disalbe Right click

Thursday, June 7, 2018

இனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்!

இனிமேல், சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம்!
பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு
அசையா சொத்துகளின் சம்பந்தமாக பதிவுத்துறையில், பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் விக்கிரயம், உரிமை மாற்றம், தானம், ஏற்பாடு (செட்டில்மென்ட்), அடமானம், பொது அதிகாரம் போன்றவற்றிற்காக வழங்கும் ஆவணங்களில், தொடர்புடைய சொத்தின் மீதான ஆவணதாரரின் உரிமையானது உறுதி செய்யப்பட வேண்டும். அதனால், இனிமேல் சொத்தின் முன்பதிவு ஆவணம் (தாய்பத்திரம் ஒரிஜினல்), பூர்வீக சொத்தாக இருந்தால் பட்டா முதலிய வருவாய் பதிவுருக்களை பதிவு அலுவலர்களிடம் ஆவணதாரர் கட்டாயமாக வழங்க வேண்டும்.
பதிவு அலுவலர்களும் மேற்கண்ட ஆவணங்களை வலியுறுத்திப் பெறுவதோடு மட்டுமல்லாமல் இவற்றை பரிசீலித்து மன நிறைவு அடைந்த பின்னரே பதிவுக்கு ஏற்க வேண்டும்.
தாய்பத்திரம் ஒரிஜினல் காணாமல் போயிருந்தால்....?
ஒரு சொத்து பதியப்படும்போது, அசல் ஆவணம் ஏற்கனவே காணாமல் போயிருந்தால், அது சம்பந்தமாக உரிய காவல் நிலையத்தில் புகார் அளித்து பெறப்பட்ட சிஎஸ்ஆர் நகல், கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்று வழங்கப்பட்டிருந்தால் அந்தச் சான்று, இதுதொடர்பாக நாளிதழில் கொடுக்கப்பட்ட விளம்பரம் ஆகியவற்றின் நகலை பதிவு அலுவலரிடம் அளிக்க வேண்டும். இதை குறிப்பு ஆவணமாக பதிவு அலுவலர் ஸ்கேன் செய்ய வேண்டும்.
ஒருவேளை அது பூர்வீக சொத்தாக இருந்தால் சொத்தின் உரிமை குறித்த பட்டா, வீட்டுவரி ரசீது போன்ற ஆவணங்களை அசல் ஆவணத்துடன் இணைத்து, ஸ்கேன் செய்து பதிவு அலுவலர் பதிவு செய்ய வேண்டும்.
தாய் பத்திரங்களை பதிவாளர் சரிபார்த்த பின்னர், அதில் அதுபற்றிய குறிப்பு, சரிபார்க்கப்பட்ட நாள் மற்றும் கையொப்பம் இடவேண்டும். 
இது 11.06.2018 திங்கள் கிழமையிலிருந்து நடைமுறைக்கு வருகிறது
இதனால், பத்திரப்பதிவில் முறைகேடுகள் குறையலாம் என எதிர்பார்க்கலாம்.
பதிவுத்துறைத் தலைவர் அவர்களின் சுற்றறிக்கை நகல்



*************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 08.06.2018 

No comments:

Post a Comment