disalbe Right click

Showing posts with label கோரப்படாத தொகைகள். Show all posts
Showing posts with label கோரப்படாத தொகைகள். Show all posts

Friday, January 12, 2018

கோரப்படாத மியூச்சிவல் ஃபண்ட்

பல கோடி ரூபாய்கள் - கேட்பதற்கு ஆளில்லை!  
ஒருவருடைய தந்தையோ, தாயோ அல்லது கணவரோ, மனைவியோ மியூச்சிவல் ஃபண்ட்டில் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்குத் தெரியாமல் முதலீடு செய்திருப்பார்கள். சில நேரங்களில் முதலீடு செய்தவர்கள் இறந்த பிறகுதான் அவர்களது குடும்பத்தினர்களுக்கு இந்த விபரம் தெரிய வரும். அதற்குரிய ஆவனங்கள் இருக்காது. என்ன செய்வது? என்று தெரியாமல் அதனை பெறாமலேயே விட்டு விடுவார்கள். முதலீடு செய்தவர்களும்கூட உரிய ஆவணங்களை தொலைத்துவிட்டு இதனைக் கோராமல் விட்டுவிடுவதும் உண்டு.  இதைப் போன்று பெறப்படாமல் இருக்கும் தொகை பல கோடிகள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
முதலீட்டாளர்கள் அல்லது வாரிசுதாரர்கள் இதனைப் பெற என்ன செய்ய வேண்டும்? 
முயூச்சிவல் ஃபண்டில் முதலீடு செய்தவர்கள் என்றால்,  நேரடியாக முதலீடு செய்த விவரத்தை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் அல்லது அந்த நிறுவனத்தின் அதிகாரபூர்வ ஏஜண்ட் மூலமாக தங்களது பான் கார்டு, போலியோ எண், பிறந்த தேதி, முகவரி, செல்போன் எண், ஆதார் அடையாள அட்டை எண்  ஆகியவற்றைக் கொடுத்து இலகுவாக முதலீடு செய்த விவரத்தைத் தெரிந்துகொள்ள முடியும்
அதனை தெரிந்து கொண்ட பிறகு அந்த முதலீட்டாளர் வழக்கமாக மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை விற்பனை செய்வது போல  விற்பனை செய்துவிடலாம். முதலீடு செய்தவரின் முகவரி, வங்கிக் கணக்கு விவரம், செல்போன் ஆகியவற்றில் ஏதாவது மாற்றம் இருந்தால், அதை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கு முறைப்படி எழுத்து மூலமாக தெரிவித்து தங்களுடைய முதலீட்டுத் தொகையைத் திரும்பப் பெறலாம்.
கோரப்படாத டிவிடெண்ட் தொகை
கோரப்படாத  டிவிடெண்ட் தொகையையும் இதேமுறையில் முதலீட்டாளர்கள் பெற முடியும்அதாவது, டிவிடெண்ட் தொகை தன்னால் க்ளைம் செய்யப்படாததற்கான காரணத்தை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கு எழுத்து மூலமாகத் தெரிவித்து மேற்கூறிய சான்று நகல்களையும் சமர்ப்பித்து டிவிடெண்ட் தொகையை க்ளைம் செய்யலாம்.  
வாரிசுதாரர் என்றால் என்ன செய்ய வேண்டும்?
முதலீட்டாளரின் வாரிசுதாரர் என்றால்,, முதலீட்டாளர் இறந்த விவரத்தையும் அதற்கு ஆதாரமாக இறப்புச் சான்றிதழ் நகலையும், முதலீட்டாளரின் வாரிசு என்பதற்கு ஆதாரமாக வாரிசுச் சான்றிதழ் நகலையும், முகவரிச் சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் ஆகியவற்றின் நகலையும் கொடுத்து க்ளைம் செய்ய முடியும்.
இதற்கான விண்ணப்பப் படிவம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், டெபாசிட்டரி ஆகியவற்றின் https://www.sbimf.com இணையதளத்தில் உள்ளது. இதை டவுன்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து அந்த நிறுவனத்திடம் அளித்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மற்றும் டிவிடெண்ட் தொகையை க்ளைம் செய்துகொள்ளலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுதாரர்கள் இருந்தால்....?
முதலீட்டாளரின் வாரிசுதாரர்களாக ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருந்தால், அவர்களுக்குள் யாராவது ஒருவரைத் தேர்தெடுத்து, அந்தத் தொகையை அவரிடம் கொடுப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்று மீதமுள்ள அனைவரும் 20 ரூபாய் முத்திரைத் தாளில்  தங்களது கையொப்பமிட்டு, அதில் நோட்டரி பப்ளிக் வழக்கறிஞரி கையெழுத்து  மற்றும் முத்திரை பெற்று அதனை அந்த நிறுவனத்திடம் அளித்து     மியூச்சுவல்  ஃபண்ட்  முதலீடு மற்றும் டிவிடெண்ட்   தொகையை   க்ளைம்  செய்து, அதன் பிறகு அதனை தங்களுக்குள் பங்கு பிரித்து வைத்துக் கொள்ளலாம்.
****************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 21.01.2018