பொது தகவல் அலுவலர்களுக்கு ஏற்படும் பணிச்சுமை!
தகவல் அறியும் உரிமை சட்டம் - பொது தகவல் அலுவலரின் கவனத்திற்கு....ஒரு பொது தகவல் அலுவலரின் ஆதங்கம்
- இந்த தகவல் அறியும் உரிமை சட்டம் வந்த பிறகு ஏராளமான மனுக்கள் வருகின்றது.
- அந்த மனுக்களை எனக்கு கீழே பணிபுரிபவர்களிடம் கொடுத்து அதற்கான தகவலை வழங்க கோருகின்றேன்.
- அவர்கள் பல நேரங்களில் தாமதமாக எனக்கு தகவலை வழங்குவதால், அதன் அடிப்படையில் மனுதாரருக்கு பதில் எழுத கால தாமதம் ஆகிவிடுகின்றது.
- அதற்குள் மனுதாரர் மேல் முறையீடு செய்துவிடுகின்றார். சில நேரங்களில் சரியான தகவல்களை எனக்கு கீழே பணிபுரிபவர்கள் வழங்காததால், தகவல் ஆணைய விசராணைக்கு நான்தான் செல்ல வேண்டியதுள்ளது.
- விசாரணையின்போது, அந்த தகவல் சார்ந்த அனைத்து விஷயங்களும் முழுமையாக தெரியாததால் பல நேரங்களில் மனுதாரர் வைக்கும் வாதங்களுக்கு என்னால் ஆணையர் முன்பு முறையான எதிர் வாதங்களை வைக்கமுடிவதில்லை,
- இதற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை?
- தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பிரிவு 5(1) கீழ்கண்டவாறு கூறுகின்றது
- “பொது அதிகார அமைப்பு ஒவ்வொன்றும், இந்தச் சட்டத்தின்படி தகவலினைக் கோருகிறவர்களுக்குத் தகவலினை அளிக்க, அனைத்து நிர்வாகப்பிரிவுகளிலும் அல்லது அதன் கீழுள்ள அலுவலகங்களிலும் தேவைப்படுகின்ற எண்ணிக்கையிலான அலுவலர்களை இந்த சட்டத்தின்படி பதவியமர்த்த வேண்டும. (ஆங்கிலத்தில்.... designate as many officers’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது)
- ஒரு அலுவலகத்தில் ஒரு பொது தகவல் அலுவலர்தான் இருக்க வேண்டும் என்று அந்த சட்டத்தில் எங்கும் சொல்லப்படவில்லை.
- ஆகவே, பெரிய அலுவலகங்களில் பொது தகவல் அலுவலரின் பணிச்சுமையை குறைக்க, அந்த அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு துறைக்கும் அல்லது பிரிவிற்கும் ஒரு பொது தகவல் அலுவலரை நியமிக்கலாம்.
- உதாரணமாக ஒரு பிரிவிற்கான கண்காணிப்பாளரை, அல்லது நிர்வாக அதிகாரியை அந்த பிரிவு சார்ந்த தகவல்களை வழங்க பொது தகவல் அலுவலராக நியமித்து விடலாம்.
- இந்த வகையில் சட்டத்தின் வாயிலாக பெறப்பட்ட மனுக்களை அந்த அலுவலகத்தில் இலகுவாக கையாளலாம்.
- அந்த பிரிவை சார்ந்த கண்காணிப்பாளரானவர் பொது தகவல் அலுவலராக நியமிக்கப்படும்போது, அந்த மனுக்களை பைசல் செய்ய அவருக்கு தனிப்பொறுப்பு வந்துவிடும்.
- இதனால் மனுக்களுக்கு விரைவாக பதில் அளிக்கபட வாய்ப்புண்டு.
- மேலும் தகவல் ஆணைய விசாரணையில் அவருக்கு அவரது பிரிவை சார்ந்த புரிதல் இருப்பதால், ஆணைய விசாரணையை சிறப்பாக எதிர்கொள்ள முடியும்.
- இந்த முறையில்தான் தமிழக அரசின் செயலகத்தில் உள்ள பல துறைகளானது, அவர்கள் துறையிலேயே பல பொது தகவல் அலுவலர்களை கொண்டுள்ளது.
- ஒரே அலுவலகத்ததில் பல பொது தகவல் அலுவலர்களை நியமிக்க சட்டத்தில் இடம் இருக்கும்போது, அவ்வாறு நியமித்தால் மட்டுமே, பொது தகவல் அலுவலர்களின் வேலைப்பழுவை குறைக்கலாம்.