disalbe Right click

Saturday, March 11, 2017

சர்பாசி சட்டம் - 2002 (SARFAESI ACT-2002)


சர்பாசி சட்டம் - 2002 (SARFAESI ACT-2002)

Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest என்பதையே ”SARFAESI ACT” என்று சுருக்கமாக அழைக்கிறோம்.

வங்கிகள் நீதிமன்றங்களுக்குச் செல்லாமலேயே ஒருவருக்கு கொடுத்த கடனை வசூலித்துக் கொள்வதற்கு இந்தச் சட்டம் முழு அதிகாரத்தைத் தருகிறது. இதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், “வங்கிக் கடன் வசூல் தீர்ப்பாயம்” என்ற அமைப்பின் உதவியையும் வங்கிகள் பெறலாம்.

இந்தச் சட்டம் கடந்த 2002ம் ஆண்டுதான் இயற்றப்பட்டது.
2002ம் ஆண்டுக்கு முன்பு வரை வங்கிகள் தன்னுடைய வாடிக்கையாளருக்கு வழங்கிய கடனை வசூலிக்க படாதபாடுபட்டு வந்தது. 

அதற்கு வங்கியானது முதலில் உரிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்  செய்ய வேண்டும். வழங்கப்பட்டிருக்கும் கடன் தொகைக்கு ஏற்ப நீதிமன்றத்தில் கட்டணம் செலுத்த வேண்டும். கடனுக்காக ஜாமீனாக கொடுக்கப்பட்ட சொத்தை ஜப்தி செய்வதற்கு பல சட்ட நடைமுறைகளை பின்பற்றி, வழக்கை நடத்தி தீர்ப்பைப் பெற வேண்டும். 

ஆனால், இந்த சர்பாசி சட்டம் அமுலுக்கு வந்தவுடன் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. யாரையும் எதிர்பார்க்காமல், வங்கியானது  தான் கொடுத்த கடனை தானே வசூல் செய்வதற்கு இந்தச் சட்டம் வழிவகுத்தது.

இந்தச் சட்டத்தின் கீழ், 'கடன் வசூல் தீர்ப்பாயம்' (Debit Recovery Tribunal) என்று ஒன்றும் 'கடன் வசூல் மேல்முறையீட்டு தீர்ப்பாயம்' (Debit Recovery Appellate Tribunal) என்று ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

. இதில் எளிய முறையில் வங்கியானது கடன்காரர்கள் மீது வழக்கு தொடுக்கலாம். பிணைய சொத்தை வழக்கு தொடுப்பதற்கு  முன்பாகவே வங்கியின் அதிகாரம் பெற்ற அலுவலர் மாவட்ட குற்றவியல் நடுவர் (DRO) மற்றும் மாவட்ட ஆட்சியர் வாயிலாக பற்றுகை செய்யலாம். நீதிமன்றம் பக்கம் போகும் வேலையே வங்கிக்கு இல்லை. அதே மாதிரி கடன்காரர்களும் கண்டபடி எதிர்வாதம்  செய்யவும் முடியாது.

பிரிவு - 13

அடுத்தவர்கள் வாங்கிய கடனுக்கு உத்தரவாதம் அளித்துள்ளவர்கள், அதற்கு ஈடாக அளித்துள்ள சொத்துகளின் மீது சர்பாசி சட்டம் 2002 - பிரிவு 13-ன் கீழ் நடவடிக்கை எடுக்கமுடியும். ஒரு வேளை உத்தரவாத கையெழுத்திட்ட நபர்கள் அதற்கு ஈடாக நிறுவன பங்குகளைக் காட்டியிருந்தால் அவற்றை விற்பதற்கான நடவடிக்கை எடுக்க முடியும்.
பிரிவு - 17

வங்கியினுடைய சட்ட நடவடிக்கைளில் குறை ஏதாவது  இருந்தால் அல்லது  வங்கியானது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருந்தால் அது பற்றி கடன்பெற்றவர் சர்பாசி சட்டம் பிரிவு 17-இன்படி கடன் வசூல் தீர்ப்பாயத்திடம் முறையிடலாம். 

பிரிவு - 34

பிரிவு 34-இன்படி சர்பாசி சட்டத்தின் கீழ் வங்கிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை வங்கிகள் செயல்படுத்துவதை தடுத்து நிறுத்தும்படி எவரும் இடைக்கால உறுத்துக்கட்டளை உள்ளிட்ட இடைக்கால நிவாரணம் எதையும் நீதிமன்றங்களில் இருந்து பெறவே முடியாது. 

ஏனென்றால், அவைகளை வழங்குவதற்கு உரிமையியல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது.

நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்கும்போது தனி நபர் பிணை அல்லது ஜாமீன் கேட்பது அவர்களின் வழக்கமான நடைமுறையாகும். சொந்தமாக ஜாமீன் அளித்த தொழிலதிபர்களிடமிருந்து கடனை மீட்கும் நடவடிக்கையை வங்கிகள் கடைசிபட்சமாகத்தான்  மேற்கொள்கின்றது.

சொந்த ஜாமீன் அளித்தவர்களின்மீது கொடுத்த கடனை வசூலிப்பதற்காக வங்கிகள் எடுத்த நடவடிக்கை மிகக் குறைவாகும். 

கடன் மீட்பு தீர்ப்பாயத்துக்கு செல்லும் முன் உத்தரவாதம் அளித்த நபரின் சொத்துகளை முடக்கி அவற்றை விற்பதற்கான நடவடிக்கையை வங்கிகள் முதலில் எடுக்க வேண்டும்.

கடன் வாங்கிய ஒரு நிறுவனம்  நஷ்டமாகி  மூடப்பட்டு இருந்தால், அந்நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு  சொந்த ஜாமீன் வழங்கியவர்களிடமிருந்து அந்தக் கடன் தொகையை வசூலிக்குமாறு நிதி அமைச்சகம் அனைத்து பொதுத் துறை வங்கிகளுக்கு கடந்த 18.03.2016 அன்று அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக தொடரப்படும் வழக்குகள் மற்றும் சொத்துகளை முடக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து இதே போன்ற நடவடிக்கைகளை பிற தொழில் நிறுவனங்களின் தொழிலதிபர்களிடமும் மேற்கொள்ள வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக் கையை ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தி அனுப்பியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிங்பிஷர் ஏர்லைன்ஸுக்கு கடன் அளித்த விஷயத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு சென்று விட்ட நிலையில் அவரிடமிருந்து, ”வழங்கிய கடனை” வசூலிக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. அதனால் இதுபோன்ற நிலை பிற வாராக்கடனை செலுத்தாத நிறுவனங்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக நிதி அமைச்சகம் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிய வருகிறது.

இது சம்பந்தமான முக்கிய வழக்கு

Sumathi vs. Sengottiyan and others - Madras High Court - M.Jayapal, J. C.R.P. (PD) No. 1591 of 2009 and M.P. No. 1 of 2009 - decided on 05-0202010 - Citation : 2010 (3) CTC 53

(இணையத்தில் இருந்து திரட்டியவை, நாள்:11.03.2017 )


மேலும் சில தகவல்கள்:

  1. சர்பாஸி சட்டத்தின் வாயிலாக வங்கி எடுத்து ஏலம் விட்ட சொத்தை ஒருவர் வாங்குகின்றார். அவ்வாறான ஏலத்திற்கு எடுத்த தொகைக்கு Sale Certificate வழங்கப்படுகின்றது. அந்த Sale Certificate அடிப்படையில் ஏலத்தில் சொத்தை எடுத்தவர் அதை பதிவு செய்ய முனையும்பொது, பதிவாளர் அந்த சொத்தின் அரசு மதிப்பிற்கு Stamp Duty செலுத்த சொல்கின்றார். உயர்நீதிமன்றமானது, ection 47-A of the Indian Stamp Act, 1899, பொருந்தாது எனவும் Sale Certificate மதிப்பிற்கு Stamp Duty செலுத்துவதே சரி! என ஆணையிட்டுள்ளது. வழக்கு எண்: 2015 (1) CTC 526 (Mad)
  2. ஒருவர் வீட்டிற்காக வங்கியில் கடன் வாங்கியுள்ளார். அவர் வீட்டை வாடகைக்கு வீட்டை விட்டுள்ளார். இதற்கிடையில் வீட்டிற்காக வங்கியில் வாங்கிய கடனை கட்டமுடியாத நிலையில், வங்கியானது சர்பாஸி சட்டத்தை பயன்படுத்தி அந்த வீட்டின் உடமையை எடுக்க முயற்சி செய்கின்றது. அப்போது ஒரு சட்ட வினா எழுகின்றது. வாடகைதாரர் குடியிருக்கும்போது, மேற்படி சட்டத்தை கொண்டு அவரை வாடகைதாரரை அங்கிருந்து அகற்றிவிட்டு அந்த வீட்டின் உடமையை எடுக்கு சர்பாஸி சட்டம் அனுமதிக்கின்றதா? அதற்கு உச்சநீதிமன்றம் “சர்பாஸி சட்டத்தில் வாடகைதார்ர் இருக்கும்போது அவரை காலி செய்து உடமை எடுக்க அதிகாரம் இல்லை எனவும் வாடகைதாரரை முறையாக சட்டப்படியாக அவரை அந்தவீட்டைவிட்டு காலி செய்த பின்னரே அந்த வீட்டின் உரிமையை எடுக்க முடியும் என தீர்ப்பளித்துள்ளது. வழக்கு எண்: 2016(2) CTC 319 (SC) 
  3. சர்பாஸி சட்டத்தின்படி சொத்தின் உடமையை எடுக்கும் வகையில் வங்கியானது நீதிமன்றத்தில் ஆணையிட கோரியதில், வங்கி அதற்கான ஆணையை பிறப்பித்திருக்கும் நிலையில் (உடமை இன்னும் எடுக்கப்படவில்லை) சொத்தின் உரிமையாளர் DRT –ல் மேல்முறையீடு செய்கின்றார். வங்கியானது சொத்தின் உடமை இன்னும் எடுக்கபடாத்தால், மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படவேண்டும் என்று வாதிட்டதின்பேரில் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகின்றது. சொத்தின் உரிமையாளரின் மேல்முறையீட்டின் உரிமையானது சொத்தின் உடமை எடுக்கப்படவில்லை என்பதை காரணமாக கொண்டு, எந்தவிதத்திலும் பாதிக்காது என தீர்ப்பளித்துள்ளது. வழக்கு எண்: 2015(4) CTC 18 (Mad)
  4. SARFAESI சட்டத்தின் படி கடன் பெற்றவரின் சொத்துக்களை வங்கி எடுத்து கொள்கின்றது. அந்த கடன் பெற்றவர் இந்திய அரசுக்கு சுங்கவரி செலுத்த வேண்டும் என்பதால் வங்கியானது அந்த சொத்தை விற்கும்போது விற்ற பணத்தில் இருந்து முதலில் இந்திய சுங்கவரி துறையானது வரியை பெற உரிமை உள்ளது! என்ற வாதத்தை மேற்படி சட்டத்தின் பிரிவு 35 யை காட்டி சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. வழக்கு எண்: 2016 (3) CTC 66 (Mad).
நன்றி : வழக்கறிஞர் திரு Leenus Leo Edwards, 06.01.2017
அன்புடன் செல்வம் பழனிச்சாமி

No comments:

Post a Comment