disalbe Right click

Monday, October 30, 2017

பட்டா வழங்கவில்லையா? நுகர்வோர் கோர்ட் இருக்கு!

நன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள்
முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து, தனது நிலத்திற்கு, “பட்டா” வாங்குவது மிகவும் சிரமமாகவே உள்ளது.  இது அரசு நமக்கு வழங்குகின்ற கட்டணச்சேவை ஆகும். இதில் குறை இருந்தால் பாதிக்கப்பட்ட எவர் ஒருவரும் நுகர்வோர் கோர்ட்டை தாராளமாக நாடலாம். செலவும் அதிகம் ஆகாது. வழக்கும் சீக்கிரம் முடிவுக்கு வந்துவிடும். வழக்கின் செலவோடு, உங்களுக்கு நஷ்ட ஈடும் வழங்கப்படும். இது சம்பந்தமான தீர்ப்புகளின் நகல்கள் உங்களுக்காக.
*********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி
No automatic alt text available.

Image may contain: text
Image may contain: text
Image may contain: text
No automatic alt text available.
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text

Saturday, October 28, 2017

இனி இ-ஸ்டாம்பிங் பரவலாகும்

இனி -ஸ்டாம்பிங் பரவலாகும்
வீட்டை வாங்குவது, விற்பது, குத்ததைக்கு விடுவது போன்றவற்றில் தொடங்கி வணிக ஒப்பந்தங்கள் வரை எல்லாவற்றிற்கும் அரசுக்கு ஸ்டாம்ப் கட்டணம் செலுத்துவது அவசியம்.ஸ்டாம்ப் பேப்பர் என்ற ஒன்றை நாம் அறிவோம். மேல்பாதி முழுவதும் பிரம்மாண்டமான அளவில் அரசின் இலச்சினையும், அந்தத் தாளின் மதிப்பும் அச்சிடப்பட்டிருக்கும். கீழ்ப்பாதியில்தான் ஒப்பந்த வாசகங்கள் எழுதப்படும்.
சமீபகாலமாக -ஸ்டாம்பிங் என்ற ஒன்று அறிமுகமாகி இருக்கிறது. -மெயில் என்றால் மின்னஞ்சல் என்கிறோம் அல்லவா, அதுபோல -ஸ்டாம்பிங் என்றால் மின்னணு முறையில் ஸ்டாம்ப் கட்டணத்தைச் செலுத்துவது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பழையபடி விற்கப்படும் ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர்களிலும் பத்திரங்கள் நிரப்பலாம், -ஸ்டாம்பிங் முறையிலும் இதைச் செய்யலாம்.
ஏதற்காக இந்தப் புதிய முறை
நமக்கு வசதியாக இருக்கும் என்பதற்காகவா? அதுமட்டுமல்ல, ஆங்காங்கே ஸ்டாம்ப் பத்திரங்கள் அவ்வப்போது கிடைக்காமல் போகும். இதனால் பலவிதச் சங்கடங்கள் உருவாகும். தேவையே இல்லாமல் சிலசமயம் அதிகத் தொகைக்கான ஸ்டாம்ப் பத்திரங்களையும் வாங்க வேண்டி வரலாம். இவையெல்லாம் -ஸ்டாம்பிங்கில் தவிர்க்கப்படுகின்றன.
எல்லாவற்றையும்விட முக்கியமான இன்னொரு காரணமும் உண்டு. முத்திரைத்தாள் மோசடிகள் பரவலாகத் தொடங்கின (ஹர்ஷத் மேத்தா நினைவுக்கு வருகிறாரா?). போலி முத்திரைத்தாள்கள் பயன்படுத்தப்பட்டால் அதனால் அரசுக்குப் பெரும் நஷ்டம். இதைத் தவிர்க்கவும் -ஸ்டாம்பிங் உதவுகிறது.
-ஸ்டாம்பிங் என்பது என்ன?
இதற்காக மத்திய அரசு ‘Stock Holding Corporation of India Limited’ என்ற அமைப்பை நியமித்திருக்கிறது. -ஸ்டாம்பிங்கிற்கான விண்ணப்பங்கள், பதிவுகள் மற்றும் இது தொடர்பான ஆவணங்கள் உள்ள அனைத்தையும் இந்த நிறுவனம்தான் பார்த்துக் கொள்கிறது.
உங்களைப் பொறுத்தவரை பத்திரங்களுக்கு -ஸ்டாம்பிங் செய்யும் முறை இதுதான். முதலில் மாநில அரசு -ஸ்டாம்பிங்கை ஏற்றுக் கொள்கிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். SHCIL என்ற வலைத்தளத்துக்கு நீங்கள் செல்ல வேண்டும். இதன் இணையதள முகவரி www.schcelstamp.com.
ACCயில் (அங்கீகரிக்கப்பட்ட கலெக்ஷன் மையங்கள்) விண்ணப்பங்களைப் பெற்று நிரப்ப வேண்டும். இந்த விண்ணப்பத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரின் பெயர்கள், மின்னணு முறையில் ஸ்டாம்ப் கட்டணம் அளிக்கப்பட்ட தேதி, அந்த ஆவணத்திற்கென்று அளிக்கப்படும் தனிப்பட்ட எண் போன்ற பல விவரங்கள் அடங்கி இருக்கும். ஸ்டாம்ப் தொகையை இணையம் வழியாகச் செலுத்த முடியும். இதற்குக் கடன் அட்டை, பற்று அட்டை, RTGS, NEFT ஆகிய வழிமுறைகளைப் பயன்படுத்தலாம்.
வழக்கமான முறையில் பத்திரத் தாள்களை வாங்கிப் பதிவு செய்வதற்கும் இந்த -ஸ்டாம்பிங் முறைக்கும் கொஞ்சம் அன்னியம் இருக்கலாம். ஆனால் இதில் பல நன்மைகள் உள்ளன. சில நிமிடங்களிலேயே இப்படிச் செலுத்த முடியும். பத்திரத்தாள்கள் நாளடைவில் சிதிலமடையலாம். ஆனால் இந்த -ஸ்டாம்பிங்கின் முறையில் இந்தத் தகவல்கள் SHCIL அமைப்பில் பாதுகாக்கப்படுகின்றன. ஒவ்வொரு -ஸ்டாம்பிங் ஒரு தனி எண் (UNIQUE IDENTIFICATION No) அளிக்கப்படுவதால், உண்மைத் தன்மையை எப்போது வேண்டுமானாலும் சரிபார்த்துக் கொள்ள முடியும்.
ஆனால் -ஸ்டாம்பிங் சான்றிதழ்களைத் தொலைத்து விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நகல் பிரதி வழங்குவதில்லை. இது நாம் பழகிக் கொள்ள வேண்டிய ஒரு முறை. இப்போதைக்கு டெல்லியில் -ஸ்டாம்பிங் முறையில் மட்டுமே ஸ்டாம்ப் கட்டணத்தைச் செலுத்த முடியும். போகப் போக பிற மாநிலங்களிலும் இது கட்டாயமாகலாம்.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 23.10.201

விபத்து காப்பீடு ரூ.15 லட்சம்! உயர்த்த உயர் நீதிமன்றம் உத்தரவு

தனி நபர் விபத்து காப்பீடு ரூ.15 லட்சம்! உயர்த்த உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, வாகன உரிமையாளர்களுக்கான, தனிநபர் விபத்து பாலிசி தொகையை, ஒரு லட்சத்தில் இருந்து, 15 லட்சம் ரூபாயாக உயர்த்தும்படி, காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலுார் மாவட்டம், நெய்வேலியை சேர்ந்தவர், ரஜினி; இவரது இரு சக்கர வாகனத்தை, பாலமுருகன் என்பவர் ஓட்டினார். பின் இருக்கையில், ரஜினி இருந்தார். நெய்வேலி - விருத்தாச்சலம் சாலையில் வாகனம் சென்றபோது, சைக்கிளில் வந்தவர் குறுக்கே புகுந்தார். இதனால், உடனடியாக வாகனத்தை நிறுத்தினார். இதில், பின் இருக்கையில் இருந்த ரஜினி, துாக்கி எறியப்பட்டார்.
பலத்த காயமடைந்த ரஜினி, புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின், சிகிச்சை பலனின்றி இறந்தார். 2011 ஜூனில், சம்பவம் நடந்தது. 60 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு, ரஜினியின் மனைவி மற்றும் குடும்பத்தினர், நெய்வேலி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ௫௧.௩௭ லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், யுனைடெட் இந்தியா நிறுவனம், மேல்முறையீடு செய்தது. மனுவை, நீதிபதிகள் சுப்பையா, ஜெகதீஷ் சந்திரா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது.
யுனைடெட் இந்தியா நிறுவனம் சார்பில், வழக்கறிஞர் எஸ்.அருண்குமார், ''காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது. காப்பீட்டு நிறுவனத்திடம் இழப்பீடு கோர முடியாது. கட்டாய தனிநபர் விபத்து நிவாரண தொகையாக, ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே பெற முடியும்,'' என்றார்.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கைப் பொறுத்தவரை, வாகன உரிமையாளர் இறந்துள்ளார். விபத்தில், வேறு எந்த வாகனங்களுக்கும் சம்பந்தம் இல்லை. அவரது சொந்த வாகனத்தில் இருந்து, கீழே விழுந்து இறந்துள்ளார். மூன்றாம் நபருக்கான இழப்பீடு மற்றும் வாகனத்துக்கான சேத தொகையை தான், காப்பீட்டு நிறுவனம் வழங்க முடியும். எனவே, வாகன உரிமையாளர் இறந்ததற்கு, மோட்டார் வாகன சட்டப்படி, காப்பீட்டு நிறுவனம் பொறுப்பாகாது.
வாகன உரிமையாளர் தான் இறந்துள்ளார்; அவர், மூன்றாம் நபர் அல்ல. இழப்பீடு கோரி, அவரது வாரிசுகள் வழக்கு தொடுப்பது, மோட்டார் வாகன சட்டத்தின் வரம்புக்குள் வராது. அதனால், நெய்வேலி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, ஏற்க முடியாது. அதேநேரத்தில், தனி நபர் விபத்து பாலிசி தொகையாக, ஒரு லட்சம் ரூபாய் பெற, அவரது வாரிசுகளுக்கு உரிமை உள்ளது.
கட்டாய தனி நபர் விபத்து பாலிசியின்படி, வாகன உரிமையாளர் இறந்தால், இரு சக்கர வாகனம் என்றால், ஒரு லட்சம் ரூபாய், நான்கு சக்கர வாகனம் என்றால், இரண்டு லட்சம் ரூபாய், இழப்பீடு தொகையை, அவரது வாரிசுகள் பெறலாம். இந்த திட்டம், 2002 ஆகஸ்ட்டில் அமலுக்கு வந்தது. அதற்கு முன், இந்த இழப்பீட்டு தொகையும் கிடையாது.
கவனக்குறைவு மற்றும் அஜாக்கிரதையால் தான், விபத்து ஏற்படுகிறது. தானாக யாரும் காயத்தை ஏற்படுத்தி கொள்வதில்லை; இறப்பதற்கும் முன்வருவதில்லை. வாகனங்களை ஓட்டும் போது, சிறிய தவறுகள், தடுமாற்றம் காரணங்களால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. உரிமையாளருக்கு ஏற்படும் உயிரிழப்பு, காயங்களால், அவர்களின் வாரிசுகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
தனி நபர் விபத்து பாலிசி திட்டம், 15 ஆண்டுகளுக்கு முன், அமலுக்கு வந்தது. அப்போது, ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது, போதுமானதாக இருந்திருக்கலாம். ௧௫ ஆண்டுகள் கடந்துவிட்டன.
தற்போது, மருத்துவ சிகிச்சை செலவு, எகிறி விட்டது. வாகன விபத்துக்களால் உயிரிழப்பு, படுகாயங்கள் ஏற்படும் போது பாதிக்கப்படுவது, அவர்களின் வாரிசுகளும் தான். அவர்களின் குடும்பமே முடங்கி போய் விடுகிறது.
வாகனம் ஓட்டுபவரின் கவனக்குறைவால் ஏற்படும் விபத்தில், மூன்றாம் நபர் உயிரிழந்தாலோ, படுகாயம் ஏற்பட்டாலோ, அவரது குடும்பத்துக்கு, காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து போதிய இழப்பீடு கிடைக்கும். அதுவே, வாகன உரிமையாளரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டு, உயிரிழந்தாலோ, காயம் அடைந்தாலோ, காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு கிடைக்காது; இது, துரதிருஷ்டவசமானது.
எனவே, அதிகரிக்கும் மருத்துவ சிகிச்சை செலவு, அன்றாட வாழ்க்கை செலவு உயர்வின் அடிப்படையில், கட்டாய தனிநபர் விபத்து பாலிசி தொகையை, 15 லட்சத்துக்கும் குறையாமல் உயர்த்தும்படி, காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்துக்கு உத்தரவிடப்படுகிறது. இதனால், விபத்தில் பாதிக்கப்படும் வாகன உரிமையாளர்களுக்கு உதவியாக இருக்கும்.
வாகன உரிமையாளர் விரும்பினால், கூடுதல் இழப்பீடு தொகை பெற ஏதுவாக, பிரீமியம் தொகையை, அதிகம் செலுத்துவதற்கும் வழி வகை செய்யலாம். இழப்பீட்டு தொகையை உயர்த்துவதற்கு முன், சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குள், இந்த நடவடிக்கைகளை, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் முடிக்க வேண்டும்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை, நெய்வேலி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை பெற, வாரிசுளுக்கு உரிமை உள்ளது.
இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 28.10.2017