disalbe Right click

Thursday, February 22, 2024

காவல்துறை நாட்குறிப்பு பற்றிய முழுமையான தகவல்கள்

காவல்துறை நாட்குறிப்பு பற்றிய முழுமையான தகவல்கள்
காவல் நிலைய நாட்குறிப்பு (Case Diary)
குற்ற விசாரணை முறைச் சட்டம், 1973, பிரிவு 172 ன் விதியின் கீழ், விசாரணை நடத்துகின்ற ஒவ்வொரு காவல்துறை அதிகாரியும் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்பட்ட விசாரணை பற்றிய விபரங்களை அதற்கென்று ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு வழக்கு டைரியில் பதிவு செய்து வர வேண்டும்.
வழக்கு நாட்குறிப்பில் என்னென்ன இருக்க வேண்டும்?
பக்க எண்கள் குறிப்பிடப்பட்டுள்ள ஏட்டில் இது பதிவு செய்யப்படுவது அவசியமானதாகும்., முதல் தகவல் அறிக்கையின் எண்ணை பெற்றிருக்கக்கூடிய பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு பற்றிய தகவல் விசாரணை அதிகாரிக்கு கிடைத்த நேரம் விசாரணை தொடங்கிய மற்றும் முடிக்கப்பட்ட நேரம்விசாரிக்கப்பட்ட நபர்கள்அவர் பார்வையிட்ட இடங்கள், அந்த விசாரணை மூலம் அவரால் கண்டறியப்பட்ட உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள் வழக்கு நாட்குறிப்பில் இருக்க வேண்டும். மேலும்  அந்த  நாட்குறிப்பில் வழக்கு விசாரணையில்   எடுக்கப்பட்ட  உண்மையான நடவடிக்கைகள் விசாரணையின் விவரங்கள் சாட்சிகளின் தற்போதைய மற்றும் நிரந்தர முகவரிகள் தொடர்ந்து பதிவு செய்துவர வேண்டும்.
இதனை யார் யாரெல்லாம் எழுத வேண்டும்?
வழக்குகளை புலனாய்வு செய்கின்ற காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் இதனை எழுதி வர வேண்டும். ஒருவேளை புலனாய்வு செய்கின்றவர் வெளியூரில் இருந்தால், தினந்தோறும் தனது புலன் விசாரணை பற்றிய குறிப்பை, தான் பணிபுரிந்து வருகின்ற நேரம் குறிப்பிட்டு ஒவ்வொரு நாளும் அனுப்பி வைக்க வேண்டும். 
காவல் நிலை ஆணை எண்:567