disalbe Right click

Saturday, March 4, 2017

பினாமிகள் மீது சட்டம் பாயும்!


பினாமிகள் மீது சட்டம் பாயும்!
பினாமியாக செயல்பட்டால் சட்டம் பாயும்!

புதுடில்லி:பினாமி பெயரில் சொத்துக்கள் சேர்த்தால், பினாமி தடை சட்டத்தின் கீழ் மட்டுமல் லாமல், வருமான வரி சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில், பினாமி சட்டம் கொண்டு வரப்பட்டு, 2016, நவம்பர் முதல் அமலுக்கு வந்துள்ளது. 

அபராதம்:

பினாமி பெயரில் சொத்து சேர்த்தால், இந்த சட்டத்தின் கீழ், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் கடும் அபராதம் விதிக்கப்படும். மேலும், சொத்துக்களை பறிமுதல் செய்ய வும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சட்டத்தைசெயல்படுத்தும் அமைப்பான வருமான வரித்துறை நேற்று வெளி யிட்டுள்ள விளம்பரத்தில், 'பினாமி சொத்து சேர்த் தால், பினாமி சட்டத்துடன், வருமான வரி சட்டத் தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கூறப் பட்டுள்ளது.

இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பினாமி தடை சட்டத்தின் கீழ், பினாமி பெயரில் சொத்து சேர்த்தால், சொத்து யாருடைய பெயரில் உள்ளதோ அவர்மீதும், அதன் உண்மையான பயனாளியின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன், சொத் தின் சந்தை மதிப்பில், 25 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும்
.
சில வழக்குகளில், சொத்துக்களை பறிமுதல் செய்யவும், இந்த சட்டம் அதிகாரம் அளிக்கிறது.

எச்சரிக்கை:

இதைத் தவிர, வருமான வரித் துறை சட்டத்தின்கீழும் நடவடிக்கை எடுக்கப்படும். யாருக்காவது பினாமியாக செயல்பட்டால் கூட, இந்த இரண்டு சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்

நன்றி : தினமலர் நாளிதழ்  - 03.03.2017

No comments:

Post a Comment