disalbe Right click

Sunday, December 31, 2017

பதிவு துறையில், 'சமாதான் திட்டம்' அறிவிப்பு

பதிவு துறையில், 'சமாதான் திட்டம்' அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்: ஐந்து லட்சம் பத்திரங்களுக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதிவுத்துறையினுடைய வழிகாட்டி மதிப்பு குளறுபடியால்ஐந்து லட்சம் பத்திரங்கங்களுக்கு மேலாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்குத் தீர்வு காண, ஜன., 3ல், 'சமாதான் திட்டம்' நடைமுறைக்கு வர இருக்கிறது.
பொதுவாக சொத்து பரிமாற்ற பத்திரங்களை, அந்தந்த பகுதிகளுக்குரிய வழிகாட்டி மதிப்பு அடிப்படையில், சார்பதிவாளர் அலுவலகத்தில் நாம் பதிவு செய்ய வேண்டும். அந்த வழிகாட்டு மதிப்பீட்டின்படியேமுத்திரைத் தீர்வை, பதிவு கட்டணம் ஆகியவை   முடிவு  செய்யப்படுகின்றனஆனால், அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்பை விட, குறைந்த மதிப்புக்கு, சிலர் பத்திரங்களை வாங்கி பதிவு செய்வதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.  எனவே, பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட குறைந்த மதிப்புக்கு உரிய காரணத்தை உறுதி செய்ய, பதிவு சட்டம், 47 - மற்றும், 19 - பி ஆகிய பிரிவுகளின் படி, மாவட்ட வருவாய் அலுவலரின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு விசாரணைக்கு அனுப்பப்படும். இவ்வாறு அனுப்பப்படுகின்ற பத்திரங்கள், நீண்ட காலமாக நிலுவையில் போடப்படுவதால், சொத்து வாங்கியோருக்கு, பத்திரம் கிடைக்காமல் போனது. இது போன்று நிலுவையில் உள்ள பத்திரங்கள் ஐந்து லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.  இதனால் பதிவுத்துறைக்கும், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 
சமாதான் திட்டம்
மதிப்பு வேறுபாடு காரணமாக, மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணையில் நிலுவையில் உள்ள பத்திரங்களுக்கு தீர்வு காண, பதிவுத்துறை, 'சமாதான்' திட்டத்தை அறிவித்துள்ளது.
மாநில பதிவுத்துறைத் தலைவர், குமரகுருபரன் அவர்கள் பிறப்பித்த உத்தரவு:
💥முத்திரைத்தாள் பிரிவுக்கான, மாவட்ட வருவாய் அலுவலரின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு, 2017 ஜூன், 8 நிலவரப்படி நிலுவையில் உள்ள பத்திரங்கள், சமாதான் திட்டத்துக்கு தகுதி  பெறும்
💥  கூடுதல் பதிவு கட்டணமாக  முத்திரை தீர்வையில், மூன்றில் இரண்டு பங்கு தொகையை  சம்பந்தப்பட்ட  பத்திரத்திற்கு உரிமையாளர்கள்  செலுத்தினால் போதும்
💥   இத்திட்டம், ஜன., 3ல் துவங்கி, ஏப்., 2 வரை,  தொடர்ந்து மூன்று மாதங்கள் அமலில் இருக்கும்.
💥 இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு பொதுமக்கள், சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர்களை நேரடியாக அணுக வேண்டும். சந்தேகம் ஏதேனும் இருந்தால், மாவட்ட பதிவாளர்கள், பதிவுத்துறை, டி..ஜி.,க்கள், பதிவுத்துறை தலைவர் ஆகியோர்களின் அலுவலகத்தை அணுகலாம்இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 01.01.2018 

பெண் கல்வி உதவித்தொகை

Universal Grants Commission என்று சொல்லப்படக்கூடிய பல்கலைக்கழக மானியக்குழு உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பல உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. அவற்றில்

பெண் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், குடும்பத்தில் ஒற்றை பெண் குழந்தைகளுக்கு, யு.ஜி.சி., வழங்கும் கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு  இந்த ஆண்டில் முதுநிலை பட்டப்படிப்பில் சேர்ந்துள்ள மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பெறுவதற்கான தகுதி என்ன?
மத்திய, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் அறிவுரைப்படி,  பல்கலைக் கழக மானியக்குழு, 2005 --- 06ம் ஆண்டு முதல், குடும்பத்தில் ஒற்றை பெண் குழந்தையாக இருந்து, முதுநிலை படிப்பில் சேரும் மாணவியருக்கு, இந்திரா காந்தி கல்வி உதவித் தொகையினை  வழங்கி வருகிறது.
இந்தத்திட்டத்தில், தகுதியுள்ள மாணவிகள் மாதம், 3,100 ரூபாய் வீதம், 20 மாதங்கள் தொடர்ச்சியாக உதவித்தொகை பெறலாம்தொலைதுாரக் கல்வித் திட்டத்தில் பயிலும் மாணவிகளுக்கு, இந்த உதவித்தொகை வழங்கப்படாது. தொழிற்கல்வி அல்லாத படிப்பில் சேரும் மாணவியரே இதற்கு தகுதியானவர்கள். வரும்31.01.2018  தேதிக்குள், ’ஆன் - லைன்மூலமாக  விண்ணப்பங்கள் உரிய ஆவண நகல்களுடன் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
இம்மாத இறுதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இம்மாதம் இறுதி (31.01.2018) வரை மட்டுமே கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்குண்டான விபரங்களைக் காண www.ugc.ac.in என்ற இணையதளம் செல்லவும்.
************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 01.01.2018 

வழக்கறிஞர்கள் அடையாள அட்டை


நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் இனி 'வக்காலத்து' படிவத்துடன், புகைப்படத்துடன் கூடிய தங்களின் அடையாள அட்டை நகலையும்,  தாக்கல் செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, வைத்தியநாதன் அவர்கள் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், நீதிமன்ற பதிவுத்துறை கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளது
இந்த உத்தரவு, 02.01.2018 முதல் அமலுக்கு வருகிறது.
💬 வக்காலத்து படிவத்துடன், வழக்கறிஞரின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகலை வழக்கறிஞர்கள் அனைவரும் தாக்கல் செய்ய வேண்டும்.
💬 அடையாள அட்டை இல்லாதவர்கள், பார் கவுன்சிலில் இருந்து பெற வேண்டும். புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகல் இல்லாமல், இனி வழக்கறிஞர்களின் வக்காலத்து படிவம் ஏற்கப்படாது.
💬வக்காலத்து படிவத்தை, சான்றொப்பம் செய்யும் வழக்கறிஞர்களின் அடையாள அட்டை நகலையும், தாக்கல் செய்ய வேண்டும்
💬  இருப்பிட முகவரியுடன், படிவத்தை தாக்கல் செய்யும் வழக்கறிஞர் மற்றும் சான்றொப்பம் செய்யும் வழக்கறிஞர் ஆகியோர்களின் அலுவலக முகவரியையும் அளிக்க வேண்டும்
💬 குற்றவியல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் மனுக்களில், வழக்கறிஞரின்  பார் கவுன்சில் பதிவு எண்ணை குறிப்பிட்டு, அனைத்து பக்கங்களிலும் கையெழுத்து இட வேண்டும். இதில் சந்தேகம் ஏதேனும் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள், சரிபார்த்து கொள்ளலாம்
💬 அடையாள அட்டையை சரிபார்க்க, நீதிமன்றம் அல்லது பதிவுத்துறை கோரினால், அசல் அடையாள அட்டையை, வழக்கறிஞர்கள் அளிக்க வேண்டும்உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல், ஆர்.சக்திவேல்,  அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 31.12.2017