Universal Grants Commission என்று சொல்லப்படக்கூடிய பல்கலைக்கழக மானியக்குழு உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பல உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. அவற்றில்
பெண் கல்வி மேம்பாட்டு திட்டத்தின்
கீழ், குடும்பத்தில்
ஒற்றை பெண் குழந்தைகளுக்கு, யு.ஜி.சி., வழங்கும் கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு இந்த ஆண்டில் முதுநிலை பட்டப்படிப்பில் சேர்ந்துள்ள மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பெறுவதற்கான தகுதி என்ன?
மத்திய, மனிதவள மேம்பாட்டுத்
துறை அமைச்சகத்தின்
அறிவுரைப்படி, பல்கலைக் கழக மானியக்குழு, 2005 --- 06ம் ஆண்டு முதல், குடும்பத்தில்
ஒற்றை பெண் குழந்தையாக இருந்து, முதுநிலை படிப்பில் சேரும் மாணவியருக்கு,
இந்திரா காந்தி கல்வி உதவித் தொகையினை வழங்கி வருகிறது.
இந்தத்திட்டத்தில், தகுதியுள்ள மாணவிகள் மாதம், 3,100 ரூபாய் வீதம், 20 மாதங்கள் தொடர்ச்சியாக உதவித்தொகை பெறலாம். தொலைதுாரக் கல்வித் திட்டத்தில் பயிலும் மாணவிகளுக்கு,
இந்த உதவித்தொகை வழங்கப்படாது. தொழிற்கல்வி அல்லாத படிப்பில் சேரும் மாணவியரே இதற்கு தகுதியானவர்கள். வரும், 31.01.2018 தேதிக்குள், ’ஆன் - லைன்’ மூலமாக விண்ணப்பங்கள் உரிய ஆவண நகல்களுடன் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
இம்மாத இறுதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
கல்வி உதவித்தொகைக்கு
விண்ணப்பிக்க இம்மாதம் இறுதி (31.01.2018) வரை மட்டுமே கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்குண்டான விபரங்களைக் காண www.ugc.ac.in என்ற இணையதளம் செல்லவும்.
************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 01.01.2018