disalbe Right click

Showing posts with label கண். Show all posts
Showing posts with label கண். Show all posts

Tuesday, April 18, 2017

அடர்த்தியான புருவங்களை பெற சில டிப்ஸ்


அடர்த்தியான புருவங்களை பெற சில டிப்ஸ்

புருவம் மெலிதாக இருந்தால் கண்கள் எவ்வளவு அழகாய் இருந்தாலும் எடுபடாது. அடர்த்தியான புருவமும் இமையும் சிறிய கண்களையும் அழகாய் காண்பிக்கும். அடர்த்தியான புருவம் பெற இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்தி பாருங்கள். ஏதோ ஒரு நாள் செய்து இன்னொரு நாள் செய்யாவிட்டால் எதுவுமே பலனளிக்காது. தொடர்த்து செய்யும்போது மட்டுமே எதுவும் பலன் தரும். ஆகவே விடாமல் செய்து பாருங்கள் மிக விரைவில் உங்கள் புருவம் அடர்த்தியாக மாறும்.
பால் :
மிக எளிதில் கிடைக்கக் கூடியது. ஒரு பஞ்சினால் பாலில் நனைத்து புருவத்தின் மீது தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவவும். பாலிலுள்ள வே புரோட்டின்மற்றும் கேசின் புருவ வளர்ச்சியை தூண்டும்.
கற்றாழை :
கற்றாழையின் சதைப் பகுதியை எடுத்து புருவத்தில் த்டவ வேண்டும். காய்ந்ததும் கழுவுங்கள். கற்றாழையிலிள்ள அலோனின் என்ற பொருள் கெரட்டின் போன்றது. முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.
பெட்ரோலியம் ஜெல்லி :
பெட்ரோலியம் ஜெல்லியை தினமும் இரௌ தூங்குவதற்கு புருவத்தின் மீது தடவி வர வேண்டும். இதிலுள்ள ஈரத்தன்மை புருவத்திற்கு தகுந்த ஈரப்பசையை அளித்து முடி உதிராமல் காக்கும். அடர்த்தியான புருவம் வரும் வர உபயோகப்படுத்துங்கள்.
முட்டை மஞ்சள் கரு :
முட்டையிலுள்ள மஞ்சள் கருவை நன்றாக அடித்து க்ரீம் போல் செய்து கொள்ளுங்கள். ஒரு பிரஷினால் அதனை புருவத்தின் மீது தடவ வேண்டும். 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். மஞ்சள் கருவில் பையோடின் உள்ளது. இது முடி வளர்ச்சிக்கு தேவையான கெரோட்டின் உற்பத்திக்கு உதவுகிறது.
வெங்காய சாறு :
வெங்காய சாற்றை ஒரு நாள் விட்டு ஒரு நாள் புருவத்தில் தடவி வாருங்கள். வெங்காயத்தில் சல்ஃபர்”, “செலினியம்அதிகம் உள்ளது. இவை கூந்தலின் வேர்க்கால்களுக்கு பலம் அளிக்கும். இதனால் உதிராத பலமான புருவம் கிடைக்கும்.
விளக்கெண்ணெய் :
விளக்கெண்ணயை தினமும் கண்ணிமை மற்றும் புருவத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் விரைவில் அடர்த்தியான புருவம் கிடைக்கும். இது பழமையான குறிப்பாக இருந்தாலும் மிகவும் நல்ல பலனளிக்கக் கூடியது.
நன்றி : தினகரன் நாளிதழ் - 12.04.2017 

கான்டாக்ட் லென்ஸ் - சந்தேகங்கள், பதில்கள்


கான்டாக்ட் லென்ஸ் - சந்தேகங்கள், பதில்கள்
பார்வை தெளிவாக இருக்க வேண்டும்; ஆனால், மூக்கு கண்ணாடி வேண்டாம், லேஸர் சிகிச்சையும் வேண்டாம்என்று நினைப்பவர்களுக்கான சரியான தேர்வு கான்டாக்ட் லென்ஸ். கான்டாக்ட் லென்ஸ் யார் அணியலாம், எந்த நேரங்களில் அணியலாம் என்பது உள்பட எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கிறார் கண்சிகிச்சை மருத்துவர் அமர் அகர்வால்.
யார் அணியலாம்?
கிட்டப்பார்வை, தூரப்பார்வை, மங்கலான பார்வை மற்றும் அருகில் உள்ள பொருட்களை சிரமத்துடன் பார்த்தல் போன்ற அனைத்து பார்வை குறைபாடுகளையும் சரிசெய்ய கான்டாக்ட் லென்ஸ் அணியலாம்.
கான்டாக்ட் லென்ஸில் எத்தனை வகைகள் உள்ளன?
கான்டாக் லென்ஸ் அணிய முடிவு செய்தவர்களின் முதல் தேர்வாக இருக்கும் சாஃப்ட் கான்டாக்ட் லென்ஸ்களை(Soft Contact lens) நாள், வாரம், மாதம் என்ற குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றிக்கொள்ளலாம். மங்கலான பார்வை உள்ளவர்களுக்கு ஏற்றது நீண்ட காலம் உழைக்கக்கூடிய கேஸ் பெர்மிபல் லென்ஸ்(Gas permeable lens). இதேபோல், கண்களின் நிறத்தை மாற்றிக்கொள்ளும் வகையில் கலர் கான்டாக்ட் லென்ஸ்களும் இருக்கின்றன.
கான்டாக்ட் லென்ஸில் வடிவங்கள் இருக்கின்றனவா?

கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை உள்ளவர்களுக்கு உருண்டை வடிவ லென்ஸ்கள் உள்ளன. மங்கலான பார்வையை சரிப்படுத்தக்கூடிய டோரிக் லென்ஸ்கள் மற்றும் முதுமையின் காரணமாக பார்வை குறைபாடு ஏற்படுபவர்கள் அணியக்கூடிய மல்ட்டி போகல்லென்ஸ்களும் இருக்கின்றன.
எந்த நேரங்களில் அணியலாம்?
தினந்தோறும் அணியும் லென்ஸ்களை ஒவ்வொரு நாள் இரவிலும் கழற்றி வைத்துக் கொள்ளவேண்டும். நீடித்த நாட்களுக்கு லென்ஸ்களை அணிவோர் எத்தனை இரவுகள் லென்ஸ்களை அணிந்து தூங்கலாம் என்பதை கண்சிகிச்சை மருத்துவரின் ஆலோசனை பெற்று அணியலாம்.
கான்டாக் லென்ஸ் அணிவதால் தொற்று ஏற்படும் என்கிறார்களே
கான்டாக்ட் லென்ஸ் இன்றைய இளைஞர்களுக்கு சரியான தேர்வாக இருந்தாலும், சரியாகப் பராமரிக்காவிட்டால் கண் தொற்று வருவதோடு விழிப்படலத்தில் பாதிப்பு ஏற்பட்டு பார்வை இழப்பும் கூட நேரிடலாம். லென்ஸ் அணிந்துகொண்டே தூங்குவது, அடிக்கடி லென்ஸ்களில் கை வைப்பது, கான்டாக்ட் லென்ஸ் சொல்யூஷனை மீண்டும் பயன்படுத்துவது உள்ளிட்ட சுகாதாரமற்ற செயல்களால் கண்களில் இருந்து நீர் வழிதல், சிவப்பு நிறமாக மாறுவது, தெளிவற்ற பார்வை போன்றவை தொற்றினால் ஏற்படக் கூடும் என்பதால் எச்சரிக்கையாகவே கான்டாக்ட் லென்ஸைக் கையாள வேண்டும்.

கண்தொற்றை தவிர்க்க என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்?
ஒவ்வொரு முறை லென்ஸ்களை பயன்படுத்துவதற்கு முன்பும், பின்பும் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.  லென்ஸ் வைக்கும் பாக்ஸை சுத்தமான துணியால் துடைத்து காய வைக்க வேண்டும். இந்த பாக்ஸை 3 மாதங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு முறை அணிவதற்கு முன்பும் லென்ஸில் ஏதேனும் சேதமுற்றுள்ளதா என்பதை சோதிக்க வேண்டும்.பெண்கள் மேக்கப் போட்டுக் கொள்வதற்கு முன்பே லென்ஸை அணிந்து கொள்ள வேண்டும். லென்ஸ் அணிந்து கொண்டு கணினி மற்றும் மடிக்கணினியை நீண்ட நேரம் பயன்படுத்துபவர்கள் அடிக்கடி கண்களை சிமிட்ட வேண்டும்.
செய்யக்கூடாதது என்ன?
கான்டாக்ட் லென்ஸ் அணிந்துகொண்டே தூங்கக்கூடாது. லென்ஸ் மற்றும் அதை வைக்கும் பாக்ஸை அதற்கென்றே இருக்கும் திரவத்தால் கழுவ வேண்டும். குழாய்த்தண்ணீரை பயன்படுத்தி சுத்தம் செய்யக்கூடாது. தரையில் அல்லது வேறு எங்கேனும் கீழே விழுந்தால் அதனை சுத்தப்படுத்தாமல் அணியக்கூடாது. அழுக்கடைந்த அல்லது சேதமடைந்த லென்ஸ் அணிவதையும், நீச்சல் மற்றும் நீர் நிலைகளில் குளிக்கும்போதும் லென்ஸ் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.கண் சிகிச்சை மருத்துவரின் அனுமதியின்றி கடைகளில் வாங்கும் சொட்டு மருந்துகளை கண்களுக்கு போட்டுக் கொள்ளக்கூடாது. லென்ஸ் அணிந்திருக்கும்போது வெப்பம் கண்களை நேரடியாக தாக்கும்படி நிற்பதும் தவறான செயல்.
உஷா நாராயணன்
 நன்றி : டாக்டர் குங்குமம் - 01.03.2017