disalbe Right click

Friday, April 10, 2015

என் பேஸ்புக் அக்கவுண்ட் ரகசியமானதா?


என் பேஸ்புக் அக்கவுண்ட் ரகசியமானதா?
*******************************************************************
சமூக இணைய தளங்கள் என்று வருகையில், நாம் நம் தகவல்கள் எவ்வளவு தூரம் ரகசியமாகப் பாதுகாக்கப்படுகின்றன எனக் கவலைப் பட்டுக் கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு சமூக இணைய தளமும், நம் தனிப்பட்ட தகவல் தொகுப்பினை நாம் விரும்பும் வகையில், விரும்பாதவர்கள் அறிய இயலாத வகையில் அமைக்க வழிகளைத் தருகின்றன. இருப்பினும், நம் தகவல்கள் திருடப்படுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகும்போது, நாம் அஞ்சுகிறோம். நம் தகவல்களை இன்னார் தான் பார்வையிட முடியும் என நாம் செட்டிங்ஸ் பிரிவில் அமைத்திருந்தாலும், நம் தகவல்கள் மற்றவர்களாலும் அறியப்படும் வாய்ப்புகள் உள்ளனவோ என்று சந்தேகப்படுகின்றோம். 

இந்த அச்சத்தினைப் போக்கும் வகையில் பேஸ்புக் தளம் Privacy Checkup என்ற டூல் ஒன்றை அண்மையில் தந்துள்ளது. இதன் மூலம் பேஸ்புக் இணைய தளத்தில் உள்ள நம் அக்கவுண்ட்டில், நாம் பதிவு செய்வதனை யார் எல்லாம் பார்க்க முடியும் என்பதனைக் கண்டறியலாம். அதனை மாற்றி அமைக்க விரும்பினால், இந்த டூல் அதற்கான செட்டிங்ஸ் அமைக்க உதவுகிறது. சில வேளைகளில் அல்லது சில அமைப்புகளினால், இந்த ஆப்ஷன் கட்டம், நாம் பேஸ்புக் செல்லும்போதே, தானாக எழுகிறது. அல்லது தளத்தில் மேலாகத் தரப்பட்டுள்ள பேட்லாக் (padlock) படத்தின் மீது கிளிக் செய்து பெறலாம். இதில் கிடைக்கும் மெனுவில் Privacy Checkup என்பதில் கிளிக் செய்திட வேண்டும்.
அமைப்பினை நம் விருப்பப்படி அமைக்க, யாரெல்லாம் நம் பதிவுத் தகவல்களைப் பார்க்கிறார்கள் என்பதனை அறிய Let’s Do It என்பதில் கிளிக் செய்து தொடங்க வேண்டும். Privacy Checkup தரும் முதல் நிலை, நம் பதிவுகளை யாரெல்லாம் பார்க்கிறார்கள் அல்லது பார்க்க முடியும் என்ற தகவலாகும். இதில் மாற்றங்கள் ஏற்படுத்த விரும்பினாலும், அதற்கு ஆப்ஷன் தரப்படுகிறது.
அடுத்து பேஸ்புக் இயக்கும் அப்ளிகேஷனப் பற்றியது. இதனைக் காண்கையில் நமக்கு ஆச்சரியம் வரலாம். ஏனென்றால், நாம் பயன்படுத்தாத அப்ளிகேஷன்கள் பல பின்னணியில் இயங்கிக் கொண்டிருப்பதாகக் காட்டப்படும். சிலவற்றை நாம் தான் இன்ஸ்டால் செய்தோமா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு நம் நினைவில் இல்லாமல், நம்மால் பல காலம் பயன்படுத்தப்படாவதையாக இருக்கும்.
நாம் பயன்படுத்தாத அப்ளிகேஷன்களை அழித்துவிடலாம். நம் பதிவுகளை யாரெல்லாம் பார்க்க அனுமதிக்க வேண்டும் என எண்ணுகிறோமோ, அதனையும் இங்கு செட் செய்திடலாம். அப்ளிகேஷன் ஒன்றை நீக்க, அதன் அருகே உள்ள X அடையாளத்தில் கிளிக் செய்தால் போதும். எப்படியும், நீங்கள் சோதனை செய்கையில் குறைந்தது பத்து அப்ளிகேஷனாவது நீங்கள் பயன்படுத்தாதவையாக இருக்கும். இந்த அப்ளிகேஷன் சோதனைக்குப் பின், உங்களைப் பற்றிய தகவல்களை யாரெல்லாம் பார்க்க அமைத்திருக்கிறீர்கள் என்பதனைக் காணலாம். நீங்கள் எங்கு படித்தீர்கள், எங்கு என்ன வேலை பார்க்கிறீர்கள், எங்கு வாழ்கிறீர்கள் என்ற விபரங்களை யாரெல்லாம் பார்க்க முடியும் என்பதைக் காணலாம். இதனை உங்கள் விருப்பப்படி திருத்தி அமைத்த பின்னர், Privacy Checkup டூல் மூடி வெளியேறலாம்.

No comments:

Post a Comment