disalbe Right click

Showing posts with label பி.எஃப். Show all posts
Showing posts with label பி.எஃப். Show all posts

Tuesday, May 18, 2021

உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி?

UAN என்றால் என்ன? 
உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி?

UAN என்றால் என்ன? உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி?
மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாக பிஎஃப் என அழைக்கப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டம் உள்ளது.
  • பிஎஃப் கணக்கில் ஊழியர்கள் சம்பளத்திலிருந்து 12 சதவீதமும், நிறுவனம் சார்பில் 12 சதவீதமும் பங்களிப்பாக செலுத்தப்படும்.
  • இந்த பிஎஃப் கணக்கில் செலுத்தப்படும் தொகையின் பேலன்ஸ் என்ன என அறிந்துக்கொள்ள UAN (Universal Account Number) என் முக்கியமான ஒன்றாக உள்ளது.
  • பொதுவாக UAN மாத சம்பளத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
அப்படியில்லை என்றால் பிஎஃப் எண், ஆதார் அல்லது பான் எண்ணை பயன்படுத்தி UAN எண்ணை கண்டறிவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
  • 1. ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் உறுப்பினர்கள் சேவை வழங்கும் https://unifiedportal-mem.epfindia.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  • 2. மேலே குறிப்பிட்டுள்ள இணைய பக்கத்திற்கு சென்று வலது பக்கம் உள்ள Know Your UAN Status என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • 3. Know Your UAN என்ற பக்கத்திற்கு சென்ற உடன் பிஎஃப் எண், ஆதார் எண் அல்லது பான் எண் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை க்ளிக் செய்து, பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், captcha போன்ற விவரங்களை அளிக்க வேண்டும்.
  • 4. பின்னர் Get Authorization Pin என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • 5. அடுத்த பக்கத்தில் I Agree என்பதை தேர்வு செய்து மொபைல் எண்ணிற்கு OTP அனுப்புக என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • 6. OTP எண்ணை பதிவிட்டு ‘சரிபார்க்கவும் (Validate)’ என்பதை கிளிக் செய்வதன் மூலம் UAN மற்றும் அதற்கான கடவுச்சொல்லும் எஸ்எம்எஸ் மூலம் மொபைல் எண்ணிற்கு வந்து சேரும். அதைப் பயன்படுத்தி பிஎஃப் கணக்கு குறித்த விவரங்கள் மற்றும் பேலன்ஸ் என்ன என்பது குறித்த விவரங்களை சரிபார்க்க முடியும்.
  • நன்றி : நியூஸ் 18 சானல் - 15.04.2019
    https://tamil.news18.com/.../what-is-my-uan-how-to-find...


 

Saturday, February 22, 2020

பென்சன்தாரர்கள் லைப் சான்றிதழை சமர்ப்பிக்க

பென்சன்தாரர்கள் லைப் சான்றிதழை சமர்ப்பிக்க......
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பகத்தின் (EPFO - Employees' Provident Fund Organisation)  கீழ் பென்சன் பெறுகின்ற ஓய்வு பெற்ற தொழிலாளர்கள், தாங்கள் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழை அந்த அமைப்பின் அலுவலகத்தில் ஒவ்வொரு வருடமும் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பென்சன் தொடர்ந்து வழங்கப்படும்.
இதற்கு முன் இருந்த நடைமுறை என்ன?
இதற்கு முன்பு பென்சன்தாரர்கள் ஒவ்வொரு வருடத்திலும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் லைப் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்ஒருவேளை லைப் சான்றிதழ் அவ்வாறு சமர்ப்பிக்க தவறியவர்களுக்கு அதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஓய்வூதிய தொகை நிறுத்தப்பட்டுவிடும்
பென்சன்தாரர்கள் ஆன்லைனில் லைப் சான்றிதழ் அளிக்கும் வசதி
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பகத்தின் கீழ் பென்சன்தாரர்கள், ஆன்லைன் மூலமாக லைப் சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை அவர்கள் அந்த ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம். சமர்ப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து அடுத்த ஓராண்டு வரை இந்த சான்றிதழ், செல்லும்.
தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய நடைமுறையால் பென்சன்தாரர்கள் லைப் சான்றிதழ் சமர்ப்பிக்க நவம்பர் மாதத்திற்காக காத்திருக்க வேண்டியதில்லை. தங்களுக்கு வசதியான மாதத்தில் அல்லது நாளில் சான்றிதழை சமர்பிக்கலாம். ஒருமுறை சமர்ப்பிக்கும் சான்றிதழானது அடுத்த 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும்.
டிஜிட்டல் சான்றிதழ் முறை, கடந்த 2015-16 ம் நிதியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் பென்சன்தாரர்கள் பயோமெட்ரிக் முறையில், அவர்களின் ஆதார் எண் சரிபார்க்கப்பட்ட பிறகு, அதனை பயன்படுத்தி சான்றிதழை சமர்பிக்கலாம் என்ற வசதி ஏற்பட்டது.
ஆன்லைனில் லைப் சான்றிதழ் சமர்ப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
பென்சன்தாரர்கள் தங்களது லைப் சான்றிதழை வங்கி மேனேஜரின் கையொப்பம் அல்லது கெஜட்டட் அதிகாரியின் கையொப்பம் அடங்கிய சான்றிதழை நேரடியாக சென்று அளிப்பதற்கு பதிலாக, எந்த ஒரு இபிஎப்ஓ எலுவலகத்திலும் அல்லது பென்சன் வழங்கப்படும் வங்கியிலும், UMANG ஆப் மூலமாக இதனை சமர்பிக்கலாம். .மேலும், பொது சேவை மையங்களிலும் இதனை சமர்பிக்கலாம்.
வேறு ஆவணங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டுமா?
லைப் சான்றிதழை சமர்பிப்பதற்கு இபிஎப்ஓ அலுவலகத்திற்கு எந்த ஒரு ஆவணத்தையும் பென்சன்தாரர்கள் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. அவர்களது ஆதார் எண், பென்சன் பேமன்ட் ஆர்டர் எண், வங்கி விபரம், மொபைல் எண் இருந்தாலே போதும். அவர்களது விபரங்கள் பயோமெட்ரிக் முறையில் சரிபார்க்கப்படும். அதன் மூலம் டிஜிட்டல் லைப் சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்படும்.


Monday, April 15, 2019

UAN என்றால் என்ன?

UAN என்றால் என்ன? உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி?
மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாக பிஎஃப் என அழைக்கப் படும் வருங்கால வைப்பு நிதி திட்டம் உள்ளது.
பிஎஃப் கணக்கில் ஊழியர்கள் சம்பளத்திலிருந்து 12 சதவீதமும், நிறுவனம் சார்பில் 12 சதவீதமும் பங்களிப்பாக செலுத்தப்படும். இந்த பிஎஃப் கணக்கில் செலுத்தப்படும் தொகையின் பேலன்ஸ் என்ன என அறிந்துக்கொள்ள UAN (Universal Account Number) என் முக்கியமான ஒன்றாக உள்ளது.
பொதுவாக UAN மாத சம்பளத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கும். அப்படியில்லை என்றால் பிஎஃப் எண், ஆதார் அல்லது பான் எண்ணை பயன்படுத்தி UAN எண்ணை கண்டறிவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
1. ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் உறுப்பினர்கள் சேவை வழங்கும் https://unifiedportal-mem.epfindia.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
2. மேலே குறிப்பிட்டுள்ள இணைய பக்கத்திற்கு சென்று வலது பக்கம் உள்ள Know Your UAN Status என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
3. Know Your UAN என்ற பக்கத்திற்கு சென்ற உடன் பிஎஃப் எண், ஆதார் எண் அல்லது பான் எண் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை க்ளிக் செய்து, பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், captcha போன்ற விவரங்களை அளிக்க வேண்டும்.
4. பின்னர் Get Authorization Pin என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
5. அடுத்த பக்கத்தில் I Agree என்பதை தேர்வு செய்து மொபைல் எண்ணிற்கு OTP அனுப்புக என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
6. OTP எண்ணை பதிவிட்டுசரிபார்க்கவும் (Validate)’ என்பதை கிளிக் செய்வதன் மூலம் UAN மற்றும் அதற்கான கடவுச்சொல்லும் எஸ்எம்எஸ் மூலம் மொபைல் எண்ணிற்கு வந்து சேரும். அதைப் பயன்படுத்தி பிஎஃப் கணக்கு குறித்த விவரங்கள் மற்றும் பேலன்ஸ் என்ன என்பது குறித்த விவரங்களை சரிபார்க்க முடியும்.
நன்றி : Tamil News Online - News18 Tamil - 15.04.2019