம்

தகவலறியும் சட்டம்-தவறான தகவல் தந்த அதிகாரிகள் பணியிடை நீக்கம்
தகவலறியும் சட்டத்தின் கீழ் தவறான தகவல் தந்த அதிகாரிகள் 3 பேர் பணியிடை நீக்கம்: ரயில்வே நிர்வாகம் அதிரடி
புதுடெல்லி: ரயில்வே கேன்டீன்களுக்கு 100 கிராம் தயிர் ரூ.972-க்கு கொள்முதல் செய்யப்பட்டதாக தகவலறியும் சட்டத்தின் கீழ் தகவல் தந்த விவகாரத்தில் அதிகாரிகள் 3 பேரை ரயில்வே நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. 

ரயில்வே கேன்டீன்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை உயர்ந்து வருவது தொடர்பாக அஜய் போஸ் என்பவர் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய ரயில்வேயிடம் கேள்வியெழுப்பி இருந்தார். 

இதற்கு மத்திய ரயில்வே அளித்த பதிலில் 

100 கிராம் தயிர் ரூ.972, 
1 லிட்டர் சமையல் எண்ணெய் ரூ.1242-க்கும்
1 கிலோ உப்பு ரூ.40-க்கும் வாங்கப்படுவதாக கூறியிருந்தது. 

இது நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட விவரங்களில் தட்டச்சி பிழை இருக்கலாம் என ரயில்வே நிர்வாகம் கூறியிருந்தது. இதனிடையே ரயில்வே உதவி வணிக மேலாளரை பணியிட மாற்றம் செய்த ரயில்வே நிர்வாகம், குடோன் கணக்கு பதிவாளர், சமயல் ஆய்வாளர், தகவலறியும் சட்டத்தின் கீழ் தவறான தகவல் தந்த அதிகாரி ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

நன்றி : தினகரன் நாளிதழ் - 03.05.2017


கண்மாயில் சிறுவன் பலி, கலெக்டருக்கு நோட்டீஸ்!

கண்மாயில் சிறுவன் பலி, கலெக்டருக்கு நோட்டீஸ்!
மதுரை:மதுரை அவனியாபுரம் கண்மாயில் பள்ளி சிறுவன் மூழ்கி பலியானதற்கு இழப்பீடு கோரி தாக்கலான வழக்கில், கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஜெய்ஹிந்த்புரம் பாதுஷா தாக்கல் செய்த மனு:

எனது மகன் முகமது ஷபிர்,10, லட்சுமிபுரம் பகுதி பள்ளியில் 4ம் வகுப்பு படித்தார். பிப்.,18 ல் பள்ளி சென்றார். வீடு திரும்பவில்லை. அவனியாபுரம் கழிவுநீர் கண்மாயில் தவறி விழுந்து இறந்தார். 

எனது மகன் இறப்பிற்கு காரணம், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கண்மாய்தான். அதன் அருகில் அறிவிப்பு பலகை வைக்கவில்லை. வேலி, சுற்றுச்சுவர் அமைக்கவில்லை. அங்கு குப்பைகளை குவித்து வைக்கின்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் மேற்கொள்ளவில்லை. 

எனது மகனின் இறப்பிற்கு தகுந்த இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார்.கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி வி.பார்த்திபன், விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 03.05.2017


Monday, May 1, 2017

போலி ஆவணங்கள் மூலம் உயில் பதிவு

போலி ஆவணங்கள் மூலம் உயில் பதிவு

திருப்பத்தூர்: போலி ஆவணங்கள் கொடுத்து உயிலை பதிவு செய்ய உடந்தையாக இருந்த சார் பதிவாளரை, திருப்பத்தூர் போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த வ.உ.சி., நகரை சேர்ந்தவர் ராஜ்கண்ணு. இவர் மனைவி பச்சையம்மாள். இவர்களது மகன் முரளி. இவருக்கு, இரண்டு மனைவிகள். முதல் மனைவியை பிரிந்து இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். இதனால் தன் மகனுக்கு சொத்துக்களை எழுதி வைக்க, ராஜ்கண்ணு மறுத்து விட்டார். இந்நிலையில், கடந்தாண்டு செப்., 24ல், உடல் நிலை சரியில்லாமல் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் ராஜ்கண்ணு சேர்க்கப்பட்டார். அப்போது சுய நினைவு இல்லாமல் இருந்த ராஜ்கண்ணுவிடம், சொத்துகள் அனைத்தையும், தன் பெயருக்கு தான செட்டில்மெண்ட் வழங்குவதாக முரளி உயில் எழுதி, அதில் கையொப்பம் வாங்கிக் கொண்டார். பின் இந்த உயிலுடன் சில போலி ஆவணங்களை கொடுத்து, திருப்பத்தூர் சப்-ரிஜிஸ்டர் ஆபிசில் அப்போதிருந்த சார் பதிவாளர் கருணாகரன் என்பவர் உதவியோடு, முரளி பதிவு செய்து கொண்டார்.
இந்நிலையில், ராஜ்கண்ணு இறந்து விட்டார். அதன் பிறகு தான் ராஜ்கண்ணுவின் சொத்துகளை, போலி ஆவணங்கள் கொடுத்து பதிவு செய்து, முரளி அபகரித்துக் கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து, திருப்பத்தூர் போலீசில் பச்சையம்மாள் புகார் செய்தார். 
போலீசார் வழக்கு பதிவு செய்து, போலி ஆவணங்கள் கொடுத்த முரளி, 45, திருப்பத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் வேலை செய்த உதவியாளர் சரவணன், 51, பத்திர எழுத்தர் சங்கர், 34, துணை சார் பதிவாளர் லட்சுமணன், 44, சார் பதிவாளர் கருணாகரன், 56, ஆகியோர் மீது, கடந்தாண்டு நவ., 5 ல், வழக்கு பதிவு செய்தனர். இதையறிந்த சார்-பதிவாளர் கருணாகரன் தலைமறைவானார். 
மற்ற, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த கருணாகரனை தேடி வந்தனர். இந்நிலையில் அரக்கோணத்தில் பதுங்கி இருந்த அவரை போலீசார் நேற்று கைது செய்து, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் சிறையில் அடைத்தனர்.

நன்றி : தினமலர்  நாளிதழ் -29.03.2017