disalbe Right click

Wednesday, September 21, 2016

உள்ளாட்சித்தேர்தல் - வேட்பாளர் - விதிமுறைகள்


உள்ளாட்சித்தேர்தல் - வேட்பாளர் - விதிமுறைகள் - 
என்ன செய்ய வேண்டும்?
தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி, 5 கோடியே 81 லட்சத்து 40 ஆயிரத்து 954 வாக்காளர்கள் உள்ளனர்.

தற்போதைய தேர்தலைப் பொறுத்த வரை, மாநகராட்சி, நகராட்சி சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளதால், 12 மாநகராட்சி மேயர்கள், 148 நகராட்சிகளின் தலைவர்கள், 561 பேரூராட்சிகளின் தலைவர்களை வார்டுகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களே தேர்வு செய்ய முடியும். நேரடி தேர்தல் முறை கிடையாது. 

12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளின் தலைவர்கள் மட்டுமே நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் அந்த தேர்தலுக்கு தொடர்புடைய ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

 பெயர் இடம் பெற்றுள்ள வார்டு தொடர்புடைய தேர்தலில் மட்டுமே அவர் வாக்களிக்க தகுதியுடையவராவார். 

வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று வேட்பாளர் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். 

உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த பணியாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராமப் பணியாளர், மத்திய, மாநில அரசு அலுவலராகவோ, பணியாளராகவோ இருந்தால் போட்டியிட அனுமதியில்லை. 

மத்திய அல்லது மாநில அரசில் பதவி வகித்து, லஞ்சம் அல்லது அரசுக்குத் துரோகம் இழைத்ததால் பணிநீக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. 

நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தால், அபராதம் விதிக்கப்பட்ட நாள் அல்லது சிறையில் இருந்து வெளியில் வந்த நாளில் இருந்து 6 ஆண்டுகளுக்குப் போட்டியிட தகுதியற்றவர் ஆவார்.

வேட்பாளர் மனநலம் குன்றியவராக இருக்கக் கூடாது. 

போட்டியிட விரும்பும் ஊராட்சி மற்றும் எந்த ஊராட்சியிலும் வேலைக்கான, பொருள் வழங்கு வதற்கான ஒப்பந்ததாரராக இருக்கக் கூடாது. 

முந்தைய ஆண்டு வரை ஊராட்சிக்கு அளிக்க வேண்டிய எந்த நிலுவைத் தொகையும் வைத்திருக்கக் கூடாது. 

தேர்தல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டிருக்கக் கூடாது என தகுதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

 மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட பதவியிடங்களில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 வெவ்வேறு பதவிகளுக்கு மனுத்தாக்கல் செய்திருந்தால், ஒரு பதவி தவிர மற்றவற்றுக்கான மனுக்களைத் திரும்பப் பெற வேண்டும்.

 இல்லாவிட்டால் குலுக்கல் முறையில் ஒரு பதவி தேர்வு செய்யப்பட்டு மற்றவை நிராகரிக்கப் படும். 

வேட்பாளர் பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சியை சார்ந்தவராகவோ, சுயேச்சையாகவோ இருந்தால், தேர்தலுக்காக அறிவிக்கப் பட்டவற்றில் 3 சின்னங்களை விருப்பத்துக்கேற்ப வரிசைப்படுத்தி கேட்கலாம்.

நன்றி : தி இந்து நாளிதழ் = 08.09.2016


No comments:

Post a Comment