disalbe Right click

Saturday, May 2, 2015

இராணுவ மருத்துவக் கல்லூரியில் சேர


இராணுவ மருத்துவக் கல்லூரியில் சேர என்ன செய்ய வேண்டும்?
******************************************************************************
ராணுவ மருத்துவ கல்லூரி, புனே  

இக்கல்லூரியில் 105 மாணவர்கள், 25 மாணவிகள் உட்பட மொத்தம் 130 மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம். 

இங்கு சேர கல்விக்கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. 

இக்கல்லூரி தங்கும் வசதி, உணவு, புத்தகங்கள், சீருடைகள், மாணவர்கள் தங்கள் விடுமுறை நாட்களில் கல்லூரியில் இருந்து வீட்டுக்கும், திரும்ப கல்லூரிகளுக்கு வருவதற்கும் ஏ.சி.,மற்றும் 3 அடுக்கு இருக்கை வசதி கொண்ட ரயில்களில் பயணம் போன்ற அனைத்தும் இலவசமாக மாணவர்களுக்கு வழங்குகிறது. 

இக்கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் ராணுவத்தில் சேர்ந்து பணி புரிவதற்குரிய உடல் திறன் மற்றும் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். இங்கு படிப்பவர்கள் ராணுவ மருத்துவமனைகளில் பணிபுரியலாம்.

AFMC என்று சுருக்கமாக அழைக்கப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரியில், இந்தாண்டுக்கான MBBS சேர்க்கை நடைபெறுகிறது.
விருப்பமுள்ளோர்,  www.afmc.nic.in என்ற வலைதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மற்றும் இதர தகவல்களை அறியலாம்.
அதேசமயம், AIPMT – 2015  (All India Pre-Medical Test) என்ற நுழைவுத்தேர்வை  கட்டாயம் எழுத வேண்டும்.
பதிவுசெய்யும் கடைசி நாள் - மே 15, 2015.
விண்ணப்பத்தை பூர்த்திசெய்யும் கடைசி நாள் - மே 18, 2015.
வகுப்புகள் தொடங்கும் நாள் - ஆகஸ்ட் 1, 2015.
நன்றி : தினமலர்-கல்விமலர்



1 comment:

  1. பதிவை பார்க்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
    தயவுசெய்து உங்களது எண்ணங்களை இங்கு எங்களுக்குத் தெரிவியுங்கள். அப்படிச் செய்தீர்கள் என்றால், எங்களது சேவையை இன்னும் சிறப்பாக தங்களுக்கு வழங்க இயலும்! என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete