disalbe Right click

Showing posts with label PARTY IN PERSON. Show all posts
Showing posts with label PARTY IN PERSON. Show all posts

Thursday, May 17, 2018

வழக்கறிஞர் அல்லாதவர் நீதிமன்றத்தில் ஆஜராகலாமா?

வழக்கறிஞர் அல்லாதவர் நீதிமன்றத்தில் ஆஜராகலாமா?
நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் அல்லாதவர்கள் ஆஜராகலாமா? என்பது குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
  • தஞ்சாவூரைச் சேர்ந்தவர் விக்டர் வில்லியம். இவர் அங்குள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
  • இவர் 5 பேர்களுடன் இணைந்து ரூ. 20.84 லட்சம் கையாடல் செய்ததாக, தஞ்சாவூர் போலீஸார் கைது செய்தனர்.
  • இந்த வழக்கில் இவர் தஞ்சாவூர் 2-வது நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் பெற்றார்.
  • இந்த வழக்கை முதல் நிலை நடுவர்தான் விசாரிக்க வேண்டும். ஆனால் 2-வது நீதித்துறை நடுவர் 2-ம் நிலை நடுவராக இருப்பதால் அவர் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என இந்த வழக்கை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில், மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
  • ஆனால், நீதித்துறை நடுவர்களில் முதல் நிலை, இரண்டாம் நிலை கிடையாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், இந்த வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளது என்று கூறி மனுவை நடுவர் தள்ளுபடி செய்ததால், அந்த வழக்கை அமர்வு நீதிமன்றத்தில் விக்டர் வில்லியம் மேல்முறையீடு மனு செய்தார்.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அல்லாத பி.பாலசுப்பிரமணியன் என்பவர் விக்டர் வில்லியமிற்காக வாதிட்டார்.
  • அமர்வு நீதிமன்றத்திலும் விக்டர் வில்லியமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
  • இதற்குப்பிறகு சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட நிவாரணங்களை கோரி குற்றவியல் மனுக்களை விக்டர் வில்லியம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
  • இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி பி.என். பிரகாஷ் அவர்கள் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.
  • உயர் நீதிமன்றத்திலும் விக்டர் வில்லியமிற்காக பி.பாலசுப்பிரமணியன் வாதிட்டார்.
  • வழக்கறிஞர் அல்லாத நீங்கள் நீதிமன்றத்தில் வாதாடலாமா? என நீதிபதி கேள்வி எழுப்பியதற்கு, யாருக்காகவும் யார் வேண்டுமானாலும் வாதாடலாம் என வழக்கறிஞர் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது என பாலசுப்பிரமணியன் பதில் தெரிவித்தார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
  • வழக்கு தொடர்பவர்களுக்காக வழக்கறிஞராக இல்லாவிட்டாலும், சமூகத்தில் அந்தஸ்து உள்ளவர் வாதாடலாம் என வழக்கறிஞர் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
  • ஆனால் பாலசுப்பிரமணியன் மீது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக, போலீஸாருடன் தகராறு செய்ததாக வழக்குகள் உள்ளது.
  • கீழமை நீதிபதிகளின் பெயர்களை குறிப்பிட்டு பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளார்.
  • இதனால் அவரை நீதிமன்றம் ஏற்கனவே கண்டித்துள்ளது.
  • இந்த வழக்கிலும் இவர் தேவையில்லாமல் வழக்குகளை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துள்ளார்.
  • இதனால் பி.பாலசுப்பிரமணியனை எந்தவொரு நீதிமன்றத்திலும் வாதாட அனுமதிக்கக்கூடாது என்றும், இந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்றும்,. மனுதாரருக்கு விதிக்கப்படுகின்ற ரூ.ஆயிரம் அபராத பணத்தை 2 வாரத்தில் உயர் நீதிமன்ற இலவச சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு செலுத்த வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
(23.04.2016 அன்று வெளியான தி இந்து தமிழ் நாளிதழில் வெளியான செய்தியை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது இந்தப்பதிவு)
https://www.hindutamil.in/news/tamilnadu/76467--1.html

**********************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 18.05.2018 

Saturday, April 28, 2018

நீதிமன்றத்தில் ஆவண நகல்களைப் பெற.....

நீதிமன்றத்தில் உள்ள ஆவண நகல்கள்
கடந்த வாரத்தில் ஒரு நாள், எனது நண்பரின் கடைக்குச் சென்றிருந்தேன். அவர் போட்டோ ஸ்டுடியோ ஒன்று வைத்து நடத்தி வருகிறார். அத்துடன் ஜெராக்ஸ் கடையையும் இணைத்து நடத்தி வருகிறார். நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, ஒருவர் ஜெராக்ஸ் எடுக்க வந்திருந்தார். எனது நண்பர் அவர் கொண்டு வந்த ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டிருந்தபோது அவற்றை நான் கவனித்ததில் அது ஒரு நீதிமன்றத்தின் உத்தரவு நகல் என்பதையும், அவரை கவனித்ததில் மிகவும் ஏழ்மையானவர் என்பதையும் தெரிந்து கொண்டேன்.
எவ்வளவு செலவு?
  • அதைப் பெறுவதற்கு எவ்வளவு செலவழித்திருப்பார்? என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆசையாக இருந்தது.
  • ஏனென்றால், எனது வழக்கில் பார்ட்டி இன் பெர்சன் ஆக ஆஜராகி அந்த வழக்கின் உத்தரவு ஆவணங்களை அந்த சமயத்தில்தான் நான் பெற்றிருந்தேன்.
7 பக்க உத்தரவு நகலைப் பெற்றுத் தருவதற்கு வழக்கறிஞர் கட்டணம் ரூ.1300
  • இதற்குள் ஜெராக்ஸ் எடுத்து முடிக்கப்பட்டு அதற்கு கூலியாக எனது நண்பர் அவரிடமிருந்து 14 ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டார்.
  • அங்கிருந்து கிளம்பிய அவரிடத்தில், யார் மூலமாக இந்த உத்தரவு நகலைப் பெற்றீர்கள்?, இதனைப் பெறுவதற்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்? என்று கேட்டேன்.
  • அவர் அவரது வழக்கறிஞர் மூலமாக பெற்றதாகவும், அதற்காக அவருக்கு 1300 ரூபாய் கொடுத்ததாகவும் வருத்தத்தோடு கூறினார்.
  • அதிர்ச்சி அடைந்தேன் நான்.
  • வழக்கு சம்பந்தமான ஆவண நகல்களை நாமே மனுச் செய்து பெற முடியும் என்பதையும், அதற்கு செலவு அதிகபட்சம் 50 ரூபாய்தான் ஆகும் என்பதையும் அவரிடத்தில் எடுத்துக் கூறினேன்.
  • இது பற்றி ஒன்றுமே தனக்குத் தெரியாது என்றும், இது போன்ற ஒரு சூழ்நிலை இனி ஏற்பட்டால் என்னை சந்தித்து சட்ட ஆலோசனை பெற்றுக் கொள்கிறேன் என்றும் கூறி எனது முகவரியை பெற்றுச் சென்றார்.
  • நமது மக்கள் சட்ட அறிவு இல்லாத காரணத்தால், எவ்வளவு நஷ்டம் அடைகிறார்கள் என்ற கவலையையும், நமது மாநிலத்தில் சட்ட விழிப்புணர்வு இலவச முகாம்களை நடத்தி வருகின்ற ”லா பவுண்டேஷன், சென்னை”-யின் நிறுவனர் நண்பர் சரவண அர்விந்த் போல, எங்கள் பகுதியிலும் இலவச சட்ட விழிப்புணர்வு நடத்த வேண்டிய அவசியத்தையும் அந்த சம்பவம் எனக்கு ஏற்படுத்தியது.
  • மேலும், இந்த பதிவை போடத் தூண்டியது அந்த நிகழ்ச்சிதான்!
நகல்களை எந்த வழிகளில் பெறலாம்?
  • பொதுவாக, அரசு அலுவலகங்களில் உள்ள ஆவணங்களின் நகலை பொதுவாக நாம் இரண்டு வழிகளில் பெறலாம்.
  • 1. தகவல் அறியும் உரிமைச் சட்டம்
  • தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)ன் கீழ், பத்து ரூபாய்க்கான கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட மனு மூலம் நமக்குத் தேவையான ஆவண நகல்களைக் கேட்டு, அதற்கு அவர்கள் சொல்கின்ற கட்டணத்தை மாவட்ட கருவூலம் மூலம் செலுத்தி தபால் மூலம் அவைகளைப் பெறலாம்.
  • 2. இந்திய சாட்சியச் சட்டம்
  • இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 76ன் கீழ் ஐந்து ரூபாய்க்கான கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட மனு மூலம் நமக்குத் தேவையான ஆவண நகல்களைக் கேட்டு, அதற்கு அவர்கள் சொல்கின்ற கட்டணத்தை செலுத்தி, நேரிடையாகவும், தபால் மூலமாகவும் அவைகளைப் பெறலாம்.
நீதிமன்றங்களில் உள்ள ஆவண நகல்களைப் பெற......
  • மேற்கண்ட முறைகளில் எவரும், பதிவுத்துறையில் மற்றும் நீதிமன்றத்தில் உள்ள ஆவண நகல்களைப் பெற முடியாது.
  • பதிவுத்துறைக்கென்றும், நீதிமன்றத்திற்கென்றும் சில வழிமுறைகளை நமது அரசு வகுத்து வைத்து உள்ளது.
  • அதன்படிதான் அவர்களிடமிருந்து நாம் ஆவண நகல்களைப் பெற முடியும்.
  • இதனைப் பெறுவதற்கு ஆங்கிலத்தில் C.A என்று ஆங்கிலத்தில் சுருக்கமாகச் சொல்கிறார்கள். அதன் விரிவான வார்த்தை Copy Application ஆகும்.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
  • நீதிமன்றத்தில் உள்ள ஆவண நகல்களை அந்த வழக்கிற்கு சம்பந்தமே இல்லாத மூன்றாவது நபர்கூடப் பெறலாம்.
  • ஆனால், எந்த வழக்கின் ஆவண நகல்கள் உங்களுக்கு வேண்டுமோ, அந்த வழக்கின் எண், அந்த வழக்கின் வாதி மற்றும் பிரதிவாதிகள் பெயர்கள் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
  • அவற்றை பச்சைக் கலர் பேப்பரில் (கான்கிரிட் பேப்பர்) எழுதி, அதில் 20 ரூபாய்க்கான கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்டி கையொப்பமிட்டு, நீதிமன்றம் துவங்கும் நேரத்தில், நீதிமன்ற ஊழியர் பிராது வாங்கும் சமயத்தில் அவரிடத்தில் அதனை கொடுக்க வேண்டும்.
  • ஆவண நகல்கள் அவசரமாக வேண்டும் என்றால், அதில் அவசரம் என்றோ அல்லது ஆங்கிலத்தில் EMERGENT என்றோ எழுதி மேற்கொண்டு 2 ரூபாய்க்கான கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்டி கொடுக்க வேண்டும்.
மாதிரி மனு 


நடுவர் என்ன செய்வார்?
  • அதில் நடுவர் அவர்கள் தன்னுடைய சுருக்குக் கையெழுத்து இட்டு கீழே அமர்ந்துள்ள MC என்று சுருக்கமாக சொல்லப்படுகின்ற Magistrate Clerkகிடம் கொடுப்பார்.
  • அவர் டவாலியிடம் அதனை அளிப்பார்.
  • டவாலி அதனை RC எனப்படும் Record Clerkகிடம் கொடுப்பார்.
  • Record Clerk அதனை பதிவு செய்வார்.
  • இது நீதிமன்றம் துவங்கிய சிறிது நேரத்திற்குள் நடந்து முடிந்துவிடும்.
  • நடுவர் அனுமதி கொடுத்திருக்கிறாரா? இல்லையா? என்பது அங்கு நாம் இருந்தால், உடனடியாக நமக்குத் தெரிந்துவிடும்.
  • நம்மை அழைக்க மாட்டார்கள். நாமாகத்தான் இதனை இருந்து அறிந்து கொள்ள வேண்டும்.
  • வேறு அவசர வேலைகள் இருந்தால் அன்று அல்லது மறுநாள் மாலை நேரத்தில் நீதிமன்றம் சென்றும் அதனை அறிந்து கொள்ளலாம்.
நகல் வழங்க நடுவர் அனுமதி கொடுத்தே ஆகவேண்டுமா?
  • ஆவண நகல்கள் கேட்டு விண்ணப்பித்தவருக்கு அதைத் தருவதில் நடுவருக்கு இயலாமை இருந்தால், அதனை உங்கள் மனுவின் பின்புறத்தில் எழுதி கொடுத்துவிடுவார்.
  • அந்த மனுவை நீங்கள் Record Clerkகிடம் இருந்து முறைப்படி பெற்றுக் கொள்ளலாம். மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
  • உதாரணமாக குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 156(3)ன் கீழ் தாக்கல் செய்திருந்த வழக்கு ஒன்றில் காவல்துறை ஆய்வாளர் அவர்களின் விசாரணை அறிக்கையின் நகலை நான் கேட்டு Copy Application செய்திருந்தேன்.
  • அந்த அறிக்கையை காவல் ஆய்வாளர் அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இரண்டு நாட்களுக்குள் Copy Application நான் செய்ததால் அதனை வழங்க இயலாது என குறிப்பிட்டு எனது மனுவை நடுவர் அவர்கள் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
  • சில மாதங்கள் கழித்து மீண்டும் விண்ணப்பித்து அவைகளைப் பெற்றேன்.
நடுவர் அனுமதி கொடுத்தால் என்ன செய்ய வேண்டும்?
  • நடுவர் அனுமதி கொடுத்தால், கேஸ்கட்டுகளை வைத்து பராமரிக்கும் அலுவலரை நீங்கள் அணுக வேண்டும்.
  • அவர் ஒரு இரண்டு நாட்கள் கழித்து உங்களை வரச்சொல்லுவார்.
  • அந்த நேரம் சென்றால், நகல் எடுத்து வைக்கப்பட்டுள்ள ஆவணத்திற்கான (ஜெராக்ஸ்) செலவை, உங்களிடம் இருந்து மெமோவில் கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்டுவதன் மூலமாக, பெற்றுக் கொள்வார்.
  • அதன் பிறகு அந்த ஆவண (அனைத்து) நகல்களில் அவர் கையொப்பம் இட்டு, நடுவர் அவர்களிடமும் கையொப்பம் பெற்று அவற்றை உங்களுக்கு அளிப்பார்.
  • அவைகள் உண்மை நகலாகும்.
மாதிரி மெமோ

அமர்வு நீதிமன்றங்களில் நகல் பெற வேண்டுமென்றால், நகல் கண்காணிப்பாளர் Copy Superintendent அவர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

*******************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 28.04.2018 

Thursday, December 21, 2017

வழக்குத் தொடுக்க போறீங்களா?

 
ஒருவர் மீது கிரிமினல் வழக்கு தொடர்வதாக இருந்தால்,
  • முதலில் அருகில் உள்ள காவல் நிலையத்தில், உரிய ஆதாரங்களுடன் அவர்மீது எழுத்து பூர்வமாக புகார் அளிக்க வேண்டும். அதற்குறிய மனு ஏற்பு சான்றிதழை அவர்களிடமிருந்து கண்டிப்பாக பெற வேண்டும்.
  • அவர்கள் உங்கள் புகாரை ஏற்றுக் கொள்ள மறுத்தால், அந்தப் புகாரை உரிய ஆவண நகல்களுடன், நாள் குறிப்பிட்டு, ஒப்புதல் அட்டை இணைத்து   அந்தக் காவல் நிலையத்தின் சார்பு ஆய்வாளர் அவர்களுக்கு பதிவுத் தபால் மூலமாக அனுப்ப வேண்டும். 
  • அந்த தபாலின் நகல் ஒன்றை கண்டிப்பாக நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அதனை அனுப்பியதற்கான ரசீது மற்றும் ஒப்புதல் அட்டை ஆகியவற்றை பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.
  • அதன் பிறகும் உள்ளூர் காவல்நிலையத்தில் உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அந்தப் புகார் அனுப்பிய நாளில் இருந்து முப்பது நாட்கள் கழித்து, அந்த பகுதிக்குரிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு ஒப்புதல் அட்டை இணைத்து ஒரு பதிவுத்தபால் அனுப்ப வேண்டும். 
  • அந்தப் பதிவுத்தபாலில் உள்ளூர் காவல்நிலையத்திற்கு பதிவுத்தபால் மூலம் புகார் அனுப்பிய விபரத்தை தெரிவித்து, அதற்கான ஆதாரங்களின் நகல்களை இணைத்து, உங்கள் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க, உள்ளூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளருக்கு உத்தரவிட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் பணிவுடன் கோர வேண்டும்.
  • மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு எழுதிய தபாலின் நகல் ஒன்றை கண்டிப்பாக நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டும். 
  • மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தபால் அனுப்பியதற்கான ரசீது மற்றும் ஒப்புதல் அட்டை ஆகியவற்றை பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.
  • இதற்குப் பிறகும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றால் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியில்லை என்றால், மேற்கண்ட ஆவண நகல்களை இணைத்து நீங்கள் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்குத் தொடுக்கலாம். 
  • ஆனால், மேற்கண்ட நடைமுறைகளை நீங்கள் பின்பற்றவில்லை என்றாலும், புகாருக்கு உரிய ஆவண நகல்களை இணைக்கவில்லை என்றாலும், நீதிமன்றம் உங்கள் வழக்கை எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்துவிடும்.
******************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 21.12.2017 

Tuesday, August 22, 2017

உங்கள் வழக்கில் நீங்களே வாதாடலாம்!

Image may contain: 1 person, text
உங்கள் வழக்கில் நீங்களே வாதாடலாம்!
எஸ்.பி.ஐ. வங்கி தோற்றது: 
வழக்கறிஞராக மாறி வாதிட்டு வெற்றி பெற்ற டீக்கடைக்காரர்!
டீ விற்றவர் பிரதமர் ஆன கதை அனைவரும் அறிந்ததே. போபாலை சார்ந்த ராஜேஷ் சக்ரே எனும் டீ விற்பவர் வழக்கறிஞராக மாறியுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி அன்று ராஜேஷ் சக்ரே தனது எஸ்.பி.ஐ. வங்கியின் கணக்கில் இருந்து ரூ.10,800 எடுத்திருக்கிறார். மீதி ரூ.9,200 இருந்திருக்கிறது. ஆனால், அடுத்த நாள் தனது வங்கி கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் போனதை பார்த்த ராஜேஷ் சக்ரேக்கு பேரதிர்ச்சி.

இது குறித்து வங்கி அலுவலர்களிடம் புகார் தெரிவித்து இருக்கிறார். அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. மேலும், அவரே கவனக்குறைவாக இருந்ததாக வங்கி பதில் குற்றச்சாட்டு வைத்தது. இதையடுத்து, மும்பையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைமை அலுவலத்தில் ராஜேஷ் முறையிட்டார். அங்கும் அவருக்கு தீர்வு கிடைக்கவில்லை.
இறுதியாக, மாவட்ட நுகர்வோர் வழக்கு தீர்க்கும் மையத்தில் புகார் செய்தார். அங்கேயும் வங்கி ராஜேஷின் பெயரிலேயே குற்றம் இருப்பதாக வாதிட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஐந்தாவது படித்த டீக்கடைக்காரரான ராஜேஷ், வழக்கறிஞர் போல் மாறினார். நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து தானே வாதாடினார்.
ஸ்டேட் பாங்க் தனது சார்பில் திறமையான வழக்கறிஞர்களை வைத்து வாதாடி வந்தது. ஆனால், அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்து ராஜேஷ் சக்ரே, தனது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடினார்.
அதற்கான வெற்றி தற்போது கிடைத்திருக்கிறது. இந்த வருடம் ஜூன் மாதம் 16ஆம் தேதி இந்த வழக்கில் ராஜேஷுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வாரம் எஸ்.பி.ஐ. வங்கி 6% வட்டியுடன் அந்த 9200 ரூபாயை திருப்பி அளித்தது. அது மட்டுமல்லாமல் அவரை கஷ்டப்படுத்தியதற்கு நிவாரணமாக 10,000 ரூபாயும், வழக்கின் செலவிற்காக 2000 ரூபாயும் வழங்கியது.
தனி ஒரு மனிதன் நினைத்தால்கூட  மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியும்! என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.
-கிருத்திகா மாடசாமி-
நன்றி :  விகடன் செய்திகள் (23/08/2015)

Tuesday, August 8, 2017

வழக்கறிஞர்களுக்குப் பதிலாக கட்சிக்காரர் வாதாடலாம்!

வழக்கறிஞர்களுக்குப் பதிலாக கட்சிக்காரர் வாதாடலாம்!
வழக்குரைஞர்கள் இல்லாவிட்டாலும் தொடர்புடையவர்களையே வாதாட அனுமதிக்கலாம்! கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் சுற்றறிக்கை
வழக்குரைஞர்களுக்குப் பதிலாக கட்சிக்காரர்களை வாதாட அனுமதிக்க வேண்டும் என்று கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
வழக்குரைஞர்கள் சட்டத்தில் உயர் நீதிமன்றம் கொண்டு வந்த புதிய திருத்தங்களை எதிர்த்து, ஜூன் 1-ஆம் தேதி முதல் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, அனைத்து நீதிபதிகள் கூட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வழக்குரைஞர்கள் ஆஜராகவில்லை என்றால், வழக்கில் தொடர்புடைய கட்சிக்காரர்களை ஆஜராகி வாதாடவும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதிக்க வேண்டும். அப்போது, வழக்குரைஞர்களுக்கு வழங்கப்பட்ட வக்காலத்து மனுவை ரத்து செய்ய வேண்டும்.
இதை வழக்குரைஞர்கள் யாராவது தடுத்தால், மாவட்ட முதன்மை நீதிபதிக்கு நீதிபதிகள் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்டோர் மீது போலீஸார் வழக்கும் பதிவு செய்யவேண்டும்.
மாவட்ட அளவில் போலீஸ் படையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். எந்த நீதிமன்றத்துக்கும், நீதிபதிக்கும் பாதுகாப்பு தேவை என்றால், அந்த படையை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.
கிரிமினல் வழக்குகளில் கைது செய்யப்படுவோர் சார்பில் ஜாமீன் கேட்டு, அவரது நெருங்கிய உறவினர்கள் நேரடியாக மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்.
சிறையில் இருக்கும் நபர்கள் ஜாமீன் கேட்டு சிறையில் இருந்தபடியே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும், அந்த மனு கையால் எழுதப்பட்டதாக இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டால், சிறையில் இருந்து அழைத்து வர உத்தரவிட வேண்டும்.
கைதிகளிடம் ஜாமீன் மனு மீது காணொலி காட்சி (விடியோ கான்பரன்சிங்) வசதி உள்ள நீதிமன்றங்கள் விசாரணை நடத்தலாம். தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக் குழு நீதிபதிகள், வாரத்துக்கு இருமுறை சிறைகளுக்குச் சென்று, கைதிகளிடம் ஜாமீன் மனுவை பெற்று, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த மனு குறித்து போலீஸ் தரப்பின் வாதத்தை கேட்டறிந்து, தகுந்த உத்தரவை சம்பந்தப்பட்ட நீதிபதிகள் பிறப்பிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமணி நாளிதழ் 05.08.2016

Tuesday, June 20, 2017

தன் வழக்கில் தானே வாதாடி வெற்றி பெற்ற ஆயுள் தண்டணைக் கைதி

தன் வழக்கில் தானே வாதாடி வெற்றி பெற்ற ஆயுள் தண்டணைக் கைதி
ஆயுள் தண்டனைக் கைதி ஒருவர் 17 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வருவதால் தன்னை விடுவிக்கக் கோரி தொடர்ந்த வழக்கில் அவரே வாதாடி வெற்றி பெற்றார். 
இதனால், தமிழக சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் கைதிகள் முன்கூட்டியே விடுதலையாகும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் 1999-ம் ஆண்டு 16 வயது பள்ளி மாணவி பலாத் காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பொறியாளர் பி.வீரபாரதி(44) என்பவருக்கு விருதுநகர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கியது. 
மேல் முறையீட்டில் வீரபாரதிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டது. 
தற்போது அவர் பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், 17 ஆண்டுகள் சிறைவாசம் முடித்துவிட்டதால் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினார். 
இது நிராகரிக்கப்பட்டதால் உயர்நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். 
இந்த மனு முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வீரபாரதி தனக்காக வழக்கறிஞர் வைத்துக்கொள்ளாமல் அவரே வாதாடினார்.
இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவு:
தமிழ்நாடு சிறை விதி 341(3)-ல் 3 ஆண்டுகளுக்கு மேல் சிறை வாசம் அனுபவித்த ஆயுள் கைதி களை முன்கூட்டியே விடுவிக்க பரிசீலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விதி பாலியல் பாலத்காரம், போர்ஜரி, கொள்ளை, பொருளாதாரக் குற்றங்கள், கடத்தல், உணவு கலப்படம், பயங்கர வாதம் மற்றும் மாநில நலனுக்கு எதிரான குற்றங்களில் தொடர்பு உடையவர்களுக்குப் பொருந்தாது.
ஆனால் விதி 341(2)-ல் ஆயுள் தண்டனை கைதிகளில் 10 ஆண்டுகள் சிறைவாசம் முடித்தவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய பரிசீலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
அதே பிரிவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டவர்களை 14 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்ய பரிசீலிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.
இருப்பினும் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ஆயுள் கைதிகள் அனுப்பிய மனுவை விதி 341(3)-ஐ காரணம் காட்டி அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். 
ஆயுள் கைதிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட உரிமை உண்டு என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
வீரபாரதி அளித்த மனுவை நிராகரித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், மனுதாரரின் மனுவை 8 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் உள்துறை செயலருக்கு உத்தரவிட்டனர்.
மேலும், வீரபாரதிபோல் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி மனு அளித்து, அறியாமையால் நீதிமன் றத்தில் வழக்கு தொடராமல் இருக்கும் பிற ஆயுள் கைதிகளின் மனுக்களை நிராகரித்து பிறப்பித்த உத்தரவை உள்துறை செயலர் மறு சீராய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கால் வீரபாரதி மட்டுமின்றி, முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி மனு அளித்துள்ள 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள பிற ஆயுள் கைதிகளும் விடுதலையாக வாய்ப்பு உள்ளது
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 29.10.2016

Wednesday, April 19, 2017

தானாகவே வழக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு - 2

தானாகவே வழக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு - 2


நீதிமன்றத்தில் தனது வழக்கில் தாமே வாதாட வேண்டும் என்று எண்ணுவோரின் கவனத்திற்கு....

துணிவே துணை
உங்களை வரவேற்க யாரும் அங்கு கண்டிப்பாக இருக்க மாட்டார்கள். குற்றம் கண்டு பிடிக்கவும், மட்டம் தட்டவும், வந்த வழியே திருப்பி அனுப்பவும், மாற்று வழி கூறவும் பலர் இருப்பார்கள்.

இவர்களை எல்லாம் தாண்டிதான் நீங்கள் வழக்கை தாக்கல் செய்து வாதாடி வெற்றி பெற வேண்டும். உங்களுக்கு மன தைரியம் என்பது அதிகமாக இருக்க வேண்டும்.

முதன் முதலாகப் போகப் போகிறீர்களா?
நீதிமன்றத்திற்கு வழக்கு தாக்கல் செய்யும் பொழுதுதான் முதன் முதலாக போகப் போகிறீர்களா? அது மிகவும் தவறான செயலாகும். இரண்டு கண்ணையும் கட்டி காட்டில் விட்டது போல இருக்கும். யாரை பார்க்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? என்று மனக்குழப்பம் உண்டாகும்.

அதனால், வழக்கு தாக்கல் செய்வதற்கு முன், நீங்கள் வழக்கு தாக்கல் செய்யப்போகின்ற நீதிமன்றத்திற்கு சில நாட்கள் சென்று அங்கு நடக்கும் செயல்களை நேரில் உற்று கவனியுங்கள். உங்களது மனதில் இருக்கின்ற பெரும்பாலான சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும். மனதில் இருக்கின்ற தயக்கத்தையும் அகற்றும். உங்களுக்கு மிகுந்த தைரியத்தை அது கொடுக்கும்.

இந்திய தண்டணைச் சட்டம்
இந்தப் புத்தகம் தமிழில் கிடைக்கிறது. இதனை சுருக்கமாக ஆங்கிலத்தில் I.P.C. என்பார்கள். அல்லது இ.பி.கோ (இந்தியன் பீனல் கோடு) என்பார்கள். இதனை வாங்கி படியுங்கள். எந்த குற்றத்திற்கு எந்த செக்‌ஷன் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியம். யார் எந்தக் குற்றம் செய்தாலும் இந்தச் சட்டத்தின் அடிப்படையில்தான் தண்டணை வழங்கப்படும்.

குற்ற விசாரணை முறைச் சட்டம்
இதனை சுருக்கமாக ஆங்கிலத்தில் Cr.P.C. என்பார்கள். இந்த புத்தகமும் தமிழில் கிடைக்கின்றது. இந்த சட்டத்தின் அடிப்படையில்தான் நீதிமன்றமும், காவல்துறையும் இயங்குகின்றது. இதனையும் வாங்கி படியுங்கள். உங்களது சந்தேகங்கள் பெருமளவு தீரும். தானாகவே தைரியம் வரும்.

இந்திய சாட்சியச் சட்டம்
இந்த புத்தகமும் தமிழில் கிடைக்கிறது. ஒரு வழக்கை நடத்துவதற்கு சாட்சியும், ஆவணங்களுமே பெரிதும் துணை புரிகின்றது. ஆகவே, இந்த புத்தகத்தையும் வாங்கி கண்டிப்பாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

பழைய வழக்குகள்
உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் வழக்கு நடத்தியிருப்பார்கள். அதன் நகல்களைக் கேட்டு வாங்கி அதில் எப்படி வார்த்தைகள், வாக்கியங்கள் கையாளப் பட்டிருக்கி்ன்றது? என்பதை கவனித்துப் படியுங்கள். அதற்குப் பின்னர் உங்கள் வழக்குகளை எப்படி எழுத வேண்டும் என்பது பற்றி சிந்தியுங்கள். ஒரு வெள்ளைத் தாளில் எழுதிப் பாருங்கள்.

கை காட்டி மரம்
நாங்கள் அனைவருமே ஒரு கை காட்டி மரத்தைப் போலத்தான். உங்களுக்கு வழி காட்டுவோமே தவிர வழக்காடுவதற்கு கூடவர இயலாது. எங்களுக்கு கிடைக்கின்ற ஓய்வு நேரத்தை உங்களுக்காக எந்தவித பிரதிபலனின்றி பயன்படுத்தி வருகிறோம். அதனை புரிந்து கொண்டு எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள்.

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்!
நீங்கள் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் வெற்றியை நோக்கித்தான்! என்பதை மனதார நம்புங்கள். நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன்! என்று அடிக்கடி வாய்விட்டுச் சொல்லுங்கள்.

வாழ்த்துக்கள், வெற்றி நிச்சயம்!
தொடரும்

அன்புடன் செல்வம் பழனிச்சாமி


தானாகவே வழக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு - 1

தானாகவே வழக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு - 1

நாமாகவே வழக்கு தாக்கல் செய்ய வேண்டும், நீதிமன்றத்தில் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் நாமே வாதாட வேண்டும்! என்ற உங்களது தைரியத்திற்கு முதலில் எனது பாராட்டுக்கள். நம்மைவிட நமது வழக்கைப் பற்றி யாருக்கு நன்றாகத் தெரியும்? இப்படிச் செய்வதனால், எந்த ஒரு வழக்கும் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வரும். வாய்தாக்கள் வாங்க வேண்டியதில்லை. வழக்குகளும் நீதிமன்றத்தில் தேங்க வேண்டியதில்லை. நமது நோக்கத்தை  வேறு எவரும் சிதைக்க முடியாது.  

இது போன்று நான் முயற்சி செய்யும் போது சில தவறுகள் செய்திருந்தேன். நீதிபதியால் தவறுகள் குறிப்பிடப்பட்டு எனது மனு என்னிடமே திருப்பி அளிக்கப்பட்டது. தவறுகளை திருத்தி மீண்டும், மீண்டும் நீதிமன்றத்தில் நாம் சமர்ப்பிக்கலாம் என்று, வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும், நமது நேரம் அதனால் வீணாவதை யாராலும் தடுக்கமுடியாது. மேலும், நமது வழக்கின் போக்கு, திசை மாறவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, தவறு எதுவும் இல்லாமல் தாக்கல் செய்ய வேண்டும். 

நேரடியாக தன்னிடம் வருபவர்களை (சில வழக்குகள் தவிர) நீதிமன்றம் விரும்புவதில்லை. துறை ரீதியாக கீழிருந்து மேல் வரைக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளதா? என்பதை முதலில் அது கவனத்தில் எடுத்துக் கொள்கிறது.  அவ்வாறு புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நீங்கள் தாராளமாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்.  

காவல்துறை சம்பந்தப்பட்ட புகாராக இருந்தால், முதலில் நீங்கள் வசிக்கும் பகுதிக்குரிய காவல்நிலையத்தில் கண்டிப்பாக புகார் அளிக்க வேண்டும். நேரடியாக எஸ்.பி. (மாவட்ட காவல் கண்காணிப்பாளர்) அலுவலகத்திற்கு சென்று புகார் அளிக்காதீர்கள். புகார் அளிப்பதோடு மட்டுமல்லாமல் அதற்குரிய “புகார் மனு ஏற்புச் சான்றிதழ்” கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு வேளை காவல்நிலையத்தில் அதனை தர மறுத்தால், ஒப்புதல் அட்டை இணைத்த பதிவுத்தபாலில் உங்கள் புகாரை அவர்களுக்கு அனுப்பி அதற்குரிய  ஆதாரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். 

நீதிமன்றத்தில் இது மிகவும் முக்கியமானதாகும். இது இல்லை என்றால் தங்கள் மனு திருப்பி அளிக்கப்படும்.  

உள்ளூர் காவல்நிலையத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதன்பிறகு நீங்கள் எஸ்.பி. (மாவட்ட காவல் கண்காணிப்பாளர்) அலுவலகத்திற்கு சென்று புகார் அளிக்கலாம். அல்லது ஒப்புதல் அட்டை இணைத்த பதிவுத்தபாலில் உங்கள் புகாரை அவர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.  

அவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலோ அல்லது எடுத்த நடவடிக்கை உரியதாக இல்லை என்றாலோ நீங்கள்  காவல் துறை துணைத்தலைவர் (DIG) அலுவலகத்திற்கு சென்று புகார் அளிக்கலாம். அல்லது ஒப்புதல் அட்டை இணைத்த பதிவுத்தபாலில் உங்கள் புகாரை அவர்களுக்கு அனுப்பி வைக்கலாம். 

மேற்கண்டவாறு செய்தும் நடவடிக்கை இல்லை என்றாலோ அல்லது எடுத்த நடவடிக்கை உரியதாக இல்லை என்றாலோ நீங்கள் அதற்குரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தை அணுகலாம். ஆதாரங்கள் மிகமிக அவசியம்.

நாம் அதிகமாக அணுகுகின்ற துறை என்பதால் மேலே காவல்துறையைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன்.  மற்ற துறைகளுக்கும் இந்த நடைமுறையையே பின்பற்றி அந்தந்த துறை அதிகாரி மற்றும் மேலதிகாரிகளை அணுகுங்கள்.  

தொடரும்.
அன்புடன் செல்வம் பழனிச்சாமி

Saturday, February 25, 2017

தானே ஆஜராகி வாதாடுபவர்கள் கவனத்திற்கு.....


தானே ஆஜராகி வாதாடுபவர்கள் கவனத்திற்கு.....
நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிடும் மனுதாரருக்கு சட்ட அறிவு தேவை: 
உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை:
'வழக்குகள் தொடர்பான நீதிமன்றத்தில் மனுதாரர்களே ஆஜராகி வாதிடும்போது சட்டத்திற்குட்பட்டு எதை பேச வேண்டுமோ அதை வாதிட வேண்டும். சட்டம் பற்றி அறிந்திருக்க வேண்டும்; தெரியாது எனக்கூறி தப்பித்துக் கொள்ளக்கூடாது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்துார் கணபதிராஜ். இவர், மாசிலாமணி என்பவருக்குச் சொந்தமான வீட்டில் வசித்து வந்தார். வீட்டை காலி செய்ய, வாடகை கட்டுப்பாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் கணபதிராஜ் மனு செய்தார். 
அம்மனு பரிசீலனைக்கான ஆரம்ப கட்ட (எஸ்.ஆர்.,) எண் வழங்கப்பட்டது. பிரதான எண் வழங்கப்படவில்லை. இம்மனு நிலை நிற்கத்தக்கதா? என்ற தலைப்பின் கீழ் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. 
நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு விசாரித்தார். 
மனுதாரர் ஆஜராகி,“கீழமை நீதிமன்றம் சரியாக விசாரிக்கவில்லை. சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை சரியாக நடத்தவில்லை,” என்றார்.
நீதிபதி: 
ஏற்கனவே கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தபோது, அதை எதிர்த்து மனுதாரர் தாக்கல் செய்த மனுவை இந்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் பின் கீழமை நீதிமன்றம் வீட்டை காலி செய்யுமாறு உத்தரவிட்டது. 
ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கை மறைத்து, மனுதாரர் இங்கு மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் உரிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டும்.
பலமுறை மனுதாரர் ஆஜராகியும், இம்மனு நிலைத்து நிற்கத்தக்கதல்ல என இந்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
சட்டம் பற்றி தெரியாமல் இருப்பது தவறில்லை. ஆனால், மனுதாரரே ஆஜராகி வாதிடும்போது, சட்டம் பற்றி அறிந்திருக்க வேண்டும். சட்ட உதவி மையத்தை அணுகி, அதன் சேவையை பயன்படுத்தியிருக்கலாம். 
மனுதாரரைப் போல் வழக்குகள் தொடர்பாக மனுதாரர்களே ஆஜராகி வாதிடும்போது எதை வேண்டுமானாலும் பேசலாம் என கருதுகின்றனர். 
சட்டத்திற்குட்பட்டு எதை பேச வேண்டுமோ அதையே வாதிட வேண்டும். சட்டம் தெரியாது எனக்கூறி தப்பித்துக் கொள்ளக்கூடாது.
மனுதாரரின் பொருளாதார நிலையை கருதி, கருணை அடிப்படையில் அவருக்கு அபராதம் விதிப்பதை தவிர்க்கிறேன். 
இனியாவது சரியான சட்ட வழிமுறைகளை மனுதாரர் பின்பற்றுவார் என இந்நீதிமன்றம் நம்புகிறது. 
மனு விசாரணைக்கு உகந்ததல்ல. மனுவை நிராகரிக்கிறேன், என்றார். 
நன்றி : தினமலர் நாளிதழ் - 25.02.2017

Wednesday, February 8, 2017

அரசுக்கு மனு அனுப்பி விட்டு மறுநாளே வழக்கு தொடுப்பதா?


அரசுக்கு மனு அனுப்பி விட்டு மறுநாளே வழக்கு தொடுப்பதா?

சென்னை: பொது இடங்களில் புகை பிடிப்பதை தடுக்கவும், கல்வி நிலையங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்கும் கடைகளை மூடவும் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை, பள்ளிக்கரணையைச் சேர்ந்த நடராஜன் தாக்கல் செய்த மனுவில், 'பொது இடங்களில் புகை பிடிக்கவும், கல்வி நிலையங்கள் அருகே சிகரெட் விற்கவும் விதிக்கப்பட்ட தடையை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்; புகை பிடிப்பவர்களுக்கு என, தனியாக ஒரு பகுதியை ஒதுக்க வேண்டும். விதிமுறை, சட்டத்தை மீறுபவர்களை தண்டிக்க வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், அரசு பிளீடர் எம்.கே.சுப்ரமணியன் ஆஜரானார். 

முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
சட்ட விதிகள் மீறப்பட்டதற்கான ஆவணங்கள் எதுவும், தாக்கல் செய்யப்படவில்லை. சட்டம் அமலில் இருப்பதாகவும், மீறல் நடப்பதாகவும் மனுதாரர் கூறியுள்ளார். 

ஜன., 30ல், 'இ - மெயில்' மூலம் அரசுக்கு மனு அனுப்பியிருப்பதாக கூறியுள்ளார். மறுநாளே, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். 

அதற்கு முன், அரசுக்கு எந்த மனுவும் அனுப்பவில்லை. இத்தகைய வழக்குகளில் வேறு என்ன கூற முடியும்; மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 07.02.2017