disalbe Right click

Showing posts with label மின் இணைப்பு. Show all posts
Showing posts with label மின் இணைப்பு. Show all posts

Sunday, May 3, 2020

நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு

நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு
நமது தமிழ்நாட்டில் இருக்கின்ற புறம்போக்கு நிலங்களிலும், நீர்நிலைகளிலும் அரசியல் செல்வாக்கு கொண்ட சிலர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு, கட்டிடங்கள் கட்டி அதற்கு மின் இணைப்பும் சட்டவிரோதமாக வாங்கி விடுகிறார்கள். ஒரு இடத்திற்கு மின் இணைப்பு பெறுவதென்றால் அதற்கென்று சில நடைமுறைகளை அரசு வகுத்து வைத்துள்ளது. ஆனால், ஆக்கிரமிப்பு செய்பவர்கள் எதனை அடிப்படையாக வைத்து மின் இணைப்பு பெறுகிறார்கள் என்பது ஆச்சர்யமான விஷயம்! 
இந்தப் பதிவிலும் அது போன்ற புகார் ஒன்றைத்தான் நாம் பார்க்கப் போகிறோம். வாருங்கள்.
புகாரைப்பற்றிய விபரம்
இந்த புகாரானது கடந்த 2011ம் ஆண்டு  காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலை நகரைச் சேர்ந்த அர.எழுமலை என்பவர் இந்த வழக்கில் மனுதாரர் ஆவார்.  நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டுள்ள தனது வீட்டிற்கு மின் இணைப்பு தர அருகிலுள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் விண்ணப்பிக்கிறார்.  அவர்கள் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி மின் இணைப்பு தர மறுக்கிறார்கள்.  அந்த விதிகளை யாரும் தற்போது பின்பற்றுவது இல்லை. அதனால் தனது வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று சென்னை - 600 008, எக்மோர், லட்சுமிபதி சாலையில் அமைந்துள்ள  தமிழ்நாடு மின்சார வாரியம் ஆம்புட்ஸ்மேன் அலுவலகத்திற்கு மனுதாரர் மேல்முறையீடு செய்கிறார்.
விசாரணைக்கு இருதரப்பினரும் அழைக்கப்படுகிறார்கள். விசாரணை நடக்கிறது.   . 
சுடுகாடு, ஏரிக்கரையில் வீடு கட்டுபவர்களுக்கு மின் இணைப்பு தரக்கூடாது என்றும், அதுபோன்று ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 05.08.2010 தினகரன் நாளிதழில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள்   அறிவித்துள்ளதாகவும், இதற்கென்று  தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு அரசாணை வெளியிட்டுள்ளதாகவும் (அரசாணை எண்:382, (வருவாய்த்துறை), நாள்:14.05.1993)    செங்கல்பட்டு  மின்துறை செயற்பொறியாளர் அவர்கள் பதில் அளிக்கிறார். 
அந்த அரசாணையின் நகலை அளித்தால் அதனை தான் ஏற்றுக் கொள்வதாக மனுதாரர் தெரிவிக்கிறார். அந்த அரசாணை நகல் மனுதாரருக்கு அளிக்கப்பட்டு புகார் முடித்து வைக்கப்படுகிறது.
தமிழ்நாடு மின்பகிர்மான விதித்தொகுப்பு  விதி 27(12) எ ன்ன சொல்கிறது?
புறம்போக்கு நிலத்தில் மின் இணைப்பு வேண்டுபவர்கள் 
  1. துணை வட்டாட்சியர் நிலைக்கு குறையாத அலுவரிடமிருந்து பெறப்பட்ட மறுப்பின்மைச் சான்றிதழ் (அல்லது)
  2. மேற்கண்ட மறுப்பின்மைச் சான்றிதழை விணப்பத்துடன் இணைத்து தர முடியாத பட்சத்தில் மனுதாரர் கீழ்க்காணும் உறுதிமொழியை தரவேண்டும்.
  • நான் இந்த இடத்தை காலி செய்வதற்கு கட்டுப்பட்டவன் என்றும்,  அரசாங்கத்தால் பின்னாளில் இந்த இடங்கள் கோரப்படுமாயின் அல்லது பின்னாளில் ஏதும் பூசல் எதுவும் நிகழுமாயின் எந்த நேரத்திலும் மின் இணைப்பு துண்டிக்கப்படும்! மற்றும் இதுபொறுத்து மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்று நிலத்தின் உரிமையை கோருவதற்கு  எனக்கு உரிமை இல்லை என்பது எனக்குத் தெரியும்.
  • மேலேயுள்ள ஏற்புறுதி நிலத்தின் உடைமைக்குரிய நிரந்தர மற்றும் முழு உரிமையை வழங்காது என்பதும் எனக்குத் தெரியும்.
மேற்கண்ட தீர்ப்பின் நகலைப் பெற கீழ்க்காணும் லின்க்கை கிளிக் செய்யவும்.

********************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 04.05.2020