disalbe Right click

Friday, December 30, 2016

புத்தாண்டில் வேலைக்குப் போகலாமா!


புத்தாண்டில் வேலைக்குப் போகலாமா!


இந்த ஆண்டு இந்தியா கண்ட அரசியல் பொருளாதார மாற்றங்களால் 2017-ம் ஆண்டு எப்படி இருக்கப் போகிறது என்கிற ஆவலும் பதற்றமும் அதிகரித்துள்ளது. பண மதிப்பு நீக்க விவகாரமும் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது. 

அதிலும் இந்தியாவில் 80 கோடிக்கும் அதிகமானோர் வேலைக்குச் செல்லும் வயது வரம்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்திய வேலைச் சந்தை எத்தகைய மாற்றங்களைச் சந்திக்கவிருக்கிறது என்பதை அலச வேண்டிய நேரம் இது!

பெண்களுக்கு முதல் இடம்

‘இந்தியாவின் வேலைவாய்ப்பு எதிர்காலம்’ தொடர்பாகக் கிட்டத்தட்ட 2000 நிறுவனத் தலைவர்களிடம் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, சுற்றுலா, சுகாதாரம், உள்கட்டமைப்பு, உற்பத்தி ஆகிய துறைகள் 2017-ல் அதிகப்படி யான வேலை வாய்ப்பை அளிக்கப் போகின்றன எனத் தெரியவந்துள்ளது. 

தொழில்முனைவோருக்கும் பிரகாசமான வாய்ப்புகள் காத்திருப்பதாக அதில் சொல்லப்பட்டுள்ளது. அதிலும் 70 சதவீத நிறுவனங்கள் பெண்களை நியமிக்க உள்ளன. அமைப்புசாராத் தொழில்களில் மட்டுமல்லாமல் பெரிய நிறுவனங்களிலும் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிக்கவிருக்கிறது. வழக்கம்போல டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வாய்ப்புகள் கொழிக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

வங்கி இல்லாமலா!

அதேநேரத்தில் இந்த ஆய்வைத் தாண்டி சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துவது, நிதித் தொழில்நுட்பம் (fin-tech), டிஜிட்டல் கட்டணம் செலுத்துதல் (digital payments), வங்கி உள்ளிட்ட துறைகளில் நிச்சயமாக வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதே. ஆனால், பண மதிப்பு நீக்கத்தால் மிகக் குறைவான சம்பள உயர்வைத்தான் எதிர்பார்க்க முடியும். சம்பளத்தில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் பதவி உயர்வு கிடைப்பதிலும் பின்னடைவு ஏற்படலாம்.

நம்பிக்கை இழக்க வேண்டாம்

மறுபக்கம் அமெரிக்காவில் வேலை செய்யக் கனவு காணும் இந்திய இளைஞர்களுக்கு டிரம்ப் என்ன சொல்லப் போகிறார் என்பதும் கேள்விக்குறியே. அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதையும், வெளிநாட்டினருக்குத் தற்காலிகமாக ஊழியர் அனுமதி விசாவான ஹெச்-1பி வழங்குவதையும் தன்னுடைய அதிபர் தேர்தலுக்கான பரப்புரையிலேயே வன்மையாகக் கண்டித்தார் டிரம்ப். இதன் தாக்கம், வேலை தேடி அமெரிக்கா செல்பவர்களுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள ஐடி நிறுவனங்களிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

ஆனாலும் இந்தியாவில் உள்ள மனிதவளம், தொழில் திறமை நிறைந்த ஊழியர்கள் இங்கே அதிகமாக இருப்பது, குறைந்த சம்பளத்தில் அதிகத் திறமைசாலிகள் கிடைப்பதால் உலகப் பெரு நிறுவனங்கள் இந்தியச் சந்தையை விட்டு வெளியேற மாட்டார்கள். எப்படி இருந்தாலும் தொழில்நுட்பமயமாதலை நோக்கி அரசே நகர்வதால் எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தகவல்தொழில்நுட்பத்தில் தங்களைத் தகவமைத்துக்கொள்வது அவசியம்.

 இத்தகைய பின்னணியில் புதிதாக வேலைக்குச் செல்ல முயற்சிப்பவர்கள் தங்களை எப்படித் தயார்படுத்திக் கொள்வது?

மின்னஞ்சல் எழுதுதல்

ஒரு நிறுவனத்துக்குள் அடி எடுத்து வைப்பதற்கு முன்பாக நாம் யார் என்பதைச் சொல்வது நம்முடைய விண்ணப்பக் கடிதம். இன்று பல நிறுவனங்கள் மின்னஞ்சல் மூலமாகத்தான் தங்களுடைய ஊழியர்களோடும் வேலைக்கு நியமிக்க இருப்பவர்களோடும் தொடர்புகொள்கின்றன. அவ்வாறு நாம் மின்னஞ்சல் எழுதும்போது ‘chat lingo’ எனப்படும் அரட்டை மொழியில் இல்லாமல் வேலைக்கு ஏற்றபடி நேர்த்தியாக எழுத வேண்டும். இல்லையேல் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர் பொறுப்பற்றவர் என்கிற எண்ணம்தான் வேலை வழங்குபவர்களுக்கு ஏற்படும். தெளிவான மொழிநடையில் இலக்கணப் பிழைகள் இல்லாமல் சுருக்கமாக மின்னஞ்சலை எழுதப் பழகுவது அவசியம்.
எம்.எஸ். எக்ஸல் பயன்படுத்துதல்

கணினியை அதிகம் பயன்படுத்துபவர்கள்கூட வெறும் தகவல்களைச் சேமிக்கவும் அட்டவணைகளை வரையவும்தான் எம்.எஸ். எக்ஸலை (MS Excel) பயன்படுத்துவதாக நினைக்கிறார்கள். ஆனால், விரைவில் இந்தப் புரோகிராமிங் முறை அலுவலக வேலைகள் பலவற்றுக்கு இன்றியமையாத ஒன்றாக ஆகிவிடும் எனப் பணிவாழ்க்கை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பட்ஜெட் தாக்கல், நிகழ்ச்சிகளைத் திட்டமிடுதல், சிறிய புராஜெக்ட்களுக்குக் கணிதத் தீர்வுகள் காணுதல் இப்படி வேலை தொடர்பான பல விஷயங்களுக்கு எக்ஸல் பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் அதைப் பயன்படுத்தப் பயிற்சி எடுப்பது நல்லது.

பவர்பாய்ண்ட் பயன்படுத்தலாமே!

ஒரு புதிய திட்டத்தை அனைவரையும் கவரும் விதமாகச் சிறப்பாகச் சமர்ப்பிக்கப் பவர்பாய்ண்ட் பிரசெண்ட்டேஷன் (PowerPoint Presentation) கைகொடுக்கும். கல்லூரி நாட்களிலேயே இதைப் பயன்படுத்தப் பழகுவது நல்லது.

இணையத்தைத் துழாவுதல்

இன்று பெரும்பாலான தகவல்கள் இணையம் மூலமாகவே சேகரிக்கப்படுகின்றன. தேடுபொறியில் எந்த வார்த்தையைத் தட்டச்சு செய்தாலும் கோடிக்கணக்கான தகவல்கள் வந்து குவியும். ஆனால் அவற்றில் எவையெல்லாம் நம்பத் தகுந்தவை, எந்தெந்த வலைத்தளங்களில் சரியான தரவுகள் கிடைக்கும் என்பதைக் கண்டறிய முக்கியச் சொற்களை (keywords) கண்டுப்பிடிக்கப் பயிற்சி அவசியம்.

பணிவாழ்க்கைத் தொடர்பாற்றல்

எல்லாவற்றுக்கும் மேலாக தொடர்பாற்றல் இன்றியமையாதது. நேர்முகத் தேர்வின்போதும் அதன் பிறகு மற்ற பணிச் சூழல் சந்திப்புகளின் போதும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சூழலுக்கு ஏற்பப் பேசவும் நடந்துகொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும். எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் துணிச்சலையும் மாற்றத்துக்கேற்பத் தகவமைத்துக் கொள்வதற்கான தயார்நிலையும் இருந்தால் என்னாளும் வெற்றி நமதே.

ம. சுசித்ரா

 நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 29.12.2016

பாஸ்போர்ட் பெற எளிதாக்கப்பட்ட விதிமுறைகள்:


பாஸ்போர்ட் பெற எளிதாக்கப்பட்ட விதிமுறைகள்: 

மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தகவல்

பாஸ்போர்ட் பெறுவதற்கான விதி முறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதாக மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தெரி வித்துள்ளார்.

இதுகுறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பி.கே.அசோக் பாபு நேற்று சென்னையில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வசிக்கும் மக்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு வசதியாக தற்போது புதுச்சேரியில் மினி பாஸ்போர்ட் சேவா கேந்திரா செயல்பட்டு வருகிறது. இங்கு, தற்போது நாள் ஒன்றுக்கு 100 விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை 3 கட்டமாக மேற்கொள்ளப்படுகிறது.

இதில் 2 கட்ட பரிசீலனை புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்டு 3-ம் கட்ட பரிசீலனை சென்னையில் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரி பாஸ்போர்ட் சேவை மையத்திலேயே 3-ம் கட்ட பரிசீலனையையும் மேற்கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி 2-ம் முதல் இந்த மையம் முழு அளவில் செயல்படும். இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாஸ்போர்ட் பெற சென்னைக்கு வர வேண்டிய அவசி யமில்லை.
பாஸ்போர்ட் பெற சில விதிமுறைகள் கடுமையாக இருந்ததால் பொதுமக்கள் பாஸ்போர்ட் பெற மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, மத்திய வெளி யுறவுத் துறை அமைச்சகம் இந்த விதிமுறைகளை தற்போது எளிமையாக்கி உள்ளது.

இதன்படி, 1989-ம் ஆண்டு அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் எடுக்க பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக இருந்தது. ஆனால், இனி அது தேவையில்லை. அதற்குப் பதிலாக தங்களது பிறந்த தேதி இடம் பெற்றுள்ள பள்ளிச் சான்றிதழ்கள், பான்கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, இன்சூரன்ஸ் பாண்டுகள், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்கலாம்.

அதேபோல், ஒற்றை பெற்றோர் உள்ள குழந்தைகள் மற்றும் தத்து குழந்தைகள் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும்போது தங்களது தந்தை, தாய் அல்லது சட்டபூர்வ பாதுகாவலர்கள் பெயர்களை குறிப்பிடுவதற்குப் பதிலாக ஒரு பெற்றோர் பெயர் மட்டும் குறிப் பிட்டால் போதுமானது.

இதற்காக விண்ணப்பதாரர்கள் அளிக்க வேண்டிய பின்னிணைப்புகளில் (அனெக்சர்ஸ்) முன்பு நோட்டரி பப்ளிக், ஜுடிசியல் மாஜிஸ்திரேட் உள்ளிட்டோரின் சான்று அவசியமாக இருந்தது. இனி, விண் ணப்பதாரரே ஒரு வெள்ளைத் தாளில் ஒரு சுய கையொப்பம் (செல்ப் அட்டெஸ்டட்) இட்டு சமர்ப்பித்தால் போதுமானது.

மேலும், திருமணமானவர்கள் பாஸ்போர்ட் பெற திருமணச் சான்று சமர்ப்பிக்கத் தேவையில்லை. விவாக ரத்து பெற்றவர்கள் தங்களது விவாகரத்து சான்றிதழையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை.

அதற்கு பதிலாக விண்ணப்ப தாரர்களே சுய கையொப்பம் இட்ட சான்றிதழை அளித்தால் போதும். அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்ல தங்களது துறை உயர் அதிகாரிகளிடம் தடையில்லா சான்றிதழ் பெற்று பாஸ்போர்ட் பெறுவது அவசியமாக இருந்தது. இனி அவர்கள் தங்களது துறைக்கு தகவல் மட்டும் தெரிவித்தால் போதுமானது.

பெற்றோரை இழந்து காப்பகத்தில் வசிக்கும் குழந்தைகள் பாஸ்போர்ட் பெற அந்தக் காப்பகத்தின் நிறுவனர் சான்றிதழ் அளித்தால் போதும். அதேபோல், சாதுக்கள், சன்னியாசிகள் பாஸ்போர்ட் பெற தங்களது ஆன்மிக குரு தரும் சான்றிதழ் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பான்கார்டு இவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் நடப்பாண்டில் கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரை புதிய பாஸ்போர்ட் பெறுவதற்காக மொத்தம் 4 லட்சத்து 26 ஆயிரத்து 475 விண்ணப் பங்கள் பெறப்பட்டு, அதில் 4 லட்சத்து 15 ஆயிரத்து 319 பேருக்கு பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அசோக் பாபு கூறினார்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 31.12.2016

மேட் நுழைவுத் தேர்வு - 2017


மேட் நுழைவுத் தேர்வு - 2017


நாட்டின் தலைசிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களில், உங்களுக்கு படிக்க விருப்பமா? உங்களது பதில் ‘ஆம்’ எனில், ‘மேட்’ எனும் மேலாண்மை நுழைவுத் தேர்வை எழுதலாம்!

அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வு, மேனேஜ்மென்ட் ஆப்டிடியூட் டெஸ்ட் (மேட்). இத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மேலாண்மை கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ., அல்லது முதுநிலை டிப்ளமோ படிப்புகளில் சேர்க்கை பெறலாம்.

அகில இந்திய மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் சார்பாக ஆண்டுக்கு நான்கு முறை- பிப்ரவரி, மே, செப்டம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் நடத்தப்படும், இந்த நுழைவுத் தேர்வை, லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதுகின்றனர்.

மாணவர்கள் ஒரு முறை இந்த தேர்வு எழுதிப் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு, ஒரு ஆண்டு வரை பல்வேறு மேலாண்மை கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு எழுத தகுதிகள்

அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், ஏதேனும் ஒரு துறையில், இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு, இளநிலை பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு விவரம் 

தேசிய அளவில் நடைபெறும் இத்தேர்வினை, மாணவர்கள்  தாள் அடிப்படையிலும் (பேப்பர் பேஸ்ட் டெஸ்ட்) அல்லது கணினி அடிப்படையிலும் (கம்ப்யூட்டர் பேஸ்ட் டெஸ்ட்) தங்களது விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்து, எழுதலாம்.

லாங்க்வேஜ் காம்பிரிஹென்சன், மேத்மேட்டிக்கல் ஸ்கில், டேட்டா அனலைசஸ் அன்ட் டேட்டா சவ்பீஸியன்சி, இன்டலிஜென்ஸ் அண்ட் கிரிட்டிக்கல் ரீசனிங், இந்தியன் அன்ட் குளோபல் என்விராண்மெண்ட் ஆகிய ஐந்து பிரிவுகளில், ’அப்ஜெக்டிவ்’ அடிப்படையில், 40  கேள்விகள் வீதம் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.

நுழைவுத் தேர்வு நாள்

காகித அடிப்படையிலான எழுத்துத்தேர்வு - பிப்ரவரி 5

கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு- பிப்ரவரி 11

விண்ணப்பிக்கும் முறை: 

www.apps.aima.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: ஜனவரி 27, 2017

மேலும் விவரங்களுக்கு: www.apps.aima.in

நன்றி : தினமலர் (கல்விமலர்) - 30.12.2016

பணமற்ற பரிவர்த்தனை - புதிய ஆப் அறிமுகம்


பணமற்ற பரிவர்த்தனை - புதிய ஆப் அறிமுகம்

புதுடில்லி: பணமற்ற பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக பாரத் இன்டர்பேஸ் பார் மணி ( பிம்) என்ற புதிய ஆப்சை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துள்ளார்.

ஆண்ட்ராய்டு தளத்தில் கிடைக்கும் இந்த ஆப்ஸ், ஆதார் அட்டையை அடிப்படையாக கொண்டு செயல்படும். ஐஓஎஸ் ( ஆப்பிள்) தளத்திற்கான இந்த ஆப்ஸ் விரைவில் வெளியிடப்படும். இந்த புதிய ஆப்ஸ் மூலம் மக்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் நம்பகத்தன்மையுடன் பணமற்ற பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். இதர யுபிஐ மற்றும் பாங்க் கணக்குகளோடு தொடர்பு கொண்டு இந்த ஆப்சை பயன்படுத்தலாம்.

பிம் ஆப்சை எப்படி டவுன்லோடு செய்யலாம்?

கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள முகவரியில் இந்த ஆப்சை டவுன்லோடு செய்யலாம். https://play.google.com/store/apps/details?id=in.org.npci.upiapp
இந்த பிம் ஆப்சை எப்படி பயன்படுத்துவது?இந்த பிம் ஆப்சை, பிளே ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்தபின், உங்களுடைய பாங்க் கணக்கை இதில் பதிவு செய்து அதற்கான யுபிஐ எண்ணை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பயன்படுத்துபவரின் மொபைல் எண்தான், பயன்படுத்துபவரின் முகவரியாக இருக்கும். இவ்வாறு ஒருமுறை பதிவு செய்து கொண்ட பின் பிம் ஆப்சைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

பிம் ஆப்சைப் பயன்படுத்தி எப்படி பணத்தைப் பெறுவது?பயன்படுத்துபவர், தங்களுடைய மொபைல் எண்ணைப் பயன்படுத்தி, நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நுகர்வோரிடமிருந்து பணத்தைப் பெறலாம்; அவர்களுக்கு பணத்தை அனுப்பலாம். யுபிஐ தொடர்பு இல்லாத பாங்குகளுக்கும் ஐஎப்எஸ்சி எண்ணைப் பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யலாம்
இந்த பிம் ஆப்சை ஏற்கும் பாங்குகள் எவை?

அலகாபாத் பாங்க், 

ஆந்திரா பாங்க், 

ஆக்சிஸ் பாங்க், 

பாங்க் ஆப் பரோடா, 

பாங்க் ஆப் இந்தியா, 

பாங்க் ஆப் மகாராஷ்டிரா, 

கனரா பாங்க், 

கத்தோலிக் சிறியன் பாங்க், 

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, 

டிசிபி பாங்க், 

தேனா பாங்க், 

பெடரல் பாங்க், 

எச்டிஎப்சி பாங்க், 

ஐசிஐசிஐ பாங்க், 

ஐடிபிஐ பாங்க், 

ஐடிஎப்சி பாங்க், 

இந்தியன் பாங்க், 

இந்தியன் ஓவர்சீஸ் பாங்க், 

இந்துஸ் இந்த் பாங்க், 

கர்நாடகா பாங்க், 

கரூர் வைஸ்யா பாங்க், 

கோடக் மகிந்தரா பாங்க், 

ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ்,

 பஞ்சாப் நேஷனல் பாங்க், 

ஆர்பிஎல் பாங்க், 

சவுத் இந்தியன் பாங்க், 

ஸ்டாண்டர்டு சார்ட்டடு பாங்க், 

ஸ்டே்ட பாங்க் ஆப் இந்தியா, 

சிண்டிகேட் பாங்க், 

யூனியன் பாங்க் ஆப் இந்தியா, 

யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, 

விஜயா பாங்க். 

இதர விவரங்கள் பயனீட்டாளர் பணபரிவரி்த்தனை தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். மொபைல் எண் தவிர வழக்கமான பணபரிவர்த்தனை முகவரியையும் உருவாக்கி கொள்ளலாம். கியூஆர் குறியீடு மூலம் எளிதாக பண பரிவர்த்தனை செய்யாலாம். பிம் ஆப்ஸ் இப்போதைக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே செயல்படும். விரைவில் இதர மொழி வசதிகளும் செய்து தரப்படும்.

நன்றி : தினமலர் நாளிதழ் – 30.12.2016

பிறப்பு & இறப்புச் சான்றிதழ்களை பெற புதிய அரசாணை


பிறப்பு & இறப்புச் சான்றிதழ்களை பெற புதிய அரசாணை

பிறப்பு மற்றும் இறப்புகளை ஒவ்வொருவரும் சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகத்தில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.
அஜாகிரதையாக சிலர் பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்யாமல் விட்டுவிடுவார்கள். ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டால், அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்றுதான் அதனை பெற வேண்டிய நிலை இதுவரை இருந்து வந்தது. இதனால், பொதுமக்களுக்கு சிரமமும், நீதிமன்றத்திற்கு அதிக வேலைப்பளுவும் இருந்து வந்தது.
அதனை நீக்கும்விதமாக பிறப்பு மற்றும் இறப்புகளை ஒரு வருடத்திற்கும் மேலாக பதிவு செய்யாமல் விட்டவர்கள் இனி தங்கள் பகுதிக்குட்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அவர்களை அணுகி பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை பெறுவதற்கு உத்தரவு பெறுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Image may contain: text

No automatic alt text available.


தகவல் உதவி: வழக்கறிஞர் பஞ்.ரமேஷ் அவர்கள்
Thursday, December 29, 2016

சுயதொழிலுக்கு வங்கி கடனுதவி பெறுவது எப்படி?


சுயதொழிலுக்கு வங்கி கடனுதவி பெறுவது எப்படி?

புதிதாக சுயதொழில் தொடங்க நினைப்பவர்களுக்குக் கிடைக்கும் வங்கிக் கடனுதவி, மானியம் பற்றிய தகவல்களைக் கூறுகிறார் சென்னை எம்.எஸ்.எம்.இ (MSME- Ministry of Micro, Small & Medium Enterprises) வளர்ச்சி மையத்தின் உதவி இயக்குநரான புனிதவதி.

புதிதாகத் தொழில் தொடங்கும் பெண்களுக்கு புதிதாக இயந்திர தளவாடங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க அரசு மூன்று திட்டங்களில் கடனுதவி வழங்க உதவி செய்வதுடன், அவற்றில் 25 சதவிகித தொகையை மானியமாகவும் வழங்குகிறது.

1. வேலை இல்லாதோருக்கு வேலை உருவாக்கும் திட்டத்தில் அதிகபட்சமாக சர்வீஸ் தொழில்களுக்கு ரூ.3 லட்சமும், உற்பத்தித் தொழில்களுக்கு ரூ.5 லட்சம் வரையும் கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கு மாவட்ட தொழில் மையத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

2. பாரத பிரதமரின் வேலை உருவாக்கும் திட்டத்தில் அதிகபட்சமாக சர்வீஸ் தொழில்களுக்கு ரூ.10 லட்சமும், உற்பத்தித் தொழில்களுக்கு ரூ.25 லட்சம் வரையும் கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு http://bit.ly/2aCchF8 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

3. புதிய சுயதொழில் முனைவோர் வளர்ச்சித் திட்டத்தில் அதிகபட்சமாக சர்வீஸ் மற்றும் உற்பத்தித் தொழில்களுக்கு ரூ.1 கோடி கடனுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 
  
* முதலில் தாங்கள் தேர்ந்தெடுத்த தொழில், தொழிற்சாலை அமைக்கும் இடம், தொழிலை வெற்றிகரமாக நடத்திச்செல்ல திட்டமிட்ட பிளான் உள்ளிட்ட விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, தொழில் தொடங்கவிருக்கும் பகுதிக்கு அருகிலுள்ள வங்கியில் வழங்க வேண்டும். திட்ட அறிக்கையை  வங்கி ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அந்தப் பகுதிக்கு உட்பட்ட மாவட்ட தொழில் மையத்தில் திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் பெற வேண்டும்.

முதல் திட்டத்துக்கு மட்டும் மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம். பின்னர் அம்மையத்தினரால், விண்ணப்பதாரர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார். 

தொடர்ந்து மேற்கண்ட மூன்று திட்டங்களில் உங்களுக்குப் பொருத்தமானதை தேர்வுசெய்து, உங்களுக்கு கடனுதவி செய்யலாம் என நீங்கள் குறிப்பிட்ட வங்கிக்கு சிபாரிசு செய்வார்கள். தொடர்ந்து வங்கியில் கடனுதவி பெறலாம்.

* எம்.எஸ்.எம்.இ டெவலப்மென்ட் இன்ஸ்டிட்யூட் சார்பில் சுயதொழில் செய்வ தற்கான ஒரு நாள், ஒரு வாரத்துக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாகவும் கட்டண முறையிலும் நடத்தப்படுகின்றன. இதில் தாங்கள் தேர்ந்தெடுத்த தொழில், அதை வெற்றிகரமாகச் செய்வது, மார்க்கெட்டிங், லோன் பெறும் வழிமுறைகள் உள்பட சுயதொழில் பயிற்சியாக அளிக்கப்படும். 

குறிப்பாக dcmsme.gov.in இணையதளத்தில் சுயதொழில் தொடர்பான தகவல்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காட்சி நிகழ்வுகள், நடப்பு நிகழ்வுகள் குறித்த செய்திகள் வெளியிடப்படும். உள்நாட்டில், வெளிநாட்டில் நடைபெறும் கண்காட்சிகளுக்கு செல்லும் பெண் சுயதொழில் முனைவோர்களுக்கு அவர்களுக்கு ஆகும் பயணச் செலவில் 80-100 சதவிகிதத்தொகை மானியமாகக் கொடுக்கப்படுகிறது. 

பெண்கள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை mahilaehaat-rmk.gov.in என்ற இணையதளத்தில் இலவசமாக டிஸ்ப்ளே செய்யலாம்.

* சுயதொழில் செய்ய நினைப்பவர்கள் தங்களுக்கான துறையை சரியாகத் தேர்தெடுத்து தங்களால் தொடர்ந்து செய்ய முடியுமா என பலமுறை யோசித்து, அதற்கு ஏதாவது தடை இருந்தால் சரிசெய்ய வேண்டும். பின்னர் தாங்கள் தயாரிக்க உள்ள பொருளின் தேவை, போட்டியாளர்கள், அதனை எந்த வழிகளில் விற்பனை செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதுபோன்ற பல விஷயங்களை ஆராய்ந்த பிறகே, புதிய தொழிலைத் தொடங்க வேண்டும். உற்பத்திப் பொருளை சிறிய அளவில் அக்கம்பக்கத்தினருக்கு விற்பனை செய்து பார்த்தாலே, சாதக பாதக அம்சங்கள் ஓரளவு தெரிந்துவிடும். 

பின்னர் அதனை மெருகூட்டி, மேம்படுத்தி தொழில் தொடங் கலாம். சுயதொழில் செய்யும் பலருக்கும் மார்க் கெட்டிங் பற்றிய விழிப்பு உணர்வு குறைவாக இருக்கிறது. தரமான பொருளை உற்பத்தி செய்து விற்கத் தெரியாமல் இருப்பவர்களும், மட்டமான பொருளை உற்பத்தி செய்து நன்றாக மார்க்கெட்டிங் செய்பவர்களும் கூட இருக்கிறார்கள். நம் பொருள் தரமாக இருப்பதுடன் அதனை எந்தெந்த வழிகளில் எல்லாம் விற்பனை செய்ய முடியுமோ, அந்த யுக்திகளைக் கையாளுவது பலன் கொடுக்கும். 

பணம் கொடுத்து மீடியாக்களில் விளம்பரம் செய்வது ஒரு ரகம். தரமான பொருட்களை விற்பனை செய்வதால் ஒரு வாடிக்கையாளர் மூலமாக அடுத்தடுத்த வாடிக்கையாளர்கள் கிடைப்பது மற்றொரு ரகம். 

கால மாற்றத்துக்கு ஏற்ப நம் பொருட்களை மதிப்புக்கூட்டல் செய்து விற்பனை செய்வதும் அவசியத்தேவை.

* சுயதொழில் தொடங்கும் முன்பு ஆயிரம் முறை யோசிக்கலாம். ஆனால், தொடங்கிய வுடன் ஒருமுறை முறைகூட நெகடிவாக யோசிக்கக் கூடாது. சுயதொழில் செய்தால் ஏற்ற இறக்கம் கட்டாயம் வரும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். 

ஒருவேளை நஷ்டம் ஏற்பட்டாலும் அதனை தைரியமாக எதிர்கொண்டு மீண்டும் லாபத்தை நோக்கிய பாதையில் செல்ல வேண்டும்” என நம்பிக்கையோடு கூறுகிறார் புனிதவதி.

நன்றி : அவள் விகடன் - 10.01.2017

Wednesday, December 28, 2016

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம்


ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் 


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அதிமுக பிரமுகர் ஜோசப் தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் வரும் ஜனவரி 9-ம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் அடுக்கடுக்கான சந்தேகம் உள்ளதால் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டுமென அதிமுக தொண்டர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 27-ம் தேதியன்று மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) உயர் நீதிமன்றத்தில் விடுமுறைகால நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது, ஜனவரி 9- க்குள் இதுதொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.

நீதிபதியின் கேள்வி:

இன்றைய வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமார சுவாமி, "ஜெயலலிதா மாரடைப்பு காரணமாகவே இறந்தார். அவருக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும், அவரை காப்பாற்ற முடியவில்லை. அவரது மரணத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இதற்கு முன்னர் இதே கோரிக்கையை முன்வைத்து டிராபிக் ராமசாமி, பிரவீனா ஆகியோர் தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்துவிட்டது. எனவே இந்த வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்றார்.

அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், "தேவைப்பட்டால் இந்த வழக்கில் நோட்டீஸ் பெற்று அதற்கு விளக்கமளிக்க அரசு தயாராக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன், "நீதிபதி என்பதை தாண்டியும் ஒரு சாதாரண குடிமகனாக தனிப்பட்ட முறையில் இந்த வழக்கில் எனக்கு அக்கறை இருக்கிறது.

ஜெயலலிதா நலமுடன் இருப்பதாகவே அவர் உடல்நலன் விசாரித்துவந்த அனைவரும் கூறினார்கள். மத்திய அமைச்சர்கள்கூட இதையே சொன்னார்கள். ஆனால் அவர் திடீரென இறந்தார். அவரது மரணம் குறித்து மத்திய அரசு, எய்ம்ஸ் மருத்துவர்கள் மவுனம் காப்பது ஏன்? ஆளுநர்கூட ஜெயலலிதா உடல்நலனை விசாரித்து வந்தாரே.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்த வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நடைமுறைகளை மேற்கோள் காட்டிய நீதிபதி ஜெயலலிதாவின் மரணத்தில் அத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு உள்ளதா?

மக்களின் அபிமானம் பெற்றவர்களின் மரணம் நிகழும்போது அதைச்சுற்றி சில சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. ஆனால், அத்தகைய சந்தேகத்தைப் போக்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை.

எனவே, ஜனவரி 9- க்குள் இதுதொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

"ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகும்கூட அவரது மரணம் தொடர்பான சந்தேகங்களைப் போக்க மாநில அரசு எதுவும் செய்யவில்லை. மர்மங்களை விலக்க அவரது உடலைத் தோண்டி எடுக்க வேண்டுமா?" என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மனுவின் விவரம்:

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த பி.ஏ.ஜோசப் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "நான் அதிமுக தொண்டன். அடிப்படை உறுப்பினர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளன. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

ஜெயலலிதா உடல்நலம் முன்னேற்றமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகமும் அறிக்கை மூலம் கூறி வந்தது. இதற்கிடையே ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த வதந்தியை பரப்பியதாக 43 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். எல்லா தகவல்களும் ஜெயலலிதா நன்றாக உள்ளார். விரைவில் வீடு திரும்புவார் என்றே கூறின. இதை உறுதி செய்யும் விதமாக பிரதாப் சி.ரெட்டியும் ஜெயலலிதாவின் உறுப்புகள் சரியாக செயல்படுகின்றன.

இதனால் அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவதாக கூறினார். இந்நிலையில் திடீரென டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக எய்ம்ஸ் மருத்துவர்கள், அவர் நன்றாக இருப்பதாக பேட்டி அளித்தனர். டிசம்பர் 5-ம் தேதி மாலை ஜெயலலிதா இறந்து விட்டதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என அப்போலோ மருத்துவமனை நிர்வாகமும் அறிக்கை வெளியிட்டது.

ஆனால் அன்றிரவு 11.30 மணிக்கு அவர் இறந்து விட்டார் என மற்றொரு அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் ஏராளமான குளறுபடிகள் உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் என்னைப் போன்ற சாதாரண மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஜெயலலிதா இறந்து விட்டார் என்று அறிவிப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்கிறார். ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது அவருடைய கால்கள் அகற்றப்பட்டுள்ளது, அவரது உடல் பதப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. பொதுவாக இறந்து அதிக நாட்களான உடலுக்குத் தான் இதுபோன்ற பதப்படுத்தும் பணிகள் செய்வது வழக்கம்.

டிசம்பர் 5-ம் தேதி இரவு இறந்த அவரது உடல் மறுநாளே அடக்கம் செய்யப்பட்டபோது எதற்காக பதப்படுத்த வேண்டும்?. அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதி தேர்தலுக்கு கைரேகை பெறும்போது அவர் சுயநினைவோடு தான் இருந்தாரா? எதற்காக இறப்பதை அறிவிக்கும் முன்பாக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்க வேண்டும்? என அடுக்கடுக்கான சந்தேகங்கள் எழுந்துள்ளது.

ஏற்கனவே, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்த வழக்கில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுபோல மிகப்பெரிய மக்கள் தலைவரான ஜெயலலிதாவின் மரணத்திலும் பல சந்தேகங்கள் உள்ளதால், இதுதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஆவணங்களை பாதுகாக்க வேண்டும். அதுவரை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடலை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்.

மரணம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் விடுமுறைகால நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. ஜனவரி 9- க்குள் இதுதொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவு.

ஆர்.பாலசரவணக் குமார்

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 29.12.2016

லஞ்சம் வாங்கிய டி.எஸ்.பி. கைது


லஞ்சம் வாங்கிய டி.எஸ்.பி. கைது

வழக்கு விரைவாக விசாரிப்பு, ரூ.50 ஆயிரம் லஞ்சம், டிஎஸ்பி கைது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நடவடிக்கை


வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதி யைச் சேர்ந்தவர் எம்.எஸ்.குமரேசன். இவரது மனைவி சுஜாதா பெயரில் அரப்பாக்கத்தில் 7, 548 சதுரடி நிலம் உள்ளது. இந்த நிலத்தை விற்றுத் தருமாறு ஆற்காட்டைச் சேர்ந்த அஜய் என்பவருக்கு சுஜாதா பவர் பட்டா எழுதிக் கொடுத்துள்ளார். அதன்படி, அந்த நிலத்தை விற்ற அஜய், நிலத்துக்குரிய பணத்தை சுஜாதாவிடம் கொடுக்கவில்லை.

இதையறிந்த குமரேசன் நிலத்துக் கான பணத்தை அஜய்யிடம் கேட் டுள்ளனர். பணத்தை கொடுக்க மறுத்த அஜய் தம்பதியை மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, வேலூரில் உள்ள நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் சுஜாதா புகார் செய்தார். அதன்பேரில், அஜய் உள்ளிட்ட 5 பேர் மீது கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி போலீஸார் வழக் குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் அஜய்யை மட்டும் போலீஸார் கைது செய்தனர்.

இதற்கிடையில், இந்த வழக்கை விரைவாக விசாரணை நடத்தி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு போலீஸாரிடம் குமரேசன் கேட்டுள் ளார். அதற்கு, ரூ.5 லட்சம் பணம் கொடுத்தால் விரைவாக விசாரிப்ப தாக துணை காவல் கண்காணிப் பாளர் உஸ்மான் அலிகான் தெரிவித் துள்ளார்.

ரூ.3.50 லட்சம் பணத்தைக் கொடுக்க ஒப்புக்கொண்ட குமரேசன், வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார். அவரிடம், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை போலீஸார் கொடுத்தனுப்பினர். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் உஸ்மான் அலிகான் நேற்று அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டார்.

சிறிது நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் லஞ்சம் வாங்கிய வழக்கில் உஸ்மான் அலிகானை கைது செய்தனர்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 28.12.2016

Monday, December 26, 2016

பினாமி சொத்து வைத்திருந்தால் 7 வருடங்கள் சிறை!


பினாமி சொத்து வைத்திருந்தால் 7 வருடங்கள் சிறை!

பினாமி சொத்து வைத்திருந்தால் 7 ஆண்டுகள் சிறை; சொத்து பறிமுதல்: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்
பினாமி சொத்து வைத்திருப் போருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அத்துடன் அந்த சொத்தும் பறிமுதல் செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பு நீக்கம் என்ற அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து நேற்று முன் தினம் ‘மன் கி பாத்’ (மனதில் குரல்) வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 1988-ல் கொண்டு வரப்பட்ட பினாமி சொத்து பரிவர்த்தனை தடைச் சட்டம் கடுமையான திருத் தங்களுடன் விரைவில் அமல்படுத் தப்படும் என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து வருமான வரித் துறை உயரதிகாரிகள் கூறியதாவது:

பணமதிப்பு நீக்க நடவடிக்கை யின் அடுத்த கட்டமாக சந்தேகப் படும்படியான ரியல் எஸ்டேட் சொத்துகளையும் அரசு கண் காணிக்க வேண்டும் என எதிர்பார்த் தோம். அதற்கு ஏற்றபடி பிரதமர் நரேந்திர மோடியும் கடுமையான விதிகளுடன் பினாமி சொத்து பரிவர்த்தனை தடைச் சட்டத்தை அமல்படுத்தப் போவதாக தெரி வித்துள்ளார். எனவே கடந்த ஜூலை வரை தாக்கல் செய்யப் பட்ட வருமான வரி கணக்கின் அடிப்படையிலும், வங்கி பரி வர்த்தனைகள் அடிப்படையிலும் சந்தேகப்படும்படியான ரியல் எஸ்டேட் சொத்துகள் பற்றிய தக வல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்தச் சூழலில் பினாமி சொத்து பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் அடிப்படையில் பினாமி சொத்து வைத்திருப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். அத்துடன் அந்த சொத்தும் பறிமுதல் செய்யப்படும்.

தற்போதைய கணக்கெடுப்பின் படி ஒவ்வொரு நகரத்திலும் 5 முதல் 10 சதவீத ரியல் எஸ் டேட் நிலங்கள் வரி ஏய்ப்பு செய்பவர்களால் வாங்கப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 27.12.2016

பிரச்சனையா? உதவிக்கு அழையுங்கள்!


பிரச்சனையா? உதவிக்கு அழையுங்கள்!


மாறிவரும் சூழலில் பெண் குழந்தைகள் மீதும், பெண்கள் மீதும் திட்டமிட்டும் எதிர்பாராமலும் நடக்கும் வன்முறைகளை நாம் காணவோ அல்லது கேள்விப்படவோ செய்யலாம். அப்படியான சமயங்களில் உதவ நினைத்தாலும் எப்படி உதவுவது... யாரை அணுகுவது என்ற ஐயம் அனைவருக்கும் எழலாம். அப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்காக சில  அமைப்புகள் சென்னையில் இயங்கி வருகின்றன. மகளிருக்காக அவசர உதவி, ஆலோசனை, பாதுகாப்பான தங்குமிடம், சட்ட உதவி, மருத்துவ உதவி மற்றும் மனநல ஆலோசனை போன்றவற்றை வழங்கி வருகின்றனர். அவற்றின் தொடர்பு எண்கள்:

பெண்களுக்கான அவசர உதவி - 1091.

குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 (சைல்டு லைன்).

ஆஷ்ரயா (ஆந்திர மகிளா சபா) 044-24642566.

கலைச்செல்வி கருணாலயா சமூக நல மையம் 044-26257779, 044-26254956.

மெட்ராஸ் கிறிஸ்டியன் கவுன்சில் ஆஃப் சோசியல் சர்வீஸ் 044-26703246, 044-26700744, 044-26705486.

பி.சி.வி.சி. 044-43111143, 1800-102-7282 (toll free).

சகோதரி 044-25321737

மகேஸ்வரி
நன்றி : தினகரன் நாளிதழ் – 23.12.2016


பி.டெக் முடித்தால் நேரடியாக பி.ஹெச்.டி படிக்கலாம்!

ஐ.ஐ.டி.,யில் விதிகள் தளர்வு

இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகளில், முதுநிலை பட்டப்படிப்பு முடித்த பின், பிஎச்.டி., படிக்க வேண்டும்.

அதற்கு, முதுநிலை படித்த பின், ’நெட்’ என்ற தேசிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பில் சேர்க்கப்படுவர்.ஆனால், ஐ.ஐ.டி.,க்களில், பிஎச்.டி., படிப்போர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பேராசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதை சமாளிக்க, திறமையான மாணவர்களை நேரடியாக, பிஎச்.டி.,யில் சேர்க்க, ஐ.ஐ.டி., நிர்வாகத்திற்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக, ஐ.ஐ.டி., கவுன்சில் கூடி, பிஎச்.டி., விதிகளை மாற்றியுள்ளது.

இதன்படி, ஐ.ஐ.டி.,யில் பி.டெக்., படிக்கும் மாணவர்கள், 8.5 தர மதிப்பெண் பெற்றால் போதும். மாதம், 60 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையுடன், ஐ.ஐ.டி.,யில், பிஎச்.டி., படிப்பில் நேரடியாக சேர்க்க, ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் – 26.12.2016ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு ஒரு வார கால அவகாசம்

ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பு, நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஒரு வாரமே அவகாசம் உள்ளது.

ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - தஞ்சையிலுள்ள இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், சென்னையில் உள்ள காலணிகள் தயாரிப்பு தொழில் நுட்ப கல்லுாரி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, இந்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், திருச்சி என்.ஐ.டி., போன்றவற்றில் சேர, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தும், ஜே.இ.இ., மெயின் நுழைவு தேர்வுக்கு, டிச., 1 முதல், ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்படுகிறது. தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜன., 2ல், விண்ணப்ப பதிவு முடிகிறது.

இந்த ஆண்டு, ஜே.இ.இ., மெயின் தேர்வுக்கு, ஆதார் எண் கட்டாயம். மேலும், பிளஸ் 2 தேர்வில், குறைந்த பட்சம், 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தேர்வுக்கு பின், இந்த மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

நன்றி : தினமலர் நாளிதழ் – 26.12.2016

நவீன வசதிகள் ஏதுமின்றி பணபரிவர்த்தனை


நவீன வசதிகள் ஏதுமின்றி பணபரிவர்த்தனை


புதுடில்லி:'டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனையை வேகப்படுத்தும் விதமாக, ஆதார் எண்ணுடன் இணைந்த எளிமையான புதிய, 'ஆப்' இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம், 'ஸ்மார்ட் போன்' உட்பட, நவீன வசதிகள் ஏதும் இல்லாமல், வர்த்தகர்களின் கணக்கில் பணம் செலுத்த முடியும். 

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், சில்லரை பணமில்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மக்கள், வங்கிகள், ஏ.டிஎம்.,களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது; வர்த்தக நடவடிக்கையும் முடங்கி வருகிறது. 

எனவே மக்கள், ரொக்கமின்றி டிஜிட்டல் முறை யில் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதை ஊக்குவிக்கும் பொருட்டு, சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன; கட்டணங்களும் குறைக்கப்பட்டு வருகின்றன. 

இருப்பினும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்ய, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இ - வாலட் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய, 'ஸ்மார்ட் போன்' தேவைப்படுகிறது.ஏராளமான மக்களிடம் இந்த வசதி இல்லாததால், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதில் சிக்கல்நீடிக்கிறது. இதற்கு தீர்வாக, இவை எதுவும் இல்லாமல் டிஜிட் டல் முறையில் பணப் பரிவர்த் தனை செய்ய புதிய வசதி உருவாக்கப்பட்டு உள்ளது. 

'ஆதார் பேமென்ட் ஆப்' என்ற பெயரில், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட, 'ஆப்' உருவாக்கப் பட்டு உள்ளது; இது, இன்று அறிமுகம் செய்யப்படு கிறது. இதை, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் உருவாக்கி உள்ளது.

இதுகுறித்து அதன் நிர்வாக இயக்குனர் அஜய் பூஷண் கூறியதாவது:

நாட்டில் தற்போது, 40 கோடி வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிட்டது. 2017 மார்ச் சில், மீதமுள்ள வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் முழுமையாக இணைக்கப்பட்டுவிடும். எனவே, ஆதார் எண் மூலம் வங்கி கணக்கில் இருந்து வர்த்தகருக்கு பணம் செலுத்த இந்த வசதி பயன்படும்.

இதன் மூலம் எந்த ஒரு வசதியுமின்றி, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். வர்த்தகர் களும், 2,000 ரூபாய் செலவில், கைரேகை அடை யாள இயந்திரம் மட்டும் வாங்கினால் போதும், வாடிக்கையாளர் கணக்கில் இருந்து எளிதில் பணம்பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

எப்படி செயல்படுகிறது?

இந்த முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய, வர்த்தகர்களிடம் மட்டும் மொபைல் போன் இருந் தால் போதும்; பொதுமக்களுக்கு தேவை யில்லை. அதில், இந்த, 'ஆப்'பை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் கை ரேகை பதிவு இயந்திரத்தை இணைக்க வேண்டும்.

வாடிக்கையாளர், தன் ஆதார் எண்ணை தந்து கைரேகையை பதிவு செய்தால், அவர் வங்கி கணக்கில் இருந்து வர்த்தகரின் வங்கி கணக் கிற்கு பணம் சென்று விடும்; வங்கி கணக்கு, 'பாஸ்வேர்டாக' கைரேகை பயன்படுத்தப்படும். எனவே, வாடிக்கை யாளரிடம் மொபைல் போன் இல்லாமலேயே அவரது வங்கி கணக் கில் இருந்து வர்த்தகரின் வங்கி கணக்கிற்கு எளிமையாக பணம் செலுத்த முடியும்.

'ஸ்வைப்பிங் மிஷின்' தீவிரம்

'டிஜிட்டல்' முறை பணப் பரிமாற்றத்திற்கு உதவும் வகையில், 'பாயின்ட் ஆப் சேல் மிஷின்' எனப்படும் 'ஸ்வைப்பிங் மிஷின்கள்' தயாரிப்பை விரைவுபடுத்தும் படி, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, 15 லட்சம் இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன; இதில், பாரத ஸ்டேட் வங்கி, 3 லட்சம் இயந்தி ரங்களை உருவாக்கி வருகிறது.

நன்றி : தினமலர் நாளிதழ் – 24.12.2016

Saturday, December 24, 2016

ஒரே பரிவர்த்தனையில் 2 லட்சம்


ஒரே பரிவர்த்தனையில் 2 லட்சம்

ரூ.2 லட்சம் ரொக்க பரிவர்த்தனை: வருமான வரித்துறை புதிய அறிவிப்பு

வர்த்தகர்கள் ரூ.2 லட்சத்துக்கும் மேல் ரொக்கத்தின் மூலமாக வர்த்தகம் செய்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது.

வருமான வரி விதிகள் 1962-ல் விதி 114-இ குறித்து பல்வேறு சந் தேகங்கள் வருமான வரித்துறைக்கு அனுப்பப்பட்டன. 

அதிலும் குறிப்பாக ஒரே பரிவர்த்தனையில் 2 லட்ச ரூபாய் மேல் வர்த்தகம் செய்தால் அந்த விவரத்தை வருமான வரித்துறைக்கு சமர்பிக்க வேண்டுமா என்பது போன்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

இந்த சந்தேகங்களை தெளிவு படுத்தும் வகையில் மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் (சிபிடிடி) அறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ளது. ``விதி 114, உட்பிரிவு 3-ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

நிதிப் பரிவர்த்தனைகள் அறிக் கையை சமர்பிக்கும் போது ஒரே பரிவர்த்தனையில் 2 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் செய்தால் அதற்குரிய ரசீதை சமர்பிக்க வேண்டும்’’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : 'தி இந்து' தமிழ் நாளிதழ் – 24.12.2016

வேட்பு மனுவில் தவறான தகவல் வழக்கு


வேட்பு மனுவில் தவறான தகவல் வழக்கு 
கேஜ்ரிவாலுக்கு ஜாமீன்
தேர்தல் வேட்பு மனுவில் தவறான தகவல் கொடுத்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட அர்விந்த் கேஜ்ரிவால், தனது மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சரியான முகவரியை மறைத்துள்ளார். அத்துடன் தன்னுடைய வீட்டின் உண்மையான சந்தை மதிப்பை குறைத்து குறிப்பிட்டுள்ளார். உள்நோக்கத்துடன் திட்டமிட்டே பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்களை கொடுத்துள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தன்னார்வ தொண்டு நிறுவனமான மவுலிக் பாரத் அறக்கட்டளை டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு கேஜ்ரிவால் சார்பில் வழக்கறிஞர் ரிஷிகேஷ் குமார் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று மாஜிஸ்திரேட் ஆசிஷ் குப்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் ஆஜரானார்.

அப்போது நீதிபதி கூறும் போது, ‘‘தவறான முகவரி கொடுத் தது, வீட்டின் மதிப்பை குறைத்து காட்டியது ஆகியவை வேண்டு மென்றே மறைப்பதாகும். எனவே, இந்த வழக்கில் விசாரணை நடத்த போதுமான முகாந்திரம் இருக்கிறது’’ என்று தெரிவித்தார். 

எனினும், ரூ.10 ஆயிரம் பிணைத்தொகையை செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று கேஜ்ரிவாலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணை ஏப்ரல் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நன்றி :'தி இந்து' தமிழ் நாளிதழ் – 25.12.2016

தந்தையின் கைரேகை - மோசடியாக பயன்படுத்திய மகன்


தந்தையின் கைரேகை -  மோசடியாக பயன்படுத்திய மகன்

தந்தையின் கைரேகையை மோசடியாக பயன்படுத்தி ரூ.2 கோடி மதிப்பு நிலம் சுருட்டிய மகன் கைது

சென்னை: சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் சுமிதா (40). இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை மத்திய குற்றப் பிரிவு  போலீசில் ஒரு புகார் அளித்தார். 

அதில் ‘எனது தந்தை பிச்சைமணி சென்னை, தேனி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் ரியல் எஸ்டேட்  தொழில் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 2015 அக்டோபர் 9ம் தேதி புற்று நோயால் பாதிக்கப்பட்டு அடையாரில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். எனது தாய் மாரியம்மாள். எனக்கு ஆதிலட்சுமி, விஜயலட்சுமி  என்ற 2 சகோதரிகளும், சக்திகுமார் என்ற சகோதரனும் உள்ளனர். 

இந்நிலையில், எனது அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்த நேரத்தில் அவரது கைரேகையை பதிவு செய்து போலி  ஆவணங்கள் தயாரித்து ரூ.2 கோடி மதிப்புள்ள எனது தந்தையின் சொத்துக்களை எனது தாயும், சகோதரனும் அபகரித்துள்ளனர். 

இதற்கு  நீலாங்கரை சார்பதிவாளர் தாமு என்பவரும் ஆறுமுகம் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளனர். எனவே, சட்ட விரோதமாக எனது  தந்தையின் சொத்துக்களை அபகரித்த தாய் மாரியம்மாள், சகோதரன் சக்திகுமார், ஆறுமுகம், நீலாங்கரை சார் பதிவாளர் எம்.ஜி.தாமு ஆகியார்  மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். 

இந்த புகார் மனுவுடன், கடந்த 2015ம் அக்டோபர் 9ம் தேதி தான் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்கான ஆவணங்களின் நகலையும்  சுமிதா போலீசாரிடம் வழங்கினார். மேலும், அந்த ஆவணங்கள் பதிவு செய்த நாளில் பிச்சைமணி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு  சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பதற்கான ஆதாரத்தையும் வைத்துள்ளார். 

ஆனால், முறையான ஆவணங்கள்  சமர்ப்பிக்கப்பட்டு இருந்தும் போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. 

இதையடுத்து, சுமிதா உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யக்கோரி மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் புகாரின்  அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. 

அதன்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் சக்திகுமார், மாரியம்மாள், ஆறுமுகம்,  நீலாங்கரை சார்பதிவாளர் தாமு ஆகியோர் மீது மோசடி, கூட்டுசதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நேற்றுமுன்தினம் சக்திகுமார்,  ஆறுமுகம் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

நன்றி :தினகரன் – 25.12.2016

போலீஸில் புகார் அளித்தால் SMS


போலீஸில் புகார் அளித்தால் SMS
காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார் குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகளை, அவர்கள் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் தெரிந்து கொள்ளும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக காவல் துறையின் குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

காவல் நிலையங்களில் பல்வேறு பிரச்னைகள் குறித்து புகார் செய்யும் பொதுமக்களின் கால விரையத்தை குறைப்பதற்கு தமிழக காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக காவல் நிலையங்களில் பொதுமக்கள் புகார் அளித்தால், அந்தப் புகார் குறித்து எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து, அவர்களது செல்லிடபேசிக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த குறுஞ்செய்தி TNPOL என்ற பெயரில் சம்பந்தப்பட்ட புகார்தாரருக்கு அனுப்பப்படும்.

காவல் நிலையங்களில் புகார் பதிவு செய்யப்பட்ட பின்னர், அந்தப் புகாருக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, வழக்குகளின் சி.எஸ்.ஆர்., எப்.ஐ.ஆர்., குற்றப்பத்திரிக்கை என ஒவ்வொரு நிலை குறித்தும் புகார்தாரரின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

இந்த குறுஞ்செய்தி இப்போது ஆங்கிலத்தில் மட்டும் அனுப்பப்படுகிறது. விரைவில் தமிழிலும் அனுப்புவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி : தினமணி நாளிதழ் - 24.12.2016

Friday, December 23, 2016

பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்று தேவையில்லை


பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்று தேவையில்லை

  • 1989 ஜனவரி 26-ம் தேதிக்குப் பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் பெற பிறப்புச் சான்றிதழ் கட்டாய மில்லை.

  •  அதற்குப் பதிலாக பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழ், பான் அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, எல்ஐசி பாலிசி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அளிக்கலாம்.

  • திருமணமானவர்கள் தங்களது திருமண சான்றிதழை விண்ணப்பத்தின்போது அளிக்க தேவை யில்லை. 

  • சாதுக்கள் தங்கள் பெற் றோரின் பெயருக்கு பதிலாக குருவின் பெயரை விண்ணப்பத்தில் குறிப்பிடலாம்.

  • அடையாள அட்டை, தடையில்லா சான்றிதழ் பெற முடியாத அரசு ஊழியர்கள், தங்கள் அலுவலக பரிந்துரை கடிதத்துடன் சுய சான்றை இணைத்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்! 


என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது

தி இந்து தமிழ் நாளிதழ் - 24.12.2016.