disalbe Right click

Thursday, May 25, 2017

ரூபாய் நோட்டு வாபஸ்! 5 லட்சம் கோடி ரூபாய் லாபம்!

ரூபாய் நோட்டு வாபஸ்! 5 லட்சம் கோடி ரூபாய் லாபம்! 
10 அம்சங்கள்
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவ., 8 ம் தேதி, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படும் என அறிவித்தார். இந்த நடவடிக்கை, டிச., 19ம் தேதி வரை அமலில் இருந்தது. இதனால் நாட்டுக்கு பல நல்ல பலன்கள் கிடைத்துள்ளன. இது குறித்து மத்திய அரசு ஒரு அறிக்கை தயாரித்துள்ளது.
அதில் இடம் பெற்றுள்ள 10 முக்கிய அம்சங்கள் வருமாறு:
1. ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்கு முன் நாட்டில், 17.77 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்தது. இதில், 15.44 லட்சம் கோடி ரூபாய் அதிக மதிப்பு கொண்ட கரன்சி நோட்டுகள். 2.33 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு 100 ரூபாய் மற்றும் அதற்கு குறைவான மதிப்பு கொண்ட கரன்சி நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இதே நிலையை கடைப்பிடித்து இருந்தால், நடப்பு மே மாதத்தில் புழக்கத்தில் இருக்க வேண்டிய கரன்சி நோட்டுகளின் மதிப்பு, 19.25 லட்சம் கோடி ரூபாயாக இருந்து இருக்கும். ஆனால், ரிசர்வ் வங்கியின் குறிப்புகளின்படி கடந்த ஏப்ரல் இறுதியில் புழக்கத்தில் இருக்கும் கரன்சி நோட்டுகளின் மதிப்பு, 14.2 லட்சம் கோடி ரூபாய் தான். 
2.
அதாவது, 14.2 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்திலேயே நாட்டின் அனைத்து நடவடிக்கைகளும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை எடுக்காமல்விட்டு இருந்தால் கூடுதலாக, 5 லட்சம் கோடி ரூபாய் கரன்சி நோட்டுகள் புழக்கத்தில் இருந்து இருக்கும். தற்போது அந்த தொகைக்கு அவசியம் இல்லாமல் போய் விட்டது. 
3.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால், வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2016 - 17 நிதியாண்டில், வருமான வரி கணக்கு செலுத்தியவர்களின் எண்ணிக்கை, 23.8 சதவீதம் அதிகரித்துள்ளது.இதில், 10 சதவீதம் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் வந்தது என்பது மிகையல்ல. இந்த நிதியாண்டில், 91 லட்சம் பேர் புதிதாக வருமான வரி வரம்புக்குள் வந்துள்ளனர். வழக்கமாக, ஆண்டுதோறும், 20 லட்சம் முதல், 25 லட்சம் பேர் வரை தான் புதிதாக வருமான வரி வரம்புக்குள் வருவார்கள். ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு முன், தினமும், ஒரு லட்சம் பேர் பான் கார்டு கேட்டு விண்ணப்பித்து வந்தனர். தற்போது இது,தினமும் 2 லட்சம் முதல், 3 லட்சம் பேர் வரை என அதிகரித்துள்ளது. 
4. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் டிஜிட்டல் பரிவர்த்தனை பெரிய அளவுக்கு வளர்ந்துள்ளது. 2016 -17 நிதியாண்டில், மொத்தம் 300 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடந்துள்ன. இதே நிலை நீடித்தால், நடப்பு 207 -18 நிதியாண்டில், 2,500 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. மொபைல் போனில் உள்ள பேடிஎம், எஸ்.பி.ஐ., பட்டி, பிரிசார்ஜ் போன்ற ஆப்கள் மூலம் தினமும், 200 கோடி ரூபாய் அளவுக்கு பண பரிவர்த்தனை நடக்கிறது. அரசு சார்பில் பீம் ஆப் ஐந்து மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை, 2 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். பீம் மற்றும் யு.பி.ஐ., மூலம், தினமும், 140 கோடி ரூபாய் அளவுக்கு பண பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இதே போல் டெபிட் கார்டு பயன்பாடும் அதிகரித்துள்ளது. 2015 - 16 நிதியாண்டில், டெபிட் கார்டு மூலம், 117 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பண மதிப்பு, 1.58 லட்சம் கோடி ரூபாய். 2016 - 17 நிதியாண்டில் இது, 240 கோடி பரிவர்த்தனைகள், 3.3 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.
5.
ரூபாய் வாபஸ் நடவடிக்கையால், வங்கிகளுக்கு பண வரத்து அதிகரித்துள்ளது. வங்கிகளில், 4.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சேமிப்பு கணக்குகளில் டிபாசிட்செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ரிசர்வ் வங்கி அறிவிக்கு வட்டி குறைப்பு நடவடிக்கைகளின் பலன் மக்களுக்கு போய் சேரும் அளவுக்கு வங்கிகளின் நடவடிக்கை மாறி உள்ளது. குறிப்பாக கடன்களுக்கான வட்டி குறைப்பு சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு மிகவும் பலன் அளிப்பதாக இருக்கும். இதேபோல், வீட்டுகடன்களுக்கான வட்டி, 9.3 சதவீதத்தில் இருந்து, 8.2 சதவீதமாக குறைந்துள்ளது. 
6. இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் சேமநல நிதியில், பணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு முன், 3.7 கோடியாக இருந்தது. இது, கடந்த மார்ச் மாதம், 4.5 கோடி பேராக அதிகரித்துள்ளது. ஏராளமான புது நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு இ.பி.எப்., தொகை செலுத்துவதையே இது காட்டுகிறது. 
7. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, மாநில மின் வாரியங்களுக்கு பெரிதும் உதவி உள்ளது. மின் வாரியங்கள், மின் கட்டணமாக, 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளன. இது முந்தைய ஆண்டை விட, 4,500 கோடி ரூபாய் அதிகம். இதே போல், உள்ளாட்சி அமைப்புகளின் வரி வசூலும் அதிகரித்துள்ளது. 
8.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு முன், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சோதனை சாவடிகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் கட்டணம் செலுத்துது, 3 சதவீதமாக இருந்தது. தற்போது இது, 15 சதவீதமாக அதிகரித்துள்ளது.
9.
பெட்ரோல் பங்க்குகளில், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு முன், டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்துவது, 4,500 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது இது, 12 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. சதவீத கணக்கில், 9 சதவீத்தில் இருந்து, 20 சதவீதமாக அதிரித்துள்ளது. 
10.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை முன், இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி., இணைய தளத்தில் ஆன் லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு மொத்த முன்பதிவில், 50 சதவீதமாக இருந்தது. தற்போது இது, 68 சதவீதமாக அதிகரித்துள்ளது

நன்றி : தினமலர் நாளிதழ் - 25.05.2017

No comments:

Post a Comment