disalbe Right click

Showing posts with label சான்றிதழ்கள். Show all posts
Showing posts with label சான்றிதழ்கள். Show all posts

Wednesday, March 28, 2018

ஆன்லைன் மூலமாக டிரைவிங் லைசன்ஸ் பெற

இணையத்தின் மூலமாக எத்தனையோ வேலைகளை வீட்டில் இருந்தபடியே நம்மால் சிரமம் இல்லாமல் செய்ய முடிகிறது. வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக நாம் ஓட்டுநர் உரிமம் பெறவும் வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னால் டிஜிலாக்கர் (DigiLocker). பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.  வாருங்கள்.
டிஜிலாக்கர் என்றால் என்ன?  
நமது மத்திய அரசாங்கம் நாம் ஒவ்வொருவருடைய சான்றிதழ்கள், ஆவணங்கள், போட்டோக்கள் ஆகியவற்றை சேமித்து வைத்துக் கொள்ளவும், தேவைப்படுகின்ற போது அதனை எடுத்து பயன்படுத்திக் கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ள லாக்கரின் பெயர்தான் டிஜிலாக்கர். இதனை பயன்படுத்த விரும்புபவர்களுக்கு ஆதார் எண்ணும், செல்போன் எண்ணும் சொந்தமாக இருக்க வேண்டும். அவைகளை பயன்படுத்திதான் இந்த லாக்கரை நாம் பெறவும், பயன்படுத்தவும் முடியும். ஒவ்வொருவருக்கும்  1 GB  சேமிப்பகமானது   டிஜிலாக்கரில்   வழங்கப்படுகிறது.
டிஜிலாக்கரை பயன்படுத்த என்ன செய்ய வேண்டும்?
முதலில் https://digilocker.gov.in/ இணையதளத்தினுள் சென்று உங்களது பெயர் மற்றும் ஆதார் எண்ணை அதற்குரிய இடத்தில் டைப் செய்ய வேண்டும். ஆதார் எண்ணுடன் தாங்கள் ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ள உங்களது செல்போன் எண்ணுக்கு ஒரு One Time Password அனுப்பி வைக்கப்படும். அதனை பயன்படுத்தி நீங்கள் ஒரு அக்கவுண்டை உருவாக்கிக் கொள்ளலாம். ஒருவருக்கு ஒரு அக்கவுண்டுதான் ஓப்பன் செய்ய முடியும். உங்களுக்கு ஏற்கனவே பேஸ்புக் மற்றும் கூகுளில் அக்கவுண்ட் இருந்தால் அதனை வைத்தும்  உங்களது பாஸ்வேர்டை அமைத்துக் கொள்ளலாம்.
தற்போது நமது நாட்டு மக்களுக்கு டிஜிட்டல் ஓட்டுனர் உரிமம் கிடைப்பதற்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகமானது, டிஜிலாகர் உடன் இணைந்து வழிவகுத்துள்ளது. டிஜிலாக்கரின் பயனர்கள் தங்கள் மொபைல் சாதனங்களிலும், கணினிகளிலும் ஆர்.சி. (RC)இன் டிஜிட்டல் வடிவத்தை எளிதாக தற்போது அணுகமுடியும்.
டிஜிட்டல் ஓட்டுனர் உரிமத்தினால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
டிஜிலாக்கர் படி, டிஜிட்டல் ஓட்டுனர் உரிமம், அசல் ஆவணங்களைப் பயன்படுத்துவதைக் குறைக்கும்.
 குடிமக்கள் தரவு மூலத்தில் (Database) ருந்து நேரடியாக நம்பகமான டிஜிட்டல் ஓட்டுநர் உரிமையைப் பகிர்ந்து கொள்ளலாம்.
⧭ டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தை முகவரியின் அடையாளமாகவும், அடையாளத்தின் ஆதாரமாகவும் மற்ற துறைகளோடு பகிர்ந்து கொள்ள முடியும். இதனால் உங்களது சிரமங்கள் குறையும். 
⧭ டிஜிட்டல் ஓட்டுனர் உரிமம் ஆவணத்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் அல்லது மொபைலில் டிஜிலாகர் பயன்பாட்டில் உள்ள QR ஸ்கேன் வசதி மூலம் டிஜிட்டல்  டிரைவிங் லைசன்ஸின் நம்பகத்தன்மையை சோதித்துப்பார்க்க முடியும்
டிஜிலாக்கர் மூலம் டிஜிட்டல் டிரைவிங் லைசன்ஸை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?
⧭ முதலில் தங்கள் ஆதார் அட்டை எண்ணை டிஜிலாகர் கணக்குடன் நீங்கள் இணைக்க வேண்டும்.
⧭ அது முடிந்தவுடன், அவர்கள் Pull Partner Documents  பிரிவில் கிளிக் செய்ய வேண்டும்.
 வழங்குபவர் & ஆவண வகைகளைத் தேர்ந்தெடுத்து ஆவணம் தொடர்பான விவரங்களை உள்ளிட வேண்டும்.
⧭ ஆவணம் தரவுத்தளத்தில் (Database) இருந்து பெறப்படும்.
⧭ இப்போது டிஜிட்டல் ஆவணத்திற்கு ஒரு "நிரந்தர இணைப்பு" (URL) கிடைக்கும்.
இதனை,"Issued Documents" பிரிவின் கீழ் சேமித்துக் கொள்ள வேண்டும்.
*********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 28.03.2018

Friday, March 9, 2018

ஆன்லைன்/இசேவை மையம் மூலமாக சான்றிதழ்கள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், இணைய சேவை மையம் வழியாக பொதுமக்களுக்கு 15 வகையான சான்றிதழ்களை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மின்னாளுமை திட்டத்தின் கீழ் -சேவை மையம் மூலம் பொதுமக்களுக்கு 
💬 சாதிச் சான்றிதழ்
💬 வருமானச் சான்றிதழ்
💬 இருப்பிடச் சான்றிதழ்
💬 முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் 
💬 கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ் 
ஆகிய 5 சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வந்தது. 
தற்போது  
💬 விவசாய வருமானச் சான்றிதழ்
💬 சிறு, குறு விவசாயி சான்றிதழ்
💬 கலப்புத் திருமணச் சான்றிதழ்
💬 விதவைச் சான்றிதழ்
💬 வேலையின்மைச் சான்றிதழ்
💬 குடும்ப குடிப்பெயர்வு சான்றிதழ்
💬 கல்வி ஆவணங்கள் பேரிடரால் தொலைந்தமைக்கான சான்றிதழ்
💬 ஆண் குழந்தை இன்மைச் சான்றிதழ்
💬 திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ்
💬 வாரிசு சான்றிதழ்
💬 செல்வ நிலைச் சான்றிதழ்
💬 அடகு வணிகர் உரிமம்
💬 வட்டிக்குப் பணம் கொடுப்போர் உரிமம்
💬 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ் 
ஆகிய சான்றிதழ்களையும் இந்த வசதி மூலம் பொதுமக்கள் பெறலாம்.
என்ன செய்ய வேண்டும்?
பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள பொதுச்சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கும்போது, அவர்களுக்கு விண்ணப்ப எண்ணுடன் ஒப்புகைச் சீட்டு ஒன்று வழங்கப்படும். இந்த விவரம் அவர்கள் பதிவு செய்துள்ள செல்போனுக்கு  குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்படும். தங்களது விண்ணப்பங்களின் நிலவரத்தை அறிய '155250' என்ற எண்ணுக்கு விண்ணப்ப எண்ணைக் குறிப்பிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ அல்லது இணையதளத்தில் விண்ணப்ப எண்ணை உள்ளீடு செய்தோ பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பித்தவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டு சான்றிதழ் தயாரானதும், விண்ணப்பதாரருக்கு இணையதள முகவரியுடன் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
இந்த குறுஞ்செய்தி கிடைத்தவுடன் விண்ணப்பதாரர் இணையதளத்தில் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்தோ அல்லது அருகிலுள்ள அரசு பொதுச்சேவை மையம் மூலமாகவோ  சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.
********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 10.03.2018 

Sunday, February 25, 2018

சான்றிதழ்களில் இருக்கின்ற தவறுகளைத் திருத்த

மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகின்ற சான்றிதழ்களில் இருக்கின்ற பெயர், பிறந்த நாள், ஜாதி மற்றும் ஏனைய தவறுகளைத் திருத்த விண்ணப்பிக்கப்படுகின்ற விண்ணப்பங்களை எப்படி கையாள வேண்டும்? என்று  மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்கள் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார். அது பற்றிய கடிதத்தை இணையத்திலிருந்து எடுத்து கீழே பதிவிட்டுள்ளேன். படித்து பயன் பெறுங்கள்!
********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 26.02.2018 




நன்றி : முகநூல் நண்பரும், வழக்கறிஞருமான திரு  Counsel Sree

Saturday, February 17, 2018

ஐ.டி.ஐ. சான்றிதழில் திருத்தம்

ஐடிஐ சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தம் செய்து கொள்ளலாம் 
என்று வேலைவாய்ப்பு பயிற்சித் துறை அறிவிப்பு அறிவித்துள்ளது.
கடந்த 2014 ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ஐடிஐ படித்த மானவர்கள், தங்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ்களில் தவறு இருந்தால் அதில் திருத்தம் செய்து கொள்ள தங்களை அணுகலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு 
வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் 2017ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை  ஐடிஐ-யில் சேர்ந்து படித்தவர்களுக்கு சேர்க்கையின்போது வழங்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் மத்திய அரசால் தேர்வு நுழைவுச்சீட்டுகள், மதிப்பெண் சான்றிதழ்கள், தேசிய தொழிற்சான்றிதழ்கள் (National Trade Certificate) ஆகியவை ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன.
அவற்றில் பயிற்சி பெற்ற மாணவர்களின் பெயர், தந்தை பெயர், தாய் பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவை பிழைகளுடன் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தால் அப்பிழைகளை சரிசெய்ய இயலாத நிலை முன்பு இருந்து வந்தது.
பிழைகளை சரிசெய்ய வாய்ப்பு
அந்த பிழைகளைச் சரிசெய்ய மத்திய அரசு தற்போது வாய்ப்பு அளித்துள்ளது. எனவே, இந்த வாய்ப்பை பயிற்சியாளர்கள் பயன்படுத்தி தங்கள் அசல் சான்றிதழ்களுடன் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள அலுவலகத்துக்கு பிப்ரவரி 22-ம் தேதிக்குள் நேரில் சென்று தங்களுடைய பள்ளி கல்விச் சான்றிதழ் மற்றும் உரிய ஆவணங்களைக் காண்பித்து திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்.

1. மண்டல பயிற்சி இணை இயக்குநர்
அரசு ஐடிஐ மாணவர் விடுதி
அழகர்கோயில் மெயின் ரோடு
மதுரை-625007

2. மண்டல பயிற்சி இணை இயக்குநர்
என்ஜிஓபிகாலனி, பெருமாள்புரம்
திருநெல்வேலி 627 007.

3. மண்டல பயிற்சி இணை இயக்குநர்
அரசு ஐடிஐ பின்புறம்
ஜி.என்.மில்ஸ் அஞ்சல்
கோவை 641 029.
4. மண்டல பயிற்சி இணை இயக்குநர்
அரசு ஐடிஐ அடுக்குமாடி கட்டிடம் (முதல் மாடி), 
காஜாமலை
திருச்சி 620 020.

5. மண்டல பயிற்சி இணை இயக்குநர்
அரசு ஐடிஐ பின்புறம்
கிண்டி
சென்னை 600 032.
************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 18.02.2018