disalbe Right click

Showing posts with label பொது நல வழக்கு. Show all posts
Showing posts with label பொது நல வழக்கு. Show all posts

Saturday, February 17, 2018

பொது நல வழக்கில் .........!

ஆதாரம் இல்லாமல் வழக்கு தாக்கல் செய்தால் அபராதம்!

சாதாரண காரணங்களுக்காக எந்தவித ஆதாரமும் இல்லாமல்  பொது நல வழக்குகள் தாக்கல் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த வழக்கு
டிராபிக் ராமசாமி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதியின்றி வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களை அகற்ற உத்தரவிடக் கோரியும், கடமையை செய்யத் தவறும் அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை சட்டப்படி எடுக்க கோரியும்  பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர்கள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, அனைத்து பேனர்களும் அகற்றிவிட்டதாக அரசுத் தரப்பில் அரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 
ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க அனுமதியளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஆளுநர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு அளித்த மனுக்களின் நகல்களை மட்டுமே இணைத்துள்ள மனுதாரர், வேறு எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை என்றும், எந்த சட்டப் பிரிவின் கீழ் எந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடவில்லை என்றும், நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அதிகாரிகள் யார் யார்? என்று அவர்கள் பெயரை தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்து இந்த மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி தள்ளுபடி செய்தனர்.
அபராதம் விதிக்கப்படும்
இதுபோல எந்த ஆதாரங்களும் இல்லாமல்எதிர்காலத்தில் சாதாரண காரணங்களுக்காக  பொதுநல வழக்கு தாக்கல் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 17.02.2018 

Tuesday, February 6, 2018

பொது நல வழக்குத் தொடர்ந்தவருக்கு அபராதம்!

பொது நல வழக்குத் தொடர்ந்தவருக்கு அபராதம்!
குமரி மாவட்டம் கட்டையன்விளையைச் சேர்ந்தவர் தேவராஜ். இவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொது நல வழக்கு  ஒன்றைத் தொடுத்துள்ளார். 
அதற்காக அவர் தாக்கல் செய்த மனுவில், 'நாகர்கோவில் நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. தெரு விளக்குகளும் சரிவர எரிவதில்லை. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குக் காரணமான நாகர்கோவில் நகராட்சி கமிஷனரை இடமாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்' என்று அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போதுநாகர்கோவில் நகராட்சியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நாகர்கோவிலில் புதிய நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்ற பின்பு வருமானம் அதிகரித்துள்ளது. எனவே, மனுதாரர் இந்த வழக்கை உள்நோக்கத்துடன் தாக்கல்செய்துள்ளார் என்று வாதாடியுள்ளார் 
விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்
'கோரிக்கையை பொதுநல மனுவாக தாக்கல் செய்ய முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது
நாகர்கோவில் நகராட்சி கமிஷனர் சிறப்பாகப் பணி புரிந்ததற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உள்நோக்கத்துடன் மனுதாரர் மனுதாக்கல் செய்திருப்பதால், அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்தத் தொகையை மதுரை உயர் நீதிமன்ற சட்ட உதவி மையத்தில் வருகிற 19.02.2018-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்' என்று அறிவித்துள்ளனர்.
********************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 07.02.2018 

Monday, December 4, 2017

வன அலுவலர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு

மேகமலையில் வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள்
மதுரை: தேனி மாவட்டம் மேகமலை சரணாலயத்தில் மரங்கள் வெட்டுதல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கத்தவறிய வனத்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கைகோரி தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பாண்டி தாக்கல் செய்த பொதுநல மனு
தேனி மாவட்டம் மேகமலை வன உயிரின சரணாலயப் பகுதி வைகை ஆறு உற்பத்தியாகும் இடமாகும். இதன் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் பயனடைகின்றன. மேகமலையில் குத்தகைக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் சில நிறுவனங்களின் தேயிலை, காபி எஸ்டேட்கள் உள்ளன. ஆக்கிரமிப்புகளால் மலையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேகமலையில் வன சம்பந்தமில்லாத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசரடி, பொம்மராஜபுரம், மஞ்சனுாத்து, நொச்சி ஓடை, அஞ்சரப்புலி, காந்திகிராமம், வெள்ளிமலை பகுதிகளில் சட்டவிரோதமாக வன நிலத்தை அழித்து, விவசாய நிலமாக மாற்றுகின்றனர். பொம்மராஜபுரம் பகுதியில் பலாப்பழத்தில் விஷம் வைத்து ஏழு சிங்கவால் குரங்குகளை கொன்றுள்ளனர்.
பொம்மராஜபுரம் சிற்றாறு மற்றும் கேரளாவின் பெரியாறு புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள பகுதியில், 100ஆண்டுகள் பழமையான 300 மரங்களை அனுமதியின்றி வெட்டியுள்ளனர். அப்பகுதியில் மூன்று முதல் 4 கி.மீ.,துாரத்திற்கு ரோடு அமைக்கின்றனர். சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க, சிறப்புக்குழுவை தேனி கலெக்டர் அமைத்தார். அக்குழு,'நவீன இயந்திரங்கள் மூலம் சட்டவிரோதமாக 300 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவற்றில் சில மரங்களை தீ வைத்து எரித்துள்ளனர்,' என அறிக்கை சமர்ப்பித்ததுவனத்துறையினருக்கு தெரியாமல் இவ்வாறு நடக்க வாய்ப்பில்லை.
மேகமலையில் 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வனத்தைவிட்டு வெளியேற விருப்பம் தெரிவித்து அரசிடம் மனு அளித்தனர். அவர்களுக்கு தலா 3 சென்ட் நிலம் வழங்கப்படும். வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், தனியார் எஸ்டேட் நிறுவனங்களுக்கு வேலையாட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், வனத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேகமலையின் உயிர்ச்சூழலை ஏற்கனவே இருந்த பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும். மரங்கள்வெட்டுதல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கத் தவறிய மேகமலை சரணாலய வன உயிரின காப்பாளர், உதவி வனப்பாதுகாவலர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு பாண்டி மனு செய்திருந்தார்.
நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஆர்.தாரணி அமர்வு மத்திய, மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகசெயலாளர்கள், மாநில முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், தேனி கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி ஜன.,10 க்கு ஒத்திவைத்தது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 05.12.201