disalbe Right click

Showing posts with label கட்டுமானம். Show all posts
Showing posts with label கட்டுமானம். Show all posts

Monday, December 2, 2019

கட்டுமானத்துறையினர் பயன்படுத்தும் வார்த்தைகள்

கட்டுமானத்துறையினர் பயன்படுத்தும் வார்த்தைகள்
கட்டுமானத்துறையினர் கட்டிடம் சம்பந்தமாக நம்மிடம் பேசும் வார்த்தைகளில் பல நமக்குப் புரிவதில்லை.  அவர்கள் பயன்படுத்துகின்ற ஆங்கில சொற்களையும், அதற்கான விளக்கங்களையும் கீழே காணலாம்.
Related image
Carpet area  கார்பெட் ஏரியா 
இது ஒரு கட்டிடத்தினுள் பயன்படுத்தக்கூடிய பகுதியை குறிக்கும் சொல்லாகும். இது ஒரு கட்டிடத்தின் வெளிப்புற மற்றும் உட்புறங்களில் இருக்கின்ற நான்கு சுவர்களுக்கிடையே இடம்பெற்றுள்ள காலி இடத்தை கார்பெட் ஏரியா என்று சொல்கிறார்கள்.  கார்பெட் ஏரியாவுடன் சுவர்களின் கனத்தைச் சேர்த்து கிடைக்கும் அளவை  பிளின்த் ஏரியா plinth area என்று சொல்வார்கள்.
Built-up area  கட்டடப்பரப்பு
உள்புற மற்றும் வெளிப்புறச் சுவர்களில் இருந்து தரை, மாடிப்பகுதி மற்றும் பால்கனியில் உள்ள வீட்டின் சதுர அங்குலத்தை இந்த வார்த்தை குறிக்கிறது. , இது பொதுவாக, கார்பெட் ஏரியாவை விட 10-20 சதவிகிதம் கூடுதலாக இருக்கும்.
Super built-up area  சூப்பர் பில்ட் அப் ஏரியா 
பிளின்த் ஏரியா அளவில் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பதே சூப்பர் பில்ட்அப் ஏரியா. அதாவது பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நடைபாதை, மாடிப் படிக்கட்டு, லிஃப்ட் அறை, மோட்டார் அறை எல்லாம் சேர்ந்தது பில்ட் அப் ஏரியா. இந்த அளவுகள் பிளின்த் ஏரியாவுடன் சேர்க்கப்பட்டு, சூப்பர் பில்ட் அப் ஏரியா கணக்கிடப்படும்.

ஃப்ளோர் ஸ்பேஸ் இண்டக்ஸ் (Floor space index)
பில்ட் அப் ஏரியாவுக்கும், கட்டமைப்பிற்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட பகுதிக்கும் இடையில் இருக்கும் இடத்தை இது குறிக்கிறது. FSI உயர்ந்தால், கட்டும் பகுதி கூட பெரியதாக இருக்கும். இது Floor Area Ratio என்றும் அழைக்கப்படுகிறது.
ஒரு சதுர அடி விலை (Per square foot rate)
இது பில்டர் மூலம் நிர்ணயிக்கப்பட்ட சூப்பர் கட்டடப் பகுதியின் சதுர அடி விகிதத்தை குறிக்கும் சொல்லாகும். விற்பனையாளருக்கு பிளாட் விலையைக் குறிப்பிடுவதற்கு பில்டரால் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். இந்த விகிதம் கார்பெட் ஏரியா மற்றும் சூப்பர் பில்ட்அப் ஏரியா பகுதி உள்ளடக்கியதாகும்,
ஃப்ரீஹோல்ட் பிராபர்டி (Freehold property)
ஒரு சொத்தின் உரிமையாளர் அந்தச் சொத்துக்களை வேறு நபரிடம் விற்க அல்லது மாற்றுவதற்கான உரிமையை எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் மற்றவர் பெயரில் மாற்றி தருவதை குறிக்கும் சொல்.
கன்வேயன்ஸ் (Conveyance)
ஒரு சொத்தை வாங்குபவருக்கு ஆவணத்தின் உரிமையாளர், உரிமைகள், அந்த சொத்து சம்பந்தமான அனைத்து சொத்துரிமை நலன்களையும் வெளிப்படுத்தும் செயல்முறையை இது குறிக்கிறது.
கிரெடிட் ஸ்கோர் (Credit score)
இது ஒரு தனிநபரின் கடன் தகுதி அளவீடு ஆகும், இது புள்ளிவிவர அடிப்படையில் அவரது / அவரது கடந்த கால பதிவுகளிலிருந்து நிதிசார் அமைப்புகளுடன் இருக்கும் தொடர்பை பற்றி தெரிவிக்கும்.
வசிப்பதற்கான சான்றிதழ் (Certificate of occupancy)
ஒரு கட்டிடம் உள்ளூர் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு கட்டப்பட்டுள்ளது என உறுதிசெய்த பிறகு, ஒரு வீட்டின் உரிமையாளருக்கு உள்ளூர் நகராட்சியால் வழங்கப்படும் ஒரு முக்கியமான ஆவணமாகும்.
ஒதுக்கீட்டு கடிதம் (Allotment Letter)
குடியிருப்பு பகுதியில் வீடு வாங்குபவருக்கு ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி அல்லது அபார்ட்மெண்ட் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பிலடர் கொடுக்கும் கடிதத்தை குறிப்பதாகும்.
தொடக்க சான்றிதழ் (Commencement certificate)
ஒரு இடத்தில் கட்டிடம் எழுப்புவதற்கு முன் நகராட்சி / மாநகராட்சியில் அவசியம் பெற வேண்டிய சான்றிதழாகும். அடுக்குமாடி குடியிருப்பை முன்பதிவு செய்கிறீர்கள் என்றால், கட்டுமான நிறுவனத்தால் இந்த சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின் ஒப்பந்தம் செய்து கொள்வது நல்லது.
பொதுவான பகுதிகள் (Common areas)
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு அல்லாது பொதுவாக அமைந்திருக்கும் இடம். அடுக்குமாடி குடியிருப்புகளில் பெரும்பாலும் இந்த இடங்களில் விளையாட்டு மைதானம், நீச்சல் குளம் போன்ற பொது உபயோகத்திற்கான வசதிகள் இருக்கும். குடியிருப்பவர்களிடமிருந்து பொதுவான பரமாரிப்பு கட்டணம் வசூலிக்கப்பட்டு இது அடுக்குமாடி குடியிருப்பு சங்கங்களால் நிர்வாகிக்கப்படும்.
உத்திரவாத சான்றிதழ் (Encumbrance certificate)
கட்டிடம் எழுப்பபடவிருக்கும் அந்த நிலம் எந்த வித வில்லங்கமும் இல்லாத இடம் என்பதை உறுதிபடுத்தும் சான்றிதழாகும்.
முத்திரை வரி (Stamp duty)
அரசு ஒவ்வொரு சொத்துக்கும் முத்திரை தாள் வழியில் வரி வசூலிக்கும். இது விளைநிலம், விளையாத நிலம், தனி வீடு, அடுக்குமாடி குடியிருப்பு என அனைத்து வகை சொத்துகளுக்கும் பொருந்தும். இந்த வரியை சொத்தை வாங்குபவர்கள் செலுத்த வேண்டும்.


Wednesday, September 19, 2018

பிரிக்கப்படாத மனை

அடுக்கு மாடி கட்டிடங்களில் UDS என்பது பிரிக்கப்படாத மனை என்பதைக் குறிக்கும். அதாவது UnDivided Share என்று அர்த்தம்.
உதாரணமாக 2,400 சதுர அடி கொண்ட மனை பரப்பில் 500 சதுர அடியில் இரண்டு வீடுகள் (500*2=1000), 750 சதுர அடியில்  (750*4=3000) நான்கு வீடுகள் என மொத்தம் 4,000 சதுர அடி பரப்பளவில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதாவது, , 2,400 சதுர அடி பரப்பில் உள்ள மனையில், 4,000 சதுர அடியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதன் விகிதம் 2400/4000 = 0.6 ஆகும். இதனைக் கொண்டு நீங்கள் வாங்குகின்ற வீட்டின் சதுர அடியால் பெருக்கினால் அதுதான் அதற்கான பிரிக்கப்படாத மனை.
அதாவது 500 சதுர அடி வீட்டுக்குப் பிரிக்கப்படாத மனையின் அளவு (UDS) 300 சதுர அடி. 750 சதுர அடி வீட்டுக்குப் பிரிக்கப்படாத மனையின் அளவு 450 சதுர அடி.
பிரிக்கப்படாத மனையின் அளவு சரியா என்பதைக் கண்டுபிடிக்க மொத்தம் உள்ள ஃபிளாட்டுகளுக்கான பிரிக்கப்படாத மனையின் அளவைக் கூட்ட வேண்டும். அப்படி கூட்டும் போது மொத்த மனையின் பரப்பு வர வேண்டும்.
உதாரணமாக மேலே நாம் பார்த்த கணக்குப்படி 500 சதுர அடி உள்ள இரண்டு வீடுகளின் பிரிக்கப்படாத மனையின் பரப்பு 600 (300*2) சதுர அடி. 750 சதுர அடி உள்ள நான்கு வீடுகளின் மொத்த பிரிக்கப்படாத மனையின் பரப்பு 1,800 (450*4) சதுர அடி. இரண்டையும் கூட்டினால் மொத்தம் பிரிக்கப்படாத மனையின் பரப்பு 2,400 சதுர அடி வந்துவிட்டதா? கணக்குச் சரியாக வராவிட்டால், அதில் குறைபாடு உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.
***************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 19.09.2018