disalbe Right click

Showing posts with label எனது வழக்கு. Show all posts
Showing posts with label எனது வழக்கு. Show all posts

Thursday, May 17, 2018

சட்டம் தெரியாத நீதித்துறை

நீதிமன்றம் செல்பவர்கள் கவனத்திற்கு.....
ஒருவன் அடர்ந்த காட்டின் வழியாக தனது ஆட்டுக்குட்டியை தோளில் போட்டு சென்று கொண்டிருந்தான். அந்தக் காட்டில் நான்கு திருடர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு அந்தப்பக்கம் வருபவர்களை அடித்து, அவர்களிடம் உள்ளதை பறித்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
அந்த திருடர்கள், ஆட்டுக்குட்டியுடன் வருபவனை பார்த்தனர். அவனிடம் உள்ள ஆட்டுக்குட்டியை பறித்துக் கொள்ள எண்ணினர். ஆனால், அவனை தாக்காமல் அவனே அந்த ஆட்டுக்குட்டியை போட்டுவிட்டு ஓடுவதற்கு ஒரு திட்டம் தீட்டினர்.
அந்தத் திருடர்களில் முதலாவது திருடன் அவன் வருகின்ற வழியில் எதிரே சென்று, என்னப்பா நாய்க்குட்டிய தோள்ல போட்டுக்கிட்டு போற? என்று சொல்லிக் கொண்டே அவனைக் கடந்து சென்றான்.
அந்தத் திருடர்களில் இரண்டாவது திருடன் அவன் வருகின்ற வழியில் எதிரே சென்று, என்னப்பா பூனைக்குட்டிய தோள்ல போட்டுக்கிட்டு போற? என்று சொல்லிக் கொண்டே அவனைக் கடந்து சென்றான்.
அந்தத் திருடர்களில் மூன்றாவது திருடன் அவன் வருகின்ற வழியில் எதிரே சென்று, என்னப்பா கன்னுக்குட்டிய தோள்ல போட்டுக்கிட்டு போற? என்று சொல்லிக் கொண்டே அவனைக் கடந்து சென்றான்.
அந்தத் திருடர்களில் நான்காவது திருடன் அவன் வருகின்ற வழியில் எதிரே சென்று, என்னப்பா பன்னிக்குட்டிய தோள்ல போட்டுக்கிட்டு போற? என்று சொல்லிக் கொண்டே அவனைக் கடந்து சென்றான்.
ஆட்டை தோளில் போட்டுக்கொண்டு சென்றவனுக்கு, இது ஆட்டுக்குட்டிதானா? அல்லது ஏதாவது பிசாசா? என்று சந்தேகமாகிவிட்டது. அதனை போட்டுவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.
திருடர்களுக்கு அன்று சரியான வேட்டைதான்!
இந்தக் கதையைப் போல, இருக்கிறது எனது வழக்கு அனுபவம்!
போலி ஆவணம் தயாரித்து பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களின் மீது நான் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது இது சிவில் வழக்கு என்று எனது புகாரை ஏற்றுக் கொள்ளவில்லை.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்த போது இது சிவில் வழக்கு என்று எனது புகாரை ஏற்றுக் கொள்ளவில்லை.
சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த போது நடுவர் இது சிவில் வழக்கு என்று முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை.
அதன்பிறகு நடைபெற்ற குற்றங்களையும், அதற்குரிய சட்டப்பிரிவுகளையும், தண்டனைகளையும் எழுதிக் கொடுத்து மீண்டும் தாக்கல் செய்த பிறகு, அதனை ஏற்றுக்கொண்டு நம்பர் வழங்கிய நடுவர் ஒரு வருடம் வழக்கை நடத்திவிட்டு, இறுதியில் அதனை சிவில் வழக்கு என்று தள்ளுபடி செய்துள்ளார்.
இப்போது அந்த வழக்கு சிவில்வழக்காக இருக்குமோ என்று எனக்கே சந்தேகம் வந்துவிட்டது .
குற்றமுறு நம்பிக்கை மோசடி - இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு-405,
திட்டமிட்டு ஏமாற்றுதல்       - இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு-420
போலி ஆவணம் தயாரித்தல்  - இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு-467
அதனை உண்மையான ஆவணம் போல் பயன்படுத்துதல் - இ.த-ச., பிரிவு-471 ஆகியவை  சிவில் குற்றங்களா? சொல்லுங்கள் நண்பர்களே!
******************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 17.05.201

Monday, April 16, 2018

மோசடி செய்வது சிவில் வழக்கா?

சிவில் வழக்கு கிரிமினல் வழக்காக மாற வாய்ப்புண்டு!
ஆனால், கிரிமினல் வழக்கு சிவில் வழக்காக மாறாது!
கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில், சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், எனது சங்க நிர்வாகிகள், போலி ஆவணம் புனைந்தது மற்றும் அதனை உண்மையானது போல பயன்படுத்திக் கொண்டிருப்பது பற்றி வழக்கு ஒன்று (Cr.M.P. No.:6216/2017) தாக்கல் செய்திருந்தேன்.
இந்தி்ய தண்டணைச் சட்டம், பிரிவுகள் 468 மற்றும் 471ன்படி ஒவ்வொரு பிரிவிற்கும் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டணை வழங்கக்கூடிய அளவுக்கு அது கடுமையான கிரிமினல் குற்றம் செய்யப்பட்டவர்களின் மீது தொடுக்கப்பட்ட வழக்கு அது. முழுக்க முழுக்க ஆவண சாட்சியங்களின் அடிப்படியில் அது என்னால் தொடுக்கப்பட்டிருந்தது.
விளக்கம் கேட்ட நடுவர்
வழக்கை எடுப்பதற்கு முன்னமே சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் அவர்கள் இது சிவில் வழக்கு போல் இருக்கிறதே, இங்கு வந்து தாக்கல் செய்ததற்கான காரணம் என்ன? என்று என்னிடம் விளக்கம் கேட்டு எனது கேஸ்கட்டை திருப்பி கொடுத்துவிட்டார்கள். .
நானும் நடைபெற்ற குற்றங்களையும், அதற்குரிய சட்டப் பிரிவுகளையும் அதற்குரிய தண்டணைகளையும் குறிப்பிட்டு இது கிரிமினல் கேஸ்தான் என்பதை எனது உரையின் மூலம் அழுத்தமாக தெளிவு படுத்தினேன்.
அதன் பிறகே கேஸ் நம்பரானது.
ஒரு வருடத்திற்கு மேலாக வழக்கு நடந்தது. முடிவில் இது கிரிமினல் சாயம் பூசப்பட்ட சிவில் கேஸ் என்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த வழக்கு கிரிமினல் வழக்குதான் என்பதற்கான விளக்க உரை

குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் பிரிவு:155(4)
ஒரு வழக்கு இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட குற்றங்களைப் பற்றியதாக இருந்து அவற்றில் குறைந்தது ஏதேனும் ஒன்று கைது செய்யப்படக்கூடிய குற்றமாக இருந்தால், அவ்வழக்கு கைது செய்யப்படக்கூடிய வழக்காக கொள்ள வேண்டும்.

 
பசுமாட்டின் கதையைப் போலவே எனது வழக்கும் இருக்கிறதா?
சொல்லுங்கண்ணே, சொல்லுங்க!
************************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 17.04.2018

Saturday, April 7, 2018

காவல் வட்ட ஆய்வாளருக்கு சட்ட அறிவிப்பு

வழக்கின் சாராம்சம் என்ன?
நான் சார்ந்துள்ள சங்க நிர்வாகிகள் 19.07.2015 அன்று நடைபெற்ற மகாசபைக் கூட்டம் குறித்து, போலி ஆவணம் தயாரித்துள்ளது பற்றியும், அதனை உண்மையானது போல பயன்படுத்திக் கொண்டிருப்பது பற்றியும், தகுந்த ஆவண சாட்சியங்கள் மூலம் எடுத்துக் கூறி, அவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய திருத்தங்கல் காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்று, குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 156(3)ன் கீழ்,  பார்ட்டி இன் பெர்சன் ஆக, குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், சிவகாசியில் வழக்கு ஒன்று தொடுத்திருந்தேன். நீதிமன்ற நடுவர் அவர்கள், எனது குற்றச்சாட்டுகள் குறித்து இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்கள். 
போலி ஆவணம் பற்றி.....
ஷை சங்க நிர்வாகிகள் தயாரித்த போலி ஆவணத்தில் பல நபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கையெழுத்துக்கள் செய்திருந்தார்கள். கூட்டத்திற்கு வராத உறுப்பினர்களின் பெயர்கள் வரிசையாக அந்த (கூட்ட நடவடிக்கைக் குறிப்பேடு) போலி ஆவணத்தில் எழுதப்பட்டு இருந்தது. மேலோட்டமாக நான் ஆராய்ந்து பார்த்ததிலேயே 40 கையெழுத்துக்கள் போலியாக இருந்தது.  அந்த போலி கையெழுத்துகளின் தொகுப்பு தங்களது பார்வைக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



திருத்தங்கல் காவல் வட்ட ஆய்வாளர் அவர்களின் அறிக்கை 
திருத்தங்கல் வட்டக் காவல் ஆய்வாளர் அவர்கள் என்னிடமும், அவர்களிடமும் விசாரணை நடத்தினார். ஏற்கனவே என்னிடம் உள்ள ஆவணங்களை நான் கோர்ட்டில் தாக்கல் செய்து விட்டதால், நான் புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது,  அந்த மகாசபைக் கூட்டத்தில் ஆண்டு வரவு செலவு கணக்குகள் அடங்கிய (பேலன்ஸ் ஷீட்) ஒரு ஆவணம் கிடைத்தது. மொத்தமுள்ள 7 தாள்களில், நிர்வாகிகள் கையெழுத்து போட வேண்டிய 6 தாள்களில் ஒரு இடத்தில்கூட, நிர்வாகிகளின் கையொப்பம் இல்லாமல் அது இருந்தது.
சங்கத்தின் பைலா சொல்வது என்ன?
எங்களது சங்க பைலாவை பொருத்த அளவில், ஆடிட்டர் கணக்கு வழக்குகளை சரிபார்த்து கொடுத்த பிறகு, சங்க நிர்வாகிகள் அதனை நிர்வாக சபையில் வைத்து ஒப்புதல் பெற்று, அதன்பிறகு நடைபெறுகின்ற மகாசபையில் வைத்து உறுப்பினர்களிடையே அந்த வரவு செலவுகள் குறித்து விவாதம் செய்து அவர்களின் ஒப்புதல் பெற்று தீர்மானம் இயற்றப்பட வேண்டும். அதன் பிறகு அந்த ஆவணங்கள் மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் ஒப்புதல் பெற சமர்ப்பிக்கப்பட வேண்டும். 
மாவட்டப் பதிவாளர் அவர்களும் உடந்தை
மேற்கண்ட நடவடிக்கைகளில் அந்த வரவு செலவு அறிக்கை (சுமார் ஒன்பது கோடி ரூபாய்) நிர்வாகிகளின் கையெழுத்து இல்லாமலேயே பயணித்திருக்கிறது. தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டப் பிரிவு மற்றும் விதிகளின்படி இது மோசடி குற்றமாகும். இதனை கண்டு கொள்ளாமல் மாவட்டப்பதிவாளர் அவர்களும் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்திற்கு எதிராக, சட்டவிரோதமாக  அதனை கோர்வை செய்துள்ளார்.
குற்றம் சம்பந்தமான ஆவணங்களை வாங்க ஆய்வாளர் மறுப்பு
இதனை வட்டக் காவல் ஆய்வாளரிடம் தெரிவித்து அதன் நகல்களை சமர்ப்பித்தேன் அவர் அதனை வாங்க மறுத்ததால் அதனை பதிவுத்தபால் மூலம் அவருக்கு அனுப்பி வைத்தேன். அதனை பெற்றுக் கொண்ட அவர், சங்க நிர்வாகிகளை காப்பாற்ற வேண்டும் என்ற தவறான நோக்கத்தோடு, குற்றங்களை மறைத்து, தனது ஆய்வு அறிக்கையை உருவாக்கி, அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதன் நகல்கள் கீழே காணலாம்.




இந்த அறிக்கையில் வட்ட ஆய்வாளர் அவர்கள் என்னிடமிருந்து கடிதம் மூலமாக பெற்றுக் கொண்ட ஆண்டு வரவு செலவு அறிக்கையினைப் பற்றி எந்த ஒரு கருத்தும் சொல்லவில்லை. அதனை பெற்றுக் கொண்டதாகக் கூட அந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை. 
சங்க நிர்வாகிகள் மூன்று பேர்களிடம் மட்டுமே இரண்டு கையெழுத்து போட்டது பற்றி விசாரித்துள்ளார். அவர்களும் இரண்டு கையெழுத்துகள் போட்டதை ஒப்புக் கொண்டு எழுதிக் கொடுத்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதால், குற்றம் நடைபெற்றுள்ளது, அவர்கள் மீது  வழக்குப் பதிவு செய்யலாம் என்பதை நடுவரிடம், வட்ட ஆய்வாளர் அவர்கள் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், குற்றம் கூறிய என்மீதே குற்றம் சுமத்தியிருக்கிறார். உண்மைக்குப் புறம்பான சங்கதியை தாக்கல் செய்துள்ளதாக தனது அறிக்கையின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.  
குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற எழுதப்பட்ட காவல் ஆய்வு அறிக்கை
என்னால் ஆதாரபூர்வமாக குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற காவல் ஆய்வாளர் அவர்கள், செய்யப்பட்ட குற்றத்தை மறைத்து, பல பொய்யான தகவல்களை இணைத்து, குற்றம் கூறிய என்மீதே குற்றம் சுமத்தியுள்ளார். இது இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 219ன் கீழ் குற்றமாகும். இதனால், வட்ட ஆய்வாளர் அவர்கள் மீது வழக்குத் தொடுக்க முடிவு செய்துள்ளேன். அவருக்கு சட்ட அறிவிப்பும் அனுப்பிவிட்டேன். அந்த சட்ட அறிவிப்பு நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.




வட்ட ஆய்வாளர் அவர்கள் என்ன பதில் தரப்போகிறார்? காத்திருப்போம்.
*************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 07.04.2018