disalbe Right click

Sunday, November 20, 2016

நெட் பேங்கிங் - அறிந்து கொள்ளுங்கள்


நெட் பேங்கிங் - அறிந்து கொள்ள வேண்டியவை - என்ன செய்ய வேண்டும்?

நெட் பேங்கிங்வசதி மூலம், பணப் பரி­வர்த்­தனை மேற்­கொள்­வது தவிர, மேலும் 
பல­வி­தங்­களில் வங்கிச் சேவை­களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இணையம் மூலம் வங்கிச் சேவையை பெற வழி செய்யும் நெட் பேங்கிங் வசதி, வேக­மாக பிர­ப­ல­மாகி வரு­கி­றது. 


பலரும் நெட் பேங்கிங் வச­தியை பயன்­ப­டுத்த துவங்­கி­யி­ருக்­கின்­றனர். எனினும் 
பெரும்­பா­லானோர் கணக்கில் மிச்­ச­முள்ள தொகையை அறி­யவும், பணப் பரி­வர்த்­தனை 
செய்­யவும் தான், இந்த சேவையை அதிகம் பயன்­ப­டுத்­து­கின்­றனர். நெட் பேங்கிங் 
வச­தியை மேலும் பல­வி­தங்­களில் பயன்­ப­டுத்திக் கொள்ள முடியும்.
நெட் பேங்கிங் வச­தியை பயன்­ப­டுத்தும் போது, வங்­கிகள் அதற்­கான இணை­ய­த­ளத்தை அமைத்­துள்ள விதத்தை சரி­யாக புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்­வொரு வங்கி 
இணை­ய­த­ளத்­திலும், பல்­வேறு வச­தி­களை அணுகும் வசதி வெவ்­வேறு இடங்­களில் இருக்­கலாம். 
உதா­ர­ண­மாக, எச்.டி.எப்.சி., வங்கி இணை­ய­த­ளத்தில் காசோலை புத்­த­கத்­திற்­கான கோரிக்கை வைக்கும் வசதி, ‘ரிக்வெஸ்ட்எனும் வேண்­டுகோள் பகு­தியில் இடம்­
பெற்­றுள்­ளது. ஸ்டேட் பேங்க் இணை­ய­த­ளத்தில் இந்த வசதி, இ- சர்­வீசஸ் எனும் 
பகு­தியின் கீழ் வரு­கி­றது. எனவே முதலில், வங்­கி­களின் இணை­ய­தள அமைப்பை புரிந்து கொண்டால், எந்­த­தெந்த சேவையை எப்­படி அணு­கலாம் என்­பதை தெரிந்து 
கொள்­ளலாம்.
மேலும் வச­திகள்இணை­ய­தளம் மூலம் காசோலை புத்­தகம் கோரு­வது தவிர
வழங்­கப்­பட்ட காசோ­லைக்­கான பணத்தை நிறுத்தி வைக்கும், ‘ஸ்டாப் பேமென்ட்’ 
கோரிக்­கை­யையும் வழங்­கலாம். இதற்­காக காசோலை விப­ரங்­களை குறிப்­பிட்டு, பணத்தை நிறுத்தி வைக்க கேட்­ப­தற்­கான கார­ணத்தை தெரி­விக்க வேண்டும். 

ஆனால் இந்த வச­தியை பயன்­ப­டுத்த கட்­டணம் செலுத்த வேண்­டி­யி­ருக்­கலாம் 
என்­பதை அறி­யவும்.இதே போலவே, இணையம் மூலமே வரை­வோலை எனப்­படும், ‘டிடிகோரும் வச­தியும் இருக்­கி­றது. உறுப்­பினர் தன் கணக்கில் இருந்து தொகை மற்றும் டிடியார் பெயரில் என, குறிப்­பிட வேண்டும். 
குறிப்­பிட்ட காலத்­திற்­கான வங்கி கணக்கு அறிக்கை விபரம் தேவை என்­றாலும் அதை இணை­ய­த­ளத்தில் பார்த்துக் கொள்­ளலாம் அல்­லது, ‘டவுன்­லோடுசெய்து கொள்­ளலாம். கே.ஒய்.சி., அப்டேட் கணக்கு தொடர்­பான தக­வல்­களை அறிந்து கொள்­வ­தோடு, கே.ஒய்.சி., விப­ரங்­களை அப்டேட் செய்­யவும் முடியும். இதற்­காக, இணை­ய­தளம் மூலமே கோரிக்கை வைக்­கலாம். மேலும் குறுஞ்­செய்தி மூலம் தக­வல்­களை கோரும் வச­தியில் இணை­யலாம்; அதி­லி­ருந்து விலகிக் கொள்­ளலாம். கணக்கில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள நாமினி பெயரை மாற்­றவும் கோரலாம். 
வங்கி இணை­ய­த­ளங்­களில் இதற்­கான வழி­மு­றைகள் கொடுக்­கப்­பட்­டுள்­ளன.பலரும் வங்­கி­களில், பணப் பரி­வர்த்­தனை சேவைகள் தவிர முத­லீடு தொடர்­பான வசதி­யையும் நாடு­கின்­றனர். காப்­பீடு, மியூச்­சுவல் பண்ட் ஆகிய சேவை­க­ளையும் வங்­கிகள் மூலம் பெற முடி­கி­றது. இது போன்ற முத­லீட்டு வச­தி­களை நிர்­வ­கிப்­ப­தற்கும் கூட இணைய வச­தியை பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம். வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி, டிமெட் கணக்கு மூல­மான பங்கு பரிவர்த்­தனை, காப்­பீடு சேவைகள் உள்­ளிட்­ட­வற்றை வங்கி இணை­ய­தளம் மூலம் பெறலாம். இதற்­கான பணத்தை வாடிக்­கை­யாளர் தன் 
கணக்­கி­லி­ருந்து இணையம் மூலமே செலுத்­தி­வி­டலாம். பங்கு பரி­வர்த்­தனை 
போன்­ற­வற்­றுக்­காக, வங்­கியில் டிமெட் கணக்கு துவக்க வேண்டும் என்­றாலும் எளி­தாக செய்து கொள்­ளலாம். டிமெட் கணக்கு துவக்க கூடுதல் கட்­டணம் இல்லை என்­றாலும், சில வங்­கிகள் ஆண்டு பரா­ம­ரிப்பு கட்டணம் வசூ­லிக்­கலாம். 

பரி­வர்த்­தனைமின் கட்­டணம், தொலை­பேசி கட்டணம் உள்­ளிட்ட பெரும்­பா­லான பில் தொகையை நெட் பேங்கிங் வசதி மூலம் செலுத்­தலாம். செலுத்­தப்­படும் தொகையை வாடிக்­கை­யாளர் பார்த்து பரி­சீ­லித்த பின் ஒப்­புதல் அளிக்கும் வச­தியும் இருக்­கி­றது. ஆனால் சில நேரங்­களில், பில் தொகை செலுத்­தப்­ப­டா­ம­லேயே பணம் பிடிக்­கப்­
ப­டு­வ­தாக சிலர் புகார் தெரி­விக்­கின்­றனர். 
இது போன்ற நேரங்­களில், வங்­கி­யிடம் முறை­யிட்டு சரி செய்து கொள்­ளலாம். இணையம் மூலம் பணம் செலுத்தும் போது தள்­ளு­படி கூப்­பன்கள் போன்ற 
சலு­கை­களை பெறும் வாய்ப்பும் இருக்­கி­றது.
எனினும் இணையம் வங்கிச் சேவையை பயன்­ப­டுத்தும் போது அது பாது­காப்­பான­தாக அமை­வ­திலும் கவனம் செலுத்த வேண்டும். நெட் பேங்கிங் நடை­முறை தொடர்­பாக 
சொல்­லப்­படும், ‘பாஸ்­வேர்டுபாது­காப்பு உள்­ளிட்ட அம்­சங்­களை தவ­றாமல் கடை­பி­டிக்க வேண்டும். சந்­தே­கத்­திற்கு இட­ம­ளிக்கும் வகை­யி­லான இ மெயில் இணைப்­பு­களை கிளிக் செய்­வது போன்­ற­வற்றை தவிர்க்க வேண்டும் என, வல்­லு­னர்கள் 
வலி­யு­றுத்­து­கின்­றர்.
நன்றி ; தினமலர் நாளிதழ் – 21.11.2016

No comments:

Post a Comment