disalbe Right click

Friday, June 10, 2016

இடதுகை பழக்க குழந்தைகள்


இடதுகை பழக்க குழந்தைகள் - என்ன செய்ய வேண்டும்?

இடது கைகாரர்களுக்கு இவ்வளவு பிளஸ்ஸா…?
இந்தியாவின் நடசத்திர கிரிக்கெட் வீரர்களான கங்குலி, யுவராஜ் சிங்கின் ஆட்டத்தை உற்று கவனித்திருப்பவர்கள் ஒரு விஷயத்தைப் பார்த்திருக்கக் கூடும். இவர்கள் இருவருமே இடதுகை ஆட்டக்காரர்கள் என்பதுதான் இவர்களுக்கான ஸ்பெஷாலிட்டி. இவர்களைப் போலவே இடது கையை சாதனை கையாக மாற்றியிருக்கும் சாதனையாளர்கள் பலர். இத்தனை சாதனையாளர்கள் இருந்தும் நம் சமூகத்தின் பார்வையில் இடது கைப்பழக்கம் என்பது அருவருப்பாகவே பார்க்கப்படுகிறது.


” என் பையனுக்கு சாப்பிடுறது தொடங்கி எழுதறது வரைக்கும் எல்லாத்துக்குமே இடதுகைப் பழக்கம்தான். இவ்வளவு ஏன் வீட்டுக்கு வரவங்களுக்கு டாடா சொல்றதுக்கும் அதே கையைதான் தூக்கறான். பார்க்கறவங்க கேக்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியல. சாப்பிடுறதையாவது மாத்துனு என் அப்பா, அம்மா தொடர்ந்து சொல்லிட்டே இருக்காங்க” என்றவர்களின் குழப்பங்களுக்கு பதில் அளிக்கிறார் கரூரைச் சேர்ந்த மனநல மருத்துவர் செந்தில் வேலன்.

”இடது கைப் பழக்கம் தவறு என நினைப்பவர்களிடம் ஒரு கேள்வி கேட்க நினைக்கிறேன். இடது கால் இல்லாமல் வெறும் வலது காலை வைத்து நடக்க முடியுமா? உங்கள் உடலில் வலது பாகம் மட்டும் இருந்தால் போதுமா? அப்படியிருக்க இடது கைப் பழக்கத்தை மட்டும் ஏன் அருவருப்பாக பார்க்கிறீர்கள்?
Image result for இடது கைகாரர்களுக்கு இவ்வளவு பிளஸ்ஸா…?

ஏன் இந்த இடதுகைப் பழக்கம்?
மூளையின் இடது, வலது பாகங்கள்தான் நம் உடலின் அத்தனை செய்கைகளுக்கும் காரணம். இடது பக்க மூளை உடலின் வலது பாகத்தையும், வலது பக்க மூளை உடலின் இடது பாகத்தையும் கட்டுப்படுத்தும். இதன்படி பார்த்தால் நம்மில் பெரும்பாலனவர்களுக்கு இடது பக்க மூளை அதிக செயல்பாட்டில் இருப்பதால்தான் வலது கை பழக்கம் ஏற்படுகிறது. ஆனால் மிகச் சிலருக்கு இடது பக்க மூளையைக் காட்டிலும் வலதுப்பக்க மூளையின் செயல்பாடு சற்று அதிகமாக இருப்பதன் விளைவுதான் இடது கை பழக்கம். அதன் காரணமாக அதன் காரணமாக இடது கை பழக்கம் ஏற்படுகிறது.

இடது கை பழக்கமுள்ள குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? 


பெற்றோர்களுக்கு..
* சிறு வயதில் பேச்சு வருவதில் சற்று தாமதம் ஆகலாம். அதற்காக பயம் வேண்டாம். பேச்சிற்கான கட்டுப்பாடு மையம் இருக்கும் மூளையின் இடது அரைக்கோளத்தின் செயல்பாடு, இவர்களில் சற்று குறைவாக இருப்பதுதான் இதற்குக் காரணம்.
Image result for இடது கைகாரர்களுக்கு இவ்வளவு பிளஸ்ஸா…?

* சாப்பிடுவது, எழுதுவது, கைகுலுக்குவது என எந்த விஷயத்தையும் இடதிலிருந்து வலது கை பழக்கத்திற்கு மாற்ற வேண்டாம். நீங்கள் மாற்ற முயற்சித்தாலும் அவர்கள் இயல்பாக பந்தை உதைக்க கூட இடது காலையும், பந்தை எடுக்க இடது கையையும்தான் உபயோகிப்பார்கள்.

* இடது கையால் சாப்பாட்டை எடுத்து சாப்பிடுகிறார்களா..? கவலையை விடுங்கள். வளார்ந்ததும் அவர்களாக சாப்பிடுவதை வலது கைக்கு மாற்றி கொள்வார்கள். அதற்காக மற்றவர்கள் முன் மட்டம் தட்டுவது, அருவருப்பாக பார்ப்பது எல்லாம் வேண்டவே வேண்டாம்.

ஆசிரியர்களுக்கு
* இடது பழக்கம் உள்ள பிள்ளைகள் மற்ற பிள்ளைகளுடன் உட்கார்ந்து எழுதுவதில் இடிப்பது போன்ற சிரமம் ஏற்படும். எனவே அவர்களை பெஞ்சின் கார்னரில் அமர வைத்தால் எழுந்து போவதற்கும், எழுதுவதற்கும் எளிதாக இருக்கும்.

* வரைவதில் ஆரம்பத்தில் சிக்கல் ஏற்படும். எனவே சிறு வட்டம் வரைந்து, அதில் ஓவியங்களை வரைய பழக்கப்படுத்துங்கள்.

* பள்ளிகளில் ”லெஃப்ட்” என பட்டப்பெயர் வைத்து மன ரீதியாக கிண்டல் அடிப்பதை நிறுத்துங்கள். சக மாணவர்களுக்கு இதுவும் நார்மலான விஷயமே என்பதை புரிய வையுங்கள்.
இடது கை பழக்கத்தால் என்ன பிளஸ்?
வலது பக்க அரைக்கோளத்தின் அதிக செயல்பாடு என்னவெல்லாம் செய்கிறது என்று பாருங்களேன்..

* நீண்ட நாட்களுக்கு முன்னால் பார்த்த எந்த ஓர் இடத்தையும், நபரையும்  சட்டென நினைவுக்குக் கொண்டு வரும் சக்தி, வலது கை பழக்கம் உள்ளவர்களை விட இவர்களுக்கு ஜாஸ்தி.

* இசை, ஓவியம் போன்ற கலைகளில் அதீத ஆர்வத்துடன் இருப்பார்கள்.

* கண்ணால் பார்த்த மாத்திரத்திலேயே ஒரு பொருளை எங்கே வைத்தால் சரியாக இருக்கும், இரண்டு பொருட்களுக்கும் இடைப்பட்ட தூரம் எவ்வளவு என எளிதாக சொல்லி விடுவார்கள். சாலையில் செல்லும்போது கூட இரண்டு வண்டிகளுக்கு இடைப்பட்ட இடைவெளி எவ்வளவு, அதில் வண்டியை நுழைக்க முடியுமா என்பதை துல்லியமாக கணக்கிடும் பார்வை திறனும் அதிகம் உண்டு.

* வரைபடங்கள் தொடர்பான அறிவும் நிறையவே இருக்கும்.

* நம்மையெல்லாம் ஒரு மனித முகத்தை வரைய சொன்னால் தலை, கண், மூக்கு என வரைவோம். ஆனால் இடது கை பழக்கமுள்ளவர்கள் ஒரு கிறுக்கலை வரைந்து அதையே முகமாக விவரிக்கும் கற்பனை திறனுக்கு சொந்தக்காரர்கள்.

* அதிகப்படியான கற்பனை சக்தி இருக்கும்.


குழந்தைகள் பயன்படுத்தும் கை எதுவாக இருந்தால் என்ன, அவர்களின் மீது நம்பிக்கையை வைத்து திறமைகளை மட்டும் ஊக்குவியுங்கள். உங்கள் குழந்தைகளும் ஜொலிப்பார்கள்” என்று சொல்லி முடித்தார் மருத்துவர் செந்தில்வேலன்.

நன்றி : விகடன் செய்திகள் - 06.06.2016

No comments:

Post a Comment