disalbe Right click

Showing posts with label GST. Show all posts
Showing posts with label GST. Show all posts

Monday, October 23, 2017

ஜிஎஸ்டி வரி.. மற்ற நாடுகளில்

விஸ்வரூபமெடுத்த ஜிஎஸ்டி வரி.. மற்ற நாடுகளில் இவ்வளவுதானுங்க!
டெல்லி : இந்தியா முழுவதும் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரி அமலுக்கு வந்தது. இது இந்தியா முழுமைக்கும் ஒரே அளவில் வரி விதிக்கும் திட்டம் ஆகும். நாடு முழுவதும் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் இப்போதும் இருந்து வருகிறது.
ஜி.எஸ்.டி என்பது சரக்கு மற்றும் சேவை வரி ஆகும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுவேறு விதமான வரி, நேர்முக மற்றும் மறைமுக வரிகள் என்று இருக்கும் விதியை மாற்றி நாடு முழுமைக்கும் ஒரே விதியை அமல்படுத்துவது தான் இதன் நோக்கம்.
பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே இந்த வரியை கடந்த ஜூலை ஒன்றாம் தேதி அறிமுகப்படுத்தியது பா.. அரசு. இருந்தபோதிலும், தற்போது பொருள்களைப் பொறுத்து ஐந்து விதமாக பிரித்து இந்த வரி வசூலிக்கப்படுகிறது. 0%, 5%,12%,18% மற்றும் 28% என்கிற வரி விதிப்பு அமலில் உள்ளது.
இந்தியாவும் ஜி.எஸ்.டி.,யும்
ஜி.எஸ்.டி புதுமையான விஷயம் அல்ல. ஏற்கனவே உலகில் பல நாடுகளில் இந்த வரி விதிப்பு முறை அமலில் உள்ளது. ஆனால், மற்ற நாடுகளை விட வரி விதிப்பு 28%, அதிகமே.
இந்தியாவின் போட்டி நாடான சீனாவில் அதிகபட்சமாக 17%, பிரேசிலில் 10% மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
வளரும் நாடுகளின் ஜி.எஸ்.டி
அதே சமயம் வளர்ந்த நாடுகளான பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் ஜி.எஸ்.டி வரி 19% முதல் 20% வரை இருக்கிறது. அதே சமயம் வளரும் நாடுகள் 20 முதல் 22 சதவிகிதம் வரை ஜி.எஸ்.டி விதித்தால் அது வளர்ச்சிக்கு உதவும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
நியூஸிலாந்தில் ஜி.எஸ்.டி
நியூசிலாந்தில் 1986ல் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த வரி. அனைத்து பொருள்கள் மற்றும் சேவைகளுக்கும் அங்கு 15% வரி வசூலிக்கப்படுகிறது. உலகில் அதிக வரி வசூலிக்கும் வளரும் நாடு இதுவே
ஆஸ்திரேலியாவில் 2000ம் ஆண்டு முதல் 10% வரி வசூலிக்கப்படுகிறது. 17% ஜிஎஸ்டி இந்தியாவைப் போலவே அங்கும் பொருட்களைப் பொறுத்து வரி வசூலிக்கப்படுகிறது. அதிகபட்சமாக 17% வசூலிக்கப்படுகிறது. மாநிலங்களுக்குள் வரி விகிதம் 4 முதல் 25 சதவிகிதமாக இருக்கிறது
1991-ல் ஜிஎஸ்டி கனடாவில் 1991ம் ஆண்டு அங்கு ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டது. மருந்து, வீட்டு வாடகை, மளிகை சாமான்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது
மலேசியாவில் 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 25 ஆண்டுகளாக நிறைவேற்றபடாமல் இருந்த இந்தச் சட்டம், 6% வரி விதித்து அமலுக்கு வந்தது.
சிங்கபூரின் வரி தெரியுமா ?
மெர்சல் படத்தில் விஜய் பேசும் ஜி.எஸ்.டி.,க்கு எதிரான வசனத்தில் சிங்கப்பூரின் ஜி.எஸ்.டி பற்றி குறிப்பிடப்பட்டு இருக்கும். அங்கு 1994ல் 3% வரியோடு ஜி.எஸ்.டி அமலுக்கு வந்தது. அதே சமயம் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு ஜி.எஸ்.டி வரியில் இருந்து வரி விலக்கு அளித்ததும் குறிப்பிடத்தக்கது.
நன்றி : ஒன் இந்தியா - தமிழ் - செய்திகள் - 23.10.201

Saturday, October 7, 2017

ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட 27 பொருட்களின் முழுவிபரம்

புதுடில்லி : டில்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 22 வது ஆலோசனைக் கூட்டம் நேற்று (அக்.,6) நடந்தது. இதில் சிறு தொழில்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் சுமையை குறைப்பதற்காக 27 பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்பட்டது.
புதிதாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட 27 பொருட்களில் அதிகமானவை அன்றாடம் பயன்படுத்தக் கூடியவை. புதிதாக வெளியிடப்பட்ட அறிவிப்பால் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி குறைகிறது என்பது முழுவிபரம் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அவற்றின் விபரம் :
1. உலர வைக்கப்பட்ட மாம்பழ துண்டுகள் (ஜிஎஸ்டி 12% லிருந்து 5 % ஆகிறது)
2. காக்ரா மற்றும் சப்பாத்தி அல்லது ரொட்டி (ஜிஎஸ்டி 12% லிருந்து 5 % ஆகிறது)
3. சமைக்கப்பட்ட உணவுகள் டப்பாவில் அடைக்கப்பட்டு, மத்திய அரசு அல்லது ஏதாவது மாநில அரசின் ஒப்புதல் பெறப்பட்டது என குறிக்கப்பட்டு, சமூக நலத்திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக வலிவடைந்த மக்களுக்கு வழங்கப்படுவது (ஜிஎஸ்டி 18% லிருந்து 5 % ஆகிறது)
4. பிராண்ட் பெயர்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட திண்பண்டங்கள் (ஜிஎஸ்டி 12% லிருந்து 5 % ஆகிறது)
5. லினியர் ஆல்கைல் பென்சைன் தயாரிக்க பயன்படுத்தப்படும் உயர்தர மண்ணெண்ணை (ஜிஎஸ்டி 18% லிருந்து 18 % ஆகிறது) (விளக்கம் பின்னர் அளிக்கப்படும்)
6. பிராண்ட் பெயர்கள் பயன்படுத்தப்படாத ஆயுர்வேத, யுனானி, சித்தா, ஹோமியோபதி மருந்துகள் (ஜிஎஸ்டி 12% லிருந்து 5 % ஆகிறது)
7. போஸ்டர் கலர் (ஜிஎஸ்டி 28 % லிருந்து 18 % ஆகிறது)
8. குழந்தைகளின் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்படும் நவீன ஒட்டும் பொருட்கள் (ஜிஎஸ்டி 28 % லிருந்து 18 % ஆகிறது)
9. பிளாஸ்டிக் கழிவுகள், உலோகக் கழிவுகள் (ஜிஎஸ்டி 18 % லிருந்து 5 % ஆகிறது)
10. ரப்பர் கழிவுகள், தாது கழிவுகள் (ஜிஎஸ்டி 18 % லிருந்து 5 % ஆகிறது)
11. டயர்கள் அல்லது கடின ரப்பர் கழிவுகள் (ஜிஎஸ்டி 28 % லிருந்து 5 % ஆகிறது)
12. காகித கழிவுகள் (ஜிஎஸ்டி 12 % லிருந்து 5 % ஆகிறது)
13. பணிக்காக வழங்கப்படும் தொகை (ஜிஎஸ்டி 5 % ஆகிறது)
14. சில்லறை விற்பனைக்கு அல்லாத கைத்தறி நூல்கள் (ஜிஎஸ்டி 18% லிருந்து 12 % ஆகிறது)
15. நைலான், பாலியஸ்டர் உள்ளிட்ட அனைத்து சின்தடிக் ரக நூல்கள் (ஜிஎஸ்டி 18% லிருந்து 12 % ஆகிறது)
16. விஸ்கோசின் ரேயான் உள்ளிட்ட அனைத்து ரக செயற்கை நூல்கள் (ஜிஎஸ்டி 18% லிருந்து 12 % ஆகிறது)
17. கைத்தறி ஆடைகளுக்கு பயன்படுத்தப்படும் நூல்கள் (ஜிஎஸ்டி 18% லிருந்து 12 % ஆகிறது)
18. கைத்தறி ஆடைகளுக்கான பிரதான நூல்கள் (ஜிஎஸ்டி 18% லிருந்து 12 % ஆகிறது)
19. உண்மையான ஜரிகைகள் (ஜிஎஸ்டி 12% லிருந்து 5 % ஆகிறது)
20. மார்பிள், கிரானைட் அல்லாத, 6802 பிரிவின் கீழ் வரும் கட்டுமான பொருட்கள் (ஜிஎஸ்டி 28% லிருந்து 18 % ஆகிறது)
21. கண்ணாடி கழிவுகள் (ஜிஎஸ்டி 18% லிருந்து 5 % ஆகிறது)
22. அலுவலக உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் பேப்பர் கிளிப்கள், லெட்டர் கிப்கள், பைல்கள் உள்ளிட்ட அடிப்படை உலோகங்கள் (ஜிஎஸ்டி 28% லிருந்து 18 % ஆகிறது)
23. 8483 ரக எளிய ரக பொருத்தும் தாங்கிகள் (ஜிஎஸ்டி 28% லிருந்து 18 % ஆகிறது)
24. 15 எச்பி.,க்கு மிகாமல் இருக்கும் திறன் கொண்ட டீசல் இன்ஜின்களை பொருத்தும் திருகுகள் (ஜிஎஸ்டி 28% லிருந்து 18 % ஆகிறது)
25. தண்ணீர் பம்புகள், ஆழ்துளை குழாய்கள் உள்ளிட்டவைகள் பொருத்துவதற்கான குழாய்கள் (ஜிஎஸ்டி 28% லிருந்து 18 % ஆகிறது)
26. மின்னணு கழிவுகள் (ஜிஎஸ்டி 28%, 18% லிருந்து 5 % ஆகிறது)
27. மரக்கரி துண்டுகள் (ஜிஎஸ்டி 18% லிருந்து 5 % ஆகிறது)
நன்றி : தினமலர் நாளிதழ் - 07.10.2017

Saturday, September 30, 2017

ஜி.எஸ்.டி விதிமீறல்… எவ்வளவு அபராதம்?

ஜி.எஸ்.டி விதிமீறல்எவ்வளவு அபராதம்?
ஜி.எஸ்.டி வரிச் சட்டப்பிரிவு 122-ன்படி, 21 விதமான விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப் படுகிறது. குறைந்தபட்ச அபராதமாக 10,000 ரூபாயும், அதிகபட்ச அபராதமாக எவ்வளவு வரி இருக் கிறதோ அல்லது வரி ஏய்க்கப்பட்டிருக்கிறதோ, அது அதிகபட்ச வரியாக வசூலிக்கப்படும். இந்த அபராதம் சி.ஜி.எஸ்.டி மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி சட்டத்திலும் தனித்தனியாக வசூலிக்கப்படும்.
பொதுவாக, ஆரம்பக்காலத்தில் ஜி.எஸ்.டி-யில் அபராதமோ, தண்டனையோ பெரிதாக வழங்கப்பட வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், ஜி.எஸ்.டி சட்டப் பிரிவு 122-ன்படி, 22 வகையான விதிமீறல்களுக்கு அபராதத்தை விதிக்கும் அதிகாரத்தை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தரும்வகையில், சட்டம் வழி செய்து தந்திருக்கிறது
அவற்றில் முக்கியமானவை பின்வருமாறு
1. வரிதாரர், வரிக்கான இன்வாய்ஸ் (Tax Invoice) இல்லாமல், தவறான அல்லது உண்மைக்கு மாறான இன்வாய்ஸைத் தயாரித்திருத்தல்,
2. ஜி.எஸ்.டி சட்டப் பிரிவுகளுக்குப் புறம்பாக பொருளுக்கோ அல்லது சேவைக்கோ இன்வாய்ஸ் வழங்குதல்,
3. ஜி.எஸ்.டி வரியை வசூல் செய்து, அதனை அரசாங்கத்திடம் மூன்று மாத காலத்துக்குள் செலுத்தத் தவறுதல்,
4. ஜி.எஸ்.டி சட்டத்துக்குப் புறம்பாக வரி வசூல் செய்தல்,
5. பொருளையோ அல்லது சேவையையோ பெறாமல் உள்ளீட்டு வரியை எடுத்துக்கொள்ளுதல்.
6. அரசை ஏமாற்றுகிற முறையில் நடவடிக்கை இருத்தல்,
7. உள்ளீட்டு வரியை வரம்புக்கு மீறி எடுத்துக்கொள்ளுதல்,
8. கணக்குகளைத் திருத்துவது மற்றும் தவறான நிதிக் கணக்குகளை உள்சேர்த்தல்,
9. ஜி.எஸ்.டி வரி விதிப்பில் பதிவு செய்யாமல் இருத்தல்,
10. விற்பனையைக் குறைத்து கணக்கில் காண்பித்தல்,
11. கணக்குகளைச் சரியான முறையில் பராமரிக்காமல் இருத்தல்.
மேற்கண்ட செயல்களுக்கு ஜி.எஸ்.டி சட்டப் பிரிவின்படி, அபராதம் விதிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, வர்த்தகர்கள் இந்தப் பதினொரு விஷயங்களில் எந்தத் தவறும் செய்யாமல் இருப்பது நல்லது!
நன்றி : நாணயம் விகடன் - 01.10.2017