disalbe Right click

Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Thursday, July 4, 2019

அரசு மருத்துவர்கள் வெளிநாடு செல்வதற்கு முன்

அரசு மருத்துவர்கள் வெளிநாடு செல்வதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?
தமிழக அரசு மருத்துவ பணியில் பணிபுரியும் மருத்துவர்கள் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் அவர்கள் பணிபுரியும் இயக்குநரகம் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையிடம் அனுமதி (No Objection Certificate) பெற்றுதான் வெளிநாடு செல்ல வேண்டும்.
அவ்வாறு NOC பெறுவதற்கான படிவங்களின் தொகுப்பு இந்த லிங்கில் இணைக்கப்பட்டுள்ளது.
.படிவங்கள் அனைத்தும் zip பைலாக உள்ளதால், லேப்டாப் உதவியுடன் Google Drive-ல் இருந்து download செய்து கொள்ளவும்.
குறிப்பு : இந்த படிவங்களை தேவைக்கேற்ப சற்று மாற்றியமைத்து, மற்ற துறையில் பணிபுரியும் பணியாளர்களும் உபயோகப்படுத்தி கொள்ளலாம்.

நன்றி : முகநூல் நண்பரும் வழக்கறிஞருமான Leenus LeoEdwards 

Sunday, January 13, 2019

ரயில் பயணிகள் வைத்திருக்க வேண்டிய வாட்ஸ் அப் எண்

ரயில் பயணிகள் வைத்திருக்க வேண்டிய வாட்ஸ் அப் எண்
ரயில் பயணிகளுக்கு ஓர் அன்பான அறிவிப்பு! புதிய வாட்ஸ்அப் நம்பரை குறித்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் பயணம் செய்யப் போகின்ற ரயிலின் வருகையை துல்லியமாக தெரிந்து கொள்ள இந்திய ரயில்வே துறையானது புதிய வாட்ஸ்-அப் எண் ஒன்றை அறிவித்துள்ளது.
'வாட்ஸ் அப்' மூலம் ரயிலின் வருகை குறித்து பயணிகள் அறிந்துக்கொள்ள '7349389104' என்ற மொபைல் எண்ணை ரயில்வேத்துறை அறிமுகபடுத்தியுள்ளது.
மேற்கண்ட எண்ணை உங்கள் ஆண்டிராய்டு செல்போனில் குறித்துக் கொள்ள வேண்டும். அதன் பின் வாட்ஸ்-அப்பில் சென்று சேமித்து வைத்துள்ள அந்த 7349389104 எண்ணிற்கு பயணிகள் தாங்கள் பயணம் செய்ய இருக்கும் ரயிலின் எண்ணை அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால், பயணிகளின் வாட்ஸ் அப்பில் தாங்கள் குறிப்பிட்ட  ரயில் எண், அதன் பெயர், எப்போது அது புறப்பட்டது?எந்த ரயில் நிலையத்தை அது தாண்டி உள்ளது?அடுத்துள்ள ரயில் நிலையத்தை அது எப்போது வந்தடையும்? ஆகிய தகவல்களை அடுத்த சில நொடிகளில் குறுச்செய்திகளாக பெற முடியும்.
இந்தியன் ரயில்வே துறை, 'மேக் மை ட்ரிப்' உடன் இணைந்து இந்த சேவையை அளிக்கிறது. அதனால் நீங்கள் வாட்ஸ் அப் மூலமாகவே உங்களுக்குத் தேவையான ரயில் பயணம் குறித்த அனைத்து விவரங்களையும் நேரடியாக தெரிந்து கொள்ள முடியும்.

Friday, March 9, 2018

முன்பதிவு ரயில் டிக்கெட்

மற்றொருவருக்கு மாற்ற என்ன செய்ய வேண்டும்?
ஒரு பயணத்திற்காக ரயில் டிக்கட் முன்பதிவு செய்திருப்போம். ஏதோ ஒரு காரணத்தால் அந்தப் பயணத்தை ரத்து செய்ய வேண்டியதிருக்கும். அந்த நேரத்தில்  பெரும்பாலானோர்  அந்த  டிக்கெட்டை ரத்து செய்து விடுவோம்.  அல்லது  அதை அப்படியே விட்டுவிடுவோம்.
முன்பதிவு செய்யப்பட்ட ரயில்வே டிக்கெட்டை நாம் வேறொருவர் பெயருக்கு மாற்றிக் கொள்ள தற்போது முடியும்! 
அதற்கு என்ன வழிமுறை என்பதைப் பற்றி கீழே காண்போம். 
ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ள புதிய முறை
எந்தவிதமான தொகை பிடித்தமும் இல்லாமல்  முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை மற்றொருவருக்கு எளிதாக  மாற்றிக்கொள்ளும் முறையை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்குரிய வழிகாட்டி முறைகளை கீழே காணலாம்.
  ரயில் டிக்கெட்டை யாருக்கு மாற்ற வேண்டும்பெயரை மாற்ற வேண்டும்இருக்கைபடுக்கையை மாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் கொண்டமுக்கிய ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்யும் அலுவலகங்களில் உள்ள தலைமை கண்காணிப்பாளரை நாம் முதலில் அணுகவேண்டும்.
❤ முன்பதிவு செய்த நீங்கள் அரசு ஊழியராக இருந்தால், பயணம் செய்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக எழுத்துப்பூர்வமாக ஒரு கடிதத்தை எழுதி அதில் யார் பெயருக்கு டிக்கெட்டை மாற்ற வேண்டும் என்பதை தெரிவித்தால் போதுமானது.  பயணச்சீட்டு   மாற்றித் தரப்படும்.
 நீங்கள் உங்களது முன்பதிவு டிக்கெட்டை உங்களது குடும்ப உறுப்பினர்களான தாய், தந்தை, சகோதரர், சகோதரி, மகன்மகள், மனைவி, கணவர் ஆகியோருக்கு மாற்ற விரும்பினால், பயணத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக, கடிதம் மூலம் முன்பதிவு நிலைய தலைமை கண்காணிப்பாளரிடம் தெரிவித்தால் போதுமானது.  பயணச்சீட்டு   மாற்றித் தரப்படும்.
ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து மாணவர்கள் சுற்றுலா செல்வதற்கு முன்பதிவு செய்திருக்கும் போது, அதில் சில மாணவர்கள் திடீரென வரவில்லை என்ற சூழ்நிலையில்  அதற்கு பதிலாக வேறு மாணவர்களை அழைத்துச் செல்லலாம் என்று பள்ளி / கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தால். பயணத்தின் 48 மணி நேரத்துக்கு முன்பாக, கல்வி நிறுவனத்தில் இருந்து வேண்டுகோள் கடிதம் ஒன்றை பெற்று வந்து முன்பதிவு நிலைய தலைமை கண்காணிப்பாளரிடம் கொடுத்து பெயர்மாற்றம் செய்து பயணிக்கலாம்
ஒரு திருமணத்துக்காகவோ அல்லது ஒரு நிகழ்ச்சிக்காகவோ மொத்தமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மற்றும் பள்ளி / கல்லூரிகளில் N.C.C or N.S.S பிரிவு மாணவர்களும் பயணத்துக்கு 24 மணிநேரத்துக்கு முன்பாக முன்பதிவு   நிலைய    தலைமை  கண்காணிப்பாளரிடம் கொடுத்து கடிதம் எழுதிக் கொடுத்து   மாற்றிக்கொள்ள முடியும்.
************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 10.03.2018 

Friday, March 2, 2018

ரயில் டிக்கெட் முன்பதிவு

பெண் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!
தனியாக பயணம் செய்ய ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பெண் பயணிகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
வசதியாக, பாதுகாப்பாக மற்றும் பயணச் செலவு குறைவாக இருப்பதால் இப்போது பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஆண்களது துணை இல்லாமல் தனியாகவோ அல்லது குழந்தைகளுடனோ அல்லது குழுவாகவோ பயணம் செல்வதற்கு பெண்களுக்கு மிகவும் ஏற்ற ரயில் பயணத்திற்கு டிக்கட் கிடைப்பது அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்து வந்தது. 
படுக்கை வசதி கொண்ட ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் 6 இடங்கள்
தற்போது அந்த சிரமத்தை போக்குவதற்காக இரயில்வே நிர்வாகம் புதிய முடிவை அறிவித்துள்ளது. ரயில் பெட்டிகளில் ஒதுக்கப்படாத படுக்கைகளை, பெண் பயணிக்கோ அல்லது பெண் பயணிகளின் குழுக்களுக்கோ முதலில் ஒதுக்குவது என்று முடிவு செய்திருக்கிறது. இதனால், படுக்கை வசதி கொண்ட ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் 6 படுக்கை வசதி கொண்ட இருக்கைகளை பெண் பயணிகளுக்காக ஒதுக்குவதற்கு  ரயில்வே வாரியம் தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனால், "இந்த ஆறு படுக்கை வசதி கொண்ட இருக்கைகளும், தனியாக பயணிக்கும் பெண் பயணிகளுக்கோ அல்லது ஒரே PNR எண்ணில் பதிவு செய்யப்படும் பெண் பயணிகளுக்கோ ஒதுக்கப்படும். ரயில் பயணத்தின் முதல் சார்ட் தயாரிக்கப்படும் வரை 6 படுக்கை வசதிகளும் முன்பதிவு செய்யப்படாத நிலையில், அது வெயிட்-லிஸ்ட்டில் இருக்கும் பெண் பயணி அல்லது குழுவாக பயணிக்கும் பெண் பயணிகளுக்கு ஒதுக்கப்படும். அதற்கடுத்ததாக 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கையினை ரயில்வே வாரியம் கடந்த 15.02.2018ம் தேதி மத்திய ரயில்வே தகவல் மையம் (சிஆர்ஐஎஸ்) மற்றும் ஐஆர்சிடிசிக்கு அனுப்பியுள்ளது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் இதற்குத் தேவையான வகையில் மாற்றங்களை செய்யப்படுவதற்கு ஏதுவாக இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
**************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 02.03.2018